*மேற்கத்திய வல்லரசு வணிகர்களுக்கு எதிராக இந்தியாவைக் காப்பாற்ற வங்காளதேச போரில் குதித்த ரஷ்யாவே நமது உண்மையான நண்பன்...*
*50 ஆண்டுகளுக்கு முன், டிச., 1971ல், வங்காளதேசம் மீதான போரை நிறுத்தும்படி, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது...*
*அதிர்ச்சியடைந்த இந்தியா சோவியத் யூனியனுக்கு உதவி கேட்டு SOS அனுப்பியது...*
*இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட வரலாறு இது...*
*1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் தோல்வி உறுதியான போது, அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான உலகின் பிரம்மாண்டமான USS எண்டர்பிரைஸ் தலைமையிலான அமெரிக்க 7வது கடற்படையின் படைக்குழுவை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவதற்கு
அப்போதைய அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் கிஸ்ஸிங்கர் அமெரிக்க அதிபரான நிக்சனைத் தூண்டியதால் நிகழ்ந்த போர் நிகழ்வு இது...*
*யுஎஸ்எஸ் எண்டர்பிரைசஸ் என்பது 75,000 டன்கள் எடையுடன், 1970 களிலேயே 70க்கும் மேற்பட்ட போர் விமானங்களுடன் உலகின் மிகப்பெரிய அணுசக்தியில் இயங்கும் விமானம் தாங்கி அசுரக் கப்பல்...*
*ஆனால் இந்திய கடற்படையின் கடற்படை வெறும் 20 இலகுரக போர் விமானங்களுடன் 20,000 டன் விமானம் தாங்கி கப்பலான விக்ராந்த் தலைமையில் மிகவும் பலவீனமாக இருந்தது...*
*பங்களாதேஷில் உள்ள அமெரிக்கக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காவே USS எண்டர்பிரைஸ் அனுப்பப்பட்டது என்று அமெரிக்க அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டாலும் இந்தியப் படைகளை அச்சுறுத்தி போரை நிறுத்தி கிழக்கு பாகிஸ்தானின் விடுதலையைத் தடுக்கும் வகையில்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக அனுப்பப்பட்டது என்பதே உண்மை...*
*இந்தியாவுக்கு அப்போது இன்னொரு மோசமான செய்தியும் கிடைத்தது...*
*எச்.எம்.எஸ் ஈகிள் என்ற சக்திவாய்ந்த பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல் தலைமையில் பல நாசகாரக் கப்பல்களுடன் மேற்கில் இருந்து அரபிக்கடலை நோக்கி நாசகார பிரிட்டிஷ் கடற்படைக் குழு இந்தியாவின் கடல் எல்லையை நெருங்கி வருவதாக சோவியத் உளவுத்துறை இந்தியாவுக்குத் தகவல் தெரிவித்தது...*
*ஆங்கிலேயர்களும் அமெரிக்கர்களும் சேர்ந்து இந்தியாவை மிரட்டவும் தேவைப்பட்டால் தாக்கவும் ஒரு ஒருங்கிணைந்த அதிரடித் தாக்குதலைத் திட்டமிட்டிருந்தனர்...*
*அரபிக்கடலில் உள்ள பிரிட்டிஷ் கப்பல்கள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையை குறிவைக்கும், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் கிழக்கே வங்காள விரிகுடாவில் போரிடும் இந்தியப் படைகளை துறைமுக நகரமான சிட்டகாங்கில் குறி வைப்பார்கள்.
இதுதான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் அப்போதைய இந்தியாவிற்கு எதிரான ரகசியப் போர்த் திட்டம்...*
*பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு இடையே சிக்கும் இந்திய கடற்படையைத் தாக்கி அதன் மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வங்காளதேசப் போரை நிறுத்துவதே இவர்களது குறிக்கோள்...*
*அது டிசம்பர் 1971, உலகின் இரண்டு முன்னணி ஜனநாயக நாடுகள் இப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்தன...*
*டெல்லியில் இருந்து அவசர உதவி கேட்டு ஒரு SOS மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டது...*
*நிலைமையை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்த சோவியத் உடனடியாக யுஎஸ்எஸ் எண்டர்பிரைசஸஸ் கப்பலைத் தடுக்க ரஷ்யாவின் சிவப்புக் கடற்படையில் இருந்து மொத்தம் 16 சோவியத் கடற்படைப் பிரிவுகளையும் தவிர ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும்
அருகாமை ரஷ்யத் துறைமுகமான விளாடிவோஸ்டாக்கில் இருந்து அனுப்பியது...*
*அமெரிக்கர்கள் சிட்டகாங்கை அடைந்து விடுவார்களோ என்று கவலை அடைந்ததாக அப்போதைய இந்தியக் கடற்படையின் கிழக்குப் படைத் தலைவர் அட்மிரல் என். கிருஷ்ணன் தனது ஓய்வுக்குப் பின்னர் எழுதிய
‘வேறு வழியில்லை, சரணடையுங்கள்’ என்ற தனது ஆங்கிலப் புத்தகத்தில் எழுதியுள்ளார்...*
*எண்டர்பிரைசஸ் கப்பற்படையை இடைமறிப்பது அல்லது அவர்களைத் தாக்கி அந்த போர் நடவடிக்கையில் இறந்து அழிவது என்னும் இரண்டு முடிவுகளே அப்போது இருந்ததாக தனது புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்...*
*1971 டிசம்பர் 2 - வது வாரத்தில், அமெரிக்க 7வது கப்பற்படை யுஎஸ்எஸ் எண்டர்பிரைஸ் தலைமையில் வங்காள விரிகுடாவை வந்தடைந்தது...*
*பிரிட்டிஷ் கடற்படையும் அரபிக்கடலுக்கு வந்து கொண்டிருந்தது...*
*மிகப்பெரிய போர் இந்தியாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மூளப் போகிறது என்ற அச்சம் உலகத்தையே மூச்சடைக்க வைத்துக் கொண்டிருந்த நேரம் அது...*
*ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அமெரிக்கர்களுக்குத் தெரியாமல், சோவியத் நீர்மூழ்கிக் கப்பல்கள கடல் ஆழத்தில் அமெரிக்க கடற்படையை முந்திச் சென்று வங்காளதேசக் கடற்பகுதியை நெருங்கியது...*
*யுஎஸ்எஸ் எண்டர்பிரைஸ் கிழக்கு பாகிஸ்தானை நோக்கி நகர்ந்தபோது, சோவியத் நீர்மூழ்கிக் கப்பல்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நடுக்கடலில் அமெரிக்க கடற்படையை எதிர்த்து கடலிலிருந்து மேல் எழும்பி திடீரென வெளிப்பட்டன...*
*சோவியத் கப்பற்படையும் தங்களது நீர்மூழ்கி கப்பல்களுக்கு ஆதரவாக விரைந்து வந்து கொண்டிருந்தன...*
*சோவியத்தின் இந்த அதிரடி யுத்த நகர்வை துளியும் எதிர்பார்க்காதஅமெரிக்கக் கடற்படை அதிர்ச்சியடைந்தது...*
*யுஎஸ்எஸ் கப்பலின் தளபதி அட்மிரல் கார்டன் அமெரிக்க கடற்படைத் தலைமையிடம் தொடர்பு கொண்டு கூறினார்: "ஐயா, நாம் மிகவும் தாமதமாகிவிட்டோம். சோவியத் கப்பற்படை நமக்கு முன்னால் இங்கே வந்து நம்மை எதிர்த்து நிற்கின்றனர்!..."*
*இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கடற்படைகள் மீண்டும் உருவாகும் மூன்றாம் உலக யுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இரண்டு படைகளும் பின்வாங்கின. இந்திய படைகளும் திட்டமிட்டபடி பாகிஸ்தானை சரணடையச் செய்து வங்காளதேசத்தை விடுதலை பெறச்செய்தது...*
*வங்காள விரிகுடாவில் இரு வல்லரசுகளுக்கு இடையே நடந்த இந்த பிரம்மாண்டமான கடற்படை சதுரங்கப் போரை இன்று பெரும்பாலான இந்தியர்கள் மறந்துவிட்டனர்...*
*இந்தியப் பெருமையை, ரஷ்யாவின் இந்தியா நட்பைப் போற்றும் மதிப்புமிக்க வரலாறு...!!!*
உலக யுத்த வரலாற்றில் இடம் பெற்ற மிகப் பெரிய போர் நிகழ்வினை மீளக் கொணர்ந்ததற்கு மிக்க நன்றி...
இப்போது நமது நண்பர்கள் அனைவரும் இந்தியா ஐநா சபை தீர்மானத்தில் உக்ரேன் போர் சம்மந்தமாக ஏன் நடுநிலை வகித்தது என்பதை புரிந்து கொள்வார்கள்...!!!
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நித்ய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பக்ஷ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, நகைகளை திரும்ப வழங்காததுடன், அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை, தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.இதற்கு, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பட்டியல், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊரக பகுதிகளில், பயனாளிகளிடம் நகைகளையும், தள்ளுபடி சான்றும் வழங்கும் பணி, பிப்., 10ம் தேதி துவங்கியது.
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
🌹 🌿 சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. 🙏🇮🇳1
அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
🙏🇮🇳2
🌹 🌿 காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜெக ஜோதிமயமாக இருக்கும்.
*ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார் அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.
அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.
இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.