#நந்திபகவான் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்டபின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடி மரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட
வேண்டும். இந்த நந்தி #அதிகார_நந்தி. இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவ கணங்களின் தலைவர். அதிகார நந்திக்கு அடுத்த படியாக காட்சி தரும் நந்தி #மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார்
என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை #பிராகார_நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி #தர்மநந்தி. இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின்மீது பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும்
இடையே செல்லக்கூடாது என்பது சாஸ்திரம். பழமையான ஸ்ரீசைலம் போன்ற சிவாலயங்களில் ஒன்பது நந்திகள் இருக்கும். அவை பத்மநந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, மகா நந்தி, சோம நந்தி, சூரிய நந்தி, கருடநந்தி, விஷ்ணு நந்தி, சிவ நந்தி என்பனவாகும். சிவபெருமானைப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தியானவர்
சில திருத்தலங்களில் சிவ பெருமானை நோக்காமல், கோவில் வாயிலைப் பார்த்தபடி இருப்பதைக் காணலாம். திருவண்ணாமலையை வலம் வரும்போது அஷ்ட லிங்கங்களுக்கு எதிரில் உள்ள நந்திகள் அனைத்தும் கருவறையில் அருள் புரியும் சிவலிங்கத்தைப் பார்க்காமல், திருவண்ணாமலையே சிவரூபமாக இருப்பதால் திருவண்ணாமலையைப்
பார்த்த வண்ணம் இருப்பதைக் காணலாம். திருப்புன்கூர் என்னும் தலத்தில் ஏழு அடி உயரமுள்ள நந்தி சிவபெருமான் சந்நிதிக்கு நேராக இல்லாமல் சற்று விலகி இருக்கும். இதேபோல் பட்டீஸ்வரம் சிவாலயத்திற்கு ஞானசம்பந்தர் வெயிலில் வருவதைக் காணப் பொறாத இறைவன் தன் முத்துக் குடையைக் கொடுத்து
அனுப்பினார். ஞானசம்பந்தரின் துன்பம் தாளாத இந்தக் கோவில் நந்திகள் அனைத்தும் ஞானசம்பந்தர் சிவபெருமானை நன்கு தரிசிக்கும் வண்ணம் சற்று நகர்ந்தே இருக்கும். இதேபோல் நந்தி விலகியிருக்கும் தலங்கள் திருப்புன்கூர்,திருப்பூந்துருத்தி ஆகியவையாகும். சற்று வித்தியாசமான கோலத்தில் புறமுதுகைக்
காட்டிக் கொண்டிருக்கும் நந்தியையும் சில தலங்களில் தரிசிக்கலாம். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருவல்லம் திருத்தலத்தில் ஒருமுறை கோவில் குருக்கள் சுவாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வரும்போது கஞ்சன் என்ற அரக்கன் இடையூறு செய்தான். குருக்கள், சுவாமியிடம் முறையிட, சுவாமி நந்தியைப்
பார்த்து கஞ்சனைக் கவனிக்கும்படி சொன்னார். நந்தியிடம் அடிபட்ட கஞ்சன், இனிமேல் குருக்களுக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டு உயிர் தப்பினான். இருந்தாலும் அவன் மீண்டும் தொந்தரவு கொடுக்காமலிருக்க கோவிலின் வாயிலை நோக்கிய வண்ணம் இறைவனுக்கு புறமுதுகு
காட்டிய நிலையில் உள்ளார். கும்பகோணம் அருகில் திருவைகாவூர் திருத்தலத்தில் சிவ பக்தனான வேடன் ஒருவன் கோவிலுக்குள் ஈசனை வணங்கிக் கொண்டிருக்கும்போது, அவன் உயிரைப் பறிக்க யமன் வந்தான். சிவாலயத்திற்குள் யமன் நுழைவதைக் கண்ட நந்தியும் துவார பாலகர்களும் தடுக்க, யமன் திரும்பிச் சென்று
