சினிமா சொல்வது தான் தமிழர்களுக்கு வேத வாக்கு. அது மெய்யா பொய்யா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள், ஆழ்ந்து ஆராய மாட்டார்கள், இதற்கான மூலம் என்ன என்று தேடி சரி பார்க்க மாட்டார்கள். நமக்கு சிவாஜி கணேசன் நடித்த #கர்ணன் தான் நிஜ கர்ணன். ச்சே எப்படி வஞ்சிக்கப் பட்டான், எவ்வளவு நல்லவன்
அவன் என்பது தான் அதிலிருந்து நம் கணிப்பு! கர்ணன் நல்லவன் என்ற எண்ணத்தையும் கர்ணனை சதியால் வீழ்த்திய காரணத்தினால் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வஞ்சகர்கள் என்ற எண்ணத்தையும் பதித்துவிட்டன. மகாபாரதத்தில் அவன் யார் என்று பார்ப்போம்.
ஒரு புறம் தனது கவச குண்டலத்தையும் தானமளித்தப் பெரும்
வள்ளல், மறுபுறம் குலப் பெண்ணை சபையில் அவமானப்படுத்திய கவயன். ஒரு பக்கம் நண்பனுக்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கிறது. மொத்தத்தில், கர்ணன்
முரண்பாடுகளில் சிக்கிய ஒருவன். பாண்டவர்களை போரில் சந்திக்கத் திறமையும் தைரியமும் இல்லாத துரியோதனனுடன் இணைந்து, சகுனியின் உதவியுடன் நிகழ்ந்த சூதாட்டத்தில் கர்ணனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அவன் செய்த தீய செயல்களில் முக்கியமானதாக கருதப்படுவது திரௌபதியை குரு வம்ச சபையில்
அவமானப்படுத்திய செயலாகும்.
அச்சூழ்நிலையில் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவனான விகர்ணன், திரௌபதிக்கு ஆதரவு தெரிவித்தும் சூதாட்டத்தினை எதிர்த்தும் பேசினான். அவனது பேச்சினால் கடும் கோபமுற்ற கர்ணன், விகர்ணனைக் கண்டித்து சபையில் பெரும் சப்தத்துடன் குரல் எழுப்பினான். திரௌபதியை சபைக்கு
அழைத்து வந்ததில் எந்த தவறும் இல்லை என்றும், திரௌபதி கற்பற்றவள் என்றும், உண்மையில் அவளை நிர்வாணமாக அழைத்து வந்திருக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பிய கர்ணன், அவளது உடையை முற்றிலுமாக அவிழ்த்து நிர்வாணமாக்கும்படி துச்சாதனனுக்கு கட்டளையிட்டான். ஒரு குலப் பெண்மணியை நிர்வாணமாக்கும்படி
கட்டளையிட்ட கர்ணனின் செயல் மன்னிக்கக்கூடிய ஒன்றா? கர்ணனுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவோரில் யாரேனும் அத்தகைய அவமானத்தை தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்வார்களா?
திரௌபதிக்கு நிகழ்ந்த அவமானத்தை சரிப்படுத்தும் நோக்கத்துடன் திருதராஷ்டிரர் இராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால் கர்ணனின்
ஆலோசனையின் பேரில் மீண்டும் சூதாட்டம் அரங்கேற்றப்பட்டு பாண்டவர்கள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, தவம் நிறைந்த வாழ்வினால் அவர்களின் பலம் குன்றியிருக்கும் என்றும், இதுவே அவர்களை முற்றிலுமாக அழிப்பதற்கு உகந்த தருணம் என்றும் கர்ணன் அறிவுரை கூற,
துரியோதனன் தனது நண்பர்கள் மற்றும் படைகளுடன் காட்டிற்குச் செல்ல முற்பட்டான். அர்ஜுனனைக் காட்டிலும் சிறந்த வீரனாக வர வேண்டும் என்று விரும்பிய கர்ணன், தன்னை ஒரு பிராமணன் என்று கூறி பரசுராமரிடம் போர்க்கலையைக் கற்றான். குருவிடமே பொய் சொல்வது நற்குணம் படைத்தோருக்கு அழகல்ல.
பதினாறு வயது
இளைஞனான அபிமன்யுவை கர்ணனின் தூண்டுதலின் பேரிலேயே ஆறு மகாரதிகள் (மாபெரும் போர் வீரர்கள்) இணைந்து, ஆயுதம் இல்லாத சூழ்நிலையில் போர் விதிகளை மீறிக் கொன்றனர். அதற்கு தண்டனையாகவே கர்ணன் அவ்வாறே கொல்லப்பட்டான். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று
அழிந்து போனவன் என்பதே பெரும்பாலானோர் கருத்து.
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் சிவாஜி நடித்த கர்ணன் படத்தில் வந்த பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது. ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே.
திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடுகின்றனர். அதே கர்ணன் இன்று புத்துயிர் பெற்று மக்களிடையே புதிய தொழில் நுட்பத்துடன் வலம் வருகிறான். அதன் அபாயங்களை வெளிப்படுத்தவே இப்பதிவு.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 8
#ஶ்ரீராமநவமி #ஸ்பெஷல் வால்மீகி ராமாயண ஸ்லோகம், சுந்தர காண்டத்தில் 39 ஸர்கம் கடைசி ஸ்லோகம். ஹனுமார் சீதாதேவியிடம், கடைசியாக விடைபெற்று கிளம்பும் போது சொலலும் ஸ்லோகம்,
நாஸ்மின் சிரம் வத்ஸ்யதி தேவி தேஷே, ரக்ஷோகணை: அத்யுஷிதேதிரௌத்ரே |
ந தே சிராத் ஆகமனம் ப்ரியஸ்ய க்ஷமஸ்வ மத் ஸங்கமகால Image
மாத்ரம் ||
சீதாதேவியை கூப்பிட்டு, தேவியே இந்த தேசத்தில், ரொம்ப காலம் நீ வசிக்க வேண்டி இருக்காது. இந்த ராக்‌ஷசர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டு, நீ வெகு காலம் இங்கே தங்க வேண்டி வராது, உன் பிரியமான ராமர் வெகு விரைவில் வந்து விடுவார், நான் அவரை போய் பார்க்கும் அந்த ஒரு கொஞ்ச நேரம்
பொறுத்துக்கோ என்கிறார். நான் இங்கிருந்து திரும்பி போய் ராமரைப் பார்த்து, சீதை எங்கேயிருக்கா என்கிற செய்தியை சொல்லும் அந்த கொஞ்சம் நேரம் தான் நீ பொறுக்கணும், அவர் ஓடி வந்துடுவார், உன்னை மீட்டுச் செல்ல என்று ரொம்ப ஒரு அழகான ஸ்லோகம். நாம வசிக்கிற வீட்டில் ஏதோ தொல்லைகள், அக்கம்பக்கம்
Read 23 tweets
Apr 8
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும்
நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களுக்குச் சேர்ந்து போய் சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாத வெள்ளத்தில் மிதக்க வைப்பான்.
ஒரு நாள் ImageImage
இருவருக்கும் சண்டை வந்தது. ஒருவரை ஒருவர் திட்டித் தீர்த்துக் கொண்டனர். எனவே, எந்தவொரு விழாவுக்கும் இருவரும் சேர்ந்து இணைந்து செல்வதில்லை. ஒருவன் முன்னாலும், மற்றவன் பின்னாலும் செல்வர். ஒரு விழாவில் பெட்ரோமாக்ஸ் காரன் முந்திக் கொண்டான். விழாக் குழுவினர் நாதஸ்வரக்காரன் எங்கே என்று
கேட்டனர். அவர்களிடம் அவன், அதை ஏன் கேட்கிறீங்க? அவன் ஒரு விழாவுக்கு ஊதி விட்டு வெத்துக் குழலோடு வருவான். வேணுமுன்னா குழலை வாங்கிப் பாருங்க தெரியும் என்று தூண்டிவிட்டான். விழாக் கமிட்டியார் சோணங்கிகள். விவரம் இல்லாதவர்கள். நேரம் ஆகிக் கொண்டேபோனது. அவர்களுக்குக் கோபம் அதிகரித்துக்
Read 10 tweets
Apr 8
#MahaPeriyava
I had the habit of chanting the Kandar Anubhoothi everyday. For some reason or the other, I never prospered financially. A friend of mine who also had the habit of chanting Kandar Anubhoothi, prayed to Sri Maha Periyava to guide him to chant some other shlokas or Image
perform some other religious activities so that he could get rid of his poverty.
"You are doing the parayana of Kandar Anubhoothi? What more do you need? That is sufficient to remove poverty." Periyava said in reply.
The devotee argued, "I chant Kandar Anubhoothi because of my
devotion to Lord Muruga. What I need now is money! Please tell me some way to get it."
In the last verse of the Anubhoothi which begins with the words, 'Varuvaai Arulvaai’ Guruvaai Varuvaai Arulvaai' are also included, are they not?” Sri Maha Periyava remarked. Sri Maha Periyava
Read 9 tweets
Apr 8
#SriRamaNavami This year Sri Rama Navami falls on the 10th April.
Sri Rama took His Avatar in Navami in Thretha Yuga. Rameti Rama the name Rama means the giver of all happiness. King Dasaratha had no children for a very long time and when he was blessed with children, he asked Image
sage Vasishta what is the name he should give his first born. He suggested 'Raman' which means remover of all suffering and giver of happiness. The name Rama is from the Upanishads. Rama Nama is the Taraka Mantram. Rama Nama is the one which can overcome all our sorrows. First
Rama gave happiness to His parents by being born to them. He took away the misery of the Rishis by killing the demons who were troubling them. He was in the forests for fourteen years and gave darshan to all the Rishis, thereby blessing them with bliss. He killed Ravana and freed
Read 4 tweets
Apr 7
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர். இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர். பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடி Image
சூரியனை வணங்கினார்கள். அப்பொழுது சூரிய பகவான் அசரீரியாக, 'வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன். இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் எனக்
கூறி மறைந்தான். குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார். இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர். பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர்.சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே
Read 13 tweets
Apr 7
சங்கு மிகவும் புனிதம் வாய்ந்தது. அதனால் தான் திருமாலின் கையில் எப்பொழுதும் இருக்கும் பாக்கியம் பெற்றுள்ளது.

ஸ்ரீ சங்கு காயத்ரி
ஒம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நேர் சங்க ப்ரசேர்தயாத்

மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு. கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி
நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும். சங்கொலி துர் ஆவிகளை விரட்டும். சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால் தான் குழந்தைகளுக்குக் சங்கில் பால் ஊற்றிப் புகட்டுவர். இப்பொழுது அது வழக்கொழிந்து விட்டது. சங்கு காயத்ரி மூலம்
பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும், தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கு பூஜை செய்வதால் பல நன்மைகள் உள்ளன. வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும். மற்றவர்கள் வைக்கும்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(