நித்ய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பக்ஷ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால அபிக்ஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
*நான்கு கால வழிபாட்டிற்குரிய திரவியங்கள்*
*முதல் காலம் :*
*வழிபட வேண்டிய மூர்த்தம் -* சோமாஸ்கந்தர்
*அபிஷேகம் -* பஞ்சகவ்யம்
*அலங்காரம் -* வில்வம்
*அர்ச்சனை*- தாமரை, அலரி
*நிவேதனம்* - பால் அன்னம்,சக்கரை
பொங்கல்
*புஷ்பம்-* வில்வம்
*பட்டு* - செம்பட்டு
*வழிபட வேண்டிய மூர்த்தம் -* சந்திரசேகரர்(ரிஷபாரூடர்)
*அபிஷேகத் திரவியம்*- கருப்பஞ்சாறு, வாசனை நீர்
*அலங்காரம் -*
கரு நொச்சி
*அர்ச்சனை* நந்தியாவட்டை புஷ்பம்
*நிவேதனம்* வெண்சாதம்
*பழம்*- நானாவித பழங்கள்
*பட்டு* - நீலப் பட்டு
*ஸ்தோத்திரம் -* அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
*மணம் -*
புணுகு சேர்ந்த சந்தணம்
*தூபம்* - கர்ப்பூரம், இலவங்கம்
*தீபம்*-
மூன்று முக தீபம்
*இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்*
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார்
இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
மாசிமாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.
*சிவாய நம'* என்று சிந்தித்திருந்தால் 'அபாயம்' நமக்கு ஏற்படாது,'உபாயம்' நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும்.
ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் "சிவராத்திரி" விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
*மேற்கத்திய வல்லரசு வணிகர்களுக்கு எதிராக இந்தியாவைக் காப்பாற்ற வங்காளதேச போரில் குதித்த ரஷ்யாவே நமது உண்மையான நண்பன்...*
*50 ஆண்டுகளுக்கு முன், டிச., 1971ல், வங்காளதேசம் மீதான போரை நிறுத்தும்படி, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது...*
*அதிர்ச்சியடைந்த இந்தியா சோவியத் யூனியனுக்கு உதவி கேட்டு SOS அனுப்பியது...*
*இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட வரலாறு இது...*
*1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் தோல்வி உறுதியான போது, அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான உலகின் பிரம்மாண்டமான USS எண்டர்பிரைஸ் தலைமையிலான அமெரிக்க 7வது கடற்படையின் படைக்குழுவை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவதற்கு
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, நகைகளை திரும்ப வழங்காததுடன், அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை, தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.இதற்கு, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பட்டியல், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊரக பகுதிகளில், பயனாளிகளிடம் நகைகளையும், தள்ளுபடி சான்றும் வழங்கும் பணி, பிப்., 10ம் தேதி துவங்கியது.
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
🌹 🌿 சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. 🙏🇮🇳1
அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
🙏🇮🇳2
🌹 🌿 காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜெக ஜோதிமயமாக இருக்கும்.
*ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார் அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.
அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.
இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.