பழங்காலத்தில் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்று பார்த்தால் அவை உடலில் அதிக பாகங்களை மூடாமல்தான் இருந்துள்ளன.
கோவில்களில் உள்ள சிலைகளைப் பார்த்தால் அதில் பெண்களும் இடுப்பை மறைக்க ஒரு துண்டும், மார்த்துண்டு ஒன்றையுமே உடுத்தியிருக்கிறார்கள்.
உடல் முழுக்க மறைப்பது மாதிரி உடையந்தாலோ, முக்காடு இட்டாலோதான் பெண்கள் கண்ணியமாக உடையணிந்திருக்கிறார்கள் என்ற நிலை எப்போதும் இந்தியாவில் இருந்ததில்லை.
சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, சௌகரியமாக உடையணியும் முறையை பெண்கள் உட்பட அனைவரும் கைகொண்டுவந்திருந்தனர்.
British ஆட்சிக்காலத்தின்போதேகூட சில பெண்கள் மேலாடை அணியாது இருந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 19ஆம் CE சில பெண்கள் சேலை உடுத்தியிருந்தாலும், ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அது கண்ணியமாக இல்லை என பிரிட்டிஷ்காரர்கள் கருதியதால்தான், இந்தியப் பெண்களிடையே ரவிக்கை அணியும் வழக்கம் அதிகமானது
வங்கப் பெருங்கவி ரவீந்திரநாத தாகூரின் சகோதரரான சத்யேந்திரநாத் தாகூரின் மனைவி ஞானதநந்தினி தேவிதான், சேலைக்கு உள்ளே பெண்கள் அணியக்கூடிய ரவிக்கை, சட்டை போன்ற மேலாடைகளை பிரப்பலப்படுத்தியவர் என்று கூறப்படுகிறது.
அந்நாளில் ரவிக்கை இல்லாத வெறும் சேலையுடன் கிளப்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், இவர் ரவிக்கை அணியத் துவங்கினார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆங்கில வார்த்தைகளான பிளவுஸ், பெட்டிகோட் போன்ற வார்த்தைகள் இந்திய மொழிகளில் புழக்கத்துக்கு வந்ததும் இந்த காலகட்டத்தில்தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Judaism, Islam, Christianity, Sikhism, Amish, Hinduism என்று எல்லா மதங்களுமே பெண்கள் சிகையை மூடி வைக்க வேண்டும் என்றே சொல்லுகின்றன.
Unorthodox என்னும் Netflix series இல் ஒரு Hasidic Jewish பெண்ணிற்கு திருமணத்திற்கு பின் தன் தலையை மழிக்க வேண்டி வரும்போது ஏற்படும் உணர்வு ஊஞ்சலாட்டங்களை விவரித்து இருப்பார்கள். இது உண்மை கதையும் கூட.
ஏன் பெண்ணின் சிகையின் மீது இவ்வளவு ஆர்வம்? ஒரு பெண்ணின் விழிகள், இதழ்கள், மார்பகங்கள், பின்புறம் போல அவளது சிகையும் ஒரு கவர்ச்சி பொருளாக பார்க்கப்படுகிறது. தமிழ் கவிஞர்களை பற்றி சொல்லவே வேண்டாம் பெண்ணின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்களே கிடையாது.
ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால்
கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல்.
செயலை விட ஒரு செயலுக்கு பின் உள்ள நோக்கம் என்பது முக்கியம். பம்மல் கே சம்பந்தம் ல கமல் சொல்ற மாதிரி "இந்த அம்மாவுக்கு பிராணிகள் மேல எல்லாம் அக்கறை இல்ல என் மேல காண்டு" என்பது போல ஒரு நபரின் நோக்கத்தை அறிந்து தான் எதிர் விளைவாற்ற முடியும்.
புர்கா என்பது என்ன நோக்கத்தில் அணிய சொல்லப்படுகிறது என்பதும், என்ன நோக்கத்தில் அணிய கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம்.
பெண்கள் உடல் ஒரு போகப்பொருள். மிட்டாய் போல, அதை மூடி வைக்காவிட்டால் எறும்பு மொய்துவிடும் என்ற நோக்கத்தில் அணிய சொல்லப்படுவது தான் புர்கா.
அந்த அடிப்படையில் புர்கா என்பது கடுமையாக எதிர்க்க படவேண்டிய ஒன்றே. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் மட்டுமே அணியப்படும் ஒன்றாகவும், தன்னை இந்த மதத்தை சார்ந்த பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கில் சொல்லப்படுவதாலும்
அண்டார்டிகாவை சுற்றி இருப்பது Antarctic ocean என்று பொதுவாக சொல்லி வந்தாலும் அங்கீகரிக்கப்பட்ட கடலாக இருந்தது இல்லை அதன் பகுதிகளை பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றுடனும் சேர்த்து தான் சொல்லுவார்கள்.
Antarctic ocean வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் Antarctic ocean ஐ Southern Ocean என்ற பெயருடன் தனிப்பெரும் கடலாக அறிவித்துள்ளது.
நம்பிக்கைகள், உணர்வுகள் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பலமுறை நமது சொந்தங்களை நண்பர்களை நம்பி இருப்போம். அவன் நல்லவன் நேர்மையானவன் என்று மனதார நம்பி பணம் குடுத்து இருப்போம்.
ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிய பின் அடப்பாவி உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் என்று புலம்புவோம். நீங்கள் நம்பியதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று நம்பியது உங்கள் மனப்பிராந்தி. உங்கள் நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லை.
நம்பிக்கை என்பது பகுத்தறிவின் எதிரி. ஒன்றில் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அதை நீங்கள் ஆராய முற்படுவதில்லை. கடவுள், சோதிடம், ஆழ்மன சக்தி, பில்லி சூன்யம், ஆவி, இல்லுமினாட்டி, பிரபஞ்ச ஈர்ப்பு விதி, சக்திமான், பூமி தட்டை, கடற்கன்னி என்று மக்கள் பல விஷயங்களை நம்புகிறார்கள்