#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக் கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன். அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலட்சுமியின் அனுமதியின்
பெயரில் தான் உறையூர் நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்! புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார். ஆஹா இன்று நாம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி எங்கே நான் அணிவித்த மோதிரம் என்று கேட்பாளே, புது மோதிரம் வந்த ஜோரில்
பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா எனக் கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது என தவிக்கிறார். காவிரிக்குப் போய் பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்கள் எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறார். தானும் தேடுகிறார். தப்புப் பண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள
விழைகிறான் அரங்கன். ஆகவே ஓசைப்படாமல், (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார். தாயாருக்கா தெரியாமல் போகும் அரங்கனின் தந்திரம்! டமால் என வாசற்கதவை சாத்தி விடுகிறாள். அரங்கன் ஏமாற்றமாய் நகர்கிறான். மறுபடி
கதவைத் திறந்து வைக்கிறாள் அரங்க நாயகி. ‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும் மறுபடி ‘டமால்’. சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம். வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள் என பல்லக்கில்
தன்னை திரைத்துணியால் மறைத்துக் கொள்கிறான் அரங்கன். ‘ம்ம் மெல்ல ஓசையின்றி உள்ளே செல்லுங்கள்’ என அடியார்களுக்கு ஆணை இடுகிறான். அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற்கதவருகில் போகும்போது உள்ளிருந்து வெண்ணைக் கட்டிகள் வீசப் படுகின்றன. புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்கள்
மூலம் அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் அன்னை. சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர். தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர். பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர். தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயார்
இடம் கெஞ்சுகிறார்கள். ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல தளர்ந்து பின்னோக்கி நடக்கிறார். சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார். உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்.
படார்
உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது. இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான்!
கடைசியில் மட்டையடி ஆரம்பம் ஆகிறது! மிகவும் மெல்லிய வாழை மட்டை அதை வைத்து ஒரு சாத்து! மட்டையடி உற்சவம் என்பது இதுதான். பல்லக்கின்மீது வாழைமட்டைகள் தொடர்ந்து வீசப்படும். விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது.
சமாதானம் பண்ண நம்மாழ்வாரின் பல்லக்கு, வீட்டு வாசலுக்கு வருகிறது. அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார். பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்! அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்? வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே
இவருக்குத் தாளவில்லையே! ஒரு பங்குனி உத்திரநாளில் நடந்தேறிய இதைதான், #பங்குனி_உத்திரம் என்று சிறப்பாக ஸ்ரீரங்கம் கோவிலில் கொண்டாடுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்! அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப்
பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒரு சேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர #சேர்த்திசேவை.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பார். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். அஷ்டமி திதி இவரை பூகிக்க உகந்த நாள், அதிலும் தேய்பிறை அஷ்டமி திதி.
அன்று நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார். தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி வர மிகவும் நல்ல பலன்களை பெறலாம்.
ராகுகாலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ருத்ராபிஷேகம் செய்தல், வடைமாலை சாற்றி வழிபடுவது நல்லது. தினமும் ஸ்ரீ காலபைர் காயத்திரி மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நடக்கும். அவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார
#MahaPeriyava
It was during the height of summer. Some devotees arrived sweating in the sweltering heat, for Periyava’s darshan. Their eagerness to receive Periyaval’s darshan did not let them mind the fact that they were very thirsty. Periyaval told an attendant to give them
the juice of the #vilva fruits that had come from Kashi. The devotees were delighted beyond measure. Periyaval’s compassion cooled their hearts. At once Periyaval called His attendant who was fanning Him and instructed that he do the same for the visitors. The visitors were
shocked. This is sacrilegious. The fan that is used for Periyava should not be used for us, they said in one voice. We are ordinary folk.
Periyaval said, “It is the Lord who is the soul in every body. As far as the fan is concerned, one body is the same as another.”
The devotees
#சித்திரையில்_தான்_தமிழ்ப்புத்தாண்டு
இக்கட்டுரை முற்ற முழுக்க ஒரு வரலாற்று ஆய்வே. சித்திரை மாதம் முதல் தேதியன்று பிறக்கின்ற புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டு என்று குறிப்பிடுவது சரியா என்ற ஒரு விவாதம், கடந்த நூற்றாண்டில் தமிழறிஞர்களிடையே எழுந்தது. உண்மையில், தையோ சித்திரையோ,
சங்க
காலத்தில் புத்தாண்டு என்று ஒரு பண்டிகை கொண்டாடப் பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை! ஆனால் சிறுபொழுது, பெரும்பொழுது எனக் காலத்தைக் கணித்த முன்னோர்கள், குறிப்பிட்ட மாதத்திலிருந்து தான் 12 மாதக் கணக்கைக் ஆரம்பித்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. அம்மாதம் எது? சங்க இலக்கியங்களில் தை
நீராடல் எனப்பட்ட பாவை நோன்பு சிறப்பாகக் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அதனைச் சூரிய வழிபாட்டுடன் தொடர்பு படுத்துவதற்குரிய குறிப்போ, புத்தாண்டு தொடங்குகிறது என்று அனுமானிப்பதற்கு அடிப்படையான சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு (உத்தராயனத் தொடக்கம்) தை மாதம் முதல் தேதியன்றுதான் நிகழ்கிறது
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு நாள் மாடுகளை வெட்டும் இடத்தில் மாரி என்பவன் பசுவை வெட்டுவதற்கு வந்தவுடன் அந்தப் பசு அவனை பார்த்து சிரித்தது. அதற்கு மாரி, அந்தப் பசுவைப் பார்த்து, நான் உன்னை வெட்ட வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கிறாய் என்று கேட்டான். அதற்கு அந்தப்
பசு, நான் ஒரு போதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் உன்னால் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது. எந்தத் தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்துத் தான் சிரித்தேன்
என்று சொன்னது. பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே! பாலில் இருந்து வெண்ணை எடுத்தீர்கள். வெண்ணையிலிருந்து நெய்யை எடுத்தீர்கள். என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்
#மகாபெரியவா தமிழ் மொழியில் பெரிவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களை எல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ விடம்,“தமிழ் என்றால் என்ன” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது
சொல்லுங்கள்” என்கிறார்.
கி,வா.ஜ. அடக்கமாக, ”பெரியவா சொன்னால் தெரிந்து கொள்கிறேன்” என்றார்.
“எந்த மொழியிலும் இல்லாத சிறப்பான எழுத்து ‘ழ’ என்பது. இந்த எழுத்து வரக்கூடிய எந்தச் சொல்லும், அழகு, இனிமை.
மழலை, குழல், அழகு, குழந்தை, கழல், நிழல், பழம், யாழ் இப்படி ‘ழ’ வருகிற எல்லாமே
நமக்குப் பிடித்தவை. ஆகவே இனிமையான ‘ழ’வைத் தம்மிடத்தில் உடையது தமிழ் (தமி+ழ்) என்று சொல்லலாமா” என்றார்.
உடனே கி.வா.ஜ., “இதைவிடப் பொருத்தமாக சொல்ல முடியுமா? இனி எல்லா மேடைகளிலும் நான் இதைச் சொல்லுவேன்” என்றாராம்.
ஆயுள் பலம் பெறுவதற்கும் மரண பயம் இன்றி வாழ்வதற்கும் வழிபட வேண்டிய பரிகார சிவஸ்தலங்கள் பல உள்ளன. அக்கோவில்கலில் எல்லாம் நவக்கிரகங்கள் இருப்பதில்லை. புகழ் பெற்ற புராதன சிவன் கோயில்கள் அவை. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவக்கிரகங்கள் இருக்காது. 1. திருவான்மியூர்
மருந்தீஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் இல்லை. எமன் வந்து வழிபட்ட தலம். 2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டுள்ளார். 3. ஸ்ரீவாஞ்சியம் 4. திருவாவடுதுறை. 5. திருப்பைஞ்சீலி 6. திருக்கடையூர். எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு
வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது. மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கியதாக