மும்பையை களமாகக் கொண்ட பல சிறுகதைகள், சில வெளிநாடுகளிலும்... ஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியே விரியும் கதைகள். மனித உணர்வுகளையும் மாண்புகளையும் உடன் நிறுத்தி அவற்றின் தொகுப்பாக அமைந்துள்ளது.
(1/n)
ஒவ்வொரு கதையிலும் தொக்கி நிற்கும் உணர்வுகள் மனதின் பல கோணங்களை அடையாளம் காட்டுகிறது.
உடல் நலிந்த அப்பா, "தொண்டைப் புடைத்த காகம்" போல் அவளிடம் வந்தாரா!!!
நெருப்பில் எறிந்த கண்டவப் பிரஸ்தத்தின் மேல் எழுந்த இந்திரப்பிரஸ்தம் போல் "சாம்பல் மேலெழும் நகரம்" !!!
(2/n)
கற்றாவின் மனம் கசியும் தன் அம்மாவின் புத்தகம் தேடி சென்ற மகளின் "பயணம் 21"
வாழும் மனிதர் காலாவதியாகும் நேரம்? இங்கு அனைத்தும் சிதறிப்போகும் "வீழ்தல்" எது!
செம்மாா்பு குக்குறுவானின் குரல் ஒலி. மௌனத்தை வீழ்த்தும் ஒலி. "சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சை பறவை" நம்மில் பலர்.
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை -அம்பை அவர்கள் கிரீடம் சூட்டிக்கொண்ட சிறுகதைத் தொகுப்பின் மகுடக்கதை வாசிப்பு, இன்று காலை 11.00 மணிக்கு இணையுங்கள் தோழர்களே #முச்சந்துமன்றம்
சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.
(1/n)
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.