1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.
ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து
2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக்
3.கொள்கிறார்கள். இரத்த பணம் 30லட்சம் கொடுத்திருந்தும் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் விஷயம் தெரிந்து உதவிக்காக அழுகையில், அதைக்காணும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் அதற்கு எப்படி உதவ முயற்சிக்கிறார். அந்த ஒருநாளில்
4. அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
ஒரு செய்திச் சானலுக்குள் இருக்கும் அரசியல், ஒரு செய்தியை பரபரப்பாக்க அவர்கள் செய்யும் வேலைகள், அதனால் சானலுக்கு நிகழும் லாப நஷ்டங்களை ஒரு பக்கம் பேசியபடியே, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டம், அவர்கள் அங்கே மாட்டிக் கொண்டால் அந்தக்
5. குடும்பம் இங்கே என்ன கஷ்டப்படும், அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு சாதாரணமாய் என்ன செய்யும், அவசரத்தில் எப்படி வேலை செய்யும் என்பதைச் சொல்லும் அதே சமயம், இலங்கைத் தமிழர்கள் வலி, இந்து முஸ்லிம் ஒற்றுமை என பல விஷயங்களை ஒன்றரை மணிநேரத்தில் பேசி விடுகிறது படம்.
படம் ஆரம்பித்த சில
6. நிமிடங்களிலேயே கதைக்கு வந்துவிடுவதால் போரடிக்கவில்லை. படம் முடியும் வரை அந்த சுவை அப்படியே இருப்பது நம்ப முடியாத கதையையும் சுவாரசியமாய் பார்க்க வைத்துவிடுகிறது.
படத்தின் நாயகி பிரியா பவானிசங்கரும் மற்ற எல்லோருமே கொடுத்த பாத்திரத்துக்கு சிறப்பாய் செய்திருந்தார்கள் என்றாலும்,
7. தண்டனை பெற்றவரின் மகளாய் நடித்திருந்த அந்தக் குட்டிப் பெண் அற்புதம்.
ஒரு ஓடிடி ரிலீஸ் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை ட்விஸ்ட் & டர்ன்களோடு சிறப்பாகவே அளித்திருக்கிறார் டைரக்டர் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இவர் ‘லக்ஷ்மி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் ஏறகனவே பிரபலமாகி,
8.நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆனால் நான் சொல்ல வந்தது இதே கருணைக் கடிதத்தை கருவாய் வைத்து 2004-ல் வந்த 'பெருமழக்காலம்' மலையாளப் படம் பற்றி.
கேரளாவின் கோழிக்கோட்டில், பாலக்காட்டில் வசிக்கும் இரு பெண்களின் கணவன்மார்களில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான்.
9.இன்னொருவன் குற்றவாளியாகிறான். அந்த இரு குடும்பங்களும் அதன் பிறகு எப்படி நிலைகுலைகிறது, ஒருத்தி விதவையாக இன்னொருத்தி எவ்வளவு அவமானங்களை சுமக்கிறாள் என்பதையும், உறவுகளே பலமாகவும் சுமையாகவும் எப்படி மாறும் என்பதையும் அற்புதமாக காட்டியிருப்பார்கள். இதில் பாலக்காட்டில் தமிழ்ப்
10. பிராமணக் குடும்பத்துப் பெண்ணிடம், கோழிக்கோட்டில் மலையாள முஸ்லிம் குடும்பத்துப் பெண் தன் கணவனைக் காக்க மன்னிப்புக் கடிதம் கேட்டுப் போராடுவாள். கணவனை இழந்த ஒருத்தியிடம், அவனைக் கொன்ற தன் கணவனைக் காப்பாற்ற கையெழுத்து வேண்டி நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.?
ஒரு அளவான மழை
11. என்பது எல்லோருக்கும் சுகமானதுதான். ஆனால் பெருமழை என்பது அப்படியில்லை. அது மிகப்பெரும் சேதாரங்களை விளைவிக்கும். அப்படி கருணையும் பெருமழையாய் பெய்யும்போது அது என்ன சேதாரங்களை விளைவிக்கும் என்பதை படம் மிக அற்புதமாய் சொல்லியிருக்கும். காவ்யா மாதவன், மீரா ஜாஸ்மின் இருவரும் நடித்து
12. இயக்குநர் கமல் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பேசும் மனிதம் இன்னும் ஒரு அற்புதம்.
என்னைப் பொறுத்தவரை ரே படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இந்தப் படத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள்
2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
3. ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின்
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்
முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும்
2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
3.தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்
2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி
1. அந்த அரசனிடம் கொடூரமான 10 வேட்டைநாய்கள் இருந்தன.
எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்ல மட்டுமே உபயோகப்படுத்தினான்.
அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக்
2. கொல்ல முடிவுசெய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.
மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை.. தண்டனையை நிறைவேற்றும் முன் எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள்
3. அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"
சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.
அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
நான் சவூதி அரேபியாவில் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்களுக்கு மேலாகப்போகிறது.
ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.
உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும்
2. வாய்ப்பு.
இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.
ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான டிக்கெட் விலையைக் கொடுத்தாக வேண்டும்.
3. அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.
சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.
பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.
நன்றியையே எதிர்பார்க்காத, நாடு, குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும்
கொரண்டைன் சமயத்தில் டேனிக்கு இன்று புதிதாய் ஏதாவது கற்றுக் கொடுக்க வேண்டுமே என்று யோசித்து, ஹார்ட் வொர்க் ஸ்மார்ட் வொர்க் (hard work, smart work) பற்றிச் சொல்லிக் கொடுக்க முடிவு செய்தேன்.
ஏதாவது ஒரு உதாரணத்தோடு சொல்லிக் கொடுத்தால் நன்றாயிருக்குமே என்று யோசித்த
2. போது, வாட்சப்பில் அந்த வீடியோ வர, அந்தக் காட்சியையே அன்றைக்கு அதற்கான உதாரணம் ஆக்கிவிடலாம் என்று முடிவு செய்தேன்.
திருவிளையாடலில் முருகனும், விநாயகரும் மாம்பழத்துக்காக சண்டை போடும் காட்சிதான் அந்த வீடியோவில் இருந்தது.
முருகனை ஹார்ட் வொர்க்கிற்கும், விநாயகரை ஸ்மார்ட்
3. வொர்க்கிற்கும் உதாரணமாய்க் காட்டி, ஹார்ட் வொர்க்கை விட ஸ்மார்ட் வொர்க் எவ்வளவு சுலபமாய், குறைந்த காலத்தில் வெற்றியைத் தரும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் திட்டம்.
ஹார்ட் வொர்க், ஸ்மார்ட் வொர்க் வித்தியாசம் எல்லாம் சொல்லி, எது சிறந்தது எப்படிச் சிறந்தது என்பதெல்லாம் விளக்கிச்