#ஸ்ரீகிருஷ்ணனதைகள் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் தன் மனதை பறி கொடுத்த காஞ்சி நகர் ஊழிசேரன் எனும் மன்னர், பெருமாள் பள்ளி கொண்ட வடிவத்தை, விக்ரகமாக செய்வித்து, தினமும் விதவிதமான அலங்காரங்கள், நைவேத்தியங்கள் என வழிபட்டு வந்தார். நாளாக நாளாக, நாம் இறைவனுக்கு எவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளும்,
ஆபரணங்களும் சமர்ப்பிக்கிறோம், வாசனையும் அழகும் கலந்த மலர்கள், விதவிதமான பழங்கள், உயர்ந்ததான நைவேத்தியப் பொருட்கள், இம்மாதிரியான வழிபாட்டை யாருமே செய்ய முடியாது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்ற, ஆணவம் எனும் நச்சு மரம், அவருள் வேர் விட துவங்கியது. ஒரு நாள் மன்னர் ஊழிசேரன் உலாவச்
சென்று அரண்மனை திரும்புகையில், வழியில் மரத்தடியில் ஏழை பக்தர் ஆதிரன் என்பவர் விஷ்ணு பகவானின் சிறிய விக்ரகம் ஒன்றை வைத்து, துளசியால் அர்ச்சனை செய்வதை பார்த்தார். உடனே அவரை கூப்பிட்டு என் பகவானை வெறும் துளசியை சாற்றி அலங்கோலமாக்கி விட்டாயே அரண்மனையில் வந்து பார் என்றார் பெருமையுடன்
மன்னா உங்கள் வசதியை காட்டி, பகவானை வசப்படுத்த முடியாது. தூய்மையான பக்தி ஒன்றிற்கே பகவான் வசப்படுவார் என்றார். மன்னருக்கு கோபம் வந்து, போதும் உன் பேச்சு. நீ முதலில் பகவானை பார்க்கிறாயா அல்லது நான் பார்க்கிறேனா என்று பார்க்கலாம் என்று சொல்லி, அரண்மனை திரும்பினார். பின் முத்கல ரிஷி
மூலம் பிரமாண்டமான யாகம் செய்தார்.
காஞ்சியில் நடந்த அந்த யாகத்தை பற்றி, அனைவரும் சிலாகித்து, மன்னரின் பக்தியை பாராட்டினர். அதேசயம் ஏழை பக்தர் ஆதிரன் பகவானை தரிசிக்காமல், காஞ்சி திரும்ப மாட்டேன் என்று உறுதி எடுத்து, காஞ்சி நகருக்கு வெளியே விரதமிருந்து, வழிபாட்டைத் துவக்கினார்.
தானே நைவேத்தியம் தயாரித்து, கடவுளுக்கு படைத்து, அப்பிரசாதத்தையே ஒரு வேளை உண்டு, வழிபாடு நடத்தி வந்தார். ஒருநாள், வழக்கமாக, வழிபாட்டை முடித்தவர், கண்மூடி இறைவனை நமஸ்கரித்து, பிரசாதத்தை எடுக்க குனிந்த போது, அங்கே பிரசாதத்தை காணவில்லை. இவ்வாறாக ஆறு நாட்கள் நீடித்தது. ஏழாவது நாள்
பிரசாதத்தை ஸ்ரீ விஷ்ணு விக்ரகத்தின் முன் படைத்து, மறைந்து நின்று கவனித்தார். அப்போது, மெலிந்த, கந்தலாடை, பரட்டைத் தலையுடன் இருந்த ஒருவன் பிரசாதத்தை அள்ளிக் கொண்டு ஓடினான். அதைப் பார்த்த பக்தர் அவன் பின் ஓடினார். முன்னால் ஓடியவன் கல் தடுக்கி கீழே விழுந்து மயக்கமடைந்தான். உடனே
அவனை தூக்கி உட்கார வைத்து, தன் மேலடையால் அவனுக்கு விசிறினார் பக்தர் ஆதிரன். அடுத்த நிமிடம், பக்தா உன் அன்பால் என்னை நீ வென்று விட்டாய் என்றபடியே, ஏழை வடிவம் மறைய, அங்கே, பக்தருக்கு சங்கு சக்கர கதாதாரியாய் தரிசனம் தந்தார் பரமாத்மா ஸ்ரீ மஹாவிஷ்ணு. தகவல் அறிந்த மன்னர், தூய்மையான
