# 19 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் இருந்தே பார்ப்பனர் அல்லாதோர் சங்கமும் முஸ்லீம் லீக்கும் வகுப்புவாரி உரிமைகளை கோரி வந்தனர்.
# பார்ப்பனர் அல்லாத இந்துக்களின் அந்தஸ்தை உயர்த்த நீதிக்கட்சி குறிப்பிடத்தக்க அளவில் பாடுபட்டது.
# பார்ப்பனர் ஆதிக்கத்திற்கு எதிராக சமூகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கல்வியில் தொழிலில் அரசுப் பணிகளில் பங்கேற்கவும் பார்ப்பனர் அல்லாதோரின் நலன்களை பாதுகாக்கவும் 1916 இல் பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை அறிக்கை (Non Brahmin Manifesto) வெளியிடப்பட்டது.
# 1920 இல் நீதிக்கட்சி ஆட்சி அமைத்த போது பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை அறிக்கையின் அடிப்படையில் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை செயல்படுத்த முயற்சித்தது.
# அதன் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாத சமூகத்தினர் வகிக்கும் அரசுப் பணியிடங்களின் விகிதாச்சாரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு
நீதிக்கட்சி அரசுக்குப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை மாநில சட்டமன்றக் குழு நிறைவேற்றியது.
# அதையொட்டியே பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் பிறர் என்று நியமனங்கள் பிரிக்கப்பட்டதை வருவாய் ஆணையம் ஏற்றுக் கொள்ள நீதிக்கட்சி
அரசால் நிறைவேற்றப்பட்டு முதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 1921 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
# தொடர்ந்து பார்ப்பனர் அல்லாதோரின் நியமன வாய்ப்புகளை மேம்படுத்த 1922 இல் இரண்டாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது.
# இதற்கிடையில், 1925 இல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்
மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைத் தவிர்த்து பிற வகுப்பினர் ஆகிய இரு பட்டியல்களை அரசு ஆணையாக நீதிக்கட்சி வெளியிட்டது.
# இவ்வாணை மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் பாதிக் கட்டணச் சலுகையில் கல்வி பயில உதவியது.
# 1927 இல் பெரியாரின் தீவிர பிரச்சார முயற்சியால்
நீதிக்கட்சி மற்றும் ஸ்வராஜ் கட்சியை சாராத மெட்ராஸ் மாகாண முதல்வர் பி.சுப்பராயனால் மூன்றாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நிறைவேற்றப்பட்டது.
# இதன் மூலம் பார்ப்பனர் அல்லாதோரும் தங்கள் பங்கைப் பெறுவதற்கு வகுப்பினர்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டு பார்ப்பனர் அல்லாத
இந்துக்களுக்கு (5/12) 44%, பார்ப்பனர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தலா 16% (2/12) மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 8% (1/12) இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
# 1947 இல் இந்தியா சுதந்திரம் பெறும் வரையில் இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.
# 1950 இல் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பிய சி.ஆர். ஸ்ரீநிவாஸன் என்ற மாணவரும் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பிய சம்பகம் துரைராஜன் என்ற மாணவியும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) ஆணை அமலில் இருந்தால் தங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காது என்று தனித்தனியாக மெட்ராஸ்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
# இரு வழக்குகளும் இணைக்கப்பட்டு “மெட்ராஸ் மாகாண அரசு vs சம்பகம் துரைசாமி வழக்கு” என்ற பெயரில் விசாரிக்கப்பட்டது.
# இவ்வழக்கை விசாரித்த மெட்ராஸ் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் “கல்வித்துறை மாணவர்கள் சேர்க்கையில் பாகுபாடு கூடாது அதனால்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் (1928) செல்லாது” என்று தீர்ப்பளித்தது.
# இதன் மேல்முறையீட்டு வழக்கில் சமத்துவ உரிமைக்கு எதிராக இட ஒதுக்கீடுகளை வழங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரிவு (16) இல் உட்பிரிவு (2) உரிமையை மீறுவதாகும் என்று
கூறி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
# உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் உரிமைகள் பறிபோனதாக எண்ணி தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது.
# அதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் காமராஜர் பிரதமர் நேருவிடம் தமிழ்நாட்டில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை விளக்கி தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
# அதையெடுத்து பிரதமர் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு 1951 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி
பிரிவு (15) இல் புதிதாக உட்பிரிவு (4) சேர்க்கப்பட்டு “கல்வி மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்வதிலிருந்து பிரிவு 15 அல்லது பிரிவு 29 (2) ஆகியவை மாநிலத்தை தடுக்காது” என்ற முதல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டது.
சம்பகம் துரைசாமி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இட ஒதுக்கீடு குறித்து பெரியார் மேற்கொண்ட போராட்டத்தால் விளைந்த முதல் சட்ட திருத்தம் தான் மண்டல் ஆணைக்குழுவை நியமிக்க உதவியது.
# மண்டல் ஆணைக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்று
தொடர்ந்து குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கலைஞர்.
# 07 ஆகஸ்ட் 1990 அன்று வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு சமூகத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கிய குடிமக்களுக்கு அரசு நிறுவனங்களில் 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.
# இதற்கிடையே, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டு பகிர்வு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 69% நிலையை அடைந்தது.
# வி.பி.சிங் அரசு வழங்கிய 27% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் 1992 இல் உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி தொடுத்த வழக்கில் எவ்வித இட ஒதுக்கீடும் 50% வரம்பிற்குள்
இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது.
# அந்நேரத்தில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க அ.தி.மு.க முதல்வர் ஜெயலலிதா “தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு “ சட்டத்தை 1993 இல் இயற்றி குடியரசுத் தலைவரின்
ஒப்புதலை பெற்றார்.
# இச்சட்டமானது இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 31 (B) ஒன்பதாவது அட்டவணையில் (குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குமுறைகள், விதிகள் எதுவும் செல்லாததாக கருதப்படக்கூடாது) இணைக்கப்பட்டு எதிர்கால நீதிமன்றங்களின் தலையீட்டிலிருந்தும் காப்பாற்ற வழிவகை செய்யப்பட்டத
குறிப்பிடத்தக்கது.
# பெரியார் பற்ற வைத்த போராட்ட நெருப்பு இன்று வரை இட ஒதுக்கீடு முறையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
*வலைப்பதிவில் (Blog) இது எனது நூறாவது தமிழ் கட்டுரை
/ பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல /
/ முகவுரை /
என்னப்பா! “பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” என்பது ரீல் படமான சிவாஜி தி பாஸில் ரஜினி பேசிய வசனம் ஆச்சே! அப்படி ரியல் லைப்ல இவ்வசனம் “யாருக்கு பொருந்தும்” என்று யோசிக்கிறீங்களா?
இதுக்கு பொருத்தமான ஒருத்தரு இருக்காருங்க! அப்படி எங்கங்க இருக்காருன்னு யோசிக்கிறீங்களா? அட நம்மூர்லே இருக்காருங்க! கண்டுபிடிச்சிடீங்களா?
ரைட்டு! அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம் பெரியார்!
சமூக முன்னேற்றத்துக்காக பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள புத்தகங்களின் பக்கங்கள் மட்டுமே பத்தாயிரத்தை தாண்டுகிறது. இன்றைய உலகில் அனைத்தையும் அனைவராலும் படித்தறிய இயலாத சூழல் காரணமாக சுமார் 30 பக்கங்களில் என் அறிவுக்கு எட்டிய வரையில் பெரியார் ஆற்றிய
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் 💣
// இந்திய அரசியல் சரித்திரத்தை மாற்றிய Bofors //
1.முகவுரை
1985 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் Bofors ஊழல், சீக்கியர்கள் மீதான தாக்குதல், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி, மூன்றாவது அணி ஆட்சி அமைப்பு,
மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்கப்பட்டது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Bofors ஊழல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இப்புயலில் சிக்கிய ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் 1989 நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.
இக்கட்டுரையில் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட Bofors ஊழல் குறித்து சில செய்திகளை காண்போம்.
2.ஜெரால்டு புல் கைவண்ணம்
1970 இன் பிற்பகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனரும் (Space Research Corporation - SRC) கனடா ஆயுத பொறியாளருமான ஜெரால்ட் புல் முந்தைய பீரங்கிகளை விட மிக நீண்ட தூரம்
1. முகவுரை 2. விஜயனும் குவேனியும் 3. குவேனியின் சாபம் 4. விஜயனின் வருகை அஞ்சல் தலை (1956) 5. இலங்கையில் பாண்டியர்கள் 6. இலங்கையில் சோழர்கள் 7. இலங்கை இராச்சியம் 8. இலங்கை காலனித்துவம் 9. பிரிட்டிஷின் கட்டுப்பாடு 10. பிரிட்டிஷுக்கு பிந்தைய காலம்
11. இலங்கை அரசு
தந்தை செல்வா
JVP கிளர்ச்சிகள் 11. உள்நாட்டுப் போர்கள் 12. ஆபரேஷன் பூமாலை 13. இந்திய அமைதி காக்கும் படை 14. ராஜீவ் காந்தி படுகொலை 15. படுகொலைக்குப் பின்னால் 16. பல்நோக்கு ஒழுங்கு விசாரணை ஆணையம் 17. ஈழ அரசியலில் தமிழ்நாடு 18. நார்வே அமைதிப் பேச்சு
19. விடுதலைப் புலிகள் 20. முடிவுரை 21. விவரணைகள்
முகவுரை
ஆரிய வரலாறை எடுத்துரைக்க “திராவிட மண்ணில் ஆரியர்களின் பண்பாட்டு படையெடுப்பு” என்னும் கட்டுரையை முன்னர் எழுதிருந்தேன். அது போல இலங்கை வரலாறை எடுத்துரைக்க “ஈழமும் சிங்களமும்” என்னும் கட்டுரையை இன்று எழுதியிருக்கிறேன்.
1.முகவுரை
2.ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு
3.போலி மனித உடல் பரிசோதனை
4.போலக்குளம் பீதாம்பரன்
5.ஆரம்பகட்ட விசாரணை
6.சிறப்பு குற்றப்பிரிவு விசாரணை
7.உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
8.உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
9.சி.பி.ஐ விசாரணை
10.இறுதியில் நடந்ததென்ன?
11.தடயவியல் மருத்துவர் உமாதாதன்
12.முடிவுரை
13.விவரணைகள்
# அனைத்து வழக்குகளின் தொடக்கமும் முடிவும் ஒன்றாக அமைய வேண்டிய கட்டாயமில்லை என்ற அடிப்படையில் இக்கட்டுரையை வாசிக்க வேண்டுகிறேன்.
முகவுரை
உலக சினிமாவில் கொலையை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பது மிக பிரபலமான கதைக்களங்களில் ஒன்றாகும். அவ்வகையில் சுவாரஸ்யமான துப்பறியும் திரைப்படங்களின் வரிசையில் மம்முட்டி நடித்த சி.பி.ஐ திரைப்படத் தொடர் மலையாள சினிமாவில் புகழ் பெற்றது. 1988 இல் சி.பி.ஐ திரைப்படத் தொடரின்