அகக்கண்ணாடி
ஒரு மனநல மருத்துவரின் டைரிக்குறிப்புகள்
டாக்டர் ரைஸ் இஸ்மாயில்
2021 முடியும் போது ஒரு நல்ல புத்தகத்துடன் முடித்து இருக்கிறேன் என்கிற நிறைவு இந்த புத்தகத்தை முடித்ததும் வந்தது.
நடைமுறை வாழ்வியல் சார்ந்த அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் “வாழ்க்கைக்கான அறிவியல்" (Science of Living) எனும் தலைப்பில், இந்நூலை நிகர்மொழி பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. மனநலத்திற்கு நமது சமூகம் இன்றளவும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
எல்லாம் போகப் போக சரியாப் போயிடும், பூஜை போட்டா சரியா போயிடும், கல்யாணம் செய்தால் சரியா போயிடும், tour போனால் சரியா போயிடும் என்று அலட்சியமாக தான் கையாளப்படுகிறது. மருத்துவ ஆலோசனை பெறுவதை அவமானமாகவும் கருதுகிறது.
இவை எல்லாம் எத்தனை தவறு என்பதை டாக்டர் ரைஸ் இஸ்மாயில் இந்த புத்தகத்தில் அழகாக விளக்குகிறார்.
கடந்த லாக்டவுன் காலத்தில் அவரது முகநூல் பக்கத்தில் கடந்த 19 வருடங்களில் அவர் சந்தித்த பல நோயாளிகளின் சுவாரஸ்யமான கதைகள் அடங்கிய தகவல்களையும்,
மனநலம் பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகளையும் பகிர்ந்து இருக்கிறார். அவை வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது.
பொதுவாக மனநலம் சார்ந்த புத்தகங்கள் எடுத்த 5 நிமிடத்தில் நமக்கு தூக்கத்தை வரவழைக்கும் வல்லமையை பெற்று இருக்கும்.
ஆனால் இந்த புத்தகம் எளிய நடையில் நகைச்சுவை கலந்து படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கிறது. 189 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை ஒரே நாளில் படித்து விடலாம். பொதுவாக எளிய நடையில் அறிவியல் கருத்துக்களை விளக்க நினைக்கையில் அதை தவறாக மக்கள் புரிந்து கொள்ள கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.
இந்த பிரச்சனையை இஸ்மாயில் மிக நேர்த்தியாக கையாண்டு இருக்கிறார்.
மனநலம் மட்டுமன்றி குழந்தை வளர்ப்பு, child abuse, சாமியார்கள், அவர்களது மன ஓட்டங்கள், மிக முக்கியமாக மாற்று மருத்துவ முறைகளை பற்றியும் சொல்லி இருக்கிறார்.
மதங்களை பற்றி விளக்கும் போதெல்லாம் (சுற்றி சுற்றி இங்கேயே வருகிறாள் என்று நினைக்க வேண்டாம்) உளவியல் பற்றி அதிகம் விளக்க வேண்டிய தேவை வருவதுண்டு.
மனித மனமும், மூளையும் இருக்கிறதே அது செய்யும் மாயாஜாலங்கள் ஒரு கடல் போல என வைத்து கொண்டால் அதில் இறங்க இந்த புத்தகம் ஒரு படகு போல நமக்கு உதவி செய்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
இந்த புத்தகத்திலிருந்து 👇
POCSO (Protection of Children from Sexual Offences) எனும் சட்டம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்கும் ஏற்கெனவே இருக்கும் IPC-Indian Penal Code சட்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
2012 ல் குழந்தைகள் தினத்தன்று இந்தச் சட்டம் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஏன்? IPC சட்டங்களின் படி, பாலியல் துன்புறுத்தல் என்பது ஆணின் பிறப்புறுப்பை பெண்ணின் பிறப்புறுப்பினுள் நுழைப்பது என்பது மட்டும் தான்.
அப்படி இருந்ததால் நிறைய காமுகர்கள் தண்டனைகளிலிருந்து சுலபமாகத் தப்பி விட்டிருந்தார்கள் ஆனால் POCSO சட்டப்படி தவறாக தொடுதல், நேரிலோ இனையத்தின் மூலமாகவோ தவறான விசயங்களைப் பேசி மதி மயக்குதல், stalking எனும் பின் தொடர்தல் போன்றவைகளும்
ஆண் குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களும் (முதன்முதலாக) பாலியல் துன்புறுத்தல்களாக சேர்ந்துக் கொள்ளப்பட்டன.
இதில் இருக்கும் சில முக்கியமான விசயங்கள் :
1. இந்தச் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவன் குற்றமற்றவன் என நிரூபிக்கும் வரை குற்றவாளி தான்.
குற்றமற்றவன் என திரூபிப்பது அவன் கையில் தான் இருக்கிறது. அவன் குற்றவாளி என நிரூபிக்கும் கடமை சம்பந்தப்பட்ட குழந்தைக்கு இல்லவே இல்லை.
2 கேள்விக் கணக்கு கேட்கும் சூழ்நிலை அந்தக் குழந்தைக்குப் பதட்டம் ஏற்படுத்தாத சூழ்நிலையாக இருக்க வேண்டும்.
வீட்டில் வைத்து, பெற்றோர் முன்னிலையில் தான் கேள்வி கேட்கப்பட வேண்டும். பெண் பிள்ளைகளை பெண் காவலர்கள்தான் கேள்விக் கேட்பார்கள். காவலர் சாதாரண உடையில்தான் இருக்க வேண்டும். அவர் சப்-இன்ஸ்பெக்டராகவோ அதற்குமேல் கேடராகவோ இருக்க வேண்டும்.
3. மருத்துவ பரிசோதனை, பெண் குழந்தைகளுக்கு பெண் மருத்துவர் தான் செய்ய வேண்டும். அதுவும் பெற்றோர் அல்லது கார்டியன் முன்னிலையில்.
4. வழக்கு நடக்கும் கோர்ட்டும் குழந்தைகளுக்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும். அடிக்கடி 'ப்ரேக்' விடவேண்டும்.
குறுக்கு விசாரணை, காயத்தை ஞாபகப்படுத்தும் வகையிலோ அதிகப்படுத்தும் வகையிலோ (Re-traunatising) இருக்கக்கூடாது. மேலும் எக்காரணம் கொண்டும் குற்றவாளி குழந்தையின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
5. எக்காரணம் கொண்டும் குழந்தையின் அடையாளம் வெளியே தெரியாமல் பார்க்க வேண்டும்.
2019ல் இந்தச் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதில், 16 வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு 10 வருட சிறைத் தண்டனை என்பது 20 வருடமாக நீட்டிக்கப்பட்டது.
7. இந்தச் சட்டப்படி, ஒரு குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் நடக்குது எனத் தெரியவரும் பட்சத்தில், அதை காவல்துறைக்குத் தெரிவிப்பது ஒவ்வொருவருக்கும் mandatory obligation எனும் கட்டாயக் கடமையாகிறது.
இன்று பொதுவான கருத்து ஆங்கிலேயர்கள் பண்பாடு மற்றும் நடத்தையில் சிறந்தவர்கள் என்பது. English Etiquette இன்று உலகில் பிரபலம். ஆங்கிலேயர்கள் எதையும் முறையாக செய்யக்கூடியவர்கள். எல்லாவற்றிக்கும் ஒரு ரூல் இருக்கிறது.
எதை எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அடுத்தவருக்கு தொல்லை தராமல் நமது செய்கைகள் இருக்க வேண்டும் இதுதான் etiquette இன் அடிநாதம்.
வரிசையில் நிற்க வேண்டும், அடித்து பிடித்து ஓட கூடாது,
நமது பாதையில் குறுக்கே நிற்கும் ஒருவரை கடந்து செல்லும்போது excuse me சொல்ல வேண்டும், வயதானவர்கள் பெண்களுக்கு கதவை திறந்துவிட வேண்டும், புதிதாக அறிமுகம் ஆகும் போது அவர்களிடம் வயது, வருமானம் போன்றவற்றை கேட்பது அநாகரீகம்,
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு என்று ஒரு சிறப்பு உண்டு, அது அதற்கென்று எந்த சிறப்பும் இல்லை என்பதே! Constantine கிறிஸ்தவ மதத்திற்கு நாட்டை மாற்றியதும் ஏற்கனவே கொண்டாடி வந்த pagan பண்டிகைகளுக்கு கிறிஸ்துவ காரணம் குடுத்தார்.