பக்தியே உயர்ந்தது என கூறி யாக குண்டத்தில் குதிக்க, அவருக்கும் பகவான் தரிசனம் தந்தார். அன்பும், இரக்கமும் நிறைந்த தூய்மையான பக்தியே, பகவானை வசப்படுத்தும் என்பதை விளக்கும் கதை இது. பகவான் நம்மை ஆட்கொள்ள ஆத்மார்த்தமான நம்முடைய பக்தி ஒன்றே போதுமானது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒருமுறை ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரைச் சந்திப்பதற்காக துவாரகைக்கு வந்தாள். அச்சமயத்தில் கிருஷ்ணர் தன்னை விட ராதையின் மீது அதிக கவனம் செலுத்துவதை ருக்மிணி தேவி கவனித்தாள். அதனால் மனமுடைந்து பண்டரிபுரத்திற்கு அருகிலிருந்த திண்டிரவனத்திற்கு அவள் வந்து சேர்ந்தாள்.
ருக்மிணியிடம் மன்னிப்பை வேண்டி கிருஷ்ணர் வந்தபோதிலும், அவளது கோபம் தணியவில்லை. அச்சமயத்தில் தனது பக்தரான புண்டரிகரை சந்திப்பதற்காக பகவான் பண்டரிபுரத்திற்கு வந்தார்.
புண்டரிகரின் ஆஸ்ரமத்தை பகவான் அடைந்தபோது, அவர் தனது வயதான வைஷ்ணவ தாய் தந்தையருக்கு சேவை செய்து வந்தார். அதனால்,
பகவானுக்கு ஒரு செங்கல்லினைக் கொடுத்து அதில் நின்றபடி காத்திருக்கக் கோரினார். பகவானும் அப்படியே செய்தார். தனது தாமரைக் கரங்களை இடுப்பில் வைத்தபடி புண்டரிகரின் வருகைக்காக காத்திருந்தார். அவர் அங்கு காத்திருந்தபோது, தனது கோபத்தைக் கைவிட்ட ருக்மிணி தேவியும் திண்டிரவனத்திலிருந்து
#நடராஜர் ஸ்ரீ நடராஜரின் உருவ அமைப்பை பற்றி பொதுவாக தெரிந்துகொள்வது அவசியம். நடராஜ வடிவம் சிவனின் நடனத்தை குறிக்கிறது, நான்கு கரங்கள் கொண்டது. சிவனின் சடை முடியப்பட்டு அணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கீழ்பக்க சடை அவிழ்ந்து நடனத்தில் விரிந்து பறந்துகொண்டிருக்கிறது. முடிந்த சடையின்
மீது மண்டையோட்டையும், கங்கா தேவியின் உருவத்தையும், சடையைச் சுற்றி ஒரு நாகத்தையும், சடையின் மீது பிறைநிலவையும் காணலாம். தலையில் கொன்றையிலை மகுடம் சூடப்பட்டுள்ளது. வலது காதில் ஆண்கள் அணியும் காதணியும் (மகர குண்டலம்), இடது காதில் பெண்கள் அணியும் காதணியும் (குழை) அணிந்திருக்கிறான்.
கழுத்தில் ஆரமும், கைகளில் வளையங்களும், முழங்கையில் கடக வளையமும், கை விரல்களிலும், கால் விரல்களிலும் மோதிரங்களும் அணிந்திருக்கிறான். இடையில் இறுக்கமாக அணிந்துள்ள புலித்தோலாடை அவன் அணிந்துள்ளவற்றில் முக்கியமான ஒன்றாகும். மேலும் உதரபந்தமும் முப்புரிணூலும் அணிந்துள்ளான். ஒரு வலது
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஜனகபுரி எனும் நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது மன்னன் குலசேகரனின் வழக்கம். அவன் சிறந்த மகாவிஷ்ணு பக்தன். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்
என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.
