#வடபழனி #தண்டாயுதபாணி_திருக்கோவில்
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவிலை அமைத்து அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை
வைத்து வழிபட்டுள்ளார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முருகபக்தரான அவர் திருத்தணி, திருப்போரூர் ஆகிய திருமுருகன் திருத்தலங்களுக்கு, கடும் புயலிலும் மழையிலும் திருடர் மறித்தாலும் கூட தவறாது சென்று வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கனவில் ஒரு பெரியவர் தோன்றி உன் வீட்டிலேயே முருகன்
குடியிருக்கும் போது நீ ஏன் இங்கு அவனைத் தேடிக் கொண்டு இங்கே ஓடி வருகிறாய்? அங்கேயே நீ முருகனை வழிபட்டு மகிழலாமே என கூறக்கேட்டு, உறக்கத்தில் இருந்து எழுந்து, முருகன் அருளை நினைத்து உருகித் தொழுது, வீட்டிற்கு வந்து சேர்ந்தார். நடந்த சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்து அன்று
முதல் தம் வீட்டிலேயே காலை, மாலை, இரு வேளைகளிலும் முருகனை நினைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் தான் சந்தித்த பழநி சாது தெரிவித்தது போன்று திருத்தணியில் முருகன் சன்னதி எதிரில் புதுமையான காணிக்கையாக தனது நாக்கை அறுத்து பாவாடம் தரித்து கொண்ட பின் வயிற்று வலி தீரப் பெற்றார். அதன்
பிறகு நீண்ட நாள் கனவாக இருந்த, தென் பழநி யாத்திரையின் போது ஞான தண்டாயுதபாணியை மலைமேல் சென்று தரிசித்துக் கொண்டு படிகளின் கீழிறங்கி வந்தார். வழியில் இருந்த படக்கடை ஒன்றில் பழநியாண்டவரின் பெரிய அழகிய படம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. அப்படி பழனியில் பெற்ற முருகனின் திருவுருவப்
படத்தினை நாயகர் அவர்கள் பெருஞ் செல்வமாக மதித்துப் போற்றி எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்தார். தமது குறிமேடையில் அப்படத்தினை வைத்து பழநி ஆண்டவர் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். சிறிய கீற்றுக் கொட்டகையொன்று போட்டுவித்துத் தம் குடும்பத்தை வேறிடத்திற்கு இடம் பெயரச் செய்தார். பழனி
ஆண்டவர் படத்திற்கு பூஜை செய்து பக்தர்களுக்கு குறி சொல்லி அவர்களது குறைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார். அதன் பிறகு தன்னிடம் தொண்டு செய்து வந்த இரத்தினசாமி செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான், தமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவர் என முடிவு
செய்து இரத்தினசாமி செட்டியாரிடம் ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா என்று கேட்டார். இரத்தினசாமி செட்டியார் இதை எதிர்பார்க்கவில்லை. குடும்பஸ்தர் ஆதலால் ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருவேன் என்று பணிவுடன் தெரிவித்தார். அது கேட்ட தம்பிரான் இக்கீற்றுக் கொட்டகையை
மாற்றி இங்கு பழநி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோயில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது என்று கூறினார். உடனே செட்டியார் பக்தர்களும் அதைத் தான் விரும்பி வருகின்றனர் என்று சொல்லி கோயில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தார். மேலும் பழநி ஆண்டவர் சிலை அமைத்த் திருக்கோயில்
நிறுவிக் கும்பாபிஷேகமும் செய்ய தன் விருப்பத்தைத் தெரிவித்தார் செட்டியார். அண்ணாசாமித் தம்பிரான் அதற்கு ஒப்புதல் அளித்து ஆசி வழங்கினார். செட்டியார் வண்ணையம்பதி சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதிடம் பழநி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார். அண்ணாசாமித் தம்பிரானின்
குறிப்பின்படி கோயில் திருப்பணியை செட்டியார் மேற்கொண்டார். குறிமேடைக்கு அருகில், இப்போது வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் கருவறைப்பகுதி உள்ள இடத்தில், செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப் பெற்றது. அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது. இது
சுமார் 1865-ம் ஆண்டாக இருக்கலாமென தெரிகிறது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் ஆவணி மாதம் அமாவாசைத் திதி, மக நட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்துவிட்டார். ஒருநாள் இரத்தினசாமி செட்டியார் கனவில் ஸ்ரீ அண்ணாசாமி தம்பிரான் தோன்றி அவரையும் தம்மை போலவே பாவாடம்
தரித்துக் கொள்ளுமாறு பணிந்தார். அவ்வாறே ஆடிக்கிருத்திகை அன்று இரத்தினசாமி செட்டியாரும் பாவாடம் தரித்துக் கொண்டார். அடுத்த கிருத்திகை முதல் இரத்தினசாமி தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறி சொல்லும் ஆற்றல் பெற்றார். பின் சில நாட்களில் அண்ணாசாமி தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற
கோயில் திருப்பணி பழநியாண்டவர் சிலை பிரதிஷ்டை செய்யப் பெற்று கும்பாபிஷேகமும் நடந்து நன்கு நிறைவேறியது. வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே இரத்தினசாமி தம்பிரான் திருக்கோயில் பூசை முதலிய செலவுகளை நன்முறையில் நடத்தி வந்தார். அதன் பிறகு
கோடம்பாக்கம் குறிமேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என்று வழங்கும்படி இரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார். நாளடைவில் வடபழநிக் கோயிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் பரவியது. 1886-ம் ஆண்டு மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ இரத்தினசாமி தம்பிரான் இறைவன்
திருவடியை அடைந்தார். அவருக்கு பின்னர் அவரது சீடர் பாக்கியலிங்க தம்பிரான் என்பவர் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப பாவாடம் தரித்துக் கொண்டு அருள்வாக்கு சொல்லி முன்னவரைப் பின்பற்றினார். இப்போதுள்ள வடபழநி திருக்கோயிலின் கர்ப்ப கிருகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும்,
கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் அவர்களேயாவர். இவர்தம் அரும்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழநி ஆண்டவர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அன்பர்கள் பெருந்திரளாகக் கோவிலுக்கு வந்தனர். கோயில் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின. 1931-ம்
ஆண்டு புரட்டாசித் திங்கள் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்யலிங்கத் தம்பிரான் பழநியாண்டவர் திருவடியை அடைந்தார். தென் பழநிக்குச் சென்று தரிசிக்க முடியாதவர்கள் அதன் அம்சமாகவே திகழும் வடபழநி ஆண்டவரை வந்து தரிசித்தால் பழநி ஆண்டவர் அருள்பாலிக்கும் அனைத்து அம்சங்களையும்
இந்த வடபழநி ஆண்டவரை தரிசித்து அருள் பெறலாம் என்பது ஐதிகம். பக்தர்கள் அனைவராலும் உணரப்பட்டு அருள்பெறப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. தென்பழநிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழநிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியும் செல்கின்றனர். அங்கு முருகப்
பெருமான் ஆண்டிக் கோலத்தில் காட்சியளிக்கிறார். அதேபோல், வடபழனியிலும் முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் அருள்புரிகிறார். அவர்களுக்கு கலியுக வரதனான வடபழநி ஆண்டவர் அருள்பாலிப்பது திண்ணம். வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளிக்கும் பிரார்த்தனை ஸ்தலமாக உயர்ந்திருக்கிறது.
