Note :- 2021 - இல் நான் வாசித்த புத்தகங்கள் இவை, புத்தகம் மற்றும் எழுத்தாளர்களின் பெயர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். விருப்பமுள்ளவர்கள் நிச்சயம் இந்த புத்தகங்களை படித்துப்பாருங்கள்.
எனக்கு புத்தகங்களை பரிந்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.
நன்றி ♥️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை -அம்பை அவர்கள் கிரீடம் சூட்டிக்கொண்ட சிறுகதைத் தொகுப்பின் மகுடக்கதை வாசிப்பு, இன்று காலை 11.00 மணிக்கு இணையுங்கள் தோழர்களே #முச்சந்துமன்றம்
சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.
(1/n)
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.
இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.
தோழர், அருந்ததிராய் அவர்களின் பெருங்கட்டுரை "இந்திய இழிவு" புத்தகம். தமிழில் "நலங்கிள்ளி" அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்.
உங்களுக்கு மலாலா அவர்களை தெரியும், சுரேகா போட்மங்கே பற்றி தெரியாது எனில், நிச்சயம் அம்பேத்கரை படியுங்கள் என துவங்குகிறது புத்தகம்.
(1/n)
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு உதாரணத்தை எடுத்துரைத்து, தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார். இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் குறித்த அம்பேத்கரின் பார்வையை மிகத்துல்லியமாக மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.
(2/n)
குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைத்து அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சாதி அடக்குமுறை, அவர்களின் பெண்கள் மீது தன்னை உயர்ந்த சாதி எனக் கருதிக் கொள்பவனுக்கு அதீத உரிமை இருப்பதாக எண்ணுவதன் விளைவு தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு என்கிறார்.
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா? @The_69_Percent@esemarr3 @Greatgo1