#ரங்கநாதர்#ஶ்ரீரங்கம் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்ஸவத்தின் மூன்றாம் நாள் இங்கு நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள ரங்கநாத பெருமான் ஶ்ரீரங்கம் விட்டு ஜீயர்புரம் என்ற ஊருக்கு கிளம்பி செல்கிறார்.
அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும் தொழிலாளி ஒருவர் ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் முகம்
திருத்தும் தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. இதன் பின்னால் நெஞ்சை உருக்கும் ஒரு கதை உள்ளது. ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும்
நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை
வந்தது. அந்த சோதனை வழியே அவளை ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான். மென்மையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல
பெருகி வரத்தொடங்கியது. பெருகிய வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா
மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான். உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார்
பக்தரை காக்கும் பரந்தாமன் பொறுப்பாரா? காவிரியின் வெள்ளம் கண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்த பாட்டியை ஆறுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம் செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே
வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு
அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும் ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அவரின் திருவுளம் எண்ணி அழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோற்ஸவ
விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி காட்டுகிறது!
ரங்கா ரங்கா🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
தாய், தந்தை, மகள் மூவருமே ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பக்தர்கள். குருவை வணங்குவதில் பணக்காரராக இருந்தாலும் வறுமையில் வாழ்ந்து வந்தனர். பெண் நல்ல அழகானவள் மட்டுமல்ல நல்ல குணமும் கொண்டவள். நன்றாக அவள் படித்தாலும் மேற்கொண்டு அவள் தந்தையால் படிக்க வைக்க முடியவில்லை.
பெண் பருவ வயது வந்ததும் தீவிரமாய் வரன் பார்க்க தொடங்கினர். நல்ல வரன் குருவின் அருளால் இனிதாய் அமைந்தது. பிள்ளை வீட்டாரும் வரதட்சினை எதுவும் வேண்டாம் என்றும் உங்களுக்கு எங்கு விருப்பமோ அங்கு திருமணத்தை நடத்துங்கள் என கூறி விட்டனர்.
எல்லாம் குருராயர் அருள்தான் என நினைத்திருந்த
சமயத்தில் அவர்களின் அடுத்த வார்த்தை பெரிய பாறையையே தலையில் தூக்கி வைத்ததை போல உணர்ந்தனர். திருமணத்திற்கு வருபவர்களை நன்றாக உபசரிக்க வேண்டும். அவர்கள் வயிராற உணவு அருந்த வேண்டும் என தெரிவித்தனர். இவர்களும் சரி என்ற உடன் தேதி குறிக்கப் பட்டது. தந்தைக்கோ தன்னுடைய வறுமையிலும் பெண்ணை
#மகாபெரியவா
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுதவர்-கோதண்டராம சர்மா
சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்பவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாகப் பெரியவா தரிசனத்துக்கு வந்தார். என்ன தோன்றிற்றோ அவருக்கு, பெரியவாளிடம் ஒரு விசித்தரமான வேண்டுகோளை விண்ணப்பித்துக் கொண்டார்.
"நான் கடைசி மூச்சு விட்டதும், பெரியவாள் 'கங்கா ஜலமும், துளசிதளமும்' பிரசாதமாக கொடுத்தனுப்பி அந்தச் சரீரத்தையும் ஆத்மாவையும் சுத்தப்படுத்தி, நல்ல கதி கிடைக்க அனுக்ரஹம் செய்யணும்”
இந்தப் பிரார்த்தனையைப் பெரியவாளைத் தவிர வேறு யாரும் கேட்கவில்லை. சாத்தனூர் அய்யரும் மற்றவர்களிடம்
சொன்னதில்லை. மஹாராஷ்டிர மாநிலம் சதாராவில் ஸ்ரீ மடம் முகாம் செய்திருந்தபோது, தொலை பேசியில் செய்தி வந்தது. சாத்தனூர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சற்றுமுன் சிவலோகப் பிராப்தி அடைந்தார். உரிய சந்தர்ப்பத்தில் பெரியவாளிடம் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. பெரியவா ஒரு நிமிஷம் மௌனமாக
நாங்கள் இஸ்லாமிய வம்சா வழியைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளியில் தெரியாமல் மறைத்து ராஜதந்திரமாக இந்தியாவை ஆண்டு வந்தோம்.
