சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.
(1/n)
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.
(3/n)
பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், அவர்களின் ஆதிக்கத்தால் இந்த ஆண்டு முறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடை முறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது.
(4/n)
மேலும் இந்த அறுபது ஆண்டுகள் சுழற்சி முறையில் வருவதற்கு சொல்லப்படும் காரணம் தான் மிகவும் வேடிக்கையானது.
புராணக்கதை ///
அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது ( இது ஒரு ஆன்மீக நூல் சிங்காரவேலு முதலியாரால் (1855 - 1931)
(5/n)
தொகுக்கப்பட்ட இலக்கியக் கலைக்களஞ்சியமாகும். இதன் முதற் பதிப்பு மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக
1910 ஆம் ஆண்டு வெளிவந்தது.)
ஒருமுறை நாரதமுனிவர், கடவுள் கிருஷ்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம்.
(6/n)
அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்’ என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால்,
(7/n)
நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார். கிருஷ்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.
(8/n)
பின் கடவுள் கிருஷ்ணனுடன் அறுபது வருடம் கூடி, அறுபது மகன்களைப் பெற்றார்.
அவர்கள் ‘பிரபவ தொடங்கி அட்சய முடிய’ என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருஷமாகும் வரம் பெற்றார்கள். இப்படிதான் சித்திரை 1ல் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது.
(9/n)
தமிழர்கள் காலத்தை கணித்த முறை ///
தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளை கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பிரித்து வைத்தார்கள்.
வைகறை,
காலை,
நண்பகல்,
ஏற்பாடு,
மாலை,
யாமம்.
(10/n)
அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள்.
(11/n)
ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன, தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
(12/n)
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்.
(13/n)
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக / பெரும் பொழுதுகள் வகுத்திருந்தார்கள்.
1.இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது)
2.முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது)
காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (seasons) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன்
(15/n)
தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில் தான் ஆரம்பிக்கின்றார்கள்.
(16/n)
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
(17/n)
இடையில் தமிழர் மட்டும் மாறி விட்டோம்!. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால் தான் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்கிறோம்.
இதை இவ்வளவு உறுதியாக கூற இன்னொரு காரணம் உண்டு.
இயற்கையில் அனைத்து விலங்குகளும் குட்டி போடுவது இளவேனில் காலத்தில் தான்.
(18/n)
இதற்கு காரணம் இளவேனில் காலத்தில் குளிர் மழை வெப்பம் என அனைத்தும் மிதமாக இருக்கும். குட்டிகள் உயிர் பிழைத்து வாழ தகுதியான காலம் இளவேனில். பின்பு அந்த குட்டிகள் எதிர்கொள்ளப் போகும் குளிர் வெயில் மற்றும் மழை காலத்தை தாங்கி உயிர் பிழைத்து வாழும் சக்தியை பெறும்.
(19/n)
இப்படி தன் புதிய வாழ்வை இனிமையாக துவங்கும் காலம் இளவேனில் காலம், அதாவது தை மாதம் தானே தவிர, கடும் வெயிலில் வறட்சி ஏற்படும் சித்திரை மாதம் அல்ல ஒரு ஆண்டின் துவக்கம்.
எனவே இனிய துவக்கமாக இருக்கும் தை மாதம் தான், நாம் தமிழ் புத்தாண்டாக கொண்டாட ஏற்புடையது.
End ♥️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.
தோழர், அருந்ததிராய் அவர்களின் பெருங்கட்டுரை "இந்திய இழிவு" புத்தகம். தமிழில் "நலங்கிள்ளி" அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்.
உங்களுக்கு மலாலா அவர்களை தெரியும், சுரேகா போட்மங்கே பற்றி தெரியாது எனில், நிச்சயம் அம்பேத்கரை படியுங்கள் என துவங்குகிறது புத்தகம்.
(1/n)
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு உதாரணத்தை எடுத்துரைத்து, தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார். இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் குறித்த அம்பேத்கரின் பார்வையை மிகத்துல்லியமாக மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.
(2/n)
குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைத்து அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சாதி அடக்குமுறை, அவர்களின் பெண்கள் மீது தன்னை உயர்ந்த சாதி எனக் கருதிக் கொள்பவனுக்கு அதீத உரிமை இருப்பதாக எண்ணுவதன் விளைவு தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு என்கிறார்.
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா? @The_69_Percent@esemarr3 @Greatgo1
சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.
(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.