இது உண்மைதானா என்று என்னால் நம்பவே முடியவில்லை. உண்மை தான் என்று சரிபார்த்த பின் பகிர்கிறேன். வாடகை செலுத்தாத 94 வயது முதியவர் ஒருவரை தனது வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்த அந்த வீட்டின் உரிமையாளர் அந்த முதியவர் பயன் படுத்திய பழைய கட்டில், சில அலுமினிய பாத்திரங்கள், தட்டு
குவளைகளை வீட்டிற்கு வெளியே போட்டு விட்டார். சிறிது கால அவகாசம் தருமாறு எவ்வளவோ கெஞ்சிப் பார்க்கிறார் முதியவர். வேடிக்கை பார்த்த சிலர் பரிதாபப் பட்டு சிறிது கால அவகாசம் தரச் சொல்ல, வேண்டா வெறுப்பாக அந்த முதியவரின் சாமான்களை மீண்டும் உள்ளே வைக்க அனுமதித்தார் உரிமையாளர். இதை
பார்த்துக் கொண்டிருந்த அவ்வழியே சைக்கிளில் சென்ற பத்திரிக்கையாளர் ஒருவர், அக்காட்சிகளை படுமெடுத்து பத்திரிக்கையில் வெளியிட நினைத்து, பத்திரிக்கை ஆசிரியரிடம் சென்று நடந்ததை சொல்லி படங்களை காட்டினார். படங்களை பார்த்த ஆசிரியர், அதிர்ந்து போனார். இவர் யாரென்று தெரியுமா என செய்தியாளரை
கேட்க, தெரியாது என்றார் செய்தியாளர். இந்தியாவில் இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்த #குல்சாரிலால்_நந்தா தான் இவர் என்று கூறியிருக்கிறார் ஆசிரியர். நேரு இறந்த போதும், சாஸ்திரி இறந்த போதும், இவரைத் தான் பிரதமராக தேர்ந்தெடுத்தார்கள். பொருளாதாரம் படித்த சிறந்த தொழிற்சங்கவாதி. HMSS
தொழிற்சங்கத்தில் அகில இந்திய தலைவராக இருந்தவர். 1948 ல் இவரது தலைமையில் தான் கொல்கத்தாவில் INTUC திறப்பு விழா கண்டது. பல காலம் மத்திய அமைச்சராக இருந்தவர். பத்திரிக்கையில் செய்தி வந்தது. அவரது வீட்டின் முன்பு அரசு அதிகாரிகளும், VIP வாகனங்களும் வந்து குவிவதை கண்ட வீட்டு உரிமையாளர்
மிரண்டு போனார். சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஓய்வூதியமாக வந்த 500 ரூபாயையும் வாங்க மறுத்து விட்டார். சுதந்திரத்துக்காக போராடினேனே தவிர இந்த 500 ரூபாய்க்காக அல்ல என்று கூறிவிட்டார். அரசு இல்லத்துக்கு வாருங்கள் என வந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எவ்வளவோ கெஞ்ச, இந்த
வயதில் அந்த வசதியெல்லாம் எதற்கு என மறுத்து விட்டார். இதை எல்லாம் கண்ட அந்த வீட்டின் உரிமையாளர் நந்தாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தன் கடைசி காலத்தை அகமதாபாத்தில் தன் மகள் வீட்டில் கழித்தார் குல்சாரிலால் நந்தா. இறுதிவரை (99 வயது) உண்மையான காந்தியவாதியாக, சாதாரண குடிமகனை
போல வாழ்ந்த இவருக்கு 1997 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பாரத ரத்னா குல்சாரிலால் நந்தா, தமிழ்நாட்டில் கக்கன், காமராஜ் போன்றோர் பெரும் பதவியில் இருந்தவர்கள். ஆனால் மிக எளிய, ஏழ்மையான வாழ்க்கையினையே விரும்பி பிறர் உதவிகளை ஏற்க மறுத்து ஏழ்மையிலேயே வாழ்ந்து மறைந்துள்ளனர்.
அத்தகையோர் பிறந்த இந்திய மண்ணில் நாமும் இருக்கிறோம் என்பதை நாம் பெருமையாக நினைக்க வேண்டும். என்றும் மறக்கக் கூடாது.
வாழ்க பாரத தியாகத் தலைவர்கள்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 #அறிவோம்_வரலாறு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#தந்தவக்ரன் (தந்தவக்ரன், சிசுபாலன் மகாவிஷ்ணுவின் வாயிற் காப்போற்கள் ஜய விஜயர்களின் இறுதி இரு அரக்கப் பிறவிகளாகும்) மதுராவின் மன்னன் சூரசேனனுக்கு (வாசுதேவரின் தந்தைக்கு) ஐந்து மகள்கள் இருந்தனர்: பிருதா (குந்தி), ஷ்ருததேவா, ஷ்ருதகீர்த்தி, ஷ்ருதஷ்ரவா மற்றும் ராஜாதிதேவி. சிசுபாலன்
ஷ்ராதஸ்வராவுக்கு பிறந்தார். ஷ்ருததேவா க்ருஷ ராஜ்ஜியத்தின் அரசரான விருத்தசர்மாவை மணந்தார். அவர்களுடைய மகன் தான் தந்தவக்ன். அவன் பல் கோணலாக இருந்ததால் தந்தவக்ரன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நெருங்கிய கூட்டாளி. பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு
முன் சகாதேவனால் தோற்கடிக்கப் பட்டான். பீமன் ஜராசந்தனைக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலனைக் கொன்றார். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்தான்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை சிவபெருமான் நாரத மகரிஷியைப் பார்த்து, "ஓ நாரதரே! சோழ தேசத்தில் காவேரி மத்தியில் #சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் மிகுந்த லட்சுமிகரமாக விளங்கும் #ஸ்ரீரங்கத்தலம் என்னும் புண்ணியத் தலம் உண்டு. அந்தத் தலத்தைச் சென்று தரிசித்தவர்கள் நரகத்திற்குப் போக
வேண்டியதில்லை. எமலோகத்திற்குப் போக வேண்டியதில்லை. அவர்களை மரண வேதனை வருத்தமாட்டாது. மீண்டும் அவர்களுக்கு எவ்விதமான பிறவித் துன்பங்களும் ஏற்படாது. ஆகையால், பூலோக மண்டலத்தில் புத்திசாலியாக இருக்கின்றவர்கள், ஸ்ரீரங்கத்துக்குப் போகாமலும், காவேரி தீர்த்த ஸ்நானம் செய்யாமலும், ஸ்ரீரங்க
விமானத்தைத் தரிசிக்காமலும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யாமலும், தங்களால் இயன்றவரை பெரியோர்களுக்குத் தான தருமங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்" என்றார். அது மட்டுமல்லாமல், தும்மல் வந்து தும்முகற போதும், நடக்கும் போதும், உடலில் ஒரு நோய் கண்ட போதும், எதிரிகள் எதிர்த்த போதும், பாவிகளோடு
வசுதேவரின் சகோதரியான ஸ்ருதஸ்ரவா, சேதி தேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதி முனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு- ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்-
கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும் போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ஸ்ருதஸ்ரவா. அச்சமயம்
வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும் போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை
பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச
மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்)
நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மைவிளையாமல் தடுத்து
#மகாபெரியவா
ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர். மகா பெரியவா வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார். பக்தரைப் பார்த்து, “இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும்
கோமாதாவை வேண்டாம் என்கிறாரே பெரியவா என்று மனசுக்குச் சஞ்சலம். பெரியவாளிடம் மெல்ல சொன்னார் மானேஜர், “இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர் ரொம்ப நாளா மடத்து பக்தர். திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு”
"நீ சொல்றது சரிதான். வெள்ளிக் கிழமை அன்னிக்கு ஒரு பக்தர்
மனப்பூர்வமாகக் கொடுக்கிற
பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வது தான் நியாயம்”
மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
“ஆனால் இந்தக் கன்றுக்கு இந்த மாடு தாய் இல்லை"
எப்படி? ஒருவருக்கும் புரியவில்லை.
"பாரு கன்னுக்குட்டி பசுமாடு கிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக் குட்டியை நக்கிக்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் 108 திவ்ய தேசங்களில் 35வது திவ்யதேசம்- திருசெம்பொன் செய்கோயில் திவ்யதேசம் சீர்காழியில் உள்ளது. 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர்,
ஹேரம்பர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் அருளாளன் என வணங்கப்படுகிறார். அவரே நம்முடன் இருப்பதால் #பேரருளாளன் ஆனார். அல்லிமாமலர் நாச்சியார், பூமாதேவியுடன் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த காசியபன்
என்ற அந்தணர் செல்வமிழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார். கடைசியாக அவர் இத்தலத்திற்கு வந்து 3 நாட்களில் 32 ஆயிரம் தடவை ‘ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உச்சரித்து பெருமாளை மனம் உருகி வழிபட்டார். இவரது வழிபாட்டால் மகிழ்ந்த பெருமாள் இவனுக்கு செல்வங்களை வாரி வழங்கினார். மேலும்