#கல்லுக்குழி_ஆஞ்சனேயர் #திருச்சி மூர்த்தி சிறிது ஆனால் அவரின் கீர்த்தியானது சொல்லில் அடங்காதது. இடது திருப்பாதம் வடக்கு நோக்கி, வலது திருப்பாதம் கிழக்கு நோக்கி இடது திருக்கரத்தில் பாரிஜாத மலர், வலது திருக்கரம் அபய ஹஸ்த முத்திரையுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவர் இங்கு வந்து
அமர்ந்தவிதம் அற்புத அதிசயம். சுமார் 120 வருடங்களுக்கு முன், ஒரு நாள் ரயில் பயணி ஒருவர், திருச்சி ஜங்க்‌ஷனில் தான் கொண்டு வந்திருந்த சாமான்களுடன் இறங்கினார். அதில் ஒரு சாக்கு மூட்டையை தூக்க முடியாதபடி தூக்கிக் கொண்டு நடந்தார். ரயில்வே டிக்கெட் பரிசோதகர், எடை அதிகம் உள்ளதாகக்
கருதி அனைத்துப் பொருட்களையும் எடை போட்டு பயணிகளுக்கு அனுமதிக்கப்படும் அளவை விட அதிகமாக உள்ளதால் அபராதப் பணம் கட்டும்படி கூறி இருக்கிறார். பயணியோ, தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். பணம் கொண்டு வந்து கொடுத்து விட்டு இந்த மூட்டையை வாங்கிச் செல் என்று சொல்லி
மூட்டையை உள்ளே வாங்கி வைத்து விட்டார். பணம் எடுத்துவரப் போனவர், திரும்பி வரவில்லை. எவரும் வந்து வாங்காமல் இருந்த மூட்டை அசைவதாக சிலருக்குத் தெரிந்ததால் அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தனர். அதில் அழகான ஆஞ்சநேயர் சிலையைக் கண்டனர். வியப்புற்று பார்த்தவர்கள், அந்த சிற்பத்தை
பணிந்து வணங்கிய ரயில்வே ஊழியர்கள் அந்தப் பிளாட் ஃபாரத்தில் ஒரு சிறு மேடையில் ஒரு சிறிய கோயில் மாதிரி சிறிய அளவில் கட்டி வழிபடத் துவங்கினர். திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இரண்டாவது பிளாட் பாரத்தில் தென்கோடியில் சிறிய அளவில் கோயிலில் குடி கொண்டு நடைபாதை ஆஞ்சநேயராக அருள்
புரிந்து கொண்டிருந்தார். 1928ம் ஆண்டு நாகப்பட்டினம் ஈரோடு ஆகிய இரண்டையும் ரயில் பாதையில் இணைக்கத் திட்டமிட்டு பணிகள் ஆரம்பமான நேரத்தில், திருச்சி ரயில்வே மாவட்ட பொது மேலாளராக (GM) பதவி வகித்த Armsby என்ற வெள்ளைக்காரர் ஆஞ்சநேயர் கோயிலை இடிக்க உத்தரவிட்டார். அதன்படி கோயில்
இடிக்கப்பட்டது. ஆனால், ஆஞ்சநேயர் விக்கிரகத்தை அகற்ற முடியவில்லை அன்று பணி பாதியில் நின்றது. அன்றிரவு, Armsby கனவில் அந்த விக்கிரகம் இருந்த இடத்திற்கு அருகில் இரண்டு ரயில் வண்டிகளின் இன்ஜின்கள் தடம் புரண்டதாகக் கனவு கண்டார். காலையில் வந்து பார்க்க அவர் கனவில் கண்ட காட்சிப்படியே
நடந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தார். இந்த விபத்தால் எந்த உயிருக்கும் அசம்பாவிதம் ஏற்படவில்லை. ஆனால், ரயில் பாதை பழுதடைந்து ரயில்வே போக்குவரத்து தடைப் பட்டது. பலரைக் கலந்து, ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யச் சொன்னார். இந்த ரயில் நிலையத்திற்கு அருகிலேயே #கல்லுக்குழி என்று