நாங்கள் இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு எமதர்மன். சுதந்திரப் போரில் 21 லட்சம் இந்துக்கள் நாடெங்கிலும் குறிப்பாக அதிக
எண்ணிக்கையில் சுதந்திரத்திற்கு முன் நவகாளி வங்கத்திலும், சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்தானிலும், சுதந்திரப்போர் நடைபெற்ற போதும் கொல்லப்பட்டனர். அதற்கு நாங்களே முழுக்க முழுக்க காரணம். இந்துக்களை கொல்ல எங்களது மறைமுக ஆதரவு எப்போதும் உண்டு.
மத ரீதியாக பாகிஸ்தான் பங்ளாதேஷ் என இரண்டாக
பிளந்த பிறகு நாங்கள் பித்தலாட்டம் செய்து மூன்றரை கோடி முஸ்லிம்கள் இந்தியாலேயே தங்க வைத்து இந்துக்களுக்கு தீராத தலைவலியை கொடுக்க காரணமான கட்சி எங்கள் காங்கிரஸ் கட்சி. அது போக பிளந்த இரண்டு நாடும் தங்களை முஸ்லிம் நாடுகள் என பிரகடனப்படுத்தியும் கூட இந்துகளுக்குத் துரோகம் இழைக்கவே
பூமாதாவே கோமாதாவாக உருக்கொண்டதும் உண்டு. த்வாபரயுகம் முடிகிற நிலைக்கு வந்து, கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய ஸமயம். லோகத்திலே துஷ்ட அரசர்களின் ரூபத்தில் அஸுர சக்திகள் தலையோங்கிய அப்போது பூமாதேவியால் அந்தப் பாப பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பிலே
பிரம்மாவும் மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்துக் கொண்டதன் மேல்தான் பகவான் க்ருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த ஸமயத்திலே தன்னுடைய முறையீடு பகவானுடைய மனஸைத் தொட்டு இறக்கி அவரை ரக்ஷணத்துக்கு வரும்படிப் பண்ண வேண்டுமானால் தான் அவருடைய பத்னியான பூமாதேவி ரூபத்திலில்லாமல் அதைவிட
ப்ரியத்துக்கும் பரிவுக்கும் உரிய தாயான கோமாதா ரூபத்தில் இருந்தால்தான் முடியும் என்பதால் பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக்கொண்டுதான் போனாள் என்று புராணக்கதை இருக்கிறது. அதற்கேற்கத்தான் பகவான் கோபாலனாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் கோக்களோடு அத்யந்தமாக உறவாடினார். – ஜகத்குரு ஸ்ரீ
ஒரு ஏழை பிராமணன் கங்கைக்கரையில் மனைவியோடு வசித்து வருபவன் தினமும் #கீதை பாராயணம் செய்து விட்டு உஞ்சவிருத்தி செல்வான். கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து, அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணி விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். வழக்கம் போல் அன்று கீதையைப் பாராயணம் செய்யும்
போது ஒன்பதாம் அத்தியாயத்தில் ''யோக க்ஷேமம் வஹாம்யஹம்”என்ற இடம் வந்தது. திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் உள்ளனர். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரக்ஷிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் கஷ்டத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது
என்பது முடிகிற காரியமா? திரும்பி திரும்பி படித்தும் அவனுக்கு இது விளங்கவில்லை. இதை எப்படியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து சிகப்பு வர்ணத்தில் ஒரு X குறியை அந்த அத்தியாயத்தின் ஸ்லோகத்தின் மேல் போட்டான். சொம்பை, ஜால்ராவை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் உஞ்சவிருத்திக்கு
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம்’ 'ராம்' என்றே உட்சென்றும், வெளியேறுதலும் வேண்டும். நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு
அடியும் ராம் ராம் என்றே நடக்க வேண்டும். எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் ‘ராம நாம ஜெபமே.’ ராம நாம ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' ராம நாம ஜெபத்தில் நாம் இருந்தால் நமது கர்ம
வினைப்படி ஏதேனும் துக்கமோ அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும். எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமத்தைச் சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! ராம நாமத்தை எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்