சாஸ்திரம் மொத்தம் 32 வகையான அறங்களை சொல்லியிருக்கிறது. இவை அனைத்தையும் அம்பாளே காஞ்சிபுரத்தில் தான் செய்து காட்டி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளாள். அன்னைக்கு ‘தர்மசம்வர்த்தினி’ என்று பெயர் உண்டு. தமிழில் ‘அறம் வளர்த்த நாயகி.’ நம் பொருளாதார நிலைக்கு ஏற்ப தர்மங்களை செய்து
பலன் பெறுவோம். பொருள் அதிகம் தேவைப்படும் அறம் முதல் அதிகம் செலவில்லாத குடிக்க நீர் கொடுக்கும் தண்ணீர் தானம் வரை பல அறங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. #தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்: 1. அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும். பித்ருக்களின் ஆசிர்வாதம்
கிடைக்கும்.(பழைய சாதத்தை எப்பொழுதும் தானமாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் வருமானத்தை விட அதிகப்படியான செலவுகளையே உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.) 2. மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களுக்கு இரட்சையாக இருக்கும்.
3. காலணி தானம் செய்தால் பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். 4. மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும். 5. பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும். 6. குடை தானம் செய்தால் தவறான
வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும். 7. பாய் தானம் செய்வதால் பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்தசாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும். 8. பசு தானம் செய்தால்
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும். 9. பழங்கள் தானம் செய்தால் பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும். 10. காய்கறிகள் தானம் செய்தால் பித்ரு சாபம் விலகும். குழந்தைகள் ஆரோக்யம் வளரும். 11. அரிசி தானம் செய்தால் பிறருக்கு ஒன்றுமே தராமல்
தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும். 12. எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும். 13. பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாக சாந்தமாக அமையும்.
14. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும். 15. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும். 16. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும். 17. நெய் தானம் தர நோயைப் போக்கும். 18. பால் தானம் தர துக்கநிலை மாறும்.
19.தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும். 20. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்.
21. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்.
22.தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும். 23. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வர தரிசனமும் கிட்டும். 24. மஞ்சள் தானம் - மங்களம் உண்டாகும். 25. திலதானம் (எள்ளு) - பாப விமோசனம் 26. வெல்லம் தானம்- குலம் வளறும், துக்கம்
தீரும். 27. தண்ணீர் தானம் - மனசாந்தி ஏற்படும் 28. கம்பளி (போர்வை) தானம் - கெட்ட கனவுகள் நீங்கும். கெட்ட சகுனங்கள் தோன்றாது. 28. சந்தனக்கட்டை தானம் - புகழ் 29. ஆலயத்துக்கு யானை தானம் - இந்திரனுக்கு இணையான பதவி. 30. புத்தக தானம் - ஞானம் 31. பூணூல் தானம் - பருத்தியிலான பூணூலை தானம்
செய்வதால் புனிதம் அடைகிறோம், மனச்சாந்தி ஏற்படும். 32. விசிறி தானம் - பனையோலை, மூங்கிலால் ஆன விசிறியை தானம் செய்வதால் ரோகம் அகலும். ஆரோக்கியம் பெறுகும்.
பயன் கருதாது தானம் அளிப்பதே மிகச் சிறந்தது. அவர்களுக்கு மரணம் உன்னதமாக அமைவதோடு மறு பிறவி இருப்பதில்லை. இல்லாதவர்களுக்கு தான்
தானம் செய்ய வேண்டும். நமக்கு வேண்டியவர்களுக்கு தானம் செய்தால் அதில் பலனில்லை. வெயில் காலம் வருகிறது. நம்மால் இயன்ற தானத்தை செய்து துயர் துடைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் அரசன் வீரவர்ம சோழன் போட்டி ஒன்றை அறிவித்தான். அப்போட்டி கோட்டைக் கதவைக் கைகளால் தள்ளி திறக்க வேண்டும் என்பதே. வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில்
கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் தாமோதரன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். அவன் சிறந்த கல்விமான், ஸ்ரீமந் நாராயண பக்தன். தம்பி 'போட்டியில் தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள் ஊர் பொதுமக்கள். தாமோதரன் சொன்னான்,
'ஸ்ரீமந் நாராயண மந்திரம் சொன்னால் நம் பலம் இரண்டு மடங்கு ஆகும், பயம் தெளியும், பக்தன் பிரகாலதனுக்காக அவதாரம் எடுத்த எம்பெருமான் எனக்கும் அருள் புரிவார். மேலும் வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்றான். ஓம் நமோ நாராயணா என்று கூறி விட்டு கோட்டைக்
#MahaPeriyava
A gentleman came from Pattukottai for Sri Maha Periyava’s darshan. “I bought a new car. From the time I got it, there have been many accidents. I sought the advice of astrologers and performed a number of expiatory rites. Nothing has helped.”
Periyava was silent for
a while. Then he asked the gentleman a question,
“Is there a village called Kanyakurichi near your town?”
The gentleman was taken aback.
“There is a Mahamaya temple there, very powerful deity. Send fifty rupees for abhishekham to be performed to the Ambal there. Have the words,
‘In the Protection of Kanyakurichi Amman,’ painted on the front side of your car.”
The gentleman was dumbfounded. Recovering himself he said, “Kanyakurichi Amman is our Kula Deyvam’ (family deity) . My father and mother would visit that temple every year. They would have
#மகாபெரியவா#பகவத்கீதை
நம்மில் முக்கால்வாசி பேர் #கீதை என்றால் அது ஏதோ தெரியாத புரியாத விஷயம் என்று நினைக்கிறோம். அப்படி என்னதான் கீதை சொல்கிறது என்று கொஞ்சம் பொறுமையோடு படிக்கிறவனுக்கு, தலையை சுற்றுகிறது. ஏன் இந்த கிருஷ்ணன் முன்னுக்கு பின் முரணாக சொல்கிறார் என்று தோன்றுகிறது.
