#ஶ்ரீராமானுஜர்#சுருக்கமாக_அவர்_வரலாறு புரட்சித்துறவி என்று போற்றப்படும் ராமானுஜர் பொயு 1017-ல் சக ஆண்டு 939, கலி ஆண்டு 4118, வியாழக்கிழமை, சித்திரை மாதம் 12-ஆம் தேதி சுக்லபட்ச பஞ்சமி திதியில், கடக ராசி, திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது பெற்றோர்
அசூரிகேசவசோமாயாஜுலு - காந்திமதி. குழந்தையைப் பார்க்க திருப்பதியிலிருந்து வந்த தாய்மாமன் திருமலைநம்பி, லட்சுமணன் அம்சமாக குழந்தை இருந்ததால் அதற்கு #இளையபெருமாள் என்று பெயர் சூட்டினார். இளைய நம்பிக்கு எட்டு வயதானபோது உபநயனம் செய்து வைக்கப்பட்டது. அவரது தந்தையே முதலில் கல்வி
கற்பித்தார். அவரது பதினாறாவது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அதன்பின் கொஞ்சநாட்களிலேயே அவரின் தந்தை காலமானார். தந்தையின் மறைவுக்குப்பின் குடும்பத்துடன் காஞ்சிபுரம் வந்தார் இளைய பெருமாள். இந்த நிலையில், இளையபெருமாளை ஸ்ரீரங்கம் அழைத்துச்செல்ல வந்து கொண்டு இருந்தார்
பெரிய நம்பி. அதேசமயம் பெரிய நம்பியிடம் கல்வி பயில திருவரங்கம் சென்று கொண்டிருந்தார் இளையபெருமாள். இருவரும் மதுராந்தகம் பெருமாள் கோயிலில் சந்தித்துக்கொண்டார்கள். பெரிய நம்பி, இளையபெருமாளை அங்கேயே மாணவனாக ஏற்று பஞ்ச சமஸ்காரம் செய்து வைத்தார். அப்போது அடியோடு திருப்பெயராக #ராமானுஜர்
என்று பெயரிட்டார். அன்று முதல் இன்றுவரை அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபட்டது. ராமானுஜர் துறவறம் மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அவரது துறவிக் கோலத்தைப் பார்த்த திருக்கச்சி நம்பி, #யதிராஜா என்றழைத்தார். அதாவது துறவிகளின் அரசன் என்று பொருள்.
துறவிக்கோலத்தில் காஞ்சி கோயிலுக்குச் சென்றார் யதிராஜர். அவரைப் பார்த்த கோயில் அர்ச்சகர் #ராமானுஜமுனி என்றழைத்தார். ராமானுஜர் பிட்சைக்குப் போகும்போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிச் செல்வது வழக்கம். இதனால் அவர் #திருப்பாவைஜீயர் என்று திருவரங்கத்து மக்களால் அழைக்கப்பட்டார்.
வில்லிப்புத்தூர் கோயிலுக்கு ராமானுஜர் சென்றபோது நம் கோயிலில் #அண்ணார் என்று பக்தர்கள் அழைத்தார்கள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்றுக் கொண்டபின் ஸ்ரீரங்கம் சென்ற ராமானுஜரை #உடையவர் என்று போற்றினார்கள். ஐந்து ஆசிரியர்களின் பாதங்களில் அமர்ந்து பாடம் கேட்டதால் #பஞ்சாசார்ய_சீடர் என்று
சொல்லப்பட்டார். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானம் எழுதி பாஷ்யம் அருளியதால் #பாஷ்யக்காரர் ஆனார். ராமானுஜரை பெருமாளாகவே மக்கள் பார்த்ததனால் பயபக்தியுடன் #எம்பெருமானார் என்றழைத்தார்கள். திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு, சக்கரம் வழங்கியதால் #அப்பனுக்கு_சங்கு_ஆழி_அளித்த_பெருமான்
என்று ராமானுஜர் பெயர் பெற்றார். ஸ்ரீபெரும்புதூரில் வாழும் வைணவர்கள் #சுவாமி என்றே இவரை அழைத்தனர். ராமானுஜர் சில ஆண்டுகள் கர்நாடக மாநிலம் திருநாராயணபுரத்தில் வசித்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்படும்போது அங்கு வாழ்ந்த மக்கள் அவரைப் பிரிய மனமின்றித் தவித்தார்கள். அவர்கள்
விருப்பப்படி தன்னைப்போல ஒரு விக்ரகத்தை உருவாக்கச் சொன்னார். கைகூப்பி விடைபெறும் கோலத்தில் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலையைக் கட்டித் தழுவி தன் ஆற்றலை அதில் செலுத்திய ராமானுஜர், நான் இந்த விக்ரக உருவில் உங்களுடன் இருப்பேன். இந்தச் சிலையை என்னைப்போல் பாவித்து வருவீர்களாக என்று
அருளாசி வழங்கினார். இத்திருமேனியை #தாம்_உகந்த_திருமேனி என்று போற்றுவார்கள். இதேபோல், அவர் அவதரித்த திருப்பெரும்புதூரில் அந்த ஊர்மக்கள் ராமானுஜருக்கு சிலைவைக்க விரும்பினார்கள். சிலை உருவானது. அந்தச் சிலையை அரவணைத்து தன் தெய்வீக ஆற்றலை சிலைக்குள் செலுத்தினார். அந்த விக்ரகத்தை
#தமர்_உகந்த_திருமேனி என்று போற்றுவர். ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் கோயில் வழிபாட்டு முறைகளை ஒழுங்குப்படுத்தி, அங்கு பூஜை முறைகள் செவ்வனே நடைபெறுவதைக் கண்ட வண்ணம் அங்கேயே தங்கியிருந்தார் ராமானுஜர். அப்போது, சீடர்கள் அவரது உருவச் சிலை இருந்தால் வழிபடலாமே என்ற எண்ணத்தில் அவரிடம்
அனுமதி வேண்டினார்கள். 120வயதை எட்டியிருந்த ராமானுஜரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. கல்லில் சிலை வடிக்குமளவு அவகாசம் இல்லை. எனவே, சுண்ணாம்பு மற்றும் அரிய மூலிகைச்சாறுகள் கலந்த சுதை உருவம் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அமைந்த
சிலைமீது ஸ்ரீராமானுஜரின் காவி உடையைப் போர்த்தினார்கள். இதனால் ஸ்ரீராமானுஜர் உயிருடன் அமர்ந்திருப்பது போல காட்சித் தந்தது. ஸ்ரீராமானுஜர், பிரம்ம மந்திரத்தின் வாயிலாக மூச்சைப் பிடித்துக்கொண்டு, தமது சக்திகளை அந்தச் சிலையில் நிலை நிறுத்தினார். அருகிலிருந்த சீடர்களைப் பார்த்து, இது
என் இரண்டாவது ஆத்மா. எனக்கும் இந்த வடிவத்திற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த பூதவுடலைவிட்டு இந்தப் புதிய திருமேனியில் நான் குடிகொள்ளப்போகிறேன் என்று சொல்லி, அருகிலிருந்த எம்பாரின் மடியில் திருமுடியை, வடுக நம்பியின் மடியில் தம் திருவடிகளை வைத்துக் கொண்டு, எதிரில் வீற்றிருந்த தம்
ஆச்சாரியாரான ஆளவந்தாரின் திருவடிகளை தியானித்துக்கொண்டு பரமபதத்திற்குச் சென்றார். அன்று சனிக்கிழமை, சக ஆண்டு 1059 (பொயு 1137), மாசி மாதம், சுக்லபட்ச தசமி என்று வரலாறு கூறுகிறது. இதனை திருநாட்டுக்கு எழுந்தருளல் என்று வைணவர்கள் கூறுவர். அவரது பூதவுடலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்
வசந்த மண்டபம் அருகே தென்கிழக்கு மூலையில் அமர்ந்த நிலையில் பதப்படுத்தி தனிச்சந்நிதியில் எழுந்தருளச் செய்து வழிபடலாயினர். இத்திருமேனியை #தாமான_திருமேனி என்பர். பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, மற்றும் அரிய மூலிகைகளினால் அன்று அவரது திருமேனி பதப்படுத்தப்பட்டதால், இன்றும் அவர் உயிருடன்
அமர்ந்திருப்பது போல காட்சித் தருகிறார். இது குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும், இன்று தனிச்சந்நிதியில் ஸ்ரீராமானுஜரின் திருமேனியை தரிசிக்கும் போது நிஜ உருவத்தைக் காண்பது போல தெரிகிறது. தற்பொழுதும் வருடத்திற்கு இரண்டு முறை சித்திரை திருவாதிரை மற்றும் ஐப்பசி திருவாதிரை
நட்சத்திரத்தன்று பச்சைக்கற்பூரம், குங்கமப்பூ, ஆகியவற்றின் தைலம் கொண்டு அத்திருமேனிக்கு காப்பிடுகிறார்கள். ஸ்ரீராமானுஜருக்கு பெரும்பாலான வைணவத் திருத்தலங்களில் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். பெரும்பாலும் கைகளைக் கூப்பிய நிலையிலேயே அவரது வடிவம் இருக்கும். ஆனால், ஓரிடத்தில்
மட்டும் சின்முத்திரையுடன் காணப்படுகிறார். அந்த இடம்தான் திருவேங்கடம். இங்கு திரிதண்டம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வைணவத்தில் உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற இன வேறுபாடில்லை. வைணவன் என்றாலே பெருமாள் பக்தன். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக்
கூறிய ஸ்ரீராமானுஜர்தான் இன்றும் ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்து வருவதாக நம்புகிறார்கள். கோவில் வரவு செலவு கணக்குகள் இன்றும் அவர் சன்னிதியில் வாசிக்கப் படுகிறது. இன்றும் அனைத்து பூஜைகளும் ஸ்ரீராமானுஜருக்கு நடத்திய பிறகுதான் பெருமாளுக்கு நடைபெறுகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நாலாயிரம்_பிள்ளையார்_கோயில் சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையார் கோவில் சீர்காழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் உள்ளது. இக்கோவில் மூல மூர்த்தி இராமாயண காலத்தே சுயம்புவாக உருவானவர். கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில்
பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரம்ம தேவனிடம் பெற அவரை நோக்கிக் கடுமையான தவத்தை ஒரு குகைக்குள் இருந்து செய்து வந்தான். நெடும் காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் கடும்
தவத்தின் பலனாக வாலிக்குப் பிரம்மனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார். குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான்.
#ஶ்ரீராமானுஜர் ஸ்ரீ ராமானுஜர் வேதாந்தம் பயில, காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி என்னும் ஊரிலிருந்த #யாதவப்பிரகாசர் என்னும் அத்வைத வேதாந்தியிடம் சென்றார். அவருடன் அவருடைய சிறிய தாயார் மகனான கோவிந்தன் என்பவரும் பயிலச் சென்றார். அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள். அதாவது
பிரம்மம் (பரம்பொருள்) ஒன்றே உண்மை. மற்றவை பொய்த் தோற்றம் என்ற கொள்கையுடையது அத்வைதம். வேதத்தில், பரம்பொருள் வேறு, மற்றவையான அறிவுடைய, அறிவற்ற பொருட்கள் வெவ்வேறு எனப் பொருள்படும் வாக்கியங்களும், அப்பரம்பொருள் எல்லாப் பொருட்களையும் தன்னுள் கொண்டுள்ளமையால் பரம்பொருள் ஒன்றே எனப்
பொருள்படும் வாக்கியங்களும் உள்ளன. இவற்றைப் பேதச் சுருதி, அபேதச் சுருதி என்றும் கூறுவர். இவ்விரண்டில் பிரிவுபடாத நிலையை அறிவிக்கும் வாக்கியங்களை (அபேத வாக்கியங்கள்) மட்டும் முடிந்த முடிவாகக் கொண்டு அதற்கு ஏற்ப மற்றப் பிரிவு படக் கூறுகிற வாக்கியங்களுக்கும் பொருளைக் கூறுவது அத்துவைத
#மகாபெரியவா காஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக் குப்பம் மடத்தில், 1930ல் தங்கி இருந்தார். அந்த மடத்தில் இருந்த யானை மகாப் பெரியவரைக் கண்டால் துதிக்கையைத் தூக்கி நமஸ்காரம் செய்யும். பெரியவரும் யானையைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டுவார். ஒரு நாள் இரவில் யானையைக் கட்டி
இருந்த கொட்டகை தீப்பற்றிக் கொண்டது. யானை சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. மறுநாள் பாகனும், மடத்து ஆட்களும் காட்டில் யானையைத் தேடி அலைந்தும் இருக்கும் இடத்தை அறிய முடியவில்லை. சில நாட்கள் கழித்து, மடத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ள குளத்தில் அது நின்று கொண்டு இருப்பதாக