இந்த டிசம்பர் மாதம் என்பது பனியில் வீட்டுக்குள் அடைந்த மக்கள் எதோ ஒரு காரணம் சொல்லி குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முயலும் மாதமாக இருந்தது. பல மதங்களில் டிசம்பர் மாதம் பண்டிகை மாதமாக இருக்கிறது.
Winter Solstice என்னும் ரோம பண்டிகை, Saturnalia (Roman கடவுள் Saturn ஐ சிறப்பிக்கும் பண்டிகை), Dies Natalis Solis Invicti (பனிக்கால துவக்கத்தை குறிக்கும் பண்டிகை) Yule (ஜெர்மனியர்களின் பனிக்கால பண்டிகை), Hanukkah (யூத பண்டிகை), Yalda (பெர்ஷிய பனிக்கால பண்டிகை)
“இந்தப் புராண, இதிகாச, வேதம் என்பவை, அவை எவ்வளவு செல்வாக்கு பெற்றவையாக இருந்தாலும், அது கண்டு மனம் தளராமல், மலைத்துவிடாமல், அவை பற்றிய உண்மைகளை ஆராய்ந்து,
அவை மனிதனால் மனிதனுக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய கற்பனைகள், கதைகள், வாழ்க்கை முறைகள் என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவற்றின் மயக்கத்திலிருந்து அவர்களை விடுவித்து,
மனிதர்களாக்கிப் பார்ப்பதைவிட, அதற்குப் பாடுபடுவதைவிட, மனிதாபிமானம் படைத்தவர்களுக்கு வேறு என்ன வேலை இங்கு இருக்க முடியும்?”
சமகாலத்தில் நம் கண் முன்னாடி திடீரென்று முளைக்கும் சாமியார்களை நாம் எப்படி பகடி செய்து விமர்சனம் செய்து கேள்விக்குள்ளாக்குகிறோமோ அதே போல தான் இன்று establish ஆகி இருக்கும் பல மதங்களின் தோற்றுவிப்பாளர்களை
அன்றைய காலத்தில் அவர்களது சமகால மக்கள் கேலி செய்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பார்கள். இன்று எப்படி பிடிங்க சார் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார் என்று பொங்குகிறோமோ அதே போல தான் அன்றும் மக்கள் பொங்கி இருப்பார்கள்.
2000 வருடங்களுக்கு முன் நடந்ததை புனிதப்போராக பார்க்கும் நாம் இன்று நடப்பதை கலக்கப்போவது யாரு என்பது போல பார்த்து சிரித்து மகிழ்கிறோம்.
எல்லா சாமியார்களும் தொடக்கத்தில் ஒரு cult தான். அது யேசுவாக இருந்தாலும், நபிகளாக இருந்தாலும், ஜக்கியாக இருந்தாலும்.
Tiresias கண் இல்லாதவராக இருந்தாலும் ஞான கண் இருக்கும் ஒரு தீர்க்கதரிசி. மக்களின் எதிர்காலத்தை சொல்லக்கூடியவர். இவரது பார்வை போனதற்கும் ஞான கண் வந்ததற்கும் இரண்டு விதமான கதைகள் இருக்கின்றன.
1. ஒருமுறை Athena நிர்வாணமாக குளித்து கொண்டு இருந்ததை தெரியாமல் பார்த்துவிட்ட Tiresias இன் கண் மேல் Athena கையை வைத்து அவரது பார்வையை பறித்து விடுகிறாள். ஆனால் தான் தெரியாமல் செய்துவிட்டதாக Tiresias வருந்தவும் பரிதாபப்பட்டு அவருக்கு ஞான கண்ணை தருகிறாள்.
பொதுவாகவே கிரேக்கத்தில் தீர்க்கதரிசிகள், அறிவாளிகள், கவிஞர்கள் எல்லாம் பார்வை இல்லாதவர்களாகவே சித்தரிப்பது கிரேக்க வழக்கம்.
2. இன்னொரு கதையில் Hera விற்கும் Zeus க்கும் நடுவில் சண்டை நடந்தபோது Tiresias, Zeusக்கு ஆதரவாக இருந்ததால் Hera அவரது பார்வையை பறித்துவிட்டதாக கூறப்படுகிறத