#கலியுகம் கலியுகம் எப்படி இருக்கும் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னது. (உத்தவ கீதையிலிருந்து எடுக்கப்பட்டது).
ஒரு முறை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பாண்டவர்களில் நால்வரான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கலியுகம் எப்படி இருக்கும் என்று கேட்டனர். அதற்கு மாதவன், சொல்வதென்ன,
எப்படி இருக்கும் என்றே காட்டுகிறேன் என்று கூறி 4 அம்புகளை 4 திசைகளிலும் செலுத்தினார். அவற்றை கொண்டு வருமாறு 4 பாண்டவர்களிடமும் ஆணையிட்டார். முதலில் #பீமன், அம்பை எடுத்த இடத்தில் ஒரு காட்சியைக் கண்டான். அங்கு 5 கிணறுகள் இருந்தன. மத்தியில் ஒரு கிணறு, அதைச் சுற்றி நான்கு கிணறுகள்.
சுற்றியுள்ள 4 கிணறுகளில் சுவைமிகுந்த தண்ணீர் நிரம்பி வழிந்துகொண்டே இருந்தது. ஆனால் நடுவில் உள்ள கிணற்றில் மட்டும் நீர் வற்றி இருந்தது. இதனால் பீமன் சற்று குழம்பி, அதை யோசித்தபடியே அந்த இடத்தை விட்டு கிருஷ்ணரை நோக்கி நடந்தான். #அர்ஜுனன், அம்பை மீட்ட இடத்தில் ஒரு குயிலின் அற்புதமான
பாடலை கேட்டான். பாடல் கேட்ட திசையில் திரும்பி பார்த்த அர்ஜுனன் ஒரு கோரமான காட்சியை கண்டான். அங்கு அந்த குயில் ஒரு வெண் முயலை கொத்தி தின்று கொண்டு இருந்தது. அந்த முயலோ வலியால் துடித்து கொண்டிருந்தது. மெல்லிசை கொண்டு மனதை மயக்கும் குயிலுக்கு இவ்வளவு கொடிய மனம் உள்ளதை எண்ணி
குழப்பத்தோடு அங்கிருந்து நகர்ந்தான். #சகாதேவன், கிருஷ்ணரின் அம்பை எடுத்துக்கொண்டு திரும்பி வரும் வழியில் ஒரு காட்சியை கண்டான். பசு ஒன்று அழகிய கன்றுக்குட்டியை ஈன்றெடுத்தது. ஈன்ற கன்றை தன் நாவால் வருடி சுத்தம் செய்து கொண்டிருந்தது. கன்று முழுமையாக சுத்தம் ஆகியும் தாய் பசு
வருடுவதை நிறுத்தவில்லை. சுற்றி இருந்த பலர் கன்றை பசுவிடம் இருந்து மிகவும் சிரமப்பட்டு பிரித்தனர். அந்த கன்றுக்கு பலத்த காயங்கள் உண்டானது. தாய் எப்படி பிள்ளையை காயப்படுத்த முடியும் என்ற குழப்பத்தோடு அவனும் கிருஷ்ணரை நோக்கி நடந்தான். #நகுலன் கண்ணனின் அம்பு ஒரு பெரிய மலையின் அருகில்
இருப்பதைக் கண்டு எடுத்துக் கொண்டு திரும்பினான். மலை மேல் இருந்து பெரிய பாறை ஒன்று கீழே உருண்டு வந்தது. வழியில் இருக்கும் அனைத்து மரங்களையும், தடைகளையும் இடித்துத் தள்ளி, வேகமாய் உருண்டு வந்தது. வேகமாக வந்த அந்த பாறை, ஒரு சிறிய செடியில் மோதி அப்படியே நின்றுவிட்டது. ஆச்சரியத்தோடு
அதை கண்ட நகுலன், தெளிவுபெற பகவானை நோக்கி புறப்பட்டான். இவ்வாறு நான்கு பாண்டவர்களும், ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தனர். அவரவர் தாங்கள் கண்ட காட்சியையும், மனதில் உள்ள குழப்பத்தையும், ஞானக்கடலான கிருஷ்ணரிடம் கேட்டனர். கிருஷ்ணரோ வழக்கமான தன் மெல்லிய சிரிப்புடன் விளக்கினார்.