சித்தர்களும், சாதுக்களும், சான்றோர்களும், ஆன்றோர்களும், பக்தர்களும், முக்கியப் பிரமுகர்களும் தரிசிக்க வருகின்றனர். இத்திருக்கோயிலை உருவாக்கிய மூன்று சித்தர்களும் சமாதி அடைந்த இடம் இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள நெற்குன்றம் பாதையில் உள்ளது. அந்த இடத்தில் சித்தர்கள் ஆலயம்
அமையப்பெற்று ஒரே நேரத்தில் மூவரின் சமாதிகளை தரிசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் குரு பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணத் தடை விலகவும் மற்றும் மக்கட்பேறு பெறவும் சிறந்த கல்வி அறிவு பெறவும், உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கவும்
மூலவரையும், அங்காரகனையும் (செவ்வாய்) வழிபாடு செய்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்பவர்களுக்கு குறைகள் நீங்கி நிவர்த்தி ஏற்படும் என்பது இத்தலத்தின் மிகப்பெரிய சிறப்பு. இத்தலத்தின் சிறப்பு வேறு எந்த படைவீட்டிலும் காண முடியாதது மூலவர் பாத காலணிகளுடன் அருள்பாலிப்பது.
பாத காலணிகள் அணிந்து இருப்பது ஆணவத்தையும், அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. இத்திருக்கோயிலின் மூலவரின் வலது காலானது சற்று முன்வந்தது போல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை இக்கலியுகத்தில் விரைந்து வந்து வடபழனி ஆண்டவர் உடன் நீக்குவதாக ஐதீகம். இத்திருக்கோயிலின் தல
விருட்சம் அத்தி மரம் ஆகும். குழந்தைகள் வரம் வேண்டி அத்தி மரத்தில் பக்தர்கள் தொட்டில் கட்டி வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதலை விரைந்து தீர்த்து வைக்கின்ற காரணத்தால் பிரார்தனை தலமாக உயர்ந்து, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
அந்த சமயம் கோவில் கொடிமரம் தங்கத்தால் மாற்றி அமைக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்களுக்குள் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து அவரின் பேரருளை பெறுவோம்.
ஓம் சரவண பவாய🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jan 25
ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்பிரபு என்ற மஹான் மேற்கு வங்கத்தில் அவதாரம் செய்து,
“ஹரே ராம! ஹரே ராம! ராம ராம! ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண! ஹரே ஹரே!”
என்ற மஹா மந்திரத்தை, அந்த தேனை, பாரத தேசம் முழுக்க மழையாக கொட்டினார். அவர் இறுதியில் சன்யாசம் வாங்கிக் கொண்டு ஒரு Image
அறையிலேயே பன்னிரண்டு வருடம் தவம் இருந்தார். தான் கிருஷ்ணரின் ராதை என்ற உணர்விலேயே கிருஷ்ணரோட இருந்தார். அந்த மஹான் பகவானோட கலந்து விடும் முன்னே, சிஷ்யர்களுக்கு ஒரு எட்டு ஸ்லோகங்கள் அருளினார். அதற்கு சிக்ஷாஷ்டகம் என்று பெயர். இன்றைக்கும் கௌடியா மடத்தில் தினமும் பாராயணம்
செய்கிறார்கள். மிக அழகான ஸ்லோகம். பகவன் நாம பக்தியுடைய சாராம்சம், நாம பக்தி எப்படி செய்யணும் என்பதை சொல்லியுள்ளார்.
த்ருணாதபி ஸுநீசேன தரோர் அபி ஸஹி ஷ்நுனா |
அமானினா மானதேன கீர்தனீய: ஸதா ஹரிஹி ||
புல்லை விட தன்னைக் கீழாக நினைக்கவேண்டும். மரத்தை விட பொறுமையாக இருக்கவேண்டும். தன்னை
Read 5 tweets
Jan 25
#எண்கண்_முருகன்_திருக்கோவில்
புதுமையான பெயராக உள்ளது அல்லவா? பிரம்மனுக்கு அருள்புரிந்த முருகப்பெருமான் இக்கோவிலில் குடியிருக்கிறார். திருவாரூரில்ருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப் பெருமானே பிரதான தெய்வம். இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் ImageImage
கட்டப்பட்டது. சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலை, ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை. முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம். பன்னிரு கரங்களில் Image
வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.
படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத்
Read 13 tweets
Jan 24
#ஸ்ரீகிருஷ்ணங்கதைகள் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. இக்கரையில் நண்பர்கள் சிவாவும் செல்வாவும் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஓடம் ஏதும் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு
ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது. நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் சிவா குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் சிவா. காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.
