கேள்வி: மறைந்த நம் தாய் தந்தையாருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களை சேருமா?
மகா பெரியவா: ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது.
அதுவும் மறுநாள் கட்ட வேண்டி இருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத்
தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகி விட்டது என்றார் குமாஸ்தா.
பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமல் இருப்பதையும் பார்த்த அப்பாக்காரர், என் பணம் இங்கேதானே இருக்கிறது. அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே. அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார். அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார்.
கட்டுக் கடகட என்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட் லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும் என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது. ஆனால் பணம் போய் சேர்ந்து
விட்டது. தர்ப்பணம் பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்கு போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பித்ருக்கள்
மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டு விடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேஸ்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர
வேண்டியதில்லை. தந்தி மணியார்டர் அனுப்பியவனுடைய பணமோ வாங்கிக் கொள்கிறவனிடம் நேராகப் போவதில்லையல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு
இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும். பித்ருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில்
நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் (Toast) சாப்பிடுகிறேன் என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வெறொருவன் பெயரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி
அப்படிச் செய்கிறார்கள். சிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப் படியாகத்தான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், இப்படித்தான் அட்ரஸ் எழுதுவேன். அந்தத் தபால் பெட்டியில் போடுவானேன். எங்க
வீட்டில் அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன் என்று சொல்லலாமா. காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றி செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.
ஶ்ரீ மகா பெரியவா சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Correction: சிராத்தம் - சிரார்த்தம் அல்ல. தவறுக்கு மன்னிக்கவும்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்த பின், ஒருநாள் அரண்மனையிலுள்ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! இலங்கையில் நீ
செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான். அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும்
தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்து இருக்கிறதல்லவா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. அதன்
#பசு கோ மாதாவாக இந்துக்களாகிய நாம் பசுவை வணங்கி வருகிறோம். இப்பொழுது காலத்தின் கோலம், பசு என்று சொல்வதே எதோ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. இதனால் நஷ்டப்படப் போவது நம் மனித குலம் தான். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்
நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நேபாள நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்றழைக்கப்படுகிறான் கண்ணபிரான். ஒரு பசு
முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை 'கோ' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். பசுவின் வாயில் கலிதேவதை
கேள்வி: #சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், அன்றைக்குச் செய்த பாவம் தீர்ந்து போய்விடுமா? அதற்காகத்தான் அதைச் செய்கிறார்களா?
சோ: பாவம் தீருகிறது என்பது இருக்கட்டும். பாவத்துக்கு மன்னிப்பு இருக்கிறது. வாயால், கையால், மனசால், உடம்பால் செய்கிற பாவத்துக்கு மன்னிப்புக்
கேட்பது எல்லாம் அதில் இருக்கிறது. ஆனால், அது மட்டும்தான் சந்தியாவந்தனம் இல்லை. சந்தியாவந்தனம் என்பது ஒரு தெய்வீகமான விஷயம். அது தனக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் - அதாவது மனித குலத்துக்கே வேண்டுகிற மாதிரி உள்ளது. எனக்குக் கொடு என்று வராது. எங்களுக்குக் கொடு. ‘எங்களுக்கு’ என்று
தான் அதில் வரும். அப்படித்தான் பிரார்த்தனை. மூன்று தலைமுறை யாகம் செய்யவில்லை என்றால், ஒரு குடும்பத்தில் அவனுக்கு உள்ள பிராமணத்துவம் போய்விடும். ஆனால் பிராயச்சித்தம் செய்து, மறுபடியும் அதை அடையலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையாக காயத்ரி மந்திரமே சொல்லவில்லை என்றால், அத்துடன்
#நந்திபகவான் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்டபின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடி மரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட
வேண்டும். இந்த நந்தி #அதிகார_நந்தி. இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவ கணங்களின் தலைவர். அதிகார நந்திக்கு அடுத்த படியாக காட்சி தரும் நந்தி #மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார்
என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை #பிராகார_நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி #தர்மநந்தி. இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின்மீது பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் ஸ்ரீமந் நாராயணனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம். இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும் பொழுத
இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்தனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு, நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம். இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம். இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. நீ என்னை அழைத்தால் ஒழிய உன் வாழ்க்கையில்
எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் என்ற ஸ்ரீமந் நாராயணன் என்று கூறுவார். ஒரு ஜீவனுக்கு உரிய ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
ஓர் ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம். ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில்
ஸப்தமியில் சிறந்தது #ரதஸப்தமி.
சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’. இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். இது ‘சூர்ய ஜெயந்தி’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த வருடம் 07/2/2021 திங்கள் கிழமை மற்றும்
செவ்வாய் கிழமை காலை வரை ரதசப்தமி வருகிறது. இந்த நாளில் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. திருமலையில் ரத சப்தமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சின்ன பிரம்மோத்ஸவம் என்று கூறுவர். அன்று சூரிய உதயம்
எழுந்து சூரிய ஒளி படுமாறு ஆற்றில் நீராடுவது சிறந்தரு. இயலாதவர் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டையில் 2, தலையில் 1 என்று