மன்னன் குலசேகரன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒவ்வொரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.
ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு
#மாமரம் வாழை மரத்தைப் போல மா மரத்தின் இலை, மலர்கள், காய், கனி, வேர்ப் பட்டை மற்றும் பிசின் உள்ளிட்ட அத்தனை பாகங்களும், மனிதர்களின் உடல் நலனுக்கு அரிய தீர்வாகிறது. கோவில்களில் தல விருட்சமாக, பூஜைகளில் கலசங்களின் காப்பாக, தமிழர் பண்டிகைகளில் தோரணங்களாக மாவிலைகள் ஆன்மீகத்திலும்,
சித்த மருத்துவத்திலும் சிறப்பு வாய்ந்தது. மாவிலைகள் சிறந்த கிருமி நாசினி, வியாதி எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகையாகும். அதனால் தான் இந்து சமய திருவிழாக்கள், திருமணம், பிறந்த நாள் போன்ற மக்கள் கூடும் சிறப்பு நாட்களில் வீட்டு முகப்பில் மாவிலை தோரணம் கட்டப்படுகிறது. கோவில்கள், கோவிலைச்
சுற்றியுள்ள வீதிகளில் வீடுகளில் மாவிலைத் தோரணம் கட்டியே இருப்பது அந்தக் கால வழக்கம். கோமியம் எனும் பசுமாட்டின் சிறுநீர் கலந்த கலவையை மாவிலையைக் கொண்டு வீடுகளில் தெளிக்கும் போது, கிருமிகள் அகற்றப் படுகின்றன. மாவிலையின் மருத்துவ குணம், பயன்பாடு பற்றி தனி பதிவே போடலாம், ஏராளமானவை!
உலகில் மிகக் கொடூரமான தாக்குதல் உண்டாவது நமது நாவால் தான். நம் வார்த்தைகளால் தான். ஆயுதங்களை வைத்து தாக்கினால் ஒன்று நம் எதிரி மரணம் அடைவான் அல்லது காயம் அடைவான். ஆனால் நாம் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தால் எதிரி மரணம் அடைய மாட்டான். மாறாக, அவன் மனதிற்குள் பழிவாங்கும் எண்ணம்
என்னும் அரக்கன் விழித்துக் கொள்வான். இதனால் நமக்கு நாமே, பெரிய குழியை பறித்துக் கொள்கிறோம். அதனால் தான் கோபத்தில் கூட நமது நாவின் கட்டுப்பாட்டை நாம் இழந்து விட கூடாது. நாவை எப்படி கட்டுப்பாட்டுக்குள் வைப்பது?
அதற்குத்தான், உடலால் இறைவனை வணங்குவது, மனதால் இறைவனை சிந்திப்பது,
நாவால் இறைவனைப் பாடுவது என்று வைத்தார்கள். ஆண்டாள் நாச்சியார் இதைத் தான் “தூவயாமாய் வந்து நாம் தூமலர் தூவித் நதாழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்: செப்பு ஏவலார் எம்பாவாய்” என்கிறாள்.
நோன்பு இருப்பவர்கள் மட்டுமல்லாது,
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன.
அதில் ஒரு அணிலுக்கு ஸ்ரீமந் நாராயணன் மீது பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஸ்ரீமந் நாராயணனை சிந்தனை செய்து விட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.
அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது.
திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணில்களையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. ஒரு நாள் சுவாரசியமாக விளையாடி
கொண்டிருக்கும் போது, உற்சாகத்துடன் ஓடும் போது பக்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்றாலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே ஸ்ரீமந் நாராயணா உங்களுக்கு மிக்க நன்றி என்றது.