தகவல் கிடைத்தது. பாகன் குளத்தில் இறங்கி, யானையை கொண்டு வர முயற்சி செய்தார். அது வர மறுத்து அடம்பிடித்தது. விஷயமறிந்த பெரியவர் தானே குளத்திற்கு சென்று, யானையை அன்புடன் ஒரு பார்வை பார்த்தார். யானையின் கண்களில் கண்ணீர் பெருகியது. குளத்தை விட்டு வெளியே வந்து அவர் அருகில் நின்றது.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளின நாள் சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரம். பிரம்ம லோகத்தில், பிரம்மாவால் ஆராதிக்கப் பட்டு, பின் அவர் மூலமாக இக்ஷ்வாகு குலத்தினருக்கு வழங்கப்பட்டு, அக்குலத்தில் தோன்றிய பலராலும் காலம் காலமாக ஆராதிக்கப்பட்டு வந்தார் பெரிய
பெருமாள். அக்குலத்தில் உதித்த தசரத சக்ரவர்த்தியினாலும், பின் நம்பெருமான் தானே அவதரித்த ஸ்ரீ ராமரும் அவரை வழிபட்டு வந்தார்கள். இந்நிலையில் இலங்கையில் போர் முடிந்து ஸ்ரீ ராமரும் அயோத்திக்கு எழுந்தருளி பட்டாபிஷேகம் கண்டருளினார். பட்டாபிஷேக வைபவத்திற்கு வந்திருந்த விபீஷ்ணன், அங்கு
ஏள்ளப்படிருந்த பெரிய பெருமாளைப் பார்த்து, மிக ஆனந்தித்து தன்னிடம் அவரைக் கொடுத்தருளும்படி ராமரிடம் வேண்டினான். ஸ்ரீ ராமரும் உகந்து பெரிய பெருமாளை அவருக்கு அளித்து, பெருமாளுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்வது பற்றி எடுத்துக் கூறினார். பெரிய பெருமாளுடன் அயோத்தியிலிருந்து புறப்பட்ட
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஆயர்கள் இந்திரனுக்கு விழா எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது குறுக்கிட்ட கண்ணன், “எதற்காக இந்த விழா எடுக்கிறீர்கள்” என்று கேட்டான். இந்திரன் தான் நமக்கு மழை தருகிறான். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்விழா அனுசரிக்கப்படுகிறது
என்றார் நந்தகோபர். அதற்குக் கண்ணன், “மழை பொழிய வேண்டியது இந்திரனின் கடமையாயிற்றே! அதற்காக தந்தையே நீங்கள் ஏன் விழா என்ற பெயரில் கையூட்டு வழங்குகிறீர்கள்?” என்று கேட்டான். ஆயர்கள் பதில் உரைக்க முடியாமல் திகைத்தனர். “இவ்வாறு இந்திரனுக்கு விழா எடுப்பதற்குப் பதிலாக கோவர்த்தன மலைக்கு
விழா எடுங்கள். அந்த மலை இருப்பதால் தான் மேகங்கள் இங்கு வந்து மழை பொழிகின்றன. நம் ஆடு, மாடுகள் அந்த மலைக்குத் தான் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. சிறுவர்களான நாங்களும் அங்கு சென்று தான் விளையாடுகிறோம். இப்படிப் பலவிதமான நன்மைகள் செய்யும் அந்த கோவர்த்தன மலைக்குப் படையல் இடுவதே
#மகாபெரியவா
ஆந்திராவில் யாத்ரை பண்ணிக் கொண்டு இருந்த போது, மகா பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமும் இருக்காது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் மகா பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து
வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ, பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்! வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. மகா பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார்.
கிராமத்து ஜனங்கள் வந்து தரிசனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. மகா பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக்