கேள்வி: #சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், அன்றைக்குச் செய்த பாவம் தீர்ந்து போய்விடுமா? அதற்காகத்தான் அதைச் செய்கிறார்களா?
சோ: பாவம் தீருகிறது என்பது இருக்கட்டும். பாவத்துக்கு மன்னிப்பு இருக்கிறது. வாயால், கையால், மனசால், உடம்பால் செய்கிற பாவத்துக்கு மன்னிப்புக்
கேட்பது எல்லாம் அதில் இருக்கிறது. ஆனால், அது மட்டும்தான் சந்தியாவந்தனம் இல்லை. சந்தியாவந்தனம் என்பது ஒரு தெய்வீகமான விஷயம். அது தனக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் - அதாவது மனித குலத்துக்கே வேண்டுகிற மாதிரி உள்ளது. எனக்குக் கொடு என்று வராது. எங்களுக்குக் கொடு. ‘எங்களுக்கு’ என்று
தான் அதில் வரும். அப்படித்தான் பிரார்த்தனை. மூன்று தலைமுறை யாகம் செய்யவில்லை என்றால், ஒரு குடும்பத்தில் அவனுக்கு உள்ள பிராமணத்துவம் போய்விடும். ஆனால் பிராயச்சித்தம் செய்து, மறுபடியும் அதை அடையலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையாக காயத்ரி மந்திரமே சொல்லவில்லை என்றால், அத்துடன்
பிராமண பந்து முடிந்துவிடும் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அது மாதிரி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், இவன் பிராமணன் இல்லை என்று ஆகிவிடும் அவனுக்குப் பிராயச்சித்தம் கிடையாது. மஹா பெரியவா சொல்லியிருக்கிறார். காலை, மத்தியானம், சாயந்திரம் என்றால், காலை சூரியன் உதயமாவதற்கு
முன்பு, அந்த நேரத்தில் இரவும் பகலும் சேரும்போது, பகல் ஆரம்பிக்கிறபோது அந்தச் சந்தியில் செய்வது. இன்னொன்று மத்தியானம். உச்சிவேளை. உச்சியும் மாலை வேளையும் சந்திக்கிற சந்தி. அப்புறம் மாலை. அதாவது அஸ்தமனத்துக்குக் கொஞ்சம் முன்பாக. அந்த மூன்று சந்திகள். மூன்று சந்திப்புகள். அந்தந்தச்
சந்திகளில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். இதை தமிழில் #இடைக்காட்டுச்சித்தர் அழகாகச் சொல்லியிருக்கிறார். காணாமல், கோணாமல், கண்டு கொடு
ஆடுகாண் போகுது பார் போகுது பார். இதன் அர்த்தம் என்னவென்றால், காணாமல் - அதாவது சூரியன் இன்னும் உதயமாகவில்லை. அந்தச் சமயம், விடியற்காலம். அது காணாமல்
கோணாமல் - கண்டு கொண்டு, அஸ்தமனம் ஆகப் போகிறது அதைப் பாரு. அதைப் பார்த்துக் கொடு. என்ன கொடுக்க வேண்டும்? அர்க்யம். அர்க்யம் என்பது சந்தியாவந்தனத்தில் ரொம்ப முக்கியம். அர்க்யம் தண்ணீர் விட்டுத்தான் எல்லா மந்திரங்களும் சொ்ல்ல வேண்டும். அடுத்தது பிராணாயாமம். இது இரண்டும் ரொம்ப
முக்கியம். ஆடுகாண் போகுது பார் - ‘ஆடு’ என்றால் கங்கையில் நீராடு. ‘காண்’ - சேதுவை தரிசனம் செய். அந்த இரண்டும் செய்தால், பாவம் எப்படிப் போகுதோ அப்படிப் போகுது பார்; போகுது பார்! அப்படின்றதுதான் அது! அதைத்தான் ‘காணாமல் கோணாமல் கண்டு கொடு, ஆடுகாண் போகுது பார், போகுது பார்’ என்று
இடைக் காட்டுச் சித்தர் சொல்லி இருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டிலே இதற்கு எல்லாம் எவ்வளவு முக்கியத்துவம் இருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பிரம்ம தேவனுடைய தியானம், அதன் பயனாகத் தோன்றிய தேவதை சந்தியா தேவதை! அந்தத் தேவதையை, சந்தி வேளையில் வந்தனம் செய்ய வேண்டும். அதுதான்
#சந்தியாவந்தனம் ‘மாயை’, மாயைக்குப் பிறகு தெளிவு இருக்கிறது. அந்தத் தத்துவத்திற்குத்தான் ‘சந்தியா’ என்று பெயர். அதைத்தான் அவர் உருவாக்கினார். சந்தியாவந்தனத்தின் ஜீவநாடி என்று சொல்வது அர்க்யம்! அதற்கான மந்திரங்கள்! இதெல்லாம் யோகத்தின் முதல் படிகள்! சந்தியாவந்தனமே யோகத்தின் தொடக்கம்
தான்! எப்படி என்றால், யோகத்திலே ஓமம், நியமம் என்று சொல்லியிருக்கிறது. அது, சந்தியாவந்தனத்தில் பூர்வாங்கமாக அமைகிறது! #திருமூலர் அதைப் பற்றிச் சொல்கிறார். அதைச் செய்கிறவன் எப்படிப்பட்டவன்? அவனைப் பற்றிச் சொல்கிறார் அவர்!
கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கமுடையான்
- என்கிறார். அந்த அளவுக்கு உயர்ந்தவன் அவன்! யோகத்தில் இந்த இரண்டுக்குப் பிறகு மூன்றாவது, நான்காவது படிகளான ஆசனம், பிராணாயாமம் போன்றவை. இவையும் சந்தியாவந்தனத்தில் உள்ளன. அதற்கப்புறம், இந்திரியங்களைக்
கட்டுப்படுத்துகிற பிரத்யாஹாரம், தியானம் இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். தாரணை, சமாதி என்ற இரண்டு உள்ளன. இவையெல்லாம் ஜபத்தில் வருகின்றன. அதனால், யோகத்தில் இருப்பது எல்லாம் அப்படியே சந்தியாவந்தனத்தில் வந்து விடுகிறது. நான் முன்பு சொன்ன மாதிரி, கோபத்தினால் செய்கிற தவறு, மனதினால்
செய்கிற தவறு, வாக்கினால் செய்கிற தவறு. கைகளால் மற்றும் கால்களினால் செய்கிற தவறு, இவற்றுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்க வேண்டும். காயத்திரிக்கு என்ன அர்த்தம் என்றால், ‘ஓங்காரப் பொருளான பகவானே! பூலோகமும், புவர்லோகமும், சொர்க்க லோகமும் - மூன்று லோகங்களும் அவன்தான்! எந்தப் பரமாத்மா
நம்முடைய அறிவில் தோன்றுகிறாரோ, அந்த அனைத்தையும் செய்பவராகிய தேவனின் சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை நாம் தியானிப்போம்’ என்பதுதான் காயத்ரி! காயத்ரி ஜபம் தினமும் செய்ய வேண்டும். இதைச் செய்யாமல் இருக்கக் கூடாது! 108, 1008 என்று உள்ளன. செய்ய வேண்டும்.
கேள்வி: மறைந்த நம் தாய் தந்தையாருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களை சேருமா?
மகா பெரியவா: ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது.
அதுவும் மறுநாள் கட்ட வேண்டி இருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத்
தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகி விட்டது என்றார் குமாஸ்தா.
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்த பின், ஒருநாள் அரண்மனையிலுள்ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! இலங்கையில் நீ
செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான். அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும்
தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்து இருக்கிறதல்லவா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. அதன்
#பசு கோ மாதாவாக இந்துக்களாகிய நாம் பசுவை வணங்கி வருகிறோம். இப்பொழுது காலத்தின் கோலம், பசு என்று சொல்வதே எதோ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. இதனால் நஷ்டப்படப் போவது நம் மனித குலம் தான். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்
நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நேபாள நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்றழைக்கப்படுகிறான் கண்ணபிரான். ஒரு பசு
முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை 'கோ' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். பசுவின் வாயில் கலிதேவதை
#நந்திபகவான் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்டபின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடி மரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட
வேண்டும். இந்த நந்தி #அதிகார_நந்தி. இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவ கணங்களின் தலைவர். அதிகார நந்திக்கு அடுத்த படியாக காட்சி தரும் நந்தி #மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார்
என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை #பிராகார_நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி #தர்மநந்தி. இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின்மீது பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் ஸ்ரீமந் நாராயணனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம். இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும் பொழுத
இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்தனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு, நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம். இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம். இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. நீ என்னை அழைத்தால் ஒழிய உன் வாழ்க்கையில்
எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் என்ற ஸ்ரீமந் நாராயணன் என்று கூறுவார். ஒரு ஜீவனுக்கு உரிய ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
ஓர் ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம். ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில்
ஸப்தமியில் சிறந்தது #ரதஸப்தமி.
சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’. இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். இது ‘சூர்ய ஜெயந்தி’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த வருடம் 07/2/2021 திங்கள் கிழமை மற்றும்
செவ்வாய் கிழமை காலை வரை ரதசப்தமி வருகிறது. இந்த நாளில் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. திருமலையில் ரத சப்தமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சின்ன பிரம்மோத்ஸவம் என்று கூறுவர். அன்று சூரிய உதயம்
எழுந்து சூரிய ஒளி படுமாறு ஆற்றில் நீராடுவது சிறந்தரு. இயலாதவர் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டையில் 2, தலையில் 1 என்று