#நுண்அரசியலும்_மோடியும்#TransformingTN
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்று வாய் கூசாமல் ஸ்டாலினும் திமுகவினரும் பேசி வரும் நேரத்தில் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே 31ஆயிரம் கோடி 500லட்சம் ரூபாயில் நிறைவற்றப்பட்ட, தொடங்கப்பட உள்ள திட்டங்களை திறந்து வைத்தார
மோடி. இவையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அது ஆட்சிக்கு வரும் முன் தொடங்கப்பட்டு இப்போது நிறைவேறியிருப்பவை. திமுகவின் பச்சைப் பொய்கள் மேடையிலேயே தவிடு பொடியாகின. செவித் திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் வென்றோரில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை
அறிவீர்களா என்று கேள்வி கேட்டு, அவர்களை நம் முதல்வர் சந்திக்கக் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமிழின் எதிர்காலம் அது அடுத்த தலைமுறையிடமும் தொடர்வதில் இருக்கிறது, வெறுமனே அதன் தொன்மையில் மட்டுமில்லை. அதற்கு தாய் மொழி வழிக் கல்வியும், அதற்கான புதிய கல்விக் கொள்கை கொண்டு
வந்திருக்கிறோம். அதை மறுக்கிறீர்களே என்றார். பலருக்கு இது தெரியாமல் இருந்திருக்கலாம். அதே நேரம் நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்த போது செம்மொழித் தமிழ் நிறுவனம் வாடகைக்கு ஒண்டுக் குடித்தனம் இருந்ததே என்பதை நினைவூட்டுவது போல, இப்போது அது முழுக்க முழுக்க எங்கள் அரசின் நிதியில்
கட்டப்பட்ட நவீன கட்டிடத்தில் இயங்குகிறது என்பதை குறிப்பிட்டார். என் தொகுதியில் பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் அதன் முன்னாள் மாணவர் #பாரதி பெயரில் தமிழ்த்துறை தொடங்கியிருக்கிறோம் என்றார். திமுகவினரைப் போல வெறும் வாய் பேச்சு கிடையாது இவரிடம். செய்கையில் தன உணர்வுகளை காட்டுகிறார
வளர்ந்து கொண்டிருக்கும் நாடு வளர்ந்த நாடாக வளர்ச்சி பெறவேண்டுமானால் உள்கட்டமைப்புகள் உருவாக வேண்டும். உள்கட்டமைப்பு என்பது சாலை, தண்ணீர், மின்சாரம் மட்டுமல்ல, அது குறித்த புதிய பார்வை அணுகுமுறை வேண்டும் என்று உணர்த்தினார். குழாயில் எல்லோருக்கும் தண்ணீர் வரும் போது பேதங்கள் தானே
குறையும் என்பதை நினைவூட்டினார். யாழ்ப்பாணத்திற்குச் சென்ற முதல் பிரதமர் அவர்தான் என்பதை கூறிய அவர், திமுக அங்கம் வகித்த அரசின் பிரதமர் மன்மோகன் சிங் போகதது பற்றி சொல்லாமல் சொல்லி அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்காமல் கேட்டார். திமுகவும் தோழமை கட்சிகளும் ராஜபக்ஷவுடன்
விருந்துண்டு நினைவுப் பரிசு பெற்றுக் கொண்டு வந்தார்கள் என்பதை அவரும் அறிவார் நாமும் அறிவோம். அன்றைக்கு கச்சத்தீவை வாரிக் கொடுத்துவிட்டு இன்று 'மீட்பதற்கான தருணம்' எனப் பேச உங்களுக்கு நாக்கூசாதா என்று கேட்காதது அவர் பெருந்தன்மை. புதிதாக ஏதுமில்லாத தமிழக முதல்வரின் வழக்கமான
பல்லவிக்கு பதில் ஏதும் கூறாமல் அவை பதிலளிக்கக் கூட உகந்தவை அல்ல என்பதை வெளிப்படுத்தினார். சட்டமன்றத்தில் ஜெய்ஹிந்த் சொல்லாததைப் பெருமையாக பீற்றிக் கொண்ட கட்சியின் முதல்வரை மேடையில் வைத்துக் கொண்டே பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் இரண்டையும் முழங்கி அதையும் கூட்டத்தினரையும்
திருப்பி முழங்கச் செய்தது அவரது ஆளுமைத் திறம்!