விட்டான். மீண்டும் யமன் கோவிலுக்குள் வராமல் தடுக்க நந்தியெம்பெருமான் இங்கு வாயிலை நோக்கி உள்ளார். விருத்தாசலத்திற்கு மேற்கே 15 கிமீ தூரத்தில் உள்ளது பெண்ணாடகத்தில் ஒரு சமயம் கடும் மழை தொடர்ந்து பெய்து ஊரைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. அந்த ஊர் மக்கள் இறைவனை வேண்டவே, இறைவன்
நந்தியிடம் வெள்ளத்தை உறிஞ்சி மக்களைக் காப்பாற்றும் படி ஆணையிட்டார். உடனே நந்தியெம் பெருமான் கிழக்குப் பக்கமாகத் திரும்பி மழையால் ஏற்பட்ட வெள்ள நீரைக் குடித்து மக்களைக் காப்பாற்றினார். அன்றிலிருந்து நந்தி சிவபெருமானுக்கு புறமுதுகு காட்டிக் கொண்டு வாசலைநோக்கி உள்ளார். சென்னைக்கு
அருகில் உள்ள வடதிருமுல்லை வாயில் திருத்தலத்தினை ஆட்சி புரிந்து வந்த தொண்டைமான் சிவபக்தன். இந்த மன்னனை அழிக்க அரக்கர்கள் படையெடுத்து வரவே, மன்னன் இறைவனிடம் வேண்டினான். உடனே இறைவன் நந்தியெம்பெருமானை அனுப்பினார். நந்தி அரக்கர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். அரக்கர்கள் மீண்டும் திரும்பி
வராமலிருக்க போருக்கு ஆயத்தமான நிலையில் வாயிலை நோக்கிய வண்ணம் நந்திகாட்சி தருகிறார். காஞ்சியிலிருந்து 30 கிமீ தூரத்தில் செய்யாறு அருகில் திருவோத்தூர் திருத்தலத்தில் இறைவன், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசிக்கும் வேளையில் இவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதற்கும் மற்றவர்கள
உள்ளே நுழையாமலிருக்கவும் வாயிலை நோக்கித் திரும்பிய நிலையில் உள்ளார் நந்தி. ஆந்திர மாநிலத்தில் உள்ள சுருட்டப்பள்ளியில் அருள்புரியும் சிவபெருமான் ஆலகால விஷம் உண்டதால் மயங்கிய நிலையில் அம்பாளின் மடியில் பள்ளி கொண்டுள்ளார். இங்கு நந்தியெம்பெருமான் எதிரில் இல்லாமல் தலைப்பக்கம் உள்ளார்
கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு என்ற தலத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் நந்தியானவர் வாயிலை நோக்கி உள்ளார். இறைவனை வழிபட வருபவர்களை மனசுத்தி உள்ளவர்களாக மாற்றி முகர்ந்து அனுப்புவதாக ஐதீகம். குடந்தை நாகேஸ்வரம் கோவிலுக்கு 1 கிமீ தூரத்திலுள்ள தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதசுவாமி
கோவிலில் உள்ள நந்திக்கு வலது காது இருக்காது. காரணம், பிரளய காலத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலத்தைத் தேடி ஓடிவந்ததில், ஒரு பக்கமாக வழுக்கி விழுந்து வலது காது பழுதடைந்து போனது. எனவே இவர் வலது காது இல்லாமல் காட்சி தருகிறார். கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய நந்திக்கு வலது பின்னங்கால்
கிடையாது. நந்திக் குன்றுக்கு வருவோர் கட்டாயம் நந்திக் கோயிலுக்கு செல்ல வேண்டும். இந்தக் கோயில் விஜயநகர பேரரசின் காலத்தில் கெம்பி கௌடா அரசராக இருந்தபோது கட்டப்பட்டது. அப்பகுதியின் பெருமதிப்பு மிக்க புண்ணிய ஸ்தலமாக நந்தி கோயில் கருதப்படுகிறது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோக
நந்தீஸ்வராவும், போக நந்தீஸ்வராவும் இக்கோயிலின் முதன்மை தெய்வங்களாகும். இது போல வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் நந்தீஸ்வரர் அருள் புரியும் சிவன் கோவில்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
ஹர ஹர மகாதேவா
தென்னாடுடைய சிவனே போற்றி!🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கேள்வி: மறைந்த நம் தாய் தந்தையாருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களை சேருமா?
