#அறிவோம்_மகான்கள் #ஶ்ரீநாராயண_தீர்த்தர் ஆந்திராவில் விஜயவாடா-குண்டூர் செல்லும் வழியில் உள்ளது மங்களகிரி. இது பானக நரசிம்ம ஷேத்திரம். அதன் அருகிலுள்ள காஜா கிராமத்தில் சுமார் 1665 - 1675ல் தல்லவல்லஜ என்ற அந்தண குலத்தில் நாராயண தீர்த்தர் பிறந்தார். அவரது இயற்பெயர் கோவிந்த சாஸ்திரி Image
என்றும், மாதவன் என்றும் அவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி என்றும் கர்ணபரம்பரை செய்திகள் குறிப்பிடும், அனால், ஆதார பூர்வமாக எதுவும் கிடைக்கவில்லை. அவர் 12 ஆண்டுகள் சாஸ்திரங்களை கற்றுத் தேர்ந்தவர். திருமணம் ஆன பின்னர் ஒரு முறை ஆற்றைக் கடக்க முற்பட்டார். வழக்கத்திற்கு மாறாக, ஆற்றின்
நடுவில் ஆழம் சற்று அதிகமாக தெரிந்தது. நடுவழியில் திரும்பவும் முடியாமல், அதே சமயம் எதிர் கரைக்கு செல்லவும் முடியாமல் தவித்தார். என்ன செய்வது? வேதங்கள் கற்றவர் அல்லவா! பளிச்சென ஒரு எண்ணம் தோன்றியது. துறவு மேற்கொண்டால், அது மறுபிறவிக்குச் சமம். அந்நிலையில் துன்பம் ஒருவரை தொடர்வது
இல்லை என்று சாஸ்திரம் சொல்கிறதே. ஆகவே துறவு மேற்கொள்வது என்று மனதிற்குள் உறுதி கொண்டார். மரணம் விலகி விடும் என்ற எதிர்பார்ப்புடன், அவர் துறவு மேற்கொள்ள நீர்ப்பெருக்கு குறைந்தது. அந்த பண்டிதர் எதிர்க்கரையை அடைந்தார். கரையேறியதும், துறவு ஏற்பதாகத் தீர்மானித்து, உயிர் பிழைத்து
விட்டோம். இதை எப்படி மனைவியிடம் சொல்வது என்று சிந்தித்தபடி வீடு திரும்பினார். ஆனால் வீட்டை அடையும் முன்பே அதற்கான ஏற்பாட்டை தெய்வமே செய்து விட்டது. அவரைக் கண்ட மனைவி திகைத்தாள். காணாததைக் கண்டவள் போல நிற்கிறாயே, காரணம் என்ன எனக் கேட்டார். காவி ஆடை, கையில் தண்டம், மொட்டைத் தலை,
இது என்ன துறவுக்கோலம்? என்று சொல்லி மனைவி அழுதாள். இதைக் கேட்ட ஶ்ரீ நாராயண தீர்த்தர், மனதிற்குள் துறவு மேற்கொண்டதை உன்னிடம் எப்படி தெரிவிப்