பெண்ணுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பெண்ணிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்பதைத் தமிழிலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது.
மாப்பிள்ளையின் ஆற்றலும் திறமையும் வெளிப்படத்தக்க போட்டிகளை நிகழ்த்தி அவற்றில் வெற்றிபெறும் மாப்பிள்ளையையே...
... தன் கணவனாகத் தெரிந்தெடுக்கும் வழக்கத்தைத் தமிழினத்துப் பெண்கள் பின்பற்றி வந்தனர்.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் எனும் ஐந்து நிலங்களில் வாழ்ந்த பெண்கள் தம் நில இயல்புக்கு ஏற்ற மாப்பிள்ளைத் தெரிவும் போட்டிகளையும் நிகழ்த்தினர்.
வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்ட மலை நிலமாகிய குறிஞ்சித் திணையில் புலியை வாய்பிளந்து கொன்று,
அதன் பல்லைத் தாலியில் கோத்துக் கொணர்ந்த மாப்பிள்ளையைத் தன் கணவனாக அந்நிலத்துப் பெண் ஏற்றுக்கொண்டாள் என பின்வருமாறு சிறப்பாகக் குறிப்பிட்டனர்.
காடும் காடு சார்ந்த, முல்லை நிலத்தில் ஆடு மாடுகளை வளர்க்கும் மக்கள் மிகுதியாக வாழ்ந்தனர்.
அந்நிலத்து ஆயமகள் விரும்பி வளர்த்த முரட்டுக்காளையை எவன் அடக்குகிறானோ அவனுக்கு மாலை சூட்டி மகிழ்ந்தாள்.
காளையின் கூரிய கொம்பைக் கண்டு அஞ்சுபவனை எந்த ஆயர்குடிப் பெண்ணும் விரும்பமாட்டாள்.
போதிய மழை பெறாத வறண்ட காட்டுப்பகுதி பாலை நிலம் எனப்பட்டது. இங்கு வாழ்ந்தோர் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள். இவர்களை ஆறலைக் கள்வர் எனக் குறிப்பிட்டனர்.
வழிப்போக்கர்களை மறைந்திருந்து அம்பெய்து கொல்வது இவர்களுடைய தொழில். இலக்குத் தவறாமல் அம்பு எய்பவனை ஆற்றல் மிக்கவன் எனக் கருதினர்.
இலக்கு தவறாமல் அம்பு எய்பவனைச் சிறந்த திறமையானவனாகத் தெரிந்தெடுத்து பாலைநிலத்துப் பெண் மணந்து கொண்டாள்.
வயலும் வயல்சார்ந்த நன்செய் நிலப் பகுதியாகிய மருதநிலத்தில், #மாப்பிள்ளைக்கல் எனப் பெயரிடப்பட்ட பலர் முன்னிலையில் தூக்கும் ஆற்றல் பெற்றவனைத் திறமைசாலியாகக் கருதினர்.
இவ்வழக்கம் சென்ற நூற்றாண்டு வரை தமிழகத்தின் நாட்டுப் புறங்களில் இருந்தது, மற்ற நிலத்துப் பெண் மாப்பிள்ளைக் கல்லைத் தூக்கும் ஆற்றல் மிக்கவனை மணந்தாள் எனக் கருதப்படுகிறது.
கடலும் கடல் சார்ந்த இடம் நெய்தல் நிலம் எனப்பட்டது. இங்கு வாழ்ந்தோரில் மீனவரும், சங்கு (அ) முத்துக் குளிக்க முக்குவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
கடலில் மீன்பிடிப்பது என்பது எளிய தொழிலன்று. அதிலும் #நெய்மீன் என்னும் மீனை வலையில் பிடித்துக் கரை சேர்ப்பது மிகவும் கடுமையானது.
மீனவப் பெண் நெய்மீனைப் பிடித்து வரும் மாப்பிள்ளையை விரும்பி மணந்து கொள்வது வழக்கம்.
குமரி மாவட்டத்தில் அவனை "நெய்மீன் மாப்பிள்ளை" என்றே சிறப்பாகக் குறிப்பிடுவர்.
இல்லற வாழ்க்கை என்பது தான்விரும்பிய மாப்பிள்ளையை மணந்து கொள்ளும் உரிமையைப் பெண் பெற்றிருந்த நிலையை விளக்கிக் காட்டுகிறது.
பெற்றோர் வற்புறுத்தலால் நடைபெறும் திருமணம் தமிழ்த் திருமணமாக ஏற்றுக்கொள்ளப் படவில்லை.
இனி, ஐந்து வகை நிலங்களிலும் வாழ்ந்த அரச குடும்பங்களிலும், வணிகக் குடும்பங்களிலும் நாகரிக வளர்ச்சியின் காரணமாகப் பற்பல புதிய வகைகளில் மாப்பிள்ளைத் தெரிவு நடைபெற்றிருக்கிறது.
