மும்பையை களமாகக் கொண்ட பல சிறுகதைகள், சில வெளிநாடுகளிலும்... ஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியே விரியும் கதைகள். மனித உணர்வுகளையும் மாண்புகளையும் உடன் நிறுத்தி அவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
(1/n)
ஒவ்வொரு கதையிலும் தொக்கி நிற்கும் உணர்வுகள் மனதின் பல கோணங்களை அடையாளம் காட்டுகிறது.
உடல் நலிந்த அப்பா, "தொண்டைப் புடைத்த காகம்" போல் அவளிடம் வந்தாரா!!!
நெருப்பில் எறிந்த கண்டவப் பிரஸ்தத்தின் மேல் எழுந்த இந்திரப்பிரஸ்தம் போல் "சாம்பல் மேலெழும் நகரம்" !!!
(2/n)
கற்றாவின் மனம் கசியும் தன் அம்மாவின் புத்தகம் தேடி சென்ற மகளின் "பயணம் 21"
வாழும் மனிதர் காலாவதியாகும் நேரம்? இங்கு அனைத்தும் சிதறிப்போகும் "வீழ்தல்" எது!
செம்மாா்பு குக்குறுவானின் குரல் ஒலி. மௌனத்தை வீழ்த்தும் ஒலி. "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை" நம்மில் பலர்.
(3/n)
பல மனம் முறியும் சுயம்வரங்களுக்கிடையே, இருமனம் மட்டும் பங்கெடுத்த "வில் முறியாத சுயம்வரங்கள்"
ஓரிரவு அவனை பெண்ணாக்கிய "பொய்கை" அவனிடம் சொல்ல நினைத்தது என்ன !!!
"1984" முதல் ஆராத ரணம் சுமந்த ப்ரீத், அதன் வடுவுடன் உறங்கினாள் முப்பத்தி நான்கு ஆண்டுகள் கழித்து.
(4/n)
குதிரை மூத்திரம் தேடிய மாமி, வாழ்க்கையையே சில வார்த்தைகளில் சொல்லி விடும் துல்ஸி,வாழ்க்கையின் ஓட்டத்தை ஓடிப்பிடிக்க முயலும் "குதிரைக்காரி"ரேஷ்மா.
பிரபஞ்சம் பல அதிசயங்களை தனக்குள் அடக்கி இருக்கும் ஒரு கற்பனை கதை, அந்தக் கதையின் புகையில் மறைந்துபோன மதுரா "சிங்கத்தின் வால்"
(5/n)
இசை நிகழ்ச்சியின் பார்வையாளர் அமரும் இடத்தில் முன் வரிசையில் காத்திருக்கும் "இரண்டு வெற்று நாற்காலிகள்" ஹர் ஷ்னைடர் மற்றும் நிகிலுக்காக. எதிர்பார்ப்பில்லாத உறவுகளுக்காக.
(6/n)
கடல் தாண்டி வேலைக்கு சென்றவர்களின் நினைப்பு நிலைப்பது சொந்த ஊரில் தான், அதன் சான்றுதான் அந்த சிஸ்டர் ஊருக்கு சென்று அனுப்ப மரியாவிடம் தந்த தபால் "பயணம் 22"
1991 இல் சென்ற டோக்கியோ பயணமும் நிரூவுடன் ஊர் சுற்றியபோது கண்ட ஆஸாஹி பியர் ஹால் கட்டிடத்தின் மேலிருந்த சிற்பமும்
(7/n)
அது குறித்த விவாதமும் சிரிப்பும் நிறைந்த "பயணம் 23"
*எதை எடுத்தாலும் அதன் பொருள் அடுக்கின் கீழே எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தும் அடிப்படை உணர்வான பாலியல்* என்ற வார்த்தை தொடர் வெறும் வார்த்தை கோர்வை அல்ல, ஆழமாக சிந்தித்தால் புரியும் நிதர்சனம் அது.
(8/n)
இப்புத்தகத்தில் கமழும் தேநீர் வாசமும், ஜன்னல்கள் வழியே விரியும் காட்சிகளும் நம்மை கட்டிப் போடும்.
எனக்குப் பல உலகை காண்பிக்க தன் இறக்கைகள் மீது என்னை இறுத்தி பயணப்படுத்திய அம்பை அவர்களின் "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை" ♥️
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை -அம்பை அவர்கள் கிரீடம் சூட்டிக்கொண்ட சிறுகதைத் தொகுப்பின் மகுடக்கதை வாசிப்பு, இன்று காலை 11.00 மணிக்கு இணையுங்கள் தோழர்களே #முச்சந்துமன்றம்
சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.
(1/n)
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.