நீங்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்வதற்கு முன்பு உங்கள் கைகளில் 2 உத்தரணி நீர் விட்டு கை சுத்தம் செய்ய சொல்லி நீரை கீழே விட்டுவிட்டு சங்கல்ப மந்திரம் சொல்வதன் கணித அறிவை அதன் அருமையை புரிந்து கொள்வது என்பது,
இந்த மானிட ஜென்மத்தின் சிறப்பை தெரிந்துகொள்வதற்கு சமம்...
சங்கல்ப மந்திரத்தின் கணக்கு தெரியாமல் அந்த மந்திரத்தை சொல்லுவதால் எந்தப்பயனும் இல்லை.! ஆகவே சங்கல்ப மந்திரத்தின் சாரஹம்சத்தை தெரிந்துகொள்ளலாம்...
கோவிலில் அர்ச்சனை செய்யும்போதோ அல்லது ஒரு சாஸ்திர சம்பிரதாய நிகழ்ச்சிகளாக திருமணம் மற்றும் பூஜை, திதி, சிரார்த்தம், தர்ப்பணம் போன்றவைகளை செய்யும்போதோ, முதலில் "ஸங்கல்பம்" செய்கிறோம்.
அப்படி சங்கல்பம் செய்யும் போது கூறும் சம்ஸ்கிருத மந்திரங்களின் விவரங்களை நாம் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
"சங்கல்பம்" :-
"மாமோ பாத்த: ஸமஸ்த: துரிதக்ஷய த்வார: ஸ்ரீபரமேஸ்வர: ப்ரீத்யர்த்தம்... ஸ்ரீமன் நாராயண பிரீத்தியர்த்தம்/ஸ்ரீபகவத் கைங்கர்ய ரூபம் போன்றவற்றை அவரவர்கள் சம்பிரதாயத்திற்கு ஏற்ப ஆரம்பித்து...
அன்றைய தினத்திற்க்கு உள்ள திதி, வார, நக்ஷத்திரத்தைப் உச்சரித்து ஸங்கல்பம் செய்கிறோம்".
அது என்ன சங்கல்ப மந்திர கணக்கு என்றால்..? மிக எளிமையான உங்களுக்கு தெரிந்த கணக்குதான் அது..!!!!
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம் (அதாவது 3000' x 60 வருடங்கள்)
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்
ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மானுட வருடங்கள். (கணக்கதிகாரம்).தற்போது இதில் பாதி முடிந்து விட்டது.
இப்பொழுது நடந்துகொண்டிருப்பது, த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.
ஸ்வேதவராஹ கல்பம் என்றால்.., இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன.
இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது.
வைவஸ்வத மன்வந்தரம் என்றால்..,
நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது.
14 மன்வந்திரங்களாவன என்பவை:-
1.ஸ்வாயம்புவ மன்வந்திரம்,
2.ஸ்வரோசிஷ மன்வந்திரம்,
3.உத்தம மன்வந்திரம்,
4.தாமச மன்வந்திரம்,
5.ரைவத மன்வந்திரம்,
6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம்,
7.வைவஸ்வத மன்வந்திரம்,
8.சாவர்ணிக மன்வந்திரம்,
9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம்,
10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம்,
11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம்,
12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம்,
13.தேவ சாவர்ணிக மன்வந்திரம்,
14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்.
அதாவது நாம் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிற ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.
அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே - (71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம் அல்லவா,
ஆகவே வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில் 28வது சதுர்யுகத்திலிருக்கும் நான்கு யுகங்களான கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது).
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும். அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.
இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள்.
இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்...
ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம். பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான்.
இதில் நாம் (பாரத தேசம்) பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.
மேரோர் தக்ஷணே பார்ச்வே - பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்.