சொல்லப்படும் ரயில்வே தொழிலாளர்கள் குடியிருக்கும் பகுதியில் வேறு இடத்தைப் பெரிய அளவில் ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடம் கொடுத்த அதிகாரி, கோயில் கட்டுவதற்கு பொருளுதவியும், மற்ற வசதிகளும் செய்து கொடுத்தார். கோயிலை கட்டியதே அந்த அதிகாரிதான் என்கிறார்கள். 09.11.1929 ல் கோயில் முழுவதும்
உருவாகி, சுபநாளில் பூஜைகள் செய்து, பிறகு முறைப்படி பிளாட்ஃபாரத்திலிருந்த அந்த விக்கிரகத்தை எளிதாக அகற்றி கட்டப்பட்ட அக்கோயிலில் ஆஞ்சநேயர் மூர்த்தம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரசு சட்டத்தினையும் உதாசீனம் செய்யாமல் அந்த இடத்தற்கு லைசன்ஸ் கட்டணமாக ஒரு ரூபாய் விதித்தார். தற்போது
கோயில் இருக்கும் அந்த இடத்திற்காக லைசென்ஸ் கட்டணம் ரூபாய் 500 என உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வெறும் சந்நதியாகக் கல்லுக்குழியில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்த அந்த சிறிய சந்நதி நாளடைவில் பொது மக்கள் வருகை, பங்களிப்பு ஆகியவற்றால் வளரத் துவங்கியது. கிழக்குப் பார்த்த ராஜகோபுரம்.
உள்ளே நுழைந்ததும் மகாமண்டபத்தில் அமைந்துள்ள துவஜஸ்தம்பம், அரசமரமும் வேப்ப மரமும் இணைந்திருக்க அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும், சுப்பிரமணியருக்கும் சிறிய அளவில் தனித்தனி சந்நதிகள். அர்த்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறிய கருவறையில் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கி காட்சி
தருகிறார். சுமார் ஓரடி உயரமேயுள்ள புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் இவரது இடது பாதம் வடக்கு நோக்கியும் வலது பாதம் கிழக்கு நோக்கியும் உள்ளது. இவரது கால் ஓங்கார வடிவில் வடக்கு திசை நோக்கி வளைந்திருப்பது தனிச்சிறப்பாகக் கருதப்படுகிறது. இவரது திருமுகம் வடக்கு திசையைப் பார்த்த வண்ணம்
அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் உள்ள உற்சவர் திருமேனி, உயரம் சுமார் இரண்டடியே இருக்கும். சாதாரணமாக வெள்ளிக் கவசம் அணிந்து இடது கையில் கதையுடனும் வலதுகரத்தில் ஆசி வழங்கும் நிலையிலும் காட்சி தருகிறார். கோயில் ராஜ கோபுரத்தில், ராமாயணத்தில் வரும் காட்சிகளில் சில சுதைச்
சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. கருவறையின், வலது புறம் கிழக்கு நோக்கி அருள்புரியும் பதினாறு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார்க்கு ஒவ்வொரு மாதமும் சித்திரை நட்சத்திர தினத்தன்று சுதர்சன ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அவரின் பின்புறம் அருள்மிகு யோக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார்.
