#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைச் சந்திப்பதற்காக துவாரகைக்கு வந்தாள். அச்சமயத்தில் கிருஷ்ணர் தன்னை விட ராதையின் மீது அதிக கவனம் செலுத்துவதை ருக்மிணி தேவி கவனித்தாள். அதனால் மனமுடைந்து பண்டரிபுரத்திற்கு அருகிலிருந்த திண்டிரவனத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள்.
ருக்மிணியிடம் மன்னிப்பை வேண்டி கிருஷ்ணர் வந்தபோதிலும், அவளது கோபம் தணியவில்லை. அச்சமயத்தில் தனது பக்தரான புண்டரிகரை சந்திப்பதற்காக பகவான் பண்டரிபுரத்திற்கு வந்தார்.
புண்டரிகரின் ஆஸ்ரமத்தை பகவான் அடைந்தபோது, அவர் தனது வயதான வைஷ்ணவ தாய் தந்தையருக்கு சேவை செய்து வந்தார். அதனால்,
பகவானுக்கு ஒரு செங்கல்லினைக் கொடுத்து அதில் நின்றபடி காத்திருக்கக் கோரினார். பகவானும் அப்படியே செய்தார். தனது தாமரைக் கரங்களை இடுப்பில் வைத்தபடி புண்டரிகரின் வருகைக்காக காத்திருந்தார். அவர் அங்கு காத்திருந்தபோது, தனது கோபத்தைக் கைவிட்ட ருக்மிணி தேவியும் திண்டிரவனத்திலிருந்து
வந்து அவருடன் சேர்ந்து கொண்டாள். இருவரும் விக்ரஹ ரூபத்தில் அப்படியே பண்டரிபுரத்தில் தங்கிவிட்டனர். பகவான் இன்றும் அந்த செங்கல்லில் நின்றபடி, புண்டரிகருக்காக அன்றி எல்லா பக்தர்களின் வருகைக்காக காத்திருக்கின்றார். அவ்வாறு காத்திருக்கும்போது அவர் தமது பக்தர்களிடம் கூறுகிறார்,
பக்தர்களே கவலைப்பட வேண்டாம். என்னிடம் சரணடைந்தவர்களுக்கு இந்த பௌதிக உலகத்தின் கடல் போன்ற துன்பத்தினை பெருமளவில் குறைத்துவிடுகிறேன். பாருங்கள் இதன் ஆழத்தை. கடலின் ஆழம் இடுப்பளவில் மாறி விட்டதைக் காட்டும் பொருட்டு, அவர் இடுப்பில் கைவைத்தபடி நிற்கின்றார். மஞ்சள் மற்றும் இதர நிற
உடைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள விட்டலர் வைஜெயந்தி மாலையையும் துளசியையும் கழுத்தில் அணிந்து தரிசனமளிக்கின்றார். வலது கரத்தில் தாமரையும் இடது கரத்தில் சங்கும் வைத்துள்ளார். அவரது மார்பில் பிருகு முனிவரின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. அவரது காதுகள் மகர குண்டலத்தினாலும் நெற்றி
திலகத்தினாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மிக அருகில் செல்லும் யாத்திரிகர்கள் அவரது புன்சிரிப்பினால் கவரப்பட்டு அதனை வாழ்வின் பக்குவமாக கருதுகின்றனர். விட்டலரின் சில பிரசித்தி பெற்ற பக்தர்கள் விட்டிலனின் மகிமையைப் பரப்பியுள்ளனர். அவர்களது பிரச்சாரமும் பக்தி பாவமும்
மக்களிடையே நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களது முடிவான உபதேசம் என்னவெனில், தொடர்ந்து பாடுங்கள், தொடர்ந்து ஆடுங்கள், அவரது திருவடிகளின் அருகில் செல்லும்போது கருணைக்காக வேண்டுங்கள் என்பதே ஆகும்.
துக்காராம் மஹாராஷ்டிராவின் சாதுக்களில் மிகவும் பிரபலமானவர். பதினேழாம்
நூற்றாண்டில் வாழ்ந்த அவர், இன்றுவரை மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அபாங்கங்கள் என்று அழைக்கப்படும் அவரது 4,500 பாடல்கள் மஹாராஷ்டிர மக்களின் இதயத்தில் குடிகொண்டிருப்பவை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#வைகுண்ட_ஏகாதசி
ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று என்று பொருள். ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து
சாஸ்த்திரங்களும் வலியுருத்துகின்றன. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும். வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதம்
இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால்
வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கப் படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசியன்று தான் அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. எனவே இந்தநாளை #கீதா_ஜயந்தி என கொண்டாடுகின்றனர். ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும்
#பட்டினத்தார்#சித்தயோகி
கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒரு முறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார். வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத
உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப் பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர். பட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்தக் காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது. அவர்களுக்கு அவர்
பட்டினத்தார் என்பது தெரியாது. யாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர். அப்போது அதில் ஒரு பெண், யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது என்றுக் கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள். இதைக் கேட்ட இன்னொரு பெண்மணியோ, இவரா பெரிய மகான்? ஆசையை அடக்க
கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர
இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க
முன்வரவேண்டும். இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு எப்படித் துடித்துக் கொண்டு போகிறதோ அந்தத் துடிப்புடன் நாம் கோஸம்ரக்ஷணையில் முனைய வேண்டும். – ஜகத்குரு
#நடராஜர் ஸ்ரீ நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம். நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின்
மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது. வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான்.
கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது
#ஸ்ரீகிருஷ்ணனதைகள் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் தன் மனதை பறி கொடுத்த காஞ்சி நகர் ஊழிசேரன் எனும் மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும் விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும்,
ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம், வாசனையும் அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள், உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள், இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது. ஒரு நாள் மன்னர் ஊழிசேரன் உலாவச்
சென்று அரண்மனை திரும்புகையில், வழியில் மரத்தடியில் ஏழை பக்தர் ஆதிரன் என்பவர் விஷ்ணு பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார். உடனே அவரை கூப்பிட்டு என் பகவானை வெறும் துளசியை சாற்றி அலங்கோலமாக்கி விட்டாயே அரண்மனையில் வந்து பார் என்றார் பெருமையுடன்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது மன்னன் குலசேகரனின் வழக்கம். அவன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் குலசேகரன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு