#லலிதா_சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால்
பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ மாதா-என்றழைக்கப்படும் ஸ்ரீலலிதையானவள் எப்படித் தோன்றினாள்?
அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள் யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க,
தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதி சக்தியானவள் தோன்றினாள். சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை
உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல், சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்' என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது,
நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது. சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி, சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக்
காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது. லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.
நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்வோம். விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப்படுத்தப்பட்ட
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம்,
நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
இந்த ஸ்தோத்திரத்தை கேட்டு பயில இந்தக் காணொளி உதவும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Feb 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு துறவியிடம் அழகான பெண் ஒருத்தி வந்து, என் கணவரிடம் நிறைய குறைகள் உள்ளன. அவரோடு என்னால் இனி வாழமுடியாது. எனவே அவரைவிட்டு நான் விலகி விடட்டுமா என்று கேட்டாள். அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர Image
விரும்புகிறேன் எது வேண்டும் கேள்" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள். "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே, இதுவா வேண்டும்?" என்று கேட்டார் துறவி. எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும். அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத்
தெரியவில்லை என்றாள். புன்னகைத்த துறவி சொன்னார், "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது." குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம். குறைகள் இல்லா பரந்தாமனை நினைப்போம். நம் எண்ணத்தால்
நாமும் குறைகள்
Read 4 tweets
Feb 4
ஒன்றுக்கு உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம். தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்படும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வணங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவேந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த காலத்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்களுக்கு Image
மிருத்திகை என்னும் மண்ணானது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான். அவர் கைபட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ! மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும் பண்பாளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்டனாகவும் அவன் Image
விளங்கினான். கல்விக்கான பருவம் முடிந்ததும் அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெண்ணை தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்கு பணி விடைகள் செய்தவாறே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங்கள்
Read 12 tweets
Feb 4
#குருவாயூரப்பன் #குருவாயூர்ஸ்ரீகிருஷ்ணன்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப் படவில்லை. பாதாளாஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். மிகவும் திவ்யமாக திகழும் இறைவன் ImageImage
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் நான்காவது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா Image
விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிக்கிறது. உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இங்கு இதை செய்தால் அந்த குழந்தை Image
Read 12 tweets
Feb 3
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னர் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணவர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். Image
மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும் அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன்
தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர். ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ஐயனே! தாங்கள் பாடம்
Read 15 tweets
Feb 3
ஆதிசங்கரர் அருளிய #மீனாக்‌ஷி_பஞ்சரத்னம்
உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம் கேயூரஹாரோஜ்ஜ்வலாம்
பி³ம்போ³ஷ்டீ²ம் ஸ்மிதத³ந்தபங்க்திருசிராம் பீதாம்ப³ராலங்க்ருʼதாம் ।
விஷ்ணுப்³ரஹ்மஸுரேந்த்³ரஸேவிதபதா³ம் தத்வஸ்வரூபாம் ஶிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் || 1 || Image
எடுத்தவுடனே “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’, என்று ஆரம்பித்தார் அபிராமி பட்டரும். மகான்களுக்கு அம்பாளின் தரிசனம் ஒளிவடிவமாக கிடைக்கிறது. நாம் கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மஹான்கள் தரிசனம் செய்வதற்கும் அதுதான் வேறுபாஉ. அந்த உள்ளொளி Image
அதிகமாகி அவர்களுக்கு வெளியிலேயும் ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமாக தெரிகிறது. கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”! ‘அஹம்‘ –  நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன் என்று சொல்கிறார். மீனாக்ஷி என்ற பெயருக்கு மீன் போன்ற
Read 11 tweets
Feb 2
Experiences with Maha Periyava: Car festival for three people.
Maha Periyava generally had a custom. He would raise some religious questions towards the audience and seek their answers. When they were in a quandary, he would give the answers himself and immerse everyone in
happiness. Perhaps Periyava's object was that by thus asking questions and then answering them, the facts would stay unforgettable for ever in the listeners' minds. On that day too KAnchi SvAmigaL raised a question. That to the Commissioner himself! "Can you say this? For three
people who were born as human beings and attained supreme loftiness of state, the ther thiruvizhaa (தேர் திருவிழா) car festival, is held even today. Who are those three people?" Although asked to the Commissioner, all of us squeezed our brains for an answer. Generally car
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(