*ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார் அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.
அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.
இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.
பணம் சேர்த்தால் மட்டும் இன்பம் வந்து விடாது. அது செலவு செய். பணம் மூலமாக இன்பத்தை தேடு கிடைக்கும் என்றார்கள். உடனே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாடுகள் எல்லாம் சுற்றி பார்த்தான்.
அப்புறம் விருப்பமானதை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான். மது, போதை பழக்கம் இப்படி எல்லாவற்றிலும் ஈடுபட்டு பார்த்தான்.
கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பம் நடத்தினான். எப்படி இருந்தாலும் அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சி அவனுக்கு கிடைக்கவில்லை. அதனால் மகிழ்ச்சி என்பது எங்கே இருக்கிறது என்கின்ற ரகசியத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடைசியாக ஒரு பெரியவரிடம் யோசனை கேட்டான். அவர் சொன்னார் இல்லறத்தில் உனக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. துறவறத்திலாவது கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்றார்
சரி அதையும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று முடிவு செய்தான்.
துறவறம் என்றால் சும்மாவா? எல்லாத்தையும் துறக்க வேண்டும். எதற்கும் துணிந்து விட்டான். வீட்டில் இருந்த நகை, பணம், வைரம் , வைடூரியம் எல்லாவற்றையும் மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு ஒரு யோகியை தேடிப் போனான். அவர் காலடியில் கொண்டு போட்டான்.
அவர் நிமிர்ந்து பார்த்தார் என்ன இதெல்லாம் என்றார்.
இதெல்லாம் இனி எனக்குத் தேவையில்லை என்றான் அவன்.
சரி அப்படி என்றால் உனக்கு என்ன தேவை?
எனக்கு மகிழ்ச்சி தேவை மன அமைதி தேவை என்றான் அவன்.
அந்த யோகி தன் காலடியில் இருந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தார். உள்ளே தங்கம் , வைரம், நகை, பணம் அவ்வளவுதான் அவசரமாக அதை சுற்றி எடுத்துக்கொண்டார். தலையிலே வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓட ஆரம்பித்தார்.
இவனுக்கு அதிர்ச்சி இவர் போலி சாமியார் போல இருக்கே! ஏமாந்து விட்டோமே என்று நினைத்தான். வருத்தப்பட்டான். துக்கம் ஆத்திரமாக மாறியது. உடனே அந்த யோகியை துரத்த ஆரம்பித்தான்.
அவர் சந்து பொந்தெல்லாம் நுழைந்து ஓடினார். அவனும் விடாமல் துரத்தினான். கடைசியாக அந்த யோகி மூச்சு இரைக்க இரைக்க ஒரு இடத்திலே வந்து நின்றார். அது அவர் புறப்பட்ட இடம். எங்கிருந்து ஓட ஆரம்பித்தாரோ அங்கேயே வந்து நின்றார். துரத்தி வந்தவனும் ஓடி வந்து நின்றான்.
அந்த யோகி சொன்னார் என்ன பயந்து விட்டாயா? இதோ உன்னுடைய செல்வம். நீயே வைத்துக்கொள். உன்னுடைய மூட்டையை திரும்பப் பெற்றுக்கொள் என்று கொடுத்தார். கைவிட்டுப்போன தங்கமும் வைரமும் பணமும் திரும்பக் கிடைத்து விட்டதால் அவனுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
இப்போது மறுபடியும் அந்த யோகி சொல்கிறார். இங்கே நீ வருவதற்கு முன்னால் கூட இந்த தங்கமும் வைரமும் உன்னிடம் தான் இருந்தது. ஆனால் அப்போது உனக்கு மகிழ்ச்சி இல்லை. இப்போது உன்னிடம் இருக்கிறதும் அதே தங்கமும் வைரமும்தான். ஆனால் உன் மனதில் மகிழ்ச்சி இருக்கிறது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் மகிழ்ச்சி என்பது வெளியில் இல்லை. அது உள்ளே இருக்கிறது. அது நம் மனதில் இருக்கிறது. இதை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தங்கத்தையும் வைரத்தையும் மூட்டை கட்டி தலையிலே வைத்துக் கொண்டு அலைந்த அவன் மாதிரியே நம்மில் பல பேருக்கு மகிழ்ச்சி எங்கே இருக்கிறது என்ற உண்மை புரியவில்லை. அதனால் தான் பல சமயங்களில் நாம் மகிழ்ச்சியாக இருக்க அடுத்தவர்களை சார்ந்து இருக்கிறோம்.*
🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*மேற்கத்திய வல்லரசு வணிகர்களுக்கு எதிராக இந்தியாவைக் காப்பாற்ற வங்காளதேச போரில் குதித்த ரஷ்யாவே நமது உண்மையான நண்பன்...*
*50 ஆண்டுகளுக்கு முன், டிச., 1971ல், வங்காளதேசம் மீதான போரை நிறுத்தும்படி, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது...*
*அதிர்ச்சியடைந்த இந்தியா சோவியத் யூனியனுக்கு உதவி கேட்டு SOS அனுப்பியது...*
*இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட வரலாறு இது...*
*1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் தோல்வி உறுதியான போது, அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான உலகின் பிரம்மாண்டமான USS எண்டர்பிரைஸ் தலைமையிலான அமெரிக்க 7வது கடற்படையின் படைக்குழுவை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவதற்கு
நித்ய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பக்ஷ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, நகைகளை திரும்ப வழங்காததுடன், அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை, தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.இதற்கு, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பட்டியல், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊரக பகுதிகளில், பயனாளிகளிடம் நகைகளையும், தள்ளுபடி சான்றும் வழங்கும் பணி, பிப்., 10ம் தேதி துவங்கியது.
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
🌹 🌿 சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. 🙏🇮🇳1
அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
🙏🇮🇳2
🌹 🌿 காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜெக ஜோதிமயமாக இருக்கும்.
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.