ஆஞ்சநேயர் சந்நதிக்கு இடது புறத்தில் பாண்டுரங்கனுக்கு தனிச்சந்நதி உள்ளது. இவரது சந்நதிக்கு அருகில் பெரிய ஆலமரம் காணப்படுகிறது. பெரிய பெரிய இலைகளைக் கொண்ட இந்த ஆலமரம் 2ஆம் எண் பிளாட்பாரத்திலிருந்து ஆஞ்சனேயர் இங்கு வந்து பிரதிஷ்டை ஆகும் முன்பிருந்தே இங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது
இதைத் தவிர நவக்கிரகம், நாகர் சந்நதிகள் உள்ளன. வெளிநாடு செல்ல விருப்பமம் உள்ளவர்கள் ’பாஸ் போர்ட், விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளவர்கள் இவரை மனமாற வேண்டினால் அந்தப் பிரார்த்தனை நிறைவேறுகிறது. இவரது அருளால் சிங்கபூர் சென்ற ஒரு பக்தர் அவரது வளர்ச்சிக்குக் காரணமான ஆஞ்சனேயருக்கு
தங்கக்கவசம் செய்து சமர்ப்பித்து உள்ளார். இந்த ஆஞ்சநேயர் குபேர திசையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் செல்வ வளத்தை பக்தர்களுக்கு நிறைந்து அளிப்பார் என்பது சொல் வழக்காகும். சித்திரை மாதத்தில் ஸ்ரீராம நவமிக்கு ஒன்பது நாள் மண்டப அலங்காரமும், பத்தாம் நாள் திருவீதி புறப்பாடும் நடை
பெறுகிறது. இதைத் தவிர நவராத்திரி, ஹனுமத் ஜெயந்தி
போன்றவை சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. திருச்சி ஜங்ஷன் சுரங்கப் பாதை வழியாகவும், திருச்சி மன்னார்புரம் ரோடில் கல்லுக்குழி வழியாகவும், தலைமை அஞ்சலகம் மேம்பாலம் ரோடில் இருந்து சேது ராமலிங்கம் பிள்ளை காலனி வழியாகவும் கோயிலுக்குச்
செல்லலாம். காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். திருச்சி மாநகர் வளர்ச்சியில் பங்கு கொண்டு பலன் அளித்த ப்ளாட்ஃபார ஆஞ்சநேயர் எங்கிருந்து வந்தார் என அறிய முடியவில்லை. வளர்ச்சிக்கு வழி தந்து இன்றும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றித் தரும்
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயரை தரிசனம் செய்து ஆசி பெறுவோம்.
ஜெய் ஹனுமான்
ஜெய் ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 22
#மகாபெரியவா
ஒரு வைதிகர், எளிய வாழ்க்கை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து அவருக்கு. கோயில் திருப்பணிகளில் மிகவும் ஆர்வம். தன் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில், சிவன் கோயில் எல்லாவற்றுக்கும் அரும்பாடுபட்டுத் திருப்பணிகள் செய்வார். பெரிய தொகை நன்கொடை Image
கொடுப்போர் கூட அவரிடமிருந்து ரசீது எதிர்பார்க்க மாட்டார்கள். அவ்வளவு சுத்தம். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந்தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார். இந்த வைதிகர் முயற்சியால் அவர்
மழை-காற்றுக்கு உட்படாமல், கல் கருவறையில் குடி புகுந்தார். இப்படி எத்தனையோ கோயில்கள். ஆனால் வைதிகர் எந்தக் குடமுழுக்கிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதில்லை. கூட்டத்தில் ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டு நிற்பார்.
தம்பட்டமே இல்லாத இவரைப் பற்றிப் பெரியவாளுக்கு தெரிந்திருந்தது.
Read 9 tweets
Jun 22
#MahaPeriyava
All those who know Sri Maha Periyava will know SriMatham Balu Mama. Balu Mama, in his long association with SriMatham and Sri Maha Periyava has seen lakhs of devotees, from the poorest to the wealthiest, from the most uneducated to learned scholars, from ordinary Image
people to Presidents, Prime Ministers, Kings and Queens, people from all walks of life. He has been a witness to and a participant in thousands of incidents connected with SriMatham and Sri Maha Periyava.
The following incident was narrated by him. A peasant family which had
been living in wealthy conditions, was pushed into abject poverty. An old woman in the family had passed away. The family did not have the money necessary for the cremation and last rites. The family used to conduct those ceremonies with a lot of fanfare, with drums, flower
Read 7 tweets
Jun 22
#மகாபெரியவா அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
கர்நாடக இசையில் கரை கண்டவரான கே.வி. மகாதேவன் மகனோ அம்மா தரும் பணத்தில் மேல் நாட்டு ஹிப்பிகளுடன் Image
பழகி ஊர் ஊராய் சுற்றுகிறார். கே.வி.மகாதேவனுக்கு இசையில் இடையறாத பணி இருந்ததால், தன் கவலையை அதில் மறக்க, திருமதி லீலா மகாதேவனோ பிள்ளைப் பாசத்தில் அனலில் இட்ட மெழுகாகிறார். காரணம், இவர்களின் பிள்ளை இவர்களைப் பிரிந்து, ஒரு நாள் ஹிப்பிகளுடன் எங்கோ சென்று விட்டது தான். அப்போது
அவருக்கு ஆறுதலும், தேறுதலுமா நல்லதொரு ஆலோசனை சொன்னார் ஒருவர். (அவர் யாரென்று பின்னால் தெரியும்)
"காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" எனச் சொன்னார். அதோடு அவரே, 'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு #வாலி
Read 15 tweets
Jun 21
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவல்காரன் முனியாண்டி தினம் தப்பட்டை அடித்துக் கொண்டு நடுநிசியில் #ஜாக்ரதை என்று கத்திக் கொண்டே போவான். ஒருநாள் அவசரமாக முனியாண்டி வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இருந்ததால் அவன் வேலையை அவன் பிள்ளை சண்முகம் செய்யவேண்டியதாயிற்று.
