#பசு கோ மாதாவாக இந்துக்களாகிய நாம் பசுவை வணங்கி வருகிறோம். இப்பொழுது காலத்தின் கோலம், பசு என்று சொல்வதே எதோ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. இதனால் நஷ்டப்படப் போவது நம் மனித குலம் தான். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும்
நவக்கிரகங்களும் வாசம் செய்வதாக தர்ம சாஸ்திரம் கூறுகிறது. நேபாள நாட்டில் பசுவை கௌரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். பசுவை பேணி பாதுகாத்து வளர்ப்பதை அறமாக எண்ணினான் கண்ணனும், கோபியர்களும். அதனால் தான் கோபாலன் என்றழைக்கப்படுகிறான் கண்ணபிரான். ஒரு பசு
முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதை 'கோ' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள். கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும். பசுவின் வாயில் கலிதேவதை
இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை. அதன் பிட்டத்தில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். பூஜை அந்த்தப் பக்கமே செய்யப்படுகிறது. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. நன்றாக மேய்ந்து வீடு திரும்பக் கூடிய
பசுமாடுகளின் குளம்படி பட்டு கிளம்பக் கூடிய தூசி கிளம்பக் கூடிய வேளையை நல்ல வேளையாக பார்க்கப்பட்டு #கோதூளி_லக்னம் என முகூர்த்த சாஸ்திரம் கூறுகிறது. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. அறுகம்புல்லை உண்ணும் பசுமாடு போடக்கூடிய சாணத்தை உருண்டையாக்கி அதை நன்றாக காயவைத்து,
உமியில் மூடி புடம் போட்டு எடுக்கப்படும் போது #திருநீறு எனும் உன்னதமான மந்திர மருந்துப் பொருள் உருவாகிறது. நாம் தினமும் அந்த திருநீறை அணிந்து வர பல தோஷங்கள் நிவர்த்தியாவதோடு, பயம் நீங்கும். திருநீறு அணிந்து மந்திரத்தை உச்சரிப்பதால் பலன்கள் அதிகரிக்கும். பசுக்களால் தங்களுக்கு என்ன
வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும். பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம். பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தை
கோசலத்தை அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண்டும். நம்மால் பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும். பசுக்கள் இறந்தால்,
அவற்றுக்குரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும். பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
பசுவிற்கு பூஜை செய்வதால் உண்டாகும் நற்பலன்கள்: 1. பசுவுக்கு
தினமும் பூஜை செய்வதென்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும். 2. பணக் கஷ்டம் நீங்கும். 3. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். 4. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். 5. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசு
தானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும். 6. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். 7. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை
கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
பசு தானம் செய்வதால் உண்டாகும் பலன்கள்: 1. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா, அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும். 2. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு தானம் செய்தால்
கூடுதல் புண்ணியம் கிடைக்கும். 3. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும். 4. பசு தானம்
கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும். (பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.) 5. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை
தானமாக கொடுக்க வேண்டும். 6. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். 7. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும். 8. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களத
7 தலைமுறை பலன் அடையும். ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. 9. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும். ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம். 10. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட
எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர். 11. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. 12. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
13. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லையெனில் பசு வைத்து இருப்பவர்களுக்கு நாமாக உதவ வேண்டும்.
வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ,
வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும். வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம். விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல்
மேய்விடம் கிடைக்கும். வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும். பசுவின் பாதம் பட்ட இடம் பரிசுத்தமாகும் என்பதால் தான் புதுமனை புகுவிழாவில் பசுவும் கன்று குட்டியும் முதலில் அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால் புதுமனையில் இருக்கும் பிரச்சினைகள்
எதுவாக இருந்தாலும் நீங்கி தூய்மை உண்டாகும்.
பசுவின் பாலில் சந்திரனும், நெய்யில் அக்னி தேவனும் இருப்பதாக வேதம் சொல்கிறது. பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் சேர்ந்த கலவை #பஞ்சகவ்யமாகும். இது அபிஷேகத்துக்கும், விவசாயத்திற்குபம் பயன்படுவதோடு,
மருந்தாகவும் செயல்படுவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. நாம் பசுவை வெறும் கால் நடையாக பார்க்காமல், நமக்கு உன்னதமான உணவான பால், அதன் மூலம் புனித நெய் வரை தரும் அன்னையாக் அபாவித்து வணங்க வேண்டும். அது தான் நம் பாரம்பரியம். அதை பேணுவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
கேள்வி: மறைந்த நம் தாய் தந்தையாருக்கு, முன்னோர்க்கு, தர்ப்பணம் ஸ்ரார்தம் எல்லாம் பண்ணுவதால் என்ன பயன்? யாரோ ஒருவருக்கு வாழைக்காய், அரிசி கொடுத்தால் அது முன்னோர்களை சேருமா?
மகா பெரியவா: ஒருவர் பட்டணத்தில் பிள்ளையை படிக்க வைத்திருந்தார். பரிட்சைக்குப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது.
அதுவும் மறுநாள் கட்ட வேண்டி இருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும் மணியார்டரும் தனித் தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபாலாபீசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத்
தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் வந்து சேர்ந்துவிடும். அனுப்பியாகி விட்டது என்றார் குமாஸ்தா.
