#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே! நீ தான் வந்து இந்த முதலையின் பிடியிலிருந்து அடியேனை விடுவிக்க வேண்டும்!”
என உரக்க அழைத்தது. கஜேந்திரனின் கூக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் வைகுண்டத்திலிருந்து திருமால் அதிவேகமாகப் புறப்பட்டார்.
கருடன் மேல் ஆரோகணித்தார்.
சக்கரம், அம்பு, கத்தி, தாமரை, சங்கு, வில், கேடயம், கதை என எட்டு கரங்களில் எட்டு ஆயுதங்கள் ஏந்தியபடி குளக்கரையை நோக்கி விரைந்தார்.“கருடா! வேகமாகச் செல்! என் பக்தன் அங்கே தவித்துக் கொண்டிருக்கிறான். விரைவில் அவனைக் காக்க வேண்டும்” என்றார். கருடனும் முழு வேகத்தில் சென்றார். ஆனாலும்
திருமாலுக்குத் திருப்தி இல்லை. ஒரு நிலையில், கருடனின் தோள்களில் இருந்து இறங்கிய திருமால், கருடனைத் தன் தோளில் வைத்துக் கொண்டு குளக்கரையை நோக்கிப் பறக்கத் தொடங்கினார்.
கருடனைத் தோளில் ஏந்தியபடி குளக்கரையை அடைந்த திருமால், சக்கரத்தால் முதலையைக் கொன்றார், யானையை மீட்டார். தான்
பறித்த தாமரையைத் திருமாலின் திருவடித் தாமரைகளில் கஜேந்திரன் சமர்ப்பித்தான். கஜேந்திரனுக்கு முக்தியளித்து அவனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார் திருமால். வைகுண்டம் சென்ற கஜேந்திரன் திருமாலிடம் “எம்பெருமானே! எனக்கொரு சந்தேகம். என்னைக் காக்க வருகையில் நீங்கள் ஏன் கருடனை உங்கள்
தோளில் சுமந்து வந்தீர்? கருடன் உம்மைச் சுமந்து வருவது தானே வழக்கம்?” என்று கேட்டான்.
“அவன் பயணித்த வேகம் எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதனால் தான் அவனைத் தோளில் சுமந்து கொண்டு நான் வேகமாகப் பறந்து வந்துவிட்டேன்!” என்றார் திருமால். “என்னைக் காக்க வேண்டியது நீங்கள் தானே? கருடன்
இல்லையே! அப்புறம் ஏன் அவரைச் சுமந்து கொண்டு பறந்து வர வேண்டும்? அவரை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வந்தால் போதாதா?” என்று கேட்டான் கஜேந்திரன். அதற்குத் திருமால், “நீ என்னை அழைக்கும் போது ‘ஆதிமூலமே! வேதம் போற்றும் முதல்வனே!’ என்று அழைத்தாய் அல்லவா? எனவே நானே வேதம் போற்றும் முதல்வன்
என்பதை உனக்கு நிரூபிப்பதற்காக வேதமே வடிவெடுத்தவரான கருடனைச் சாட்சியாக உடன் அழைத்து வந்தேன்!” என்றார் திருமால். வேதத்தின் பகுதிகளே கருடனின் திருமேனியில் அங்கங்களாக இருக்கும் விதத்தையும் திருமால் விளக்கினார். கருடன் சொன்னபடி, வேத மந்திரங்களையே தனது அங்கங்களாகக் கொண்டு விளங்குவதால்,
திருமால் ‘வேதாங்க:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 132-வது திருநாமம். உலகியல் வாழ்க்கையாகிய குளத்தில், நாம் செய்த முன்வினைகளாகிய முதலைகள் நம்மைப் பிடித்துக் கொண்டு வாட்டுகையில், “வேதாங்காய நம:” என்ற இத்திருநாமத்தைச் சொன்னால், உலகில் துன்பங்களைத் தரக்கூடிய
அனைத்து முதலைகளிடமிருந்து திருமால் நம்மை விடுவித்தருள்வார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருந்தபடியே தர்ம சாஸ்திரங்களையும், ராஜ தந்திரங்களையும் தருமபுத்திரருக்கு உபதேசித்தார். தன்னைச் சுற்றி நின்றிருந்த கூட்டத்தில், பகவான் கிருஷ்ணனையும்
அவர் கண்டார். ஸ்ரீமந் நாராயணனே பகவான் ஸ்ரீகிருஷ்ணனாக பூமியில்
அவதரித்திருந்ததை பீஷ்மர் உணர்ந்திருந்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் விஸ்வரூப தோற்றமும், அதில் அடங்கிய பல்வேறு
ரூபங்களும், அவற்றுக்குரிய நாமங்களும், பீஷ்மருடைய மனக்கண் முன் அப்போது தோன்றின. இதனால் பக்திப் பரவசம் அடைந்த பீஷ்மர், ஸ்ரீமந் நாராயணனின் பெருமையை அற்புதமான கவிதைகளால் பாட ஆரம்பித்தார். அதுவே #ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமம் எனும்
மகிமை மிக்க மந்திரத் தொகுப்பு! ஸ்ரீமகாவிஷ்ணுவின் தோற்றத்தையும், பல்வேறு அம்சங்களையும் ரூப, நாம, குண மாதுர்யங்களையும், அருட்திறனையும் வர்ணித்து விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பீஷ்மர் புகழ்ந்து பாடினார். சுற்றி நின்றிருந்த அனைவரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தனர். ஆனால்
#தத்தாத்ரேயர்#அவதூதர்
மன்னன் யயாதியின் மகன் யது தன் தந்தை கேட்டபடி அவரின் வயோதிகத்தைப் பெற்றுக் கொண்டு தன் இளமையை அவருக்குத் தர ஒத்துக் கொள்ளாததால் மூத்த மகனாக இருந்தும் ஆட்சி பொறுப்பு அவனுக்கு கிட்டவில்லை. வருத்ததுடன் காட்டில் அலைந்து வந்த அவன், மகிழ்ச்சியில் திளைத்திருந்த
தத்தாத்ரேயரை காண்கிறான். ஞான ஒளியுடன் திகழ்ந்த அவர் காலில் விழுந்து அவர் யார் என்று கேட்கிறான். உலக பற்றை அறவே விட்டொழித்தவன், ஆத்ம ஞானப் ப்ரம்மானந்தத்தை பிடித்துக் கொண்டு அதில் திளைப்பவன் - அவதூதன் என்கிறார் அவர். அவரிடம், எனக்கும் அஞ்ஞானத்தில் இருந்து விடுபட வழி சொல்லிக்
கொடுங்கள் என்று கேட்கிறான். நானும் உன் மாதிரி சாதகன் தான். வாழ்க்கையே உலகில் பெரிய பள்ளிக்கூடம். அதில் எண்ணற்ற சாதகர்களுக்கு குருமார்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இருபத்திநாலு சந்தர்ப்பங்களில் எனக்கு உபதேசம் செய்தவர்களை என்னை உய்விக்க வந்த 24 குருக்களாக ஏற்றுக் கொண்டவன
சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது அது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் போய் அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான்
இந்த இடம் தான் என்று இல்லை, எங்கும் போகக் கூடியவர். ஒரு சமயம் அங்கு தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை. அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம், மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல்
பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மகானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார். சென்றவுடன் மகானின் தரிசனம் கிடைக்க, தனது தங்கையின் உடல்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீ ராமபிரான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற கோட்பாட்டை சிரமேற்கொண்டு கானகம் செல்ல தயாராகி விட்டார். தான் சேர்த்த பொருளை எல்லாம் யாத்ரா தானமாக கொடுக்க முடிவு செய்தார். ஸ்ரீ ராமபிரான் அரண்மனையில் பணிபுரியும் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய பொருட்களையும்
தான் அணிந்திருந்த உடை உட்பட சேர்த்த பொருளை எல்லாம் வாரி வழங்கினார். அயோத்தி வாசிகள் பலரும் தானம் பெற்றனர். தானத்தை முடிக்கும் தருவாயில் வறுமையில் வாடும் ஒரு வரிய ஏழை வந்தான். அவன் பெயர் திரிசடன். வயது முதிர்ந்தவன். அவனுக்கு ஒரு மனைவியும் சில பிள்ளைகளும் இருந்தனர். அன்றாடம்
வயல்வெளியில் வரப்பில் சிந்தி இருக்கும் நெல் மணிகளை பொருக்கி அதிலே ஜீவனம் செய்துவந்தான். கொடிய வறுமை.
இவன் இவ்வாறு வறுமையில் வாடிக் கொண்டிருக்க ராமபிரான் கானகம் செல்லும் முன் தனது உடைமைகளை எல்லாம் யாத்ரா தானம் செய்வதை கேள்விபட்ட அவனது மனைவி ஓடோடி கணவனிடம் சென்று, எவ்வளவு நாள்தான்
இன்றிலிருந்து ஓர் இழை தொடங்குகிறேன். ஶ்ரீ சிவன் சுவாமிகளின் #ஏணிப்படிகளில்_மாந்தர்கள் புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து தொடர்ச்சியாகப் போடப் போகிறேன்(அவர் அருளாலே🙏🏻)
சிவன் சார் என்றே அழைக்கப்படும் இவர் யார்?
பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகள். செல்லப் பெயர் சாச்சு. ஆச்சார-
அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின. கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக் கொண்டார். புகைப்படக் கலையில்
திறன் கொண்டார்; கும்பகோணத்தில் ‘சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ’ வைத்தார். அவருக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார். காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை
Experiences with Maha Periyava:
Once He was camping in the mines area in Vassangere in Karnataka which belonged to Sandur Maharaja. On that day He was sitting on a tarpaulin along with the other devotees. Annathurai Iyengar of Veda Raksha Nidhi Trust was also there with a few
students from his Veda Patashala. It was around 10.30 in the night. The Sandur Maharaja, Maharani and their son were also there. His son was a Reader in the Department of Mathematics at Yale University in the US. He had a PhD degree in Maths. His parents were standing there
respectfully before Him but he appeared to be quite casual. Periyava conversed with the Maharaja and Maharani in Kannada for a while. After a while He turned towards their son and asked,
"Where do you live? What are you doing?"
"I am a Reader in Maths Department at the Yale