ஒரு ராஜா அவனுடைய மந்திரியோடு காட்டில் வேட்டையாட போனான்.
மந்திரி சிறந்த ராம பக்தன்.
எப்போதும் அவன் ராமநாமம் உச்சரித்துக்கொண்டிருப்பவன்.
ரொம்ப கெட்டிக்கார மதியூகி என்பதால் ராஜாவுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டு பதில் பெறுவதில் இன்பம்.
காட்டில் வேட்டையாட வெகு தூரம் போனதில் ராஜா களைத்து போனான். பசி காதடைத்தது.
களைப்பு தீர ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர்.
மந்திரி சற்று வயதானவன் கூட.
கிளம்பு நாம் இருவரும் எங்காவது உணவு தேடுவோம் என்றான் ராஜா.
இல்லை ராஜா நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன் என்றார் மந்திரி.
நீ என்ன செய்வாய் நான் வரும்வரையில்.
பேசாமல் ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பேன்.
ராஜா சிரித்தான்.
ராம ஜபம் உணவு கொண்டு தருமா? கஷ்டப்பட்டு உழைத்தால்,
முயற்சி எடுத்தால் மட்டுமே உணவு கிடைக்கும். புரிந்துகொள்.
நீ ரொம்ப களைத்திருக்கிறாய்.
ஆகவே இங்கேயே இரு. நான் போய் அருகில் எதாவது வீடு இருக்கிறதா என்று பார்த்து உணவு சேகரித்து வருகிறேன் என்று ராஜா கிளம்பிவிட்டான்.
மந்திரிக்கு தனிமையில்
ஆரண்யத்தில் ராமநாம ஜபம் பண்ண நேரம் கிடைத்ததே வரப்ரசாதம் என கருதி சந்தோஷமாய் ஜெபத்தில் ஈடுபட்டான்.
சுற்றி அலைந்து ஒரு வீட்டை எங்கோ கண்டுபிடித்து ராஜா கதவை தட்டினான். வீட்டில் இருந்தவர்கள் ராஜாவை அடையாளம் கண்டு கொண்டு வரவேற்று அவனுக்கு அவர்களால் முடிந்தவரை விருந்து வைத்தனர்.
ராஜாவும் உண்டு பசியாறி மந்திரிக்கும் உணவு பொட்டலம் கொண்டுவந்தான்.
இப்போது புரிகிறதா.
என் உழைப்பும் முயற்சியும்தான்
உணவு தந்தது.
உன் ராம நாம ஜபம் என்ன பலன் தந்தது? என்றான் ராஜா.
அவனை ஏற இறங்க பார்த்து மந்திரி அமைதியாக சொன்னான்:
நீ ஒரு பெரிய ராஜா,
உணவுக்காக அலைந்து தேடி
ஒரு எழை குடும்பத்திடம் பிச்சையெடுத்து உண்டு பசியாறினாய்.
என்னைப் பார் இருந்த இடத்திலேயே நான் செய்த ராமநாம ஜெபம்,
ஒரு ராஜாவின் கையால் எனக்கு உணவு கொண்டு வந்து தந்தது.
நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,
இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்...
சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை.! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம்...
கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக திருமணம் மற்றும் பூஜை, திதி, சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம்.
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது எத்தனை ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டன, எத்தனை சிறிய ரோட்டோரம் காய்கறி விற்கும் கிழவிகள் உட்பட அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதைக் கூறி இருப்பார்!
தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.
மற்ற தினங்களில் ஜோதி வடிவில் அம்பாளை வழிபடுகிறார்கள்.
🙏🇮🇳1
இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது.
தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான்.
🙏🇮🇳2
ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.
மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், 🙏🇮🇳3
குரு பகவானின் அருள் நிறைந்த #சதாசிவமூர்த்தி திருக்கோயில்
புளியரை....
இறைவன் : தட்சிணாமூர்த்தி
இறைவி : சிவகாமி
தல விருட்சம் : புளியமரம்
🙏🇮🇳1
ஜோதிடத்தில் ஒன்பது கோள்களும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவரவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எல்லா கோள்களும் நன்மை செய்வதுமில்லை, எல்லா கோள்களும் தீமை செய்வதுமில்லை. ஒன்பது கோள்களில் பூரண சுபராக வணங்கப்படுபவர் குரு பகவான் ஆவார். 🙏🇮🇳2
குருபகவானின் அருட்கடாட்சம் அதிகமாக இருக்கக்கூடிய அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயிலை தரிசிப்போம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். 🙏🇮🇳3