#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் #ஸ்ரீராமஜெயம் கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக் கொள்ளலாம். சிவா விஷ்ணுவின் ஐக்கியமே ஸ்ரீ ராம நாமம்.
#நாரயணனில் இருந்து வருகின்ற 'ரா'வும்,
#நமசிவய வில் இருந்து வருகின்ற 'ம'வும் சேர்ந்த நாமமே #ராம
சொல்லில்
அடங்கா புகழவன்!
சொல்லின் செல்வன்!
அஞ்சனைப் புதல்வன்!
சிவனின் அவதாரன்!
அவன் அழகைக் காண கண் கோடி வேண்டும்!
அவன் புகழ் பாடி வையகமே திரள வேண்டும்!
அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பானம். வானுயர வளர்ந்தாலும் வானரன், தானுயரப் பார்பதில்லை.

அனுமார் மார்கழி மாதம் மூலம்
நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவர் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஏனெனில், அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார்.
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்"
என்ற அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.
அதை இந்த ஸ்லோகம் சொல்கிறது:

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

#கம்பன் அனுமனை போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது.

கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்ல
படித்தவன் படிவம் அம்மா
 -அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்: ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை
அணிந்த அனுமனைக் காண முடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?

இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே
பிரதான பிரசாதம். திருமணத் தடை நீங்க அனுமனுக்கு வியாழனன்று வெற்றிலை மாலை, துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சாத்தலாம். ராமதூதர் அனுமனுக்கு துளசி மாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம். அனுமாருக்கு பிடித்த
அர்ச்சனை பொருட்கள்
வடை மாலை,
வெற்றிலை மாலை,
துளசி மாலை,
சிந்தூரம்,
பசு நெய்,
பழங்கள்.
ஜெய மாருதி ராயா
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் துவாரகையில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய் கொண்டு இருந்தனர். ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணன் நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் இப்பூமியில் இருக்கிறானா என்று கேட்டார். இருக்கிறானே! புண்டலீகன் என்று பெயர். Image
அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன் என்றார் நாரதர். உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா புண்டலீகா என்று குரல் கொடுத்தான்.
யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன். அந்தக் கல்லின் மீது கொஞ்ச
Read 8 tweets
Jun 6
#MahaPeriyava
In the early 1980’s my income began to increase and I was able to save some money for punya kainkaryam. Maha Periyaval was camping in Maharashtra at a place near Sholapur. My father told His Holines “Raman is now getting some good income. Please advise him what is Image
the best punyakainkaryam for which he can spend his money and get the maximum punyam.” His Holiness was silent for a few minutes and then replied “All of you as Brahmins should have studied the Vedas and spent your life teaching the Vedas to others. It is now too late. Many in
your family have become doctors. The next best thing you can do since you have not done Veda Adhyayanam is to support Veda Patasalas and Vedic scholars. Give the maximum possible money for this and you will compensate to some extent for you not having studied the Vedas.” With His
Read 18 tweets
Jun 6
#know_our_good_souls A young man in his thirties used to stand on the footpath opposite the famous Tata Cancer Hospital at Mumbai and stare at the crowd in front- fear plainly written upon the faces of the patients standing at death's door, their relatives with equally grim
faces running around. These sights disturbed him greatly. Most of the patients were poor people from distant towns. They had no idea whom to meet, or what to do. They had no money for medicines, not even food. The young man, heavily depressed, would return home. Something should
be done for these people, he would. think. He was haunted by the thought day and night. At last he found a way. He rented out his own hotel that was doing good business and raised some money. From these funds he started a charitable activity right opposite Tata Cancer Hospital,
Read 11 tweets
Jun 5
#MahaPeriyava
Sri Maha Periyava used to talk in a humorous way also when blessing His devotees. Once, Navarathri festival was going on in Kanchi Kamakshi Amman temple. Many Maestros used to sing in that festival. One day of such an evening, a devotee came to have a darshan of
Periyava. He was a writer and he was showing his books to Maha Periyava and was explaining about them to Him about it. There were lot of other devotees who were waiting for having Maha Periyava’s darshan. On seeing them, Periyava told the writer “Go and have a darshan of Kamakshi
Amman. Darbar is going on there and it will end soon. Go quickly.”
The writer misinterpreted the decoration for Amman to be Darbar alankaram. When the writer went there, Amman was in a different alankaram and not in Darbar alankaram. The writer was confused thinking Periyava told
Read 6 tweets
Jun 5
#திருச்செந்தூர்_முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால் அவர் திருவுருவத்தில் எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது என்கின்றனர். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி
விடுவர். மாலை சந்தனம் வழிக்கும் போது நிறைய தண்ணீர் இருக்கும். சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும். வெள்ளையர் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறான். 1803 ஆம் ஆண்டு
திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவன் திருச்செந்தூர் வந்திருந்தான். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டான். இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான
Read 20 tweets
Jun 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஐயனே, பரபரப்பான வாழ்க்கையில் ஓடிக் கொண்டே இருக்கிறேன். பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், உறவில், நண்பர்களிடத்தில், வேலை செய்யும் இடத்தில் என ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கிறது. தூங்க முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள்
என்றவாறே முனிவர் பரசுராமின் முன்பாக நின்றிருந்தான் கபிலன். அப்போது மாலை நேரம். முனிவர் பரசுராமன் அவனிடம் "பின்னால் இருக்கும் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன, அவை என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார். சென்ற கபிலன் திரும்பி வந்து, 100
மாடுகள் இருக்கும், எல்லா மாடுகளும் நின்று கொண்டு இருக்கின்றன என்றான். “நல்லது. உனக்கு இன்னிக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தூங்க வைக்கணும். அந்த 100 மாடுகளும் தரையில் படுத்து ஓய்வானவுடன் அங்கே பக்கத்துல இருக்கிற சின்ன ஓய்வறையில் நீ போய் படுத்து தூங்கிக்கலாம்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(