”பீமா,
கலியுகத்தில் செல்வந்தர்களிடையே ஏழைகளும் வாழ்வார்கள். செல்வந்தர்களோ மிகவும் செழிப்பாக வாழ்வார்கள். தம்மிடம் செல்வம் வழிந்தாலும், அதில் ஒரு சிறு பகுதியை கூட ஏழைகளுக்கு கொடுத்துதவ மாட்டார்கள். மேலும் மேலும் செல்வம் சேரவேண்டும் என்று நினைத்து பல தவறான வழியில் செல்வதை ஈட்டி சேமித்து
வைப்பார்கள். ஒரு பக்கம் செல்வந்தர்கள் நாளுக்கு நாள் செல்வதர்கள் ஆக, மற்றொரு பக்கம் ஏழைகள் ஏழைகளாகவே வருந்துவார்கள், வற்றிய கிணற்றுக்கு அருகிலுள்ள நிரம்பி வழியும் கிணறுகளை போல!
அர்ஜுனா, கலியுகத்தில் போலி மதகுருக்கள், ஆசாரியர்கள் போன்றவர்கள் இனிமையாக பேசும் இயல்பும் அகன்ற அறிவும்
கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கள்வர்களாகவே இருப்பார்கள் குயிலை போல.
சகாதேவா, கலியுகத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது மிகுந்த கண்மூடித்தனமான பாசத்தோடு இருப்பார்கள். பிள்ளைகளின் மீது உள்ள அளவற்ற பாசத்தால் அவர்கள் தவறு செய்தாலும்
அதை பொருட்படுத்தாமல், பிள்ளைகளின் நெறி தவறிய வாழ்விற்கு தாங்களே காரணம் ஆவார்கள். இதனால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை துன்பப்பிடியில் சிக்கிக் கொள்ளும் என்பதை மறப்பார்கள். பிள்ளைகளும் தீயவினைகளால் துன்பம் அனுபவிப்பார்கள். பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவர்கள் பசுவை போல!
நகுலா, கலியுகத்தில் மக்கள் சான்றோர்களுடைய நற்சொற்களைப் பேணாமல், நாளுக்கு நாள் ஒழுக்கத்தினின்றும் நற்குணத்தினின்றும் நீங்குவார்கள். யார் நன்மைகளை எடுத்து கூறினாலும் அதை அவர்கள் பொருட்படுதமாட்டர்கள். எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி செயல் படுவார்கள். இத்தகையவர்களை இறைவனால் மட்டுமே
தடுத்துநிறுத்தி, நிதானப்படுத்தி அறிவுடன் செயல்படுத்த முடியும் பாறையை தடுத்த சிறுசெடியை போல!” என்று கூறி முடித்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava
The camp of SriMatham was at Tiruvidaimarutur. Every morning the Go puja would be performed before the start of the Sri Chandramouleeswara puja. A completely black-hued cow was maintained by the Matham for this purpose. One morning the black-hued cow did not come
for the puja. Another one was brought. The worship concluded. Periyava sent word for the Karvar. Venkataramaiyyer came and prostrated to Periyava.
“Where is the black-hued cow?”
“It is missing since last evening. Seems to have broken loose and run away. It was not to be found in
spite of our searching far and wide. Men have gone out today also.”Periyava completed His anushtanam and set out from the Matham. He walked down all the roads and finally reached the street where the peasants lived. The inhabitants there were surprised. They prostrated to Him as
#பாம்புக்கு_பால்_வார்த்த_கதை பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறிக் கொண்டு இருந்தார்கள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய
துரியோதனன், “ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை?” என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நாடி நரம்பெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது, பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார்
ஸ்ரீகிருஷ்ணர்.
“கலங்காதே திரௌபதி! நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன். அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ! துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு,
#அறிவோம்_மகான்கள்#ஸ்ரீமன்னார்குடி_பெரியவா 28.5.1815- 4.3.1903 #மகாபெரியவா என்றால் எல்லாருக்கும் தெரியும். மன்னார்குடி பெரியவா என்று ஒருவர் இருந்தார். மகா பெரியவா அவர்களே, ஒருவரை #பெரியவா என்று அழைத்தார் என்றால் அவர் எப்படிப் பட்டவராக இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
மன்னார்குடி மஹா மஹோபாத்யாய தியாகராஜ மஹி ராஜு சாஸ்திரிகள் தான் அந்த மன்னார்குடி பெரியவா. பாரத்வாஜ வம்ச வேத வியாசர் அவர். அடையபலம் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் குடும்பம். திருவாரூர் கூத்தம்பாடி கிராமத்தில் பிறந்தவர். அம்மா மரகதவல்லி ஜானகி அம்மாள். அப்பா மார்க்க ஸஹாய அப்பய்ய தீக்ஷிதர்
மன்னார்குடியில் முதல் அக்ரஹாரத்தில் குருகுலம் அமைத்து ஆயிரக்கணக்கான மாணாக்கர்களுக்கு வேத சாஸ்திரம், அனுஷ்டானம் கிரந்தம் எல்லாம் கற்பித்தார். வெளி மாநிலங்களில் இருந்து வந்து கற்றார்கள். மாணவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் அநேகர் அளித்தனர். பிள்ளைகள் கற்பதில் ரொம்ப கண்டிப்பாக
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய் தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம். என் பெற்றோருக்கு வரிசையாக ஐந்தும் பெண் குழந்தைகளாகவே
பிறந்தோம். நான் ஐந்தாவது பெண். ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பது பழமொழி. என் தந்தை தமிழ் ஆசிரியர். இவரால் ஐந்தையும் எப்படிக் கரையேற்ற முடியும் என்று உறவினர்கள் மட்டுமில்லை, நண்பர்களும் கவலைப்பட்டார்கள். என் முதல் அக்கா பானுமதிக்கு திருமண வயது வந்தது. யார் யாரோ வந்தார்கள்
போனார்கள். அக்காவிற்கு அப்பா எப்படித் திருமணம் நடத்தப் போகிறார், பணம் வேண்டாமா என்று அனைவரும் கவலைப்பட்டோம். திடீரென்று ஒரு நாள் வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர், நன்கு படித்து பெரிய வேலையிலிருக்கும் தன் மகனுக்குப் பெண் கேட்டு வந்தார். அவ்வளவு வசதியும் பெரிய வேலையில் இருக்கும்
Rama Bhakta Hanuman acted upon the injustice done to Sita Devi in Sri Lanka on the day he lit fire to Lanka. This kind of fire is still burning in the minds of the people against injustice. People in many places have had the courage to question the atrocities that have been going
on against them for years.
“One thing good people have to do to thrive Evil is be silent” Edmund Burke.
“The day we die is the day we refuse to speak the truth even after knowing the truth.“ Martin Luther King
Violence, injustice, and crime are prevalent in the world today.
But there are very few voices against it. No one cares about injustice unless it affects themselves or their community. But they are unjust. The voice of those who are not affected by injustice has the power to make greater impact. No society should forget that if we raise our
#MahaPeriyava
The Kumbhabhishekam of Sri Kamakshi Amman temple was held in 1944. It was during this period that Janakiramayya grew close to the SriMatham. He belongs to the sub-sect called teertha purohits and was foremost among them in those days. In his father’s days there were
3 or 4 assistant purohits in his house. They would go to the Kanchipuram railway station, receive pilgrims from North India and arrange for their food and stay. Pilgrims from royal families and from Rajasthan would often visit Kanchi. The priests would guide them to take a
sankalpa snana at Sarvateertha temple tank and then arrange for the performance of the oblations to their forefathers. But gradually this stopped. No one was interested in doing this any more. At a certain point of time, Maha Swami gave up the office of the hereditary Chief