உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பி கொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா ?
அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள் பிரஜைகள் இருந்தால் மீட்பது கடினம் என்று சொல்லிய போது ,அப்படியே இருந்தாலும் மிக செலவாகும் என்று சொல்லியுள்ள நிலையில் ..
பிரச்சனை ஆரம்பிக்கறது என்று தெரிந்ததுமே உக்ரைன் தலைநகர் Kyiv உள்ள நம்ம தூதரகம் இந்திய பிரஜைகளுக்கு கொடுத்த நோட்டீஸ் பாருங்க ..
தாக்குதல் ஆரம்பித்ததும் உக்ரெயின் வான்வழி மூடப்பட்டதும் , இந்திய வெளியுறவு துறை மிகதுரிதமாக அதன் அண்டை நாடுகளான போலந்து ,ஹங்கேரி , ருமேனியா போன்றவற்றை தொடர்பு கொண்டு
அவர்கள் நாடுகளின் உக்ரைன் எல்லைகளை இந்தியர்கள் எந்த வித சிரமும் இல்லாமல் கடக்க வழிவகை செய்து கொடுத்தது , அதுவும் ஒரே நாளில் ..
நமது வெளியுறவுத்துறை அமைச்சரின் டிவீட்களை பாருங்க புரியும் , இதையும் இங்கே உள்ள சில அறிவாளிகள் நக்கல் அடித்தார்கள் , இவர் என்ன டீவீட்டில் எல்லோரையும் மீட்டு கொண்டு இருக்கறாருனு ..
ரஷ்யா அதிபர் புட்டினிடம் நேரிடையாக பேசிய நம் பிரதமர் ,அங்க உள்ள நம் நாட்டவரின் நிலைமையை பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் பேசி உள்ளார் ..புட்டினும் அதற்கு உறுதி அளித்ததாக தெரிகிறது ..
ஐரோப்பிய மக்களே எல்லை தாண்ட சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில்..
இந்திய கொடி கட்டிய பஸ்களில் மிக பத்திரமாக உக்ரைன் எல்லை தாண்டி வந்தார்கள் நம் மாணவர்கள் .
அங்கே முகாம்களில் இருந்து தற்போது நம் நாட்டு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி கொண்டு இருக்கிறார்கள் ..
அத்தனைக்கும் முழு காரணம் நம் நாட்டின் தற்போதுள்ள வெளியுறவு கொள்கை ..
மோடிஜி மேற்கொண்ட வெளிநாட்டு தொடர் பயணங்கள் ..
இந்தியா என்றவுடன் மற்ற நாட்டவருக்கு வரும் மரியாதை..
அவரின் அந்த பயணங்களை தான் இங்கே நக்கல் அடித்த ஒரு முட்டாள் கூட்டம் ..
தற்போது பிறநாடுகளில் சில இந்தியாவின் உதவியை நாடி உள்ளன..
இதெல்லாம் என்ன என்று புரிவதற்கு கூட இங்கே உள்ள சில கொத்தடிமைகளுக்கு ஒரு ஆயுள் பத்தாது .
அப்புறம் தானே "மோடி" என்ற மாமனிதரின் அருமை புரிவதற்கு ..
*மேற்கத்திய வல்லரசு வணிகர்களுக்கு எதிராக இந்தியாவைக் காப்பாற்ற வங்காளதேச போரில் குதித்த ரஷ்யாவே நமது உண்மையான நண்பன்...*
*50 ஆண்டுகளுக்கு முன், டிச., 1971ல், வங்காளதேசம் மீதான போரை நிறுத்தும்படி, இந்தியாவை அமெரிக்கா மிரட்டியது...*
*அதிர்ச்சியடைந்த இந்தியா சோவியத் யூனியனுக்கு உதவி கேட்டு SOS அனுப்பியது...*
*இந்திய வரலாற்று புத்தகங்களில் இருந்து கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட வரலாறு இது...*
*1971 இந்திய - பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானின் தோல்வி உறுதியான போது, அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான உலகின் பிரம்மாண்டமான USS எண்டர்பிரைஸ் தலைமையிலான அமெரிக்க 7வது கடற்படையின் படைக்குழுவை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவதற்கு
நித்ய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பக்ஷ சிவராத்திரி
யோக சிவராத்திரி
மஹா சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
சென்னை : கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு, நகைகளை திரும்ப வழங்காததுடன், அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், 5 சவரன் வரையிலான நகைகளை அடமானம் வைத்து பெற்ற கடன்களை, தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.இதற்கு, பல்வேறு நிபந்தனைகளின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களின் பட்டியல், அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்காத ஊரக பகுதிகளில், பயனாளிகளிடம் நகைகளையும், தள்ளுபடி சான்றும் வழங்கும் பணி, பிப்., 10ம் தேதி துவங்கியது.
🌹 🌿 சிவத் தலங்களில் தலைமையாகக் கருதப்படுவது காசி. அங்குள்ள சிவன் கோயில்களைக் கணக்கிட முடியாது. காசி நகருக்கு இதயம் போலக் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்திருக்கிறது. 🙏🇮🇳1
அங்கு சிவ ராத்திரி அன்று ஏராளமான வேத விற்பன்னர்களைக் கொண்டு முறைப்படி ஹோமங்களும், சிவனைப் பற்றிய துதிகளின் பாராயணமும் விசேஷமாக நடைபெறும்.
🙏🇮🇳2
🌹 🌿 காசியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அபிஷேகமும் அலங்காரமும் அன்று முழுவதுமே நடத்தப்படும். சிவராத்திரி அன்று காசி விஸ்வநாதர் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றுவார்கள். ஒரே வரியில் சொல்வதானால், காசி முழுவதுமே அன்று ஜெக ஜோதிமயமாக இருக்கும்.
*ஒருத்தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அதற்கு என்ன வழி என்று நாலு பேரிடம் யோசனை கேட்டான்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தானாக வரும். அதனால் பணம் சம்பாதிக்கின்ற வழியைப் பார் அதன் பிறகு நீ தேடிக் கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி உன்னைத் தேடிக் கொண்டு வரும் என்று சொன்னார்கள்.
அப்படி என்றால் மகிழ்ச்சி இருக்கிற இடம் பணம்தான் என்று அவன் முடிவு செய்தான். அதை சேர்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நாளில் பெரிய ஆள் ஆகிவிட்டான். செல்வம் நிறைய சேர்ந்துவிட்டது.
இப்போதும் அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. மறுபடியும் நண்பர்களிடம் யோசனை கேட்டான்.
மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்! சிவராத்திரியின் உண்மையான விளக்கம்
மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.
மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவு..
நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று பெருமானை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.