பண்டைக் காலங்களில் (சங்க இலக்கியங்களில், பின் அதையொட்டிய காலங்களில்) கொலை மனித இனத்தின் வீரத்தின் வெளிப்பாடாகக் காணப்படுகின்றது.
" பெருமையும் உரனும் ஆடூஉ மேன" என்று பழந்தமிழ் இலக்கணம் ஆடவனுக்கு இலக்கணம் காட்டுகிறது.
இந்தப் பெருமையும் நெஞ்சுரனும் மனிதக் கொலைகள் மூலமே வெற்றியாகவும், விழுப்புண்ணாகவும் மக்களிடம் வெளிப்பட்டன.
இங்கு மனிதக் கொலைகளே முதன்மை பெற்றன. நாடு பிடிக்கும் அரசியல் நோக்கங்களுக்காக நடைபெறும் போர்களில் மனித உடல்களே மன்னனுக்குக் கவசம்.
எதிரிகளில் எத்தனை பேர் இறந்துபட்டனர், தன் படைவீரர்களில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதை வைத்தே நடைபெற்ற போரை மதிப்பிட்டனர்.
அறநெறிக் காலங்கள் என்று குறிப்பிடப்பட்ட இந்தக் காலங்களிலெல்லாம் மனித உயிர்கள் வீரத்தின் அடையாளங்கள். இதைச் சமூகம் அன்று அங்கீகரித்திருந்தது என்பது வெளிப்படை.
மன்னன் (அ) தலைவன் போருக்கு முன் வஞ்சினமொழிகள் (இவை இன்றைய அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்புநோக்கத்தக்கவை)
"இன்னது செய்து முடிப்பேன்" - என்று கூறிய மன்னனின் வஞ்சின மொழிகள்படி செய்யமுடியாத நிலையில் (அ) தனக்குத் தோல்வி நேருங்காலங்களில்...
நாட்டைவிட்டுத் தப்பிவிடுதல் உண்டு.
தன் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவனாக, அரசவையை வெறுத்து உணவு மற்றும் அனைத்து இன்ப நுகர்ச்சிகளையும் நீக்கி, வடக்கிருந்து மடிதல் உண்டு.
இச்செயல் அவன் பேராண்மைக்குச் சான்று.
வேள்பாரி இறந்துபட அவன் மகளிருக்கு மணமுடிக்க எடுத்த முயற்சி பலிக்காமல், அந்தணரிடத்துச் சேர்த்துவிட்டு, கபிலர் (நண்பர் இல்லாததால்) "வடக்கிருந்த செய்தி" புறநானூற்றில் காணக்கிடைக்கிறது.
இறந்து பிறப்பினும் வாளால் பிளத்தல்...!
தமிழ் மறக்குலப் பெண்டிர்கூட வீரவுணர்வுடன் காணப்பட்டனர்.
இதற்குச் சான்றாக, அவர்களுக்குக் குழந்தைகள் கருவிலேயே இறந்து பிறந்தால், தம் வீடுகளிலுள்ள போருக்கான வாளால் பிளந்து பின்னரே புதைத்ததாகக் காட்டும் இலக்கியச் சான்றுகள் காணப்படுகின்றன.
உடன்கட்டை ஏறுதல்:
வட இந்தியாவிலிருந்து வந்த பண்டைய மன்னர்தம் ஆட்சியில் பழக்கத்திலிருந்த ஒரு செயல் #உடன்கட்டை ஏறுதல்.
கணவன் இறந்தால், மனைவி விரும்பியோ அல்லது சமூகத்தின் பழிச்சொல்லுக்கு அஞ்சியோ, கணவனுடைய உடல் வைக்கப்படும் சிதையில் புகுவாள்.
சில வேளைகளில் குழந்தைத் திருமணம் மூலம் மனைவியராக உறுதிசெய்து வைத்திருந்த பெண்டிரும் இவ்வகையில் பலியிடப்படல் உண்டு.
மன்னன் அல்லது போர் மறவர்கள் போருக்கு முன் கூறும் வஞ்சின மொழிகளின் மூலம் உயிர்களைக் கொல்லும் செயலும்,
போரில் வெற்றி பெற்றதற்காக #வெறியாட்டு என்ற பெயரில் நடத்தும் செயல்களும் எனப் பல்வேறு செயல்களும் மனித உயிர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்தின.
ஆபத்து உதவிகள்!
மன்னர்கள் மீது போர் மறவர்கள் மிகுதியான விசுவாசம் காட்டுவர்.
இதற்கான மன்னனின் நம்பிக்கைக்கு உரிய வீரர்கள் தத்தம் தலைகளைத் தாமே அரிந்து மன்னனுக்குக் காணிக்கை செலுத்துவர்.
மன்னன் இறந்தபோது அவர்களும் உடன்மாய்ந்தனர். இவையாவும் பண்டைப்போரில் அறமாகக் கொள்ளப்பட்டன.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
யானைகள் கட்டிய இடம் #யானைச்சாலை எனப்பெற்றது. அவை படையின் பொருட்டு பாதுகாக்கப் பெற்றன.
அவற்றைப் பாதுகாத்தற் பொருட்டு மக்களிடமிருந்து அரசு பெற்ற வரி #ஆணைச்சாலைதேவை எனப் பெற்றது.
ஓராண்டுவரை கார்காலப் பயிர் செய்த உரிமையையோ, மீண்டும் நிலத்தைக் கைக்கொண்டு உழும் உரிமையையோ பெற்றவர்கள் அவ்வுரிமையைத் தொடர்ந்து ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வதற்காகக் கிராம வரிப் புத்தகத்தாரின் ஒப்பம் பெற்றனர்.
கோவிலில் தங்கம் திருடியமைக்காக்க பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
2-ம் இராசராசசோழனின் 6-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1152) #தஞ்சாவூர் மாவட்டம் #பந்தநல்லூர் ஊரில் உள்ள #பசுபதீசுவரர் கோவில் கல்வெட்டில், கோவில் நிலங்களின் ஆட்சிமுறை பழங்காலத்திலிருந்து...
தொடர்ந்து வந்த முறையைக் குறிப்பிடுகிறது. அக்கோவில் திருமேனிக்கு அணிகலன்கள் செய்யப் பெறுவதற்காகக் கருவூலத்தில் தங்கத்தைப் பாதுகாத்து வந்தனர்.
அக்கோவிலில் பணிபுரிந்த பிராமணர்கள் அத்தங்கத்தைத் திருடிக் கொண்டனர். அவர்களுக்குத் தண்டனை அளிக்கும் பொருட்டு...
சோழர் காலத்தில் பொய்க்கணக்கு எழுதியதற்காக அளிக்கப்பட்ட தண்டனை பற்றிய கல்வெட்டுச் செய்தி!
3-ம் இராசராசசோழனின் 19-ம் ஆட்சியாண்டில் (பொ.பி 1235) பொறிக்கப்பெற்ற #தஞ்சாவூர் மாவட்ட கள்ளப்பெரம்பலூரில் உள்ள கல்வெட்டுச் செய்தியில் ஒருவன் வேலை நீக்கம் செய்யப் பெற்றதைக் குறிப்பிடுகின்றது.
பொய்க் கணக்கை எழுதும் முறை புதியதன்று. அம்முறை தொடர்ந்து நடைமுறையில் இருந்துள்ளது.
பாண்டியகுலாசனி வளநாட்டில் தஞ்சாவூர் கூற்றத்தில் இராசசுந்தரி சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் அப்பணி நீக்க முடிவை எடுத்துள்ளனர்.
அதன்படி அவ்வூர் நில உரிமையாளராயிருந்த "சேஞலூருடையான் மதளை உத்தமபிரியன்" என்பவன் பொய்க் கணக்கை எழுதி வந்தான்.
அவன் அனைவருக்கும் பகைவனாக இருந்து தவறான முறையில் கணக்கெழுதி வந்தான்.
கல்வெட்டுகள் கூறும் நீர்பாயும் உரிமை, நீர்பாயும் நேரம் பற்றிய தகவல்கள்!
நன்செய் நிலங்களில் பயிர் செய்தபோது ஊரிலிருந்த குளம், ஏரி ஆகியவற்றை ஊர்ப் பொதுமையாக்கி இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன நேரம் இன்னின்ன மடை வழியாக நீரைப் பாய்ச்சிக் கொள்ளலாம் எனப் பிரிக்கப் பெற்று இருந்தன.
அதன்படியே நீரைப் பாய்ச்சி வேளாண்மையும் செய்து வந்தனர்.
தற்பொழுது வருவாய்த் துறையினரால் நிலத்திற்குப் பாயும் நீருக்கு வரி விதிக்கும்போது, ஒரு பாசத்தின்கீழ்உள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்திலிருந்து நீரைப்பாய்ச்சி வேளாண்மை செய்தால்,
அதை முறையற்ற பாசனம் எனக் கருதித் தண்டத்தீர்வை விதிக்கப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு பாசனத்திலிருந்தும் இன்னின்ன நிலங்களுக்கு மட்டுமே நீர் பாயவேண்டுமென வரன்முறைப் படுத்தப் பெற்றுள்ளது.
சிலநேரங்களில் ஒரு பாசனத்தின் உரிமையுள்ள நிலத்திற்குப் பிறிதொரு பாசனத்தினின்றும் நீரைப்பாய்ச்சி..
முதியோர் பாதுகாப்பு என்ற பெயரில் அரசாங்கங்கள் இன்று பல்வேறு திட்டங்களை, அறிவிப்பதைக் காண்கிறோம். அவர்களுக்கான உதவிகளைப் பணமாகப் பெறவும், மருத்துவ சலுகைகள், பயணக் கட்டணத்தில் சலுகை, ஆலயத்தினுள் நடக்க முடியாதவர்களுக்கு மோட்டார் வாகனங்கள் என 1/n
இப்படி பல அம்சங்கள் நடைபெறுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த விஷயம் பழங்காலத்தில் இருந்தே ஓர் அறமாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வயதில் முதியவர்களாக இருப்பவர்களால் வெகு தொலைவு நடக்க இயலாது. அவர்களுக்கு திருக்கோயில்கள் உதவி செய்திருக்கின்றன. 2/n
இவர்களுக்கு உதவி செய்வதற்காகவே பண்டை நாளில் திருக்கோயில்களில் அறச்சாலைகள், மடங்கள், சத்திரங்கள் போன்றவை இருந்தன.
#கும்பகோணம் நாகேசுவர சுவாமி கோயிலில் #அறச்சாலை இருந்ததாக சோழர் காலக் கல்வெட்டு குறிப்பிடுகிறது... 3/n