எண்ணற்ற பிரம்மாக்களின் சிருஷ்டி வரிசைகளில், ஒரு பிரம்மாவின் படைப்பில், அவரின் இரண்டாவது காலத்தின், முதல் தினத்தில் (கோடிக்கணக்கான வருடங்களுக்கு இடையில்) வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மேலே சொல்லப்பட்டுள்ள கணித வகைகள் தமிழின் தொல்லிய நூலாகிய காரி என்பவர் எழுதிய கணக்கதிகாரத்தை மையமாகவும் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. கணக்கதிகாரம் மிக அற்புதமான நூல். கால கணிதம் மட்டுமன்றி, எடையறிதல், நீளமறிதல் போன்ற நுண்ணிய கணிதங்களைக் கொண்டது.
அதில் கிடைக்கும் ஒரு செய்யுளில் ஒரு பலாப் பழத்தைப் பார்த்தே, அதைப் பிளக்காமலே அதில் உள்ள பலாச் சுளைகளை அறிய ஒரு கணித சமன்பாடு இருக்கின்றது.
ஒரு பலாப்பழத்திலுள்ள காம்பைச் சுற்றிய முதல் வரிசையில் உள்ள முட்களை எண்ண வேண்டும். அந்த எண்ணிக்கையை ஆறால் பெருக்க வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை ஐந்தால் வகுத்தால் பலாப்பழத்தில் உள்ள பலாச் சுளைகளின் எண்ணிக்கை கிடைக்கும். என்னே ஒரு கணிதம்..!
ஒரு மரத்தை வெட்டினால் வெட்டுப்பட்ட பாகத்தில் உள்ள கோடுகளைக் கொண்டு மரத்தின் ஆயுளைக் கூறிவிட முடியும்.
இவ்விதம் காலமானம் பேசப்படுகிறது இது தான் சனாதன சமய கால கணக்கீட்டில் மிகச்சிறிய பகுதி, மேலும் வானசாஸ்திரத்தை (Astronomy) அறிய அதன் பெருமையை பேச நமக்கு வருடங்கள் போதாது.சமஸ்கிருத மந்திர கணக்கு..
பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் நடந்தபோது எத்தனை ரிங் ரோடுகள் அமைக்கப்பட்டன, எத்தனை சிறிய ரோட்டோரம் காய்கறி விற்கும் கிழவிகள் உட்பட அப்புறப்படுத்தப் பட்டனர் என்பதைக் கூறி இருப்பார்!
தலச்சிறப்பு : சமயபுர மாரியம்மன் இவ்வூருக்கு வைகாசி அமாவாசையை அடுத்து வரும் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு எழுந்தருளுவதாக ஐதீகம்.
மற்ற தினங்களில் ஜோதி வடிவில் அம்பாளை வழிபடுகிறார்கள்.
🙏🇮🇳1
இங்கே அம்மனுக்கு என தனியாக சிற்பமோ, விக்கிரஹமோ, பஞ்சலோகச் சிலையோ கிடையாது.
தல வரலாறு : அறுநூறு ஆண்டுகள் முன்னர் வளையல் வியாபாரியான ஒரு மாரியம்மன் பக்தன் வருடா வருடம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான்.
🙏🇮🇳2
ஒரு சமயம் அவனால் சமயபுரம் வரை செல்ல முடியவில்லை.
மனம் வருந்திய அவன் அம்மனைப் பார்க்க முடியவில்லையே என வருந்த அவனுக்காக ஆகாய மார்க்கமாய் அம்பிகை சமயபுரத்தில் இருந்து கிளம்பி இங்கே வந்து காட்சி கொடுத்ததாகவும், 🙏🇮🇳3
குரு பகவானின் அருள் நிறைந்த #சதாசிவமூர்த்தி திருக்கோயில்
புளியரை....
இறைவன் : தட்சிணாமூர்த்தி
இறைவி : சிவகாமி
தல விருட்சம் : புளியமரம்
🙏🇮🇳1
ஜோதிடத்தில் ஒன்பது கோள்களும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அவரவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. எல்லா கோள்களும் நன்மை செய்வதுமில்லை, எல்லா கோள்களும் தீமை செய்வதுமில்லை. ஒன்பது கோள்களில் பூரண சுபராக வணங்கப்படுபவர் குரு பகவான் ஆவார். 🙏🇮🇳2
குருபகவானின் அருட்கடாட்சம் அதிகமாக இருக்கக்கூடிய அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயிலை தரிசிப்போம்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். 🙏🇮🇳3