#பஞ்சவன்_மாதேவி#பள்ளிப்படைகோவில்#தாய்க்கொருகோவில்
பட்டீஸ்வரம், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் புகழ் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும். இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை
நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி. அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்! தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் பஞ்சவன் மாதேவி. தன்னை மிகுந்த
பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற #ராஜேந்திர_சோழன். பட்டீஸ்வரத்தின் அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது. ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார்
தன் மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை".
கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள். தற்போது இந்த கோயிலை ஊர் மக்களே தற்போது
பார்த்துக் கொள்கிறார்கள். அற்புதமான வடிவில் அமைந்த சிலைகள் இக்கோயிலின் வெளிப் புறத்தில் காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே முன் பகுதியில் பஞ்சவன் மாதேவியின் சிலை உள்ளது. கோயிலின் கற்பக் கிருகத்தின் வாசலில் இரண்டு துவார பாலகர்கள் சிலைகள் உள்ளன. இவையும் பழுவேட்டறையர் கட்டுமான
வடிவத்தைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டவை. கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப் பட்டிருக்கின்றது. 1978ம் ஆண்டில் தொல்லியல் அறிஞர் டாக்டர்.நாகசாமி அவர்களின் மாணவர் குழு இக்கோவிலைக் கண்டிபிடித்தனர்.
முடிந்தபோது இக்கோவிலுக்கு சென்று ஒரு விளக்கு ஏற்றுவோம். நம்மை அடக்கி அரசாண்ட இஸ்லாமிய அரசன் கட்டிய தாஜ்மகாலை பார்க்க செல்லும் முன் நம் தேசத்தை நன்முறையில் ஆண்ட ராஜராஜ சோழனின் மனைவிக்கு எழுப்பப்பட்ட கோவிலை சென்று காண்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
Source:Dr க. சுபாஷினி கட்டுரை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீராமானுஜர்#1005பிறந்தநாள்#ஶ்ரீராமானுஜர்ஜெயந்தி 7.5.22
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை போதித்தவர் ஶ்ரீ ராமானுஜர். உபநிஷத்கள், பிரம்மசூத்திரங்கள் ஆகியவற்றின் தத்துவங்களை ஒருங்கிணைத்து, பக்தி பாரம்பரியத்திற்கு வலுவான அறிவுசார் அடிப்படையைக் கொடுத்தார். ஸ்ரீ ராமானுஜர் 1017 ஆம்
ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து தனது உடலை விட்டு வெளியேறி 1137 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் பரமபதித்தார். இளைய பெருமாள் என்றும் அழைக்கப்படும் ஶ்ரீராமானுஜரின் மூன்று முக்கிய தத்துவப் படைப்புகள் வேதார்த்த சங்கிரகம் (வேதங்களின் வர்ணனை), ஸ்ரீ பாஷ்யம் (பிரம்ம
சூத்திரங்கள் பற்றிய வர்ணனை) மற்றும் பகவத் கீதை பாஷ்யம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து, பக்தி அல்லது பக்தி மூலம் பிரம்மத்தை அடையும் சுதந்திரம் ஸ்ரீ ராமானுஜரால் போதிக்கப் பட்டது. இந்த ஆன்மீக வழியை நிறைய இந்துக்கள் பின்பற்றுகிறார்கள்.
#ஶ்ரீராமானுஜர்#1005பிறந்தநாள் ஒரு நாள் ராமானுஜர் திடீரென்று ‘முதலியாண்டான், அரங்கனின் திருமுகம் வாடி இருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?' என்று கேட்டார். மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற
அனைத்து வகை உணவுகளும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது. நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டிருந்த நாளில் தான் ராமானுஜர்
இவ்வாறு கேட்டார். தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது. 'தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்) தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம் போலத்தான் தளிகையானது. “இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடி
#மகாபெரியவா
ஒரு சமயம் பெரியவாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. சாத்துக்குடிப் பழச்சாறு கொடுக்கும்படி கூறியிருந்தார் வைத்தியர். ஒரு பக்தருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. தினந்தோறும், சுவையும் சாறும் மிக்க சாத்துக்குடிப்
பழங்களைத் தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொடுத்தார்.