வாழ்க பாரதம். மோடிக்கு நீண்ட ஆயுளை கொடுக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் மயன் என்பவன் அசுரர் தலைவன். முன்பொரு சமயம் போரில், தேவர்கள் அசுரர்களை வென்றனர். அசுரர்கள் சென்று தங்கள் தலைவனான மயனிடம் முறையிட்டனர். அவனும் தன் மாய சக்தியால், தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று பட்டணங்களைப் படைத்து அவர்களிடம் கொடுத்தான். அசுரர்கள்
அவற்றில் மறைந்திருந்து திடீர் திட்டிரென்று தேவர்களைத் தாக்கத் துவங்கினர். மூவுலகங்களையும் சற்றும் எதிர்பாராத சமயங்களில் தாக்கி அழிக்கலாயினர். மிகவும் துன்பமடைந்ததால், மூவுலகங்களின் தலைவர்களும் பரமேஸ்வரனிடம் சரணடைந்து, மஹாதேவா! தங்கள் பக்தர்கள் எங்களை மிகவும் வாட்டி வதிக்கிறார்கள்
தயை கூர்ந்து காத்தருளுங்கள் என்று வேண்டினர். பரமேஸ்வரன் அவர்களுக்கு அபயம் அளித்து, தன்னுடைய வில்லான பிநாகத்தை எடுத்து முப்புரங்கள் மீதும் அம்பெய்தினார். ஈஸ்வரன் விட்ட அம்பிலிருந்து சூரியக் கிரணங்கள் போல் பலப்பல பாணங்கள் நெருப்பைக் கக்கிக்கொண்டு வெளிக்கிளம்பி முப்புரங்களையும்
#நவக்கிரகங்களைச்_சுற்றும்_முறை
ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று
வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. வழிபடும் முறையை சற்றே கவனிக்க வேண்டும். நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய
ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் இராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப் படுகிறது. இது தவறான கருத்து.
எனவே, இடம், வலம் என்ற
#MahaPeriyava
When Periyava camped for long at the Kolla Chatram in Kanchipuram, He would bathe every day in the tank at the Sri Kacchabeshwara temple. The Puranas say that taking a holy dip in that tank on the Mondays of the Karthika month gives one great merit. So, on one such
day, a Karthika Somavara (during 16 Nov to 15 Dec on a Monday), Periyava bathed in the temple tank and went into the temple for darshan of the deity. A devotee from Chennai who had joined the retinue of devotees walking with Periyava, prayed that he may be commanded to leave so
that he could visit the Ekambaranatha temple.
“Today is the Monday of the month of Karthika. Siva-darshan on such a day gives infinite merit. There are many Siva-temples in Kanchipuram. Visit as many as possible. I am aging. It is not possible for me to visit all the temples.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. #ராஜாரவிவர்மா ஒரு ராஜ குடும்ப ஓவியர். தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர் படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை . இதனால் ஒருவித தவிப்பில்
தளர்ந்த படி இருந்தார் ரவிவர்மா. ஒருநாள் உறங்கப் போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண் உறங்கினார். மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது. அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள்
அமர்ந்திருக்க, அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் (நெஞ்சு பகுதியில்) கண்டார். இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத் திரும்ப உதிக்கக் கண்டார். அன்றைய தினமே தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார். தான்
#நம்பிக்கை ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி சிவனிடம், “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள். ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சம் பெறுவது போல தோன்றவில்லையே அது ஏன்” என கேட்டார். சிவன் சொன்னார், “ அது ஏன் எனும்
காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக் கரையினை அடைந்த சிவன், “நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு, ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து
காப்பாற்றுங்கள் எனக் கூறு” என்று சொல்லி ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதிதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி, பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள் என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின் வாங்கினார்கள்,
#ஜெய்ஶ்ரீராம்#Anandashram#ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை
6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக