Swathika Profile picture
Feb 11 30 tweets 5 min read
Judaism, Islam, Christianity, Sikhism, Amish, Hinduism என்று எல்லா மதங்களுமே பெண்கள்  சிகையை மூடி வைக்க வேண்டும் என்றே சொல்லுகின்றன.
Unorthodox என்னும் Netflix series இல் ஒரு Hasidic Jewish பெண்ணிற்கு திருமணத்திற்கு பின் தன் தலையை மழிக்க வேண்டி வரும்போது ஏற்படும் உணர்வு ஊஞ்சலாட்டங்களை விவரித்து இருப்பார்கள். இது உண்மை கதையும் கூட.
ஏன் பெண்ணின் சிகையின் மீது இவ்வளவு ஆர்வம்? ஒரு பெண்ணின் விழிகள், இதழ்கள், மார்பகங்கள், பின்புறம் போல அவளது சிகையும் ஒரு கவர்ச்சி பொருளாக பார்க்கப்படுகிறது. தமிழ் கவிஞர்களை பற்றி சொல்லவே வேண்டாம் பெண்ணின் கூந்தலை வர்ணிக்காத கவிஞர்களே கிடையாது.
ஹீரோவும் ஹீரோயின் னும் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் ஹீரோ செய்யும் முதல் காரியம் ஹீரோயின் கூந்தலை அவிழ்த்து அவளின் தோள் விரித்து பரத்தி விடுவது, கூந்தல் கீற்றை எடுத்து நுகர்வது இப்படி ஒரு பெண்ணின் கூந்தலில் கைவைக்கும் எல்லாமுமே நெருக்கமான ஒரு பொருளை தருகின்றன.
அதனால் பெண்ணின் கூந்தலானது கணவனும், நெருக்கமான குடும்பத்தினரும் மட்டுமே பார்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாயிற்று. ஆக சிகையை மறைத்தலின் subtext பார்த்தீர்களென்றால் அது ஒரு கவர்ச்சி பொருளாக ஒரு ஆணால் பார்க்கப்படுகிறது.
இன்னொரு ஆண் தனக்கு உரியவளை கவரும் கண்ணோட்டத்துடன் பார்ப்பான் என்பதால் அந்த பெண்ணை உடமையாக கருதும் ஆண் அதை எல்லாம் எனக்கு மட்டும்தான் காட்ட வேண்டும் என்கிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கான காரணங்களை மட்டும் ஆண்கள் மாற்றி கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் "கடவுளே சொன்னாரு நீ இப்படிதான் இருக்கணுமாம்" என்று ஆரம்பித்து, "உன் நல்லதுக்கு தானே சொல்றேன் எல்லா ஆம்பளைங்க பார்வையும் ஒரே மாதிரி இருக்குமா" என்று பசப்பு வார்த்தையாக மாறி இப்போது "இதில் அறிவியல் இருக்கிறது" என்று வந்து முடிந்து இருக்கிறது.
மதம் என்பது ஆணாதிக்க சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. அந்த மதமானது பெண்களை கட்டுக்குள் வைக்க முதலில் கையில் எடுக்கும் ஆயுதம் ஆடை தான். அடிமை பெண்களை, sex slaves ஐ கட்டுக்குள் வைக்க மார்பகத்தை மூடக்கூடாது என்றும் (இவர்கள் யாராலும் உரிமை கோரப்படாதவர்கள் பொதுச்சொத்து போல)
குடும்ப பெண்களை (இவர்கள் ஒருவனுக்கு மட்டும் சொந்தம், அவனது வாரிசை பெற்று தந்து, பேணி காத்து அவனது தலைமுறையை நீட்டிக்க வேண்டிய பொறுப்புள்ளவள்) கட்டுக்குள் வைக்க எல்லாவற்றையும் மூடு என்றும் நிர்பந்திக்கிறது.
மேற்கத்திய நாடுகளிலுமே நல்ல குடும்பத்து பெண்கள் பெரிய தொப்பியை hat அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அதாவது இந்த நல்ல குடும்பத்து பெண்கள் ஒருவனுக்கு மணமுடித்து கொடுக்கப்பட்டு அவனுக்கு வாரிசுகளை பெற்று தந்து அவனது சொத்துக்களை அவனது மகனுக்கு கடத்துவது அவளது கடமை.
தனது சொத்து தனது மகனுக்கு மட்டும் போக வேண்டும் என்று நினைக்கிற ஆணாதிக்க சிந்தனை தான் குடும்ப அமைப்பு. இந்த பெண்ணுக்கு பிறந்தவன் தனது மகன் தான் என்று உறுதி செய்ய தான் முகத்தை மூடு, வெளியில் வராதே பூனை மீனை தூக்கிட்டு போய்விடும் என்கிற கட்டுப்பாடுகள் எல்லாம்.
"அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். வெட்கத் தலங்களை பேணிக் காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்று தெரியக் கூடியதைத் தவிர வெளிக் காட்டலாகது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தம் கணவர்கள், தம் தந்தையர்கள், தம் கணவர்களின் தந்தையர்கள், தம் புதல்வர்கள், தம் கணவர்களின் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரர்களின் புதல்வர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தங்கள் பெண்கள், தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள்,
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர தங்கள் அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது……"
so அவர்கள் தங்கள் உடலுறுப்புகளை மறைத்து என்ன கண்ணியமான ஆடை உடுத்தியிருந்தாலும்
அந்த ஆடை அலங்காரங்களுடன் அவற்றை மறைத்துக் கொண்டே வெளிப்பட வேண்டும். உடலை முழுவதும் மறைக்கக் கூடிய எந்த ஆடையாக இருந்தாலும் அது அலங்காரமாகவும் இருப்பதால், அதாவது "அந்நிய" ஆணை கவரும் என்பதால் அதை மறைக்கும் படியாக மேலதிக ஆடையுடன் தான் பொது இடங்களுக்கோ,
அந்நியர்களுக்கு முன்போ வரவேண்டும் என்பது தான் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு. யாருக்கு எல்லாம் அந்த பெண் மேல் ஆசை வராதோ அத்தகைய ஆண்கள் முன்னால் எல்லாவற்றையும் மூட வேண்டிய அவசியம் இல்லை அதாவது அப்பா, அண்ணா, மாமனார், சிறு குழந்தைகள்.
அந்நிய ஆண்கள் முன் கட்டாயம் மொத்தமாக எல்லாவற்றையும் மூட வேண்டும் ஏனெனில் அவன் இவளது அழகை பார்த்து ஆசைப்படலாம் இவளை அணுகலாம் காதலிக்கலாம்.
அப்போ இங்கு பாதுகாப்பு என்று சொல்லப்படுவது என்ன? சரி அந்த அந்நிய ஆண் உன்னை பலாத்காரம் செய்வான் என்றால் அவனை தானே தண்டிக்க வேண்டும்,
ஆணுக்கு தானே விருப்பம் இல்லாத பெண்ணை தொடாதே என்று சட்ட திட்டங்கள் போட வேண்டும்? ஆனால் அதை எந்த மதமும் செய்வது இல்லை சும்மா போறபோக்கில் அடுத்தவன் பொண்டாட்டியை பார்க்காதே என்பது போல சொல்லிவிட்டு சென்றுவிடுகிறதே ஒழிய பெண்களுக்கு விதிப்பது போல கடுமையான சட்ட திட்டங்கள் போடுவதில்லை.
ஏன் தெரியுமா? மோசமான ஆண்கள் இருப்பது மற்ற ஆண்களுக்கு ஒரு சாதகம். ஒரு கோட்டை பெரிதாக காட்ட வேண்டுமென்றால் அருகில் சின்னதாக ஒரு கோடு போடவேண்டும் என்பது போல. மோசமான ஆண்கள் இருக்கையில் இந்த சுமாரான ஆண்கள் நல்லவர்களாகி விடுவார்கள்.
அதனால் தான் எப்போதும் இவர்கள் பூனைக்கு மணி கட்டவே மாட்டார்கள். மீனை தான் மூடி வைக்க சொல்லுவார்கள். ஆம்பளைன்னா கொஞ்சம் முன்ன பின்ன அப்படிதான் இருப்பான் அதுதான் அவன் சுபாவம் என்று நியாயப்படுத்துவார்கள்.
எல்லா ஆடை கட்டுப்பாடுகளும் ஆண்களின் காமத்தை அடிப்படையாக கொண்டே இருக்கின்றன. அதை ஆதரிக்கும் ஆண்கள் எல்லாம் மறைமுகமாக தன்னை காமுகவாதி என்று ஒத்து கொள்கிறான்.
கற்பு என்பது பெண்கள் தங்களால் (ஆணாதிக்க சமூகம்) அங்கீகரிக்கப்படாத ஆண்களுடன் உறவு கொள்ளுவதை தடுக்க இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒன்று. கர்ப்பத்தடை பாவம் என்பது ஒருவேளை நாளை கர்பமாகிவிட்டால் அதை கலைக்க கூட முடியாதே என்கிற பீதியில் பெண்ணை சந்தோசத்தை அனுபவிக்க விடாமல் செய்வது.
பொம்பளை சிரிச்ச போச்சு என்றெல்லாம் சொல்லுவது அவளுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை குடுக்க கூடாது என்பதற்காக.

