#பாம்புக்கு_பால்_வார்த்த_கதை பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய
துரியோதனன், “ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்பெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார்
ஸ்ரீகிருஷ்ணர்.
“கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு,
ஏன் பதில் கூறவில்லை என்பான். உடனே நீ, தக்ஷகன் முறை என்று சொல். அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்க மாட்டான்” என்றார் பகவான். கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்ட முடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி. துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும், விஷமத்துடன் அதே கேள்வியை
மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே, இன்று யாருடைய முறை? ஸ்ரீகிருஷ்ணன் சொல்லி அனுப்பியது போலவே, இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரௌபதிக்கு
ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கண்ணா! இதென்ன மாயம்? யாரந்த தக்ஷகன்? அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி, பயந்து ஓடுகிறான் என்று கேட்டாள்.
கண்ணன் அதற்கான காரணத்தை சொன்னான். துரியோதனனின் மனைவி பானுமதி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும்
உத்தமி. துரியோதனன் பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக் கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும், மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள்
தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை, முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து, அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர் பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி, அதில் இனிப்பும்
இன்சுவையும் சேர்த்து, முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு, கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் யாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான். பால் அருந்தும் மனோநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தை
ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்றுகொண்டிருந்த #தக்‌ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது. தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால், அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே
அவன் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள் தான் என்றும் வாதாடினான். பதி விரதையான பானுமதி பதறினாள், துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால்
விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு எனினும் பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால் தான், அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும், அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன்
விரும்பவில்லை. அதே நேரம், அவளின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை. எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு, பௌர்ணமி தோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து, வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது
அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தியோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம்
துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியதுதான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம்” என்றார் ஸ்ரீகிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல்
கூறிய கண்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி. இதை தான் நம் பெரியோர்கள் பாம்புக்கு பால் வார்த்த கதை என்று சொல்வது வழக்கத்தில் வந்தது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 20
#MahaPeriyava
The camp of SriMatham was at Tiruvidaimarutur. Every morning the Go puja would be performed before the start of the Sri Chandramouleeswara puja. A completely black-hued cow was maintained by the Matham for this purpose. One morning the black-hued cow did not come
for the puja. Another one was brought. The worship concluded. Periyava sent word for the Karvar. Venkataramaiyyer came and prostrated to Periyava.
“Where is the black-hued cow?”
“It is missing since last evening. Seems to have broken loose and run away. It was not to be found in
spite of our searching far and wide. Men have gone out today also.”Periyava completed His anushtanam and set out from the Matham. He walked down all the roads and finally reached the street where the peasants lived. The inhabitants there were surprised. They prostrated to Him as
Read 9 tweets
May 20
#கலியுகம் கலியுகம் எப்படி இருக்கும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது. (உத்தவ கீதையிலிருந்து எடுக்கப்பட்டது).
ஒரு முறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன,
எப்படி இருக்கும் என்றே காட்டுகிறேன் என்று கூறி 4 அம்புகளை 4 திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு 4 பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். முதலில் #பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு 5 கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.
சுற்றியுள்ள 4 கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான்.
#அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான
Read 14 tweets
May 19
#அறிவோம்_மகான்கள் #ஸ்ரீமன்னார்குடி_பெரியவா 28.5.1815- 4.3.1903
#மகாபெரியவா என்றால் எல்லாருக்கும் தெரியும். மன்னார்குடி பெரியவா என்று ஒருவர் இருந்தார். மகா பெரியவா அவர்களே, ஒருவரை #பெரியவா என்று அழைத்தார் என்றால் அவர் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் தான் அந்த மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்ச வேத வியாசர் அவர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள். அப்பா மார்க்க ஸஹாய அப்பய்ய தீக்ஷிதர்
மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து கற்றார்கள். மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தனர். பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக
Read 17 tweets
May 19
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய் தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே
பிறந்தோம். நான் ஐந்தாவது பெண். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமில்லை, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்
போனார்கள். அக்காவிற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார், பணம் வேண்டாமா என்று அனைவரும் கவலைப்பட்டோம். திடீரென்று ஒரு நாள் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். அவ்வளவு வசதியும் பெரிய வேலையில் இருக்கும்
Read 9 tweets
May 19
Rama Bhakta Hanuman acted upon the injustice done to Sita Devi in Sri Lanka on the day he lit fire to Lanka. This kind of fire is still burning in the minds of the people against injustice. People in many places have had the courage to question the atrocities that have been going
on against them for years.

“One thing good people have to do to thrive Evil is be silent” Edmund Burke.

“The day we die is the day we refuse to speak the truth even after knowing the truth.“ Martin Luther King
Violence, injustice, and crime are prevalent in the world today.
But there are very few voices against it. No one cares about injustice unless it affects themselves or their community. But they are unjust. The voice of those who are not affected by injustice has the power to make greater impact. No society should forget that if we raise our
Read 5 tweets
May 19
#MahaPeriyava
The Kumbhabhishekam of Sri Kamakshi Amman temple was held in 1944. It was during this period that Janakiramayya grew close to the SriMatham. He belongs to the sub-sect called teertha purohits and was foremost among them in those days. In his father’s days there were
3 or 4 assistant purohits in his house. They would go to the Kanchipuram railway station, receive pilgrims from North India and arrange for their food and stay. Pilgrims from royal families and from Rajasthan would often visit Kanchi. The priests would guide them to take a
sankalpa snana at Sarvateertha temple tank and then arrange for the performance of the oblations to their forefathers. But gradually this stopped. No one was interested in doing this any more. At a certain point of time, Maha Swami gave up the office of the hereditary Chief
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(