#ஸ்ரீராமானுஜர்#திருநாராயணபுரம் பெருமாள் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட்பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன.
தெற்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜன்.
வடக்கு திருப்பதி திருவேங்கடவவன்.
மேற்கு மேல் கோட்டை திருநாராயணபுரம
திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்
படுகிறது. பனிரண்டாம் நூற்றாண்டு முற்பகுதியில் சோழர்கள் ஆட்சியில் ஸ்ரீ இராமானுசர் இங்கு 12 வருடம் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணுவர்த்தன் என்பவன் உதவியோடு நிர்மாணம்
செய்து “திருநாராயணபுரம்” என அழைக்கும்படி அருளினார். ஊரின் உள்ளே நுழையும்போதே அழகிய சிறு குன்றும் அதன் மேல் ஒரு கோட்டை கோவிலும்,குன்றின் அடிவாரத்தில் சகல பாவங்களை தீர்க்கும் கல்யாணி புஷ்கரணியும் காணப்படுகிறது. அந்த குன்றின் மேல் கோட்டை கோவிலில் நரசிம்ஹ பெருமாள். கீழே நாராயணர்ஆலயம்
இங்கு மூலவர் திருநாராயணன், சங்கு சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம்,சரணங்களில் பீபீ நாச்சியார் வெள்ளி கவசத்துடன் சரணங்களில் வணங்கியபடி உள்ளார். உத்ஸவருக்கு சம்பத் குமாரர், ராமப் பிரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன் எனப் பல பெயர்கள். தாயார் - யதுகிரி நாச்சியார்.
தீர்த்தம் - கல்யாணி தீர்த்தம், வேதபுஷ்கரணி, தனுஷ்கோடி தீர்த்தம் என 8 தீர்த்தங்கள் உள்ளன. விமானம் - ஆனந்தமய விமானம். வைரமுடி சேவை நாளில் கருடன் கொண்டு வந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச்
செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையால் வைரமுடி சேவை இப்போதும் இரவில் தொடங்கி விடியும் முன் முடிக்கப்படுகிறது. வைர முடி சாற்றும் போது பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைர முடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார்.
கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது #வைநதேயமுடி என்றழைக்கப்பட்டு, #வைநமுடி என சுருங்கி பின்னர் #வைரமுடி என மருவியுள்ளது. ராமானுஜர் திருநாராயணபுரம் வந்த போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் அங்கு ஆண்டு வந்தார். அவர் மகளுக்கு
சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் அப்பெண்ணை நலமாக்கினார். இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, வைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்து
உள்ளார். உதயகிரி மலையில் திருக்கோயிலைக் கட்டியவன் இவரே. மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்தபோது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு
செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார். ராமானுஜர் அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும்
தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை அவர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே #திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது. ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர்
மீட்டுக் கொண்டு வரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து அப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீராமானுஜரையும் காத்தனர். காத்த அவர்களுக்கு திருக்குலத்தார் என்ற திவ்ய நாமத்தை அளித்தார் உடையவர். மேலும் அவர்கள் செய்த உதவிக்கு நன்றி நவிலும்
வண்ணம் ராமானுஜரின் ஆணைக்கு இணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து 3 நாட்கள் #திருக்குலத்தார்_உற்சவம் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது. திருத்தொண்டனூர்,
ஸ்ரீரங்கப்பட்டினம் போன்றவை அருகிலிருக்கும் வைணவத் தலங்களாகும். இத்தல புளியோதரை பிரசாதம் புகழ் பெற்றது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
பெரியவாளை தரிசனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார். சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு
ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் சாலையைக் கடந்து எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். 5 நொடிகளுக்கு ஒரு முறை குறைந்தது 2 வண்டிகளாவது போய்க் கொண்டிருந்தன. காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை
பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல, "தாத்தா" என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு சாலையை கடக்க ஆரம்பித்தாள். வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை. அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன சமயம், வேகமாக வந்த லாரி, அந்தக்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஒரு கடைந்தெடுத்த நாஸ்திகன், கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமே இல்லை என்று மேடையில் முழங்கினான். அவன் பிரசங்கம் செய்தால் பிணம்கூடத் துடிக்கும் என்று அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். மதத் தலைவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக
உண்டாக்கிக் கொண்ட கட்டுக் கதைகள் தான் மதம் என்று சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடினார்கள். கடைசியாக, கடவுளுமில்லை, கத்திரிக்காயும் இல்லை, எல்லாம் பித்தலாட்டம் எனச் சொல்லி முடித்து, யாராவது கேள்வி கேட்க
வேண்டுமானால் மேடைக்கு வரலாம் என்றும் அழைத்தான். வயதான ஒருவர் மேடைமீது ஏறினார். தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தார். கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே எனக் கோபம் கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவர் சுளை சுளையாகத்
#மகாபெரியவா மகாபெரியவரை தரிசனம் செய்ய ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர் என்று எந்த பேதமும் இல்லாமல் வருவார்கள். அந்த சமயத்தில் பெரும்பாலும் ரெண்டே ரெண்டு வாழைப்பழத்தில் இருந்து கூடை கூடையா ஆப்பிள் வரைக்கும் ஒவ்வொருவரும் முடிந்ததை அவருக்கு காணிக்கையாக
கொண்டு வந்து தருவர். அநேகமா எல்லாருமே எதையாவது எடுத்து கொண்டு வந்தாலும் சிலர் கொண்டு வருவதை மகான் வாங்க மறுத்து விடுவார். சிலரிடம் நேரடியாக காரணத்தைச் சொல்லி வேண்டாம் என்பார். சிலரிடம் மறைமுகமாக வேற ஏதாவது சொல்லி தவிர்த்து விடுவார். இந்த விஷயத்தில் கொண்டு வரப்பட்ட பொருள் விலை
உயர்ந்தது, கொண்டு வந்தவர் வி.ஐ.பி. என்றெல்லாம் எந்த பேதமும் பார்க்காமல் வேண்டம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிடுவார். ஒருநாள் காலை வேளையில் ரொம்ப பிரபலமான வக்கீல் ஒருவர் அவரை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்திருந்தார். தான் கொஞ்சமும் ஆசாரம் தவறாதவன் என்பதை காட்டுவது மாதிரி
#MahaPeriyava
When I, a graduate in Computer Engineering, try to recollect those precious events that happened some fifteen years ago, I get a strange feeling of both bliss and perplexity, bliss because not every one gets a chance to have that experience and perplexity because I
was too young then to fully understand the significance of the experience. I was doing my fourth standard in a local school at Madurai, My father, a professor of Sanskrit, had prepared a dramatised version of Bhagavad-Gita and had trained two of us in enacting it. On repeated
practice, I also got trained in mono acting the same. We came to know that His Holiness Sri Paramacharya was camping at Pandarpur in Maharashtra for Chaturmasya. My father suddenly decided to go to Pandarpur for a holy darshan of the Paramacharya along with Sri A. Kuppuswamy, one
#MahaPeriyava
There were about six devotees standing in front of Maha Periyava. Another local devotee also came there and prostrated. Periyava asked the new man, ‘Have you visited Kasi?”
No
“Chidambaram?”
No
Periyava continued, “Thirupathi? Madurai? Thiruvannamalai? Pazhani?
Kanyakumari?”
For each of these, the devotee gave only one reply, No.
Periyava smiled and said, “You have seen all these people!”
The local devotee was confused.
“Do you know the names of all these people standing here? The first person is Kasi, the next is Chidambaram; then
Thirupathi, then Madurai, the next is Annamalai, then Pazhani and the name of the lady at the end is Kanyakumari.” It is very rare to see so many persons with their names as those places, at a time and in one place!
Periyava said, “Normally, people are named after the names of
#மஹாபெரியவா
ஒரு முறை ஒரு வயதான பக்தர் பெரியவாவிடம் வந்தார், ‘தான் தீராத வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுகிறதாகவும், பலவித வைத்தியம் பார்த்தும் குணம் ஆகவில்லை, பெரியவாளே கதி, காப்பாற்ற வேண்டும்’ என்று கதறினார். கருணை மலையோ அமைதியாக அவரை ஏறெடுத்துப் பார்த்து விட்டு “உன்னிடம்
சன்னியாசி அல்லது சாதுவின் உடைமை ஏதாவது இருக்கிறதா?” என்று வினவ, வந்த பக்தர், அப்படி எதுவும் என் வசம் இல்லை என்று பதில் கூறினார். த்ரிகால ஞாநியான காஞ்சி முனிவரோ விடாமல் வற்புறுத்திக் கேட்டார். அந்த வயதான பக்தர் நன்கு யோசித்து பிறகு, பல வருடங்களுக்கு முன் ஒரு சந்நியாசி யாத்திரை
செய்யும் வழியில் என் வீடு வந்து ஒரு சிறு தொகையை கொடுத்து, பத்திரமாக வைத்துக்கொள் திரும்பி வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை. அதனால் பணத்தை செலவு செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட பெரியவா சிரித்துக் கொண்டே “உடனே அந்த