பெண் என்பவள் அவள் விருப்பப்பட்ட ஆணை தேர்ந்தெடுக்கலாம், திருமணத்திற்கு முன்போ பின்போ உடலுறவிற்கு அவளது சம்மதம் மிக முக்கியம், கர்ப்பம் தரித்தலும்,
தேவை இல்லை என்றால் அதை கலைத்தலும், பிள்ளையே வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும் அவளது தனிப்பட்ட விருப்பம் மட்டுமே என்றெல்லாம் இந்த சமூகம் ஒப்புக்கொள்ளாதவரை பெண் என்பவள் இப்படி தான் ஆடை அணிய வேண்டும் இங்கு தான் செல்ல வேண்டும்
இன்னாருடன் தான் செல்ல வேண்டும் என்றெல்லாம் இந்த சமூகம் கட்டுப்பாடுகளை விதித்து கொண்டே தான் இருக்கும். அதற்கு காரணம் பெண்ணின் பாதுகாப்பு, குடும்ப அமைப்பு என்றெல்லாம் சப்பை கட்டு கட்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Feb 8
ஆடை அரசியல்

ஆடை என்பது பெரும்பாலானோருக்கு உடலை மறைப்பதற்கும், குளிர், வெப்பம் போன்றவற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கும், தங்களை மேலும் அழகாகக் காட்டிக்கொள்வதற்குமான விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆனால், ஆடையையே தங்கள் அடையாளமாக, தங்கள் அரசியலாக, தங்கள் போராட்டமாக மாற்றியவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்கள். ஏழை எளியோர் இடுப்பில் அரையாடையுடன் இருக்கத் தனக்கு மட்டும் பாதத்திலிருந்து தலைப்பாகை வரை ஏன் இத்தனை ஆடம்பரம் என்று அரையாடைக்கு மாறியது காந்தியின் ஆடை அரசியல் என்றால்
கௌரவமான ஆடை அணிய அனுமதிக்கப்படாத சமூகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் கோட்டும் சூட்டும் அணிந்தது ஒடுக்கப்பட்டோருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான ஆடை அரசியல். பெரியாரின் கறுப்புச் சட்டை சனாதனத்துக்கு எதிரான ஆடை அரசியல்.
Read 4 tweets
Feb 8
பழங்காலத்தில் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்று பார்த்தால் அவை உடலில் அதிக பாகங்களை மூடாமல்தான் இருந்துள்ளன.

கோவில்களில் உள்ள சிலைகளைப் பார்த்தால் அதில் பெண்களும் இடுப்பை மறைக்க ஒரு துண்டும், மார்த்துண்டு ஒன்றையுமே உடுத்தியிருக்கிறார்கள்.
உடல் முழுக்க மறைப்பது மாதிரி உடையந்தாலோ, முக்காடு இட்டாலோதான் பெண்கள் கண்ணியமாக உடையணிந்திருக்கிறார்கள் என்ற நிலை எப்போதும் இந்தியாவில் இருந்ததில்லை.

சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, சௌகரியமாக உடையணியும் முறையை பெண்கள் உட்பட அனைவரும் கைகொண்டுவந்திருந்தனர்.
British ஆட்சிக்காலத்தின்போதேகூட சில பெண்கள் மேலாடை அணியாது இருந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 19ஆம் CE சில பெண்கள் சேலை உடுத்தியிருந்தாலும், ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அது கண்ணியமாக இல்லை என பிரிட்டிஷ்காரர்கள் கருதியதால்தான், இந்தியப் பெண்களிடையே ரவிக்கை அணியும் வழக்கம் அதிகமானது
Read 5 tweets
Feb 5
செயலை விட ஒரு செயலுக்கு பின் உள்ள நோக்கம் என்பது முக்கியம். பம்மல் கே சம்பந்தம் ல கமல் சொல்ற மாதிரி "இந்த அம்மாவுக்கு பிராணிகள் மேல எல்லாம் அக்கறை இல்ல என் மேல காண்டு" என்பது போல ஒரு நபரின் நோக்கத்தை அறிந்து தான் எதிர் விளைவாற்ற முடியும்.
புர்கா என்பது என்ன நோக்கத்தில் அணிய சொல்லப்படுகிறது என்பதும், என்ன நோக்கத்தில் அணிய கூடாது என்று சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம்.

பெண்கள் உடல் ஒரு போகப்பொருள். மிட்டாய் போல, அதை மூடி வைக்காவிட்டால் எறும்பு மொய்துவிடும் என்ற நோக்கத்தில் அணிய சொல்லப்படுவது தான் புர்கா.
அந்த அடிப்படையில் புர்கா என்பது கடுமையாக எதிர்க்க படவேண்டிய ஒன்றே. மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் மட்டுமே அணியப்படும் ஒன்றாகவும், தன்னை இந்த மதத்தை சார்ந்த பெண் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தும் நோக்கில் சொல்லப்படுவதாலும்
Read 20 tweets
Feb 5
குழந்தைகளும் வாசிப்பும்
- காப்பியா வாசிப்பகம்

ஒரு புத்தகம் என்னென்ன செய்யும்?

1. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரியவரும்.
2.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய பொதுப்புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழுமியங்கள், எல்லாவற்றைப் பற்றியும் கேள்விகள் உருவாகும்.

3. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது அறிவுப்பரப்பு ஒரு மில்லிமீட்டராவது விசாலமாகும்.
4. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்.

5. ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்.

6.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், சாதி, மொழி, இவையாவும் மறைந்து போகும்.
Read 15 tweets
Feb 2
There’s a new ocean now. can you name all 5?
அண்டார்டிகாவை சுற்றி இருப்பது Antarctic ocean என்று பொதுவாக சொல்லி வந்தாலும்  அங்கீகரிக்கப்பட்ட கடலாக இருந்தது இல்லை அதன் பகுதிகளை பசிபிக் கடல், இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் கடல் மூன்றுடனும்   சேர்த்து தான் சொல்லுவார்கள்.
Antarctic ocean வெறும் பனி படலமா, அல்லது பசிபிக், இந்திய பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் கடலின் நீட்சியா என்று விவாதங்கள் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் நேஷனல் ஜியோகிராபிக் Antarctic ocean ஐ Southern Ocean என்ற பெயருடன் தனிப்பெரும் கடலாக அறிவித்துள்ளது.
Read 7 tweets
Feb 2
நம்பிக்கைகள், உணர்வுகள் என்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் பலமுறை நமது சொந்தங்களை நண்பர்களை நம்பி இருப்போம். அவன் நல்லவன் நேர்மையானவன் என்று மனதார நம்பி பணம் குடுத்து இருப்போம்.
ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிய பின் அடப்பாவி உன் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன் என்று புலம்புவோம். நீங்கள் நம்பியதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் நல்லவர்கள் என்று நம்பியது உங்கள் மனப்பிராந்தி. உங்கள் நம்பிக்கைக்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லை.
நம்பிக்கை என்பது பகுத்தறிவின் எதிரி. ஒன்றில் மேல் உங்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால் அதை நீங்கள் ஆராய முற்படுவதில்லை. கடவுள், சோதிடம், ஆழ்மன சக்தி, பில்லி சூன்யம், ஆவி, இல்லுமினாட்டி, பிரபஞ்ச ஈர்ப்பு விதி, சக்திமான், பூமி தட்டை, கடற்கன்னி என்று மக்கள் பல விஷயங்களை நம்புகிறார்கள்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(