#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும் Image
தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு வரிய ஏழை வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம்
வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை பொருக்கி அதிலே ஜீவனம் செய்துவந்தான். கொடிய வறுமை.
இவன் இவ்வாறு வறுமையில் வாடிக் கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று, எவ்வளவு நாள்தான்
இந்த வறுமையை சகித்துக் கொள்வது. ராமர் கானகம் ஏகும் முன் தனது பொருள்களை எல்லாம் யாத்ரா தானம் செய்கிறார், நீங்களும் இந்த மண்வெட்டி, கோடாலியை எல்லாம் அப்பாலில் வைத்துவிட்டு அவரை சென்றடைந்து நமது நிலையை எடுத்துசொல்லி ஏதாவது பொருள் வாங்கி வாருங்கள் நிச்சயம் தருமமே வடிவம் தாங்கி
வந்திருக்கும் அந்த அண்ணல் நம் துன்பங்களை எல்லாம் தீர்ப்பார் ஆகவே சென்று வாருங்கள் என்றாள். அதற்கு அந்த ஏழையும் ஒப்புக் கொண்டு தன்னுடைய கந்தல் ஆடையால் உடலை ஓரளவு மறைத்துக் கொண்டு வேக வேகமாக அரண்மனையை சென்றடைந்தான்.
அங்கே தான தர்மங்களை வழங்கிக் கொண்டிருந்த ராமபிரானை கண்டார். ராமரை
பணிந்து, ஹே அரசகுமாரரே! தங்களின் புகழ் இப்புவி முழுவதும் பரவியுள்ளது. நான் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவன். நானும் என் குடும்பமும் வறுமையால் வாடிக் கொண்டிருக்கிறோம். உண்ண உணவில்லை, உடுக்க உடை இல்லை. வயல் வரப்பில் தானே விழும் நெல்லை பொறுக்கி அதைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
எங்கள் மேல் கருணைக் கொண்டு உதவ வேண்டும் என வேண்டி நின்றான். ராமபிரான், "அன்பரே சற்று முன் வந்திருக்கக் கூடாதா? என்னுடைய விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் அனேகருக்கும் கொடுத்து விட்டேனே! தற்பொழுது என்னிடம் மிஞ்சி இருப்பது இந்த பசுக்கள் மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு பசுக்கள் வேண்டும் என
வினவ, நூறா இருநூறா அல்லது அதற்கும் மேலும் கேட்பதா என அந்தணன் திகைத்தான். பிறகு ஒரு வழியாக புத்திசாலிதனமாக என் வறுமை தீரும் அளவிற்கு வேண்டும் என்று ராமபிரானின் விருப்பத்திற்கு விட்டு விட்டான். அண்ணலும் "ஐயா உமது கையில் உள்ள கொம்பை வீசி எறியுங்கள் அது எவ்வளவு தூரம் செல்கின்றதோ அது
வரை உள்ள பசுக்களை உமதாக்கிக் கொள்ளலாம்" என்றார். இதை கேட்ட அவன் விழிகள் மலர்ந்தன. நடக்கவும் சக்தியற்ற நிலையிலிருந்த அவன் நிமிர்ந்து நின்றான். தன் இடுப்பில் இருந்த வஸ்திரத்தை அவிழ்த்து அதை வரிந்து கட்டிக் கொண்டான். தன் முழு பலத்தையும் திரட்டி ஒரு சுற்று சுற்றி தனது கையில் இருந்த
கொம்பை வீசி எறிந்தான். அது சரயு நதி கரைக்கு அருகில் சென்று விழுந்தது. அவனுடைய பேராசையை எண்ணி சிரித்துக் கொண்டார் ஶ்ரீராமர். பொருளாசை தான் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது! சக்தியற்ற மனிதனையும் பொருளானது எத்தகைய சக்தி வாய்ந்தவனாக மாற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டார்.
உமது கொம்பு விழுந்த இடம் வரை உள்ள பசுக்களை எல்லாம் உங்களுக்கே வழங்குகிறேன் பெற்று செல்லுங்கள் என்றார். அந்த திரிசடன் என்ற அந்தணன் ராமரை பலவாறாக போற்றி புகழ்ந்து பாராட்டினான். யாத்திரை இனிதே முடிய வாழ்த்தினான். அவரிடம் விடை பெற்றுக்கொண்டு ராமபிரான் வழங்கிய பசு கூட்டங்களுடன் தன்
வீட்டை அடைந்தான். பின் மனைவி மக்களுடன் வறுமையின்றி சுகமாக வாழ்ந்தான். இதன் அடிப்படையில் தான் நம் முன்னோர்கள் வெளியூர் பயணமோ, ஷேத்திராடனமோ, கல்யாண மண்டபமோ, அல்லது நல்ல காரியங்களுக்கோ செல்லும் முன் தங்களால் முடிந்த பொருள்களை, பழ வகைகளை யாத்ரா தானம் செய்து விட்டு யாத்திரை
மேற்கொள்வார்கள்.