அவன் பிள்ளை சண்முகம் முன்
ஜன்மத்தில் ஒரு வேதமறிந்த பண்டிதனாக இருந்தவன். எனவே பூர்வ ஜன்ம வாசனை ஞானம் இருந்தது. இரவில் மகன் சண்முகம் தப்பட்டை அடித்துக்கொண்டு ஜாக்ரதை சொல்லிக்கொண்டு அப்பன் முனியாண்டி வேலையை செய்தான்.
அடுத்த நாள் ராஜாவே அந்த காவல்காரன் வீட்டு வாசலில் அந்தப் பையனைப் பார்க்க வந்தார்.
ஐயோ
ராஜாவே வந்திருக்கிறார், என் பிள்ளை என்ன பெரிய தவறு ஏதாவது செய்து விட்டானோ, இங்கேயே ஏதாவது தண்டனையை கொடுத்து நிறைவேற்றுவாரோ என்று காவல்காரன் முனியாண்டி நடுங்கினான். ஆனால் ராஜா அந்த பையனுக்கு பரிசு கொடுத்து கௌரவிக்க அல்லவோ வந்தார்! எதற்காக? முதல் நாள் இரவு பையன் சண்முகம் ‘ஜாக்ரதை
Read 11 tweets
Jun 21
#மகாபெரியவா ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது. மகாபெரியவாளைத் தான் தெரியும். தினமும் வந்து வந்தனம் செய்வாள். பல செல்வந்தர்கள் பெரியவாளுக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு வந்து சமர்ப்பணம் செய்வதைப் பார்த்து, தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று
ஏங்கினாள். ஒரு நாள் மனமுருகி பெரியவாளிடம் சொல்லி விட்டாள்.
பெரியவாள் சொன்னார்கள், "அவர்கள் கொண்டு வந்து கொடுக்கிற எந்தப் பொருளையும் நான் தொடுவது கூட இல்லை. நான் ஆசைப்பட்டுக் கேட்டதும் இல்லை. என் மனசுக்குப் பிடிக்குமான்னும் அவா நினைச்சுப் பார்த்ததில்லே! உனக்குப் பிடிச்ச ஒரு வேலை
சொல்றேன், செய்கிறாயா?"
பாட்டி தவிப்போடு காத்து நின்றாள்.
"மாட்டுக் கொட்டிலில் இருந்து பசுஞ்சாணி எடுத்து, வரட்டி தட்டு. காயவைத்துக் கொண்டுவந்து கொடு. மடத்திலே தினமும் ஹோமம் நடக்கிறது. சுத்தமான பசுஞ்சாணி வரட்டி உப்யோகப்படுத்தணும். அந்த நல்ல கார்யத்தை நீ செய்யேன்"
பாட்டியின்
Read 4 tweets
Jun 21
#MahaPeriyava Noted lyricist Kannadasan visited Kanchi Maha Periyava and as usual discussed spiritual matters. Kannadasan was earlier an atheist and wrote articles criticizing Hinduism. Slowly he changed due to the effect of Maha Periyava. But his critical outlook still persisted
He asked Maha Periyava, 'When milk is White then how come Parkadal (Ocean) or the ocean of milk is shown as Megavarnam? (Blue). Has the colour of Mahavishnu dissolved in the ocean of milk?'
Acharyal gave a smile. He just said ‘You will get the reply by noon’.
Kannadasan was
perplexed. He dare not say anything further. Vummidi Bangaru Chetty visited the mutt that afternoon. Both Kannadasan and Vummidiyar greeted each other in their traditional way. Afterwards Vummidiyar placed a Large Green Emerald at the Acharyal’s feet and pleaded with him to
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(