செல்வா பார்த்தான், நமக்கும் ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று! அப்பொழுது ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இது தான் நேரம் என்று செல்வாவும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு
Read 6 tweets
Jan 23
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம் ஒரு பக்கம் வேடன் விரட்ட இன்னொரு பக்கம் நாய் துறத்த, மறுபக்கம் புலி பாய என எந்தப் பக்கம் திரும்பினாலும் முயலை கொல்ல எதிரிகள். சரி நாம் வாழத் தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. குளத்தில் குதித்து
தற்கொலை செய்து கொள்வோம் என்று சென்றது முயல். அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு இருந்த தவளைகள் "ராம ராம" என சொல்லிக்கொண்டே குளத்துக்குள் தாவின. ஏனென்றால் ஒரு முறை தன் முன்னோர் பாம்பின் வாயில் சிக்கிய பொழுது "ராம ராம" என சொல்லிக் கொண்டே தப்பின.
முயல் சிந்தித்தது. அட! நம்மை
விட சிறிய உயிரினங்கள் "ராம ராம" என சொல்லிக்கொண்டு பயப்படாமல் இந்த உலகில் வாழ்கின்றன என்று தன் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டு ஸ்ரீராமன் மீதான நம்பிக்கையோடு புது வாழ்வை நோக்கித் திரும்பியது. தற்கொலை செய்து கொள்வதற்கு
வலிமையான மனம் வேண்டும், அவ்வளவு வலிமையான மனமிருந்தால் நாம்
Read 4 tweets
Jan 23
Saint Thyagaraja was an ardent devotee of Lord Rama and he composed gems on Lord Rama. He wanted to live in the times of Lord Rama so that he could serve him and see the wonderful Seetha Kalyanam but Sri Maha Periyava said that He did not want to live in the times of Lord Rama.
He gave a beautiful justification for this unusual response. He said, "If I was there during Lord Rama's time, I would have then been a seer too. Whenever Lord Rama went out in His chariot and He saw a seer, the Lord would get down and fall at the seer's feet as a mark of respect
He would have done the same had I been there at that time. Now, I have an opportunity to fall at Lord Rama's feet and serve Him. I would not have had an opportunity to serve Him, had I been around then."
Bhakti towards the Divine should be the desire of every individual and Maha
Read 4 tweets
Jan 22
லாவண்யா என்ற பெயருக்குப் பதில் எஸ்தர், ஆஷிபா அல்லது surname வில்சன் என்று இருந்திருந்தால், தமிழக ஊடகங்கள் அவர் வீட்டில் தவம் கிடந்து, அவர் தாயின் கண்ணீரை, குடும்பத்தின் சோகத்தை, இந்தியா ஒரு வாழத்தகாத தேசம் என்று 24x7 ஒளிபரப்பி காசு பார்த்து இருக்கும்.
17 வயது மாணவியை, பரீட்சைக்கு
தயார் செய்யவிடாமல், மதம் மாறாத குற்றத்திற்காக, பழிவாங்கும் எண்ணத்துடன், கழிவறையை கழுவச் செய்த பள்ளியின் பெயர் "பத்மா சேஷாத்திரி" என்று இருந்திருந்தால், இந்நேரம் தமிழக அரசு பள்ளியின் அனுமதியை ரத்து செய்து தாளாளரைக் கைது உனக்கு கண்ணீர் வடித்திருக்கும். அவர் குடும்பத்துக்கு ₹1கோடி
+ அரசு வேலையும் கொடுத்திருக்கும். என்ன செய்வது பள்ளியின் பெயர் "தூய ஹ்ருதய மேரி" ஆயிற்றே! #NEET க்கு படிக்க முடியவில்லை என்று ஒரே ஒரு வரி எழுதிவிட்டு சென்றிருந்தால், சினிமா பட்டாளம் வீடு தேடி வந்து, அரசை எதிர்த்து ஒருவிரல் புரட்சி செய்து ட்விட்டர் பேச்புக்கில் அறிக்கை விட்டு
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(