#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் முன்னர் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணவர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள்.
மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் மதிக்கப்பட்டனர். ஆனால் அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும் அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன்
தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர். ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர். ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ஐயனே! தாங்கள் பாடம்
கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப் படுகிறோம். சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்தச் சலுகையை விரிவுபடுத்தக் கூடாது என்று கேட்டனர். குருதேவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும்,
அமைதியாகப் பதிலளித்தார். "நான் உங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் நடத்துகிறேன். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டவில்லை. உங்களில் சிலர் விரைவாக முன்னேறி இருந்தால், நான் சொல்வதை அவர்கள் ஊன்றிக் கவனித்திருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறு முயன்று கற்பதை யார் தடுத்தது'' என்று
கேட்டார். ஆனால், மாணவர்கள் அவருடைய பதிலில் திருப்தியடையவில்லை. யோசனையில் ஆழ்ந்த குரு, “சரி! குறைப்பட்டுக் கொள்கிறவர்கள் மீது நான் விசேஷ கவனம் செலுத்துகிறேன். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான். ஒரு சின்ன பரீட்சை வைப்பேன். அதில் நீங்கள் தேறியாக வேண்டும். பரீட்சை இது தான். நீங்கள்
அடிக்கடி போய்வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டும். அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்,'' என்றார்.
பரீட்சை ரொம்பவும் எளிதாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள், தங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து,
பக்கத்து ஊருக்கு அனுப்பினர், தகுதியான ஒரு நபரைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்கு. ஆனால், அவனுடைய துரதிர்ஷ்டம், நல்லதன்மை உள்ள ஒருவனைக் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்தது. நீண்ட நாட்கள் முயன்றும் பலனில்லை. குருவிடம் வந்து,
ஐயனே! நான் தங்களிடம் இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன். அந்த ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டேன். ஒரு நல்ல மனிதன் கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள் என்றான் அவன். "அட! அப்படியா? இங்கே யார் மீது நீங்கள் குறை
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்களோ அவர்களுடைய அணியில் இருந்து யாரேனும் ஒருவரை அங்கே அனுப்புவோம்,'' என்றார் குருதேவர். பிறகு பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவனை அழைத்து, "நீ பக்கத்து ஊருக்குச் சென்று ரொம்பவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார் அவர். குருவின்
கட்டளையை ஏற்று, அந்த அணியில் இருந்து ஒருவன் அடுத்த ஊருக்குச் சென்றான். சில நாளில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ஐயனே! நான் அந்த ஊர் முழுக்க ஆராய்ந்து விட்டேன்; ஒரேயொரு கெட்டவனைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றான் அவன். அவனுடைய கருத்துரை கேட்டு, குறை கூறும் அணியைச்
சேர்ந்தவர், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர். ஆனால், அந்த மாணவன் தொடர்ந்து பேசினான்,எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவனை என்னால் காண முடியவில்லை என்றான். “நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்து தான்
தொடங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிறபோது உங்களுடைய ஞானம் மலர்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த ஞானம் உதிர்த்து விடுகிறது. உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப்
பொறுத்ததே ஞானம். நேரான மனோபாவம் உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோபாவம் உள்ளவர்களால் மெதுவாகத்தான் வளர்ச்சிக் காண முடியும். குருவைப் பொறுத்தவரை, எல்லாருமே அவருக்குப் பிரியமானவர்கள் தான். ஒரு மாணவன் விலகியிருப்பதாய் உணர்ந்தால் அது அவனுடைய தவறு. நீங்கள் எந்த
அளவு என்னோடு ஒன்றாயிருப்பதாக உணர்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். குருவிடமாகட்டும், கடவுளிடமாகட்டும், முழுமையாய் சரணடைந்து விட வேண்டும். அரைகுறையாய் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என்றார் குரு.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு துறவியிடம் அழகான பெண் ஒருத்தி வந்து, என் கணவரிடம் நிறைய குறைகள் உள்ளன. அவரோடு என்னால் இனி வாழமுடியாது. எனவே அவரைவிட்டு நான் விலகி விடட்டுமா என்று கேட்டாள். அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி "அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர
விரும்புகிறேன் எது வேண்டும் கேள்" என்றார். அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள். "அதைப் பராமரிப்பது மிகவும் கடினம். அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே, இதுவா வேண்டும்?" என்று கேட்டார் துறவி. எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும். அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத்
தெரியவில்லை என்றாள். புன்னகைத்த துறவி சொன்னார், "வாழ்க்கையும் அப்படித்தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது." குறைகளை பெரிதுபடுத்தாமல் நம்மை சுற்றி இருப்பவர்களை நேசிப்போம். குறைகள் இல்லா பரந்தாமனை நினைப்போம். நம் எண்ணத்தால்
நாமும் குறைகள்
ஒன்றுக்கு உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம். தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்படும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வணங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவேந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த காலத்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்களுக்கு
மிருத்திகை என்னும் மண்ணானது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான். அவர் கைபட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ! மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும் பண்பாளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்டனாகவும் அவன்
விளங்கினான். கல்விக்கான பருவம் முடிந்ததும் அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெண்ணை தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்கு பணி விடைகள் செய்தவாறே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான். எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங்கள்
#குருவாயூரப்பன்#குருவாயூர்ஸ்ரீகிருஷ்ணன்
குருவாயூரில் உள்ள உன்னி கிருஷ்ணன் எனும் மூலவர் கல்லிலோ வேறு உலோகம் கொண்டோ செய்யப் படவில்லை. பாதாளாஞ்சனம் எனும் கலவையால் செய்யப்பட்டது இச்சிலை. இந்த திருக்கோவிலில் கண்ணன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். மிகவும் திவ்யமாக திகழும் இறைவன்
பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் நான்காவது கரத்தில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா
விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிக்கிறது. உருவத்தில் தான் குழந்தை ஆனால் உலகத்தையே தன் வாயில் அடக்கியவன். சித்திரை விஷு, ஓணம் பண்டிகை மற்றும் ஏகாதசி இங்கு முக்கியமான பண்டிகைகள். குழந்தைக்குப் முதல் முதலாக சோறு ஊட்டும் வைபவம் இங்கு மிகவும் சிறப்பு. இங்கு இதை செய்தால் அந்த குழந்தை
எடுத்தவுடனே “உத்³யத்³பா⁴நு ஸஹஸ்ரகோடிஸத்³ருʼஶாம்” என்கிறார். ‘உதிக்கின்ற செங்கதிர்’, என்று ஆரம்பித்தார் அபிராமி பட்டரும். மகான்களுக்கு அம்பாளின் தரிசனம் ஒளிவடிவமாக கிடைக்கிறது. நாம் கோவிலில் தரிசனம் செய்வதற்கும், மஹான்கள் தரிசனம் செய்வதற்கும் அதுதான் வேறுபாஉ. அந்த உள்ளொளி
அதிகமாகி அவர்களுக்கு வெளியிலேயும் ஸ்வாமியைப் பார்க்கும்போது, ஒளிவடிவமாக தெரிகிறது. கோடி சூர்யப்ரகாசமாக விளங்கும் மீனாக்ஷி தேவியை, “ப்ரணதோ3ஸ்மி ஸந்ததம் அஹம்”! ‘அஹம்‘ – நான், ‘ஸந்ததம்‘ – இடையறாது, ‘ப்ரணதோ3ஸ்மி‘ – வணங்குகிறேன் என்று சொல்கிறார். மீனாக்ஷி என்ற பெயருக்கு மீன் போன்ற
Experiences with Maha Periyava: Car festival for three people.
Maha Periyava generally had a custom. He would raise some religious questions towards the audience and seek their answers. When they were in a quandary, he would give the answers himself and immerse everyone in
happiness. Perhaps Periyava's object was that by thus asking questions and then answering them, the facts would stay unforgettable for ever in the listeners' minds. On that day too KAnchi SvAmigaL raised a question. That to the Commissioner himself! "Can you say this? For three
people who were born as human beings and attained supreme loftiness of state, the ther thiruvizhaa (தேர் திருவிழா) car festival, is held even today. Who are those three people?" Although asked to the Commissioner, all of us squeezed our brains for an answer. Generally car
#லலிதா_சகஸ்ரநாமம் லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூப்பட்ட நாமம் மற்றொருமுறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது. லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு, அவளை வழிபட யந்திரம், மந்திர பரிவார தேவதைகளின் நிலை, வழிபாட்டு முறை, அவள் அருளால்
பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ மாதா-என்றழைக்கப்படும் ஸ்ரீலலிதையானவள் எப்படித் தோன்றினாள்?
அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள் யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க,
தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதி சக்தியானவள் தோன்றினாள். சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை