2021ஆம் ஆண்டில் 84% இந்திய குடும்பங்களின் வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
அதேநேரத்தில் நாட்டில் உள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில், 102லிருந்து '142' ஆக அதிகரித்துள்ளது.
- ஆக்ஸ்பாம் ஆய்வு அறிக்கை (1/7)
📍"Inequality Kills" என்ற தலைப்பில் ஆக்ஸ்பாம் தனது 2021ஆம் ஆண்டின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
📍கொரோனா காலக்கட்டத்தில் மட்டும் (மார்ச் 2020 - நவ.2021 வரை) இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 23.14 லட்சம் கோடியில் இருந்து 53.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. (2/7)
📍இதற்கு நேர்மாறாக, 2020ல் மட்டும் 4.6 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் தீவிர வறுமையில் வீழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
📍"ஐநா சபையின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய புதிய ஏழைகளில் கிட்டத்தட்ட பாதியளவு," என்று ஆக்ஸ்பாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. (3/7)
📍2021ல் இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்களின் கூட்டுச் செல்வ மதிப்பு ரூ. 57.3 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
📍இருப்பினும், அதே ஆண்டில், இந்திய மக்கள்தொகையில் 50% பேர், வெறும் 6 சதவீத செல்வத்தை மட்டுமே வைத்திருந்ததாக ஆக்ஸபான் தெரிவித்துள்ளது. (4/7)
📍சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, உலகின் 3வது அதிக செல்வந்தர்களைக் கொண்ட நாடு இந்தியா; பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்தை விட அதிகமான செல்வந்தர்களைக் கொண்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. (5/7)
📍இந்தியாவில் அதிகரித்து வரும் செல்வ சமத்துவமின்மைக்கு தீர்வாக, பெரும் பணக்காரர்கள் மீது வரி விதிக்குமாறு #oxfam பரிந்துரைத்துள்ளது
📍"பெரும் பணக்காரர்களுக்கு 1% வரி விதிக்கப்பட்டால், இந்தியாவின் தடுப்பூசி திட்டச் செலவுகள் (ரூ.50,000 கோடி) முழுவதற்கும் நிதியளிக்க முடியும்" (6/7)
என ஆக்ஸ்பான் தெரிவித்துள்ளது.
📍இந்தியாவின் 98 பணக்காரர்களுக்கு 4% செல்வ வரி விதிக்கப்பட்டால், இந்திய சுகாதார அமைச்சகத்தின் பட்ஜெட் 2 ஆண்டுகளுக்கும், மதிய உணவுத் திட்டத்திற்கு 17 ஆண்டுகளுக்கும் நிதி அளிக்க முடியும் என்றும் அறிக்கை கூறுகிறது. (7/7)
உலகப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, இதுவரை எந்த சமூக ஊடக பக்கங்களிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்தார்.
ஐநா அகதிகள் அமைப்பின் சிறப்புத் தூதராக இருக்கும் இவர், தனது முதல் Instagram பதிவாக ஒரு #ஆப்கானிஸ்தான் பெண்ணின் கடிதத்தை பகிர்ந்துள்ளார். (2/4)
"இது ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இளம்பெண்ணிடம் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட கடிதம். இப்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சமூக ஊடகங்களில் தொடர்பு கொள்ளும் திறனை இழந்துள்ளனர்.... (3/4)