நமக்கு இப்போ #கோடம்பாக்கம் என்றாலே #கோலிவுட் தான். சிலர் ஆர்காட் நவாபின் குதிரை லாயம் - கோடே-பாக் என்பது தான் மருவி கோடம்பாக்கம் ஆனது என்றும் சொல்வார்கள். ஆனால் கோடம்பாக்கம் #கார்கோடகன் சிவபெருமானை வழிபட்டதால் ஏற்பட்ட பெயர்! கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது
பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் #வேங்கீஸ்வரர் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் #சுனந்தமுனிவர் (மூஞ்சிகேசவ முனிவர்) முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில். (இக்கோவில் எனக்குத்
தெரிந்தே மிகச் சிறியதாகிவிட்டது.
அவ்வளவு ஆக்கிரமிப்பு + 100 அடி ரோட் விரிவாக்கத்தில் கோவில் இடம் கையகப்பட்டது. குளத்தையே காணோம். கீழேயுள்ள படங்கள் குளம் இருந்த இடம்) சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான். அதனால்
சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தன் தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க, அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். அவ்வாறு பல ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக
திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன் படி கார்கோடகன் கார்கோடக
முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ ஷேத்ரங்களை வழிபடுகிறார். கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. சுனந்த முனிவர் சரி முஞ்சிகேச
முனிவர் யார்? இந்த பெயரை சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். இருவரும் ஒருவரே. சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் #கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் #முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. அதே போல தமிழ்நாட்டில் சுமார் 10 15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு
சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரின் ஜீவசமாதி தனி கோவிலாக உள்ளது. சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து, வளர்ந்தது. இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும்
பெயர் பெற்றார். கேசம் என்றால் முடி. 20ஆம் நூற்றாண்டில் கூட #ரமணமகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்து ஈசனின் தரிசனத்தை பெற்று இருக்கிறார்கள். ஒரு சமயம் சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன
அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப் படுகிறது. கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்! கம்பீரமாக திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவர்
வீற்றிருக்கிறார். சென்னையில் இருந்து 70 கிமீ தூரத்தில் தான் திருவாலங்காடு உள்ளது. ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்தால் நிச்சயமாக ராகு,
கேது தோஷம் சரியாகும். இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது. #அறிவோம்_வரலாறு #அறிவோம்_தொன்மை_கோவில்கள் #அறிவோம்_நம்_ஆன்மீக_மண்_பெருமையை
சர்வம் ஶ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 23
#SankaraJatanthi #சங்கரஜெயந்தி 6.5.22 #ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆதிசங்கரர் தாம் சந்யாசம் மேற்கொள்ள சம்மதித்தால் தாயின் இறுதி காலத்தில் மூன்று முறை சங்கரா என்றழைத்தால் எங்கிருந்தாலும் நான் வந்துவிடுவேன் என வாக்களித்து செல்கிறார். தாயார் ஆர்யாம்பாளின் இறுதிக் காலம் நெருங்குகிறது. தாயும்
மூன்று முறை சங்கரா என்றழைக்கிறார், சிறிது நேரம் கடக்கிறது அம்மா என்ற குரல் கேட்கிறது. 'சங்கரா வந்துவிட்டாயா அருகில் வா' என்கிறார். கண்பார்வை மங்கிய நிலையில் அருகில் வந்த சங்கரனை தொட்டு தடவுகிறார் தாயார். அவருடைய மனம் பதைத்துப் போகிறது. துறவறம் மேற்கொண்ட மகனின் உடம்பில் அணிந்துள்ள Image
ஆபரணங்களின் ஸ்பரிசம் ஏற்படுகிறது. மகன் துறவறக் கடமையிலிருந்து தவறிவிட்டானோ என்று மனம் அஞ்சுகிறது, பின்னர் மீண்டும் அம்மா என்ற குரல் அம்மாவை அழைத்தபடி சங்கரன் வருகிறார், மகனே சங்கரா நீ இப்போதுதான் வருகிறாயா என்று நடந்ததை சங்கரனிடம் கூறுகிறார்.
சங்கரனோ சிரித்தபடி "அம்மா நான் Image
Read 6 tweets
Apr 23
#அக்னிநட்சத்திரம் மே 4 தொடங்கி 25 தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காலம் இது. நம் பஞ்சாங்கத்தில் இந்த தேதிகள் சரியாக கணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் எவ்வாறு தொடங்கியது?
முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி Image
சுவேதகி என்ற மன்னன் யாகம் செய்தான். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. மூலிகைகள் நிறைந்த அடர்காட்டை தின்றால் அவரது ஜீரண உபாதை தீரும், வயிற்று வலியும் குணமாகும் என்றார் பிரம்மா. எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த வனம், இந்திரனுக்கு
மிகவும் பிடித்தமானது. எனவே அதை அக்னி பகவான் உண்ண முற்பட்ட போது, இந்திரன் பெருமழையைப் பெய்வித்து அக்னியை அடக்கினான். பலமுறை முயன்றும் அதே நிலை நீடித்தது. அக்னி பகவான் கிருஷ்ணரைக் கண்டு வலம் வந்து துதித்தார். தனது நிலையைக் கூறி வருந்தினார். எப்படியாவது காண்டவ வனத்தை உண்ண தனக்கு
Read 12 tweets
Apr 23
#MahaPeriyava
A wrestler whose strength it was said was immeasurable, came to Kanchipuram. If a fistful of sesame seeds were given to him, he could crush it to oil quite casually. He had also won a number of competitions in boxing and martial arts. So he had a horde of followers
that admired him. His intention was to get a prize from Periyava. He was ready to exhibit his prowess in front of Periyava and was all set to wrestle with any one Periyava deputed as his opponent. A youngster who visited SriMatham now and then and served there let us call him
Manakkal Krishna Sastri was a hefty, well-built man. Periyava sent for Krishna Sastri.
“Krishna, stand near the entrance for an hour. You must not move, what do you say?”
“As commanded…”
Although no one including Krishna Sastri understood this strange command, he stood near the
Read 7 tweets
Apr 22
#SankaraJayanthi #சங்கரஜெயந்தி 6.4.2022
எப்பொழுதெல்லாம் தர்மத்துக்கு பங்கம் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நான் பூமியில் அவதரித்து, தர்மமாகிய விளக்கை தூண்டி விட்டு நன்றாக எரியச் செய்வேன் என்று கீதையில் வாக்கு கொடுத்து இருக்கிறார் ஶ்ரீ கிருஷ்ண பகவான். ஆனால் கலி முடிவதற்கு, கல்கி ImageImage
அவதாரம் எடுக்க, இன்னும் நிறைய காலம் உள்ளது. அதற்கு முன் ஒன்பது அவதாரங்கள் ஶ்ரீமன்நாராயணன் எடுத்தார். அந்த அவதாரங்களில் எல்லாம், யார் நல்லவர் யார் கெட்டவர்கள் என்பது ஓரளவு தெளிவாக தெரிந்தது. ராமாவதாரத்தில் ராவணன் வில்லன், ராமர் அவனை  வதம் செய்தார். கிருஷ்ணாவதாரத்தில்
துர்யோதனாதிகள், துஷ்டர்களாக இருந்த அரசர்கள் அனைவரையும் மஹாபாரத யுத்தத்தை வைத்து அவர்களை முடித்து, கிருஷ்ணர் பூபாரத்தையே குறைத்தார். இந்தக் கலியில் அப்படி ராக்ஷசன் கோர பற்களை, மீசையை வைத்துக் கொண்டு நடமாடுவது இல்லை. இந்த ராக்ஷசர்கள் மனிதனின் புத்திக்குள்ளேயே இருக்கிறார்கள். கலி
Read 7 tweets
Apr 22
#MahaPeriyava
Kanchi Maha Periyava is the very embodiment of all the traits of a liberated soul. The very sight of His Holiness has an ennobling power. He showers His grace and compassion in all, they be high or low. It does not wait for any special reason or pretext. It is Image
spontaneous like the season of spring which brings in its wake joy and solace to all. That His Grace is irresistible and winning is evidenced by my own experience which I relate below. A few years ago, I was restless and disturbed. I was developing distaste towards everything
around with the result that I was unable to study the philosophical works. What was more alarming, I started losing retentive memory. I could not recall all that I had learnt over the decades. Medical and other kinds of treatment proved ineffective. Everyone in the family grew
Read 9 tweets
Apr 22
நம் இந்து மதத்தில், கலாச்சாரத்தில், குருவிற்கான மகத்துவம் அலாதியானது. குரு பார்வை கோடி நன்மை தரும்!
ஒரு முறை ஜோதிடக் கலையின் குருவான பிரஹஸ்பதியிடம், தெய்வீக சாஸ்திரத்தைக் கற்பதற்காக சந்திரன் சென்றார். குரு, தனக்குத் தெரிந்ததை எல்லாம் சந்திரனுக்கு கற்றுக் கொடுத்தார். சந்திரன் அதனை ImageImage
கற்றுத் தேர்ந்தவுடன், எல்லாம் அறிந்து கொண்டு விட்டோம் என்ற மமதையில் மூழ்கித் திளைத்தார்.
சந்திரனின் மமதையைக் கொஞ்சம் மட்டம் தட்டி வைக்க விரும்பிய குரு பகவான், பூமியில் அப்போது ஜனித்த ஒரு சிசுவின் ஜாதகத்தை மிகச் சரியாகக் கணிக்குமாறு சந்திரனைப் பணித்தார். சந்திரனும் அந்தச் சிசுவின்
ஜாதகத்தைக் கணித்தார். அந்தக் குழந்தை ஒரு வயது பூர்த்தியாகும் சமயம் பாம்பு கடித்து மரணம் சம்பவிக்கும் என்றும் பலன் சொன்னார். பிரஹஸ்பதி சந்திரனை சில மாதங்கள் கழித்து வரவழைத்தார். அச்சமயம் சந்திரன் ஜாதகம் குறித்த குழந்தைக்கு ஓராண்டு முடிவதற்கு இன்னும் ஒரு சில வினாடிகளே இருந்தன.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(