அவற்றைப் பிழிந்து பெரியவாளுக்குக் கொடுத்து வந்தார்கள் தொண்டர்கள். ஒரு நாள் வழக்கமாக சாத்துக்குடிப் பழங்களை வைக்கும் இடத்தில் அவற்றைக் காணோம்! பல இடங்களில் தேடியும் ஒரு பழம் கூடக் கிடைக்கவில்லை. யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்பது புரிந்தது. பிறகு,வேறு வழி தெரியாமல் கண்ணில்
பட்ட இரு மாதுளம் பழங்களைப் பிழிந்து பெரியவாளுக்குக் கொடுத்தார்கள் உதவியாளர்கள். சாத்துக்குடி காணாமல் போன விஷயம் மெல்லக் கசிந்து பெரியவா செவிகளுக்குப் போய்விட்டது.
"அவன் (பெயரைச் சொல்லி) வீட்டில் குழந்தைகளுக்கு அம்மை போட்டிருக்கு. பழம் வாங்கிக் கொடுக்க வசதி போதாது. அதனாலே
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஶ்ரீ ராமானுஜருக்கு முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் என இரண்டு மருமகன்கள் இருந்தார்கள்.
அவர்களுள் நடாதூர் ஆழ்வான் என்பவருடைய பேரன் வரதகுரு. வரதகுரு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நதியில் தினமும் வேத பாராயணம் செய்து வந்தார். ஒரு நாள் அவர் வேத பாராயணம் செய்து
கொண்டு இருக்கையில், அர்ச்சகர் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகப் பால் எடுத்து வந்தார். அடுப்பில் இருந்து சுடச்சுடக் கொண்டு வந்ததால், பாலில் இருந்து ஆவி வந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட வரதகுரு, சுவாமி! என்று அர்ச்சகரை அழைத்து, அந்தப் பாலை இங்கே தாருங்கள் என்றார். பெருமாளுக்குச்
சமர்ப்பிக்க வேண்டிய பால் என்றார் அர்ச்சகர். அது தெரியும். இங்கே தாருங்கள் எனக் கேட்டு வாங்கினார் வரதகுரு. ஒரு தாய் எப்படிக் குழந்தைக்குப் பாலை ஆற வைத்துக் கொடுப்பாளோ, அது போல் பாலை ஆற்றி, பொறுக்கக் கூடிய சூட்டுக்கு வந்தபின் அர்ச்சகரிடம் கொடுத்து, இப்போது பெருமாளுக்கு இதைச்
நம் நாட்டில் தொன்று தொட்டு வரும் பழக்கங்கள், நாகரீகம் என்ற பெயராலும் மேற்கத்திய வழக்கத்தை பெருமையாக நினைத்து காபி அடிப்பதாலும் மறைந்து வருகின்றன. அதில் நஷ்டம் நம் உடல் நலத்துக்கு தான். அப்படி வழக்கொழிந்த பழக்கத்தில் ஒன்று தரையில் அமர்வது. நாற்காலி சோபாவில் அமர்வதால் நம் முதுகுத்
தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின்புறத்தையும், தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால் முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தன்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது. மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து
வாங்குகிறார்களே ஒழிய கீழே உட்காருவது கிடையாது. ஜெரெண்டாலஜி எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால், ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பார்கள். கீழே உட்கார்ந்து எந்த
#ஶ்ரீராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது, மலைமீது நடந்து வந்த களைப்பில், ஓரிடத்தில் (முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில், தம் முதல் விஜயத்தின் போது, பெரிய திருமலை நம்பிகள் அவரை எதிர்கொண்டழைத்த இடத்தில்) அமர்ந்து ஓய்வெடுத்தார்.
அவருக்கும், உடன் வந்த சீடர்களுக்கும்
பசியும் கூட. அப்பொழுது அங்கு ஒரு இள வயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்) மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்று கொடுத்தான். ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும் எதுவும் சாப்பிடமாட்டார்கள். எனவே அவனிடம் "நீ யார்? எங்கிருந்து வருகிறாய்" என்று உடையவரின்