கடல்வழிப் பயணங்களிலும், நிலவழிப் பயணங்களிலும் அரிய பொருள்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வரும் இளவரசனை மாப்பிள்ளையாகத் தெரிந்தெடுத்தனர்.
அதற்கடுத்த காலகட்டத்தில் 64 கலைகளிலும் தேர்ச்சி பெற்ற மாப்பிள்ளையை இளவரசி தெரிந்தெடுத்த நிகழ்ச்சியைக் காண முடிகிறது.
கௌதம புத்தர் 64 கலைகளிைலும் தன் தேர்ச்சியை நிறுவிக்காட்டிய பிறகே மணமகனாக முடிந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
வணிகக் குடும்பங்களில் வணிகத்தில் பெருஞ்செல்வம் திரட்டியவன் அல்லது விலை மதிப்பு மிக்க அரிய பொருள் கொண்டு வந்தவனை வணிகப் பெண் விரும்பி மணந்து கொண்டிருக்கிறாள்.
குஜராத் மாநிலத்து வணிகரிடையில் ஒரு காலத்தில் ஒரு போட்டி நிலவியது.
பெண்களின் வளையல் யானைத் தந்தத்தால் செய்யப்பட்டது. தொடி என்னும் தோள்வளை செய்ய மிகவும் பருமனான யானைத் தந்தம் தேவைப்பட்டது.
அத்தகைய பெரிய யானைத் தந்தம் ஆப்பிரிக்க யானைகளிடமிருந்து மட்டும் பெறக்கூடும் என்பதால்...
... தென்னாப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை வரையில் ஆப்பிரிக்கக் கடற்புறத் துறைமுகங்களுக்கு இந்தியக் கப்பல்கள் சென்றன.
ஆப்பிரிக்காவிலிருந்து பெரிய யானைத் தந்தங்களை கப்பல் நிறைய ஏற்றிவரும் வணிக இளைஞனையே குஜராத் வணிகப் பெண் விரும்பி மணந்து கொண்டகாலம் ஒன்றிருந்தது.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பண்டைக் காலங்களில் (சங்க இலக்கியங்களில், பின் அதையொட்டிய காலங்களில்) கொலை மனித இனத்தின் வீரத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.
" பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்று பழந்தமிழ் இலக்கணம் ஆடவனுக்கு இலக்கணம் காட்டுகிறது.
இந்தப் பெருமையும் நெஞ்சுரனும் மனிதக் கொலைகள் மூலமே வெற்றியாகவும், விழுப்புண்ணாகவும் மக்களிடம் வெளிப்பட்டன.
இங்கு மனிதக் கொலைகளே முதன்மை பெற்றன. நாடு பிடிக்கும் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறும் போர்களில் மனித உடல்களே மன்னனுக்குக் கவசம்.
எதிரிகளில் எத்தனை பேர் இறந்துபட்டனர், தன் படைவீரர்களில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதை வைத்தே நடைபெற்ற போரை மதிப்பிட்டனர்.
அறநெறிக் காலங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்தக் காலங்களிலெல்லாம் மனித உயிர்கள் வீரத்தின் அடையாளங்கள். இதைச் சமூகம் அன்று அங்கீகரித்திருந்தது என்பது வெளிப்படை.
யானைகள் கட்டிய இடம் #யானைச்சாலை எனப்பெற்றது. அவை படையின் பொருட்டு பாதுகாக்கப் பெற்றன.
அவற்றைப் பாதுகாத்தற் பொருட்டு மக்களிடமிருந்து அரசு பெற்ற வரி #ஆணைச்சாலைதேவை எனப் பெற்றது.
ஓராண்டுவரை கார்காலப் பயிர் செய்த உரிமையையோ, மீண்டும் நிலத்தைக் கைக்கொண்டு உழும் உரிமையையோ பெற்றவர்கள் அவ்வுரிமையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்காகக் கிராம வரிப் புத்தகத்தாரின் ஒப்பம் பெற்றனர்.
கோவிலில் தங்கம் திருடியமைக்காக்க பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
2-ம் இராசராசசோழனின் 6-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1152) #தஞ்சாவூர் மாவட்டம் #பந்தநல்லூர் ஊரில் உள்ள #பசுபதீசுவரர் கோவில் கல்வெட்டில், கோவில் நிலங்களின் ஆட்சிமுறை பழங்காலத்திலிருந்து...
தொடர்ந்து வந்த முறையைக் குறிப்பிடுகிறது. அக்கோவில் திருமேனிக்கு அணிகலன்கள் செய்யப் பெறுவதற்காகக் கருவூலத்தில் தங்கத்தைப் பாதுகாத்து வந்தனர்.
அக்கோவிலில் பணிபுரிந்த பிராமணர்கள் அத்தங்கத்தைத் திருடிக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு...
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.
பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.
அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!
நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன.
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.
தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.
சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..