சீதா ராம பட்டாபிஷேகம் இனிதே நிறைவடைந்த பின், ஒருநாள் அரண்மனையிலுள்ள தனது அறைக்கு அனுமனை அழைத்த ராமன், “அனுமனே! நீ இலங்கைக்குச் சென்றுவந்த பின், ‘கண்டேன் சீதையை!’ என்று மட்டும் என்னிடம் சொன்ன நீ, அங்கு நீ செய்த அற்புதச் சாகசங்களை எல்லாம் என்னிடம் சொல்லவே இல்லையே! இலங்கையில் நீ
செய்த வீர தீரச் செயல்களை இப்போதாவது எனக்குச் சொல்வாயாக!” என்று கூறினான். அப்போது குறுக்கிட்ட சீதை, “சுவாமி! தற்பெருமை பேசுவதை விரும்பாத அனுமன், தனது புகழையும் சாகசங்களையும் தன் வாயாலேயே சொல்வானா? உணவுப் பதார்த்தங்களில் உள்ள உப்பு, அந்தப் பதார்த்தத்தின் சுவைக்கும் பதத்துக்கும்
தானே ஆதாரமாக இருந்தபோதும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், உணவுப் பொருளினுள்ளே மறைந்து இருக்கிறதல்லவா? அதுபோலத் தான் அனுமனும் தனது பெருமைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு விளங்குபவன். பின்னாளில் உங்களது சரிதம் ராமாயணம் என்னும் மஹா காவியமாக வால்மீகி மூலம் வெளிவரப் போகிறது. அதன்
கேள்வி: #சந்தியாவந்தனம் ஒரு நாளைக்கு மூன்று தடவை செய்தால், அன்றைக்குச் செய்த பாவம் தீர்ந்து போய்விடுமா? அதற்காகத்தான் அதைச் செய்கிறார்களா?
சோ: பாவம் தீருகிறது என்பது இருக்கட்டும். பாவத்துக்கு மன்னிப்பு இருக்கிறது. வாயால், கையால், மனசால், உடம்பால் செய்கிற பாவத்துக்கு மன்னிப்புக்
கேட்பது எல்லாம் அதில் இருக்கிறது. ஆனால், அது மட்டும்தான் சந்தியாவந்தனம் இல்லை. சந்தியாவந்தனம் என்பது ஒரு தெய்வீகமான விஷயம். அது தனக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் - அதாவது மனித குலத்துக்கே வேண்டுகிற மாதிரி உள்ளது. எனக்குக் கொடு என்று வராது. எங்களுக்குக் கொடு. ‘எங்களுக்கு’ என்று
தான் அதில் வரும். அப்படித்தான் பிரார்த்தனை. மூன்று தலைமுறை யாகம் செய்யவில்லை என்றால், ஒரு குடும்பத்தில் அவனுக்கு உள்ள பிராமணத்துவம் போய்விடும். ஆனால் பிராயச்சித்தம் செய்து, மறுபடியும் அதை அடையலாம். ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறையாக காயத்ரி மந்திரமே சொல்லவில்லை என்றால், அத்துடன்
#நந்திபகவான் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்டபின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடி மரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபட
வேண்டும். இந்த நந்தி #அதிகார_நந்தி. இவர் பூவுலகில் கடுமையாக தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவ கணங்களின் தலைவர். அதிகார நந்திக்கு அடுத்த படியாக காட்சி தரும் நந்தி #மால்விடை எனப்படும் விஷ்ணுநந்தி. திரிபுர சம்ஹார காலத்தில் திருமால் நந்தி வடிவம் எடுத்து சிவனைத் தாங்கினார்
என்பது புராணம். கொடிமரம் இல்லாத கோவில்களில் சிவனை நோக்கி ஒரு நந்தி காட்சி தருவார். இவரை #பிராகார_நந்தி என்பர். சிவபெருமானுக்கு அருகில் நெருக்கமாக இருக்கும் நந்தி #தர்மநந்தி. இந்த நந்தியின் மூச்சுக்காற்று சுவாமியின்மீது பட்டுக் கொண்டேயிருக்கும். அதனால் நந்திக்கும் சுவாமிக்கும்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் ஸ்ரீமந் நாராயணனுக்கும் ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம். இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம். அதற்கு ஸ்ரீமந் நாராயணன் ஆத்மாவிடம் சொல்லுவாராம். நீ பிறக்கும் பொழுத
இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்தனுப்புகிறேன். அந்த இரண்டை கொண்டு, நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம். இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம். இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது. நீ என்னை அழைத்தால் ஒழிய உன் வாழ்க்கையில்
எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன் என்ற ஸ்ரீமந் நாராயணன் என்று கூறுவார். ஒரு ஜீவனுக்கு உரிய ஸ்வாதந்தரியத்தை உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்.
ஓர் ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம். ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில்
ஸப்தமியில் சிறந்தது #ரதஸப்தமி.
சூர்ய பகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, ‘ரத ஸப்தமி’. இந்த நாளில் விரதம் இருந்து செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். இது ‘சூர்ய ஜெயந்தி’ என்றும் அழைக்கப் படுகிறது. இந்த வருடம் 07/2/2021 திங்கள் கிழமை மற்றும்
செவ்வாய் கிழமை காலை வரை ரதசப்தமி வருகிறது. இந்த நாளில் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச் செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தங்கள் பயணத்தைத் தொடங்குகின்றன. திருமலையில் ரத சப்தமி விசேஷமாக கொண்டாடப்படுகிறது. சின்ன பிரம்மோத்ஸவம் என்று கூறுவர். அன்று சூரிய உதயம்
எழுந்து சூரிய ஒளி படுமாறு ஆற்றில் நீராடுவது சிறந்தரு. இயலாதவர் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நீராடலாம். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் கால்களில் 2, கைகளில் 2, தோள் பட்டையில் 2, தலையில் 1 என்று