ஒரு விஷயம் தான் மொத்தத்தில். ஆத்மா. அது எங்கும் எதிலும் எவற்றிலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதுவே சர்வ ஆதாரம். வெளியே இருந்தால் பரமாத்மா. உள்ளே இருந்தால் ஜீவாத்மா. கிருஷ்ணனை சரியாக புரிந்து கொண்டால் குழம்பவே மாட்டோம். தெள்ளத் தெளிவாக தெரிவார். மஹா பெரியவா தெய்வத்தின்
குரலில் சொல்கிறார், ''நான் எல்லாப் பொருட்களிலும் இருக்கிறேன். எல்லாப் பொருட்களும் என்னிடத்தில் இருக்கின்றன என்று கீதையில் ஒரிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார்.
யோமாம் பச்யதி ஸர்வத்ர, ஸர்வம் ச மயி பச்யதி
எல்லாப் பொருட்களும் இவரிடம் இருக்கின்றன என்றால் அவைதான் இவருக்கு ஆதாரம்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் வடுவூரில் வாழ்ந்த ஸ்ரீநிதி சுவாமிகள் தினமும் ராமனின் புன்னகையைக் குறித்து ஒரு ஸ்லோகம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப் #புன்னகைராமாயணம் என்ற ராமாயணமே உருவாகிவிட்டது. ஒருநாள் ராமனை அவர் தரிசிக்கையில் அவர உள்ளத்தில்
ராமாயணத்திலிருந்து ஒரு காட்சி தோன்றியது. வனவாச காலத்தில் அத்ரி, சரபங்கர், அகஸ்தியர் உள்ளிட்ட பல முனிவர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று அவர்களை வணங்கினான் ராமபிரான். அந்த வகையில் சுதீட்சணர் என்ற ரிஷியின் ஆசிரமத்தை ஒருநாள் மாலை லட்சுமணனும் சீதையுடன் அடைந்தான் ராமன்.அவர்களுக்காக
விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சுதீட்சணர். ராமன் அவரிடம், “மகரிஷியே! நீண்ட தூரம் நடந்து வந்த நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டோம். அதனால் சீக்கிரமாக உணவைப் பரிமாறுங்கள்!” என்றான். “இப்போது இயலாது ராமா! சற்றுப் பொறுத்திரு!” என்றார் சுதீட்சணர். ஆதிசேஷனின் அம்சமான லட்சுமணன்
இவ்வுலகில் நம் நேரம் மிகக் குறைவு என்பதை நாம் உணர வேண்டும். பயனற்ற வாக்குவாதம், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காது இருத்தல், அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிப்பவை. யாராவது உங்களைக் காட்டிக் கொடுத்தார்களா? மிரட்டினார்களா? ஏமாற்றினார்களா? அவமானப்
படுத்தினார்களா? உங்களுக்குப் பிடிக்காத கருத்தைக் கூறினார்களா? ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். அமைதியாய் இருங்கள். அவர்களை புறக்கணியுங்கள். ஆனால் அவர்களை உங்கள் மனத்தில் வைத்து இன்னும் அதிகமாக நேசியுங்கள். ஏனென்றால், நம் பயணம் மிகவும் குறுகியது. நம் வாழ்க்கைப்
பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது. நண்பர்களையும் குடும்பத்தினரையும் பாராட்டுவோம். அவர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருப்போம். அவர்களை மதிப்பவராக, மரியாதையாக, அன்பாக, மன்னிப்பவராக இருப்போம். ஒவ்வொரு நாளும் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம்
#இதிகாசம்#இதிஹாசம் இதி ஆஸம் என்றாலே 'இப்படி நடந்தது' என்ற பொருள். நடுவிலே ஒரு 'ஹ' போட்டிருப்பதால், 'நிச்சயமாக' 'உறுதியாக' என்று அழுத்தம் கொடுக்கிற பொருள் வரும். எனவே சிறிது கூட பொய்யோ மிகைப்படுத்துதலோ இல்லாமல், உள்ளதை உள்ளபடியே, அவை நடைபெற்ற காலத்திலேயே எழுதப்பட்டவைகளே இதிஹாசம்
(இதிகாசம்) ஆகும். ஶ்ரீராமர் வாழ்ந்தக் காலத்தில் வாழ்ந்திருந்த வால்மீகி மகரிஷியால் இயற்றப்பட்டதே இராமாயணம் (வால்மீகி ராமாயணம்). பஞ்சபாண்டவர்களும், கௌரவர்களும், ஶ்ரீகிருஷ்ணரும் வாழ்ந்திருந்தக் காலத்தில் வாழ்ந்தவரே #வியாசர். வேத வியாச தான் கண்ணால் கண்டவற்றையே மஹாபாரதம் என எழுதினார்.
(தான் சொல்ல, சொல்ல விநாயகரையே எழுத வைத்தார்! வியாசர்). மஹாபாரதப் போரை நேரடியாக அப்படியே பார்க்கும்படியாக, திருதராஷ்டிரனின் தேரோட்டியான சஞ்சயனுக்கு ஞானத்திருஷ்டியை அளித்தார் வேதவியாசர். சஞ்சயன் போரில் நடப்பதை அப்படியே கண்டு பார்வையற்ற திருதராஷ்டிரனுக்குக் கூறி வந்தார். கிருஷ்ணர்,