மகா பெரியவா: ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது.
அதுவும் மறுநாள் கட்ட வேண்டி இருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத்
தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகி விட்டது என்றார் குமாஸ்தா.
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்த பின், ஒருநாள் அரண்மனையிலுள்ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! இலங்கையில் நீ
செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான். அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும்
தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்து இருக்கிறதல்லவா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. அதன்
#பசு கோ மாதாவாக இந்துக்களாகிய நாம் பசுவை வணங்கி வருகிறோம். இப்பொழுது காலத்தின் கோலம், பசு என்று சொல்வதே எதோ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. இதனால் நஷ்டப்படப் போவது நம் மனித குலம் தான். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்
நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நேபாள நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்றழைக்கப்படுகிறான் கண்ணபிரான். ஒரு பசு
முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை 'கோ' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். பசுவின் வாயில் கலிதேவதை
கேள்வி: #சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், அன்றைக்குச் செய்த பாவம் தீர்ந்து போய்விடுமா? அதற்காகத்தான் அதைச் செய்கிறார்களா?
சோ: பாவம் தீருகிறது என்பது இருக்கட்டும். பாவத்துக்கு மன்னிப்பு இருக்கிறது. வாயால், கையால், மனசால், உடம்பால் செய்கிற பாவத்துக்கு மன்னிப்புக்
கேட்பது எல்லாம் அதில் இருக்கிறது. ஆனால், அது மட்டும்தான் சந்தியாவந்தனம் இல்லை. சந்தியாவந்தனம் என்பது ஒரு தெய்வீகமான விஷயம். அது தனக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் - அதாவது மனித குலத்துக்கே வேண்டுகிற மாதிரி உள்ளது. எனக்குக் கொடு என்று வராது. எங்களுக்குக் கொடு. ‘எங்களுக்கு’ என்று
தான் அதில் வரும். அப்படித்தான் பிரார்த்தனை. மூன்று தலைமுறை யாகம் செய்யவில்லை என்றால், ஒரு குடும்பத்தில் அவனுக்கு உள்ள பிராமணத்துவம் போய்விடும். ஆனால் பிராயச்சித்தம் செய்து, மறுபடியும் அதை அடையலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையாக காயத்ரி மந்திரமே சொல்லவில்லை என்றால், அத்துடன்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் ஸ்ரீமந் நாராயணனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம். இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும் பொழுத
இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்தனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு, நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம். இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம். இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. நீ என்னை அழைத்தால் ஒழிய உன் வாழ்க்கையில்
எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் என்ற ஸ்ரீமந் நாராயணன் என்று கூறுவார். ஒரு ஜீவனுக்கு உரிய ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
ஓர் ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம். ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில்
ஸப்தமியில் சிறந்தது #ரதஸப்தமி.
சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’. இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். இது ‘சூர்ய ஜெயந்தி’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த வருடம் 07/2/2021 திங்கள் கிழமை மற்றும்
செவ்வாய் கிழமை காலை வரை ரதசப்தமி வருகிறது. இந்த நாளில் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. திருமலையில் ரத சப்தமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சின்ன பிரம்மோத்ஸவம் என்று கூறுவர். அன்று சூரிய உதயம்
எழுந்து சூரிய ஒளி படுமாறு ஆற்றில் நீராடுவது சிறந்தரு. இயலாதவர் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டையில் 2, தலையில் 1 என்று