யாத்ரா செல்லும்முன் சொல்ல வேண்டிய #ஸ்லோகம் இது.

ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹா ப்ராக்ஞ்ய மம கார்யம் ஸாதயா
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம் பீதானாம்
பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Mar 8
#தத்தாத்ரேயர் #அவதூதர்
மன்னன் யயாதியின் மகன் யது தன் தந்தை கேட்டபடி அவரின் வயோதிகத்தைப் பெற்றுக் கொண்டு தன் இளமையை அவருக்குத் தர ஒத்துக் கொள்ளாததால் மூத்த மகனாக இருந்தும் ஆட்சி பொறுப்பு அவனுக்கு கிட்டவில்லை. வருத்ததுடன் காட்டில் அலைந்து வந்த அவன், மகிழ்ச்சியில் திளைத்திருந்த Image
தத்தாத்ரேயரை காண்கிறான். ஞான ஒளியுடன் திகழ்ந்த அவர் காலில் விழுந்து அவர் யார் என்று கேட்கிறான். உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன் - அவதூதன் என்கிறார் அவர். அவரிடம், எனக்கும் அஞ்ஞானத்தில் இருந்து விடுபட வழி சொல்லிக்
கொடுங்கள் என்று கேட்கிறான். நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த 24 குருக்களாக ஏற்றுக் கொண்டவன
Read 23 tweets
Mar 8
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய் அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் Image
இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவர். ஒரு சமயம் அங்கு தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம், மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல்
பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார். சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல்
Read 10 tweets
Mar 7
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!”
என உரக்க அழைத்தது. கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார்.
கருடன் மேல் ஆரோகணித்தார். Image
சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில் எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான். விரைவில் அவனைக் காக்க வேண்டும்” என்றார். கருடனும் முழு வேகத்தில் சென்றார். ஆனாலும்
திருமாலுக்குத் திருப்தி இல்லை. ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.
கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார். தான் Image
Read 9 tweets
Mar 5
இன்றிலிருந்து ஓர் இழை தொடங்குகிறேன். ஶ்ரீ சிவன் சுவாமிகளின் #ஏணிப்படிகளில்_மாந்தர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து தொடர்ச்சியாகப் போடப் போகிறேன்(அவர் அருளாலே🙏🏻)
சிவன் சார் என்றே அழைக்கப்படும் இவர் யார்?
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். செல்லப் பெயர் சாச்சு. ஆச்சார-
அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின. கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். புகைப்படக் கலையில்
திறன் கொண்டார்; கும்பகோணத்தில் ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார். அவருக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார். காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை
Read 28 tweets
Mar 5
Experiences with Maha Periyava:
Once He was camping in the mines area in Vassangere in Karnataka which belonged to Sandur Maharaja. On that day He was sitting on a tarpaulin along with the other devotees. Annathurai Iyengar of Veda Raksha Nidhi Trust was also there with a few
students from his Veda Patashala. It was around 10.30 in the night. The Sandur Maharaja, Maharani and their son were also there. His son was a Reader in the Department of Mathematics at Yale University in the US. He had a PhD degree in Maths. His parents were standing there
respectfully before Him but he appeared to be quite casual. Periyava conversed with the Maharaja and Maharani in Kannada for a while. After a while He turned towards their son and asked,
"Where do you live? What are you doing?"
"I am a Reader in Maths Department at the Yale
Read 10 tweets
Mar 4
“பக்தி உடையார், காரியத்தில் பதறார், மிகுந்த பொறுமையுடன்,
வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயன் அடைவார்,
சக்தி தொழிலே அனைத்தும் எனில் சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்
வித்தைக்கிறைவா கணநாதா ! மேன்மைத் தொழிலில் பணி எனையே”

அருமையான ஒரு பாட்டு, இந்த சக்தி தொழில் எல்லாமே, இதில்
நாம் சார்ந்து இருக்கிறோம். பின் சஞ்சலம் எதற்கு? வித்தைக்கிறைவா கணநாதா! மேன்மை தொழிலில் பணி எனையே- ஏதாவது ஒரு மாற்றம் வரும்போது தான் நம் பக்திக்கு பரிட்சை. மாற்றத்தால் என்ன ஆகுமோ என்ற கவலையின்றி உறுதியாக நிற்க அந்த இறை நம்பிக்கை நமக்கு சக்தி கொடுக்க வேண்டும். உலக ஸ்ருஷ்டியின் அழகக
பார்த்தாலே இத்தனையும் படைத்த பகவான் நம்மை காக்க மாட்டாரா என்ற ஒரு நம்பிக்கை வந்துவிடும். சிருஷ்டியில் அண்டசராசரங்களும் ஓர் ஒழுங்கோடு இயங்கி வருகிறது. பக்தி உடையார் காரியத்தில் பதறார் - பதற்றம் போய்விடும், மிகுந்த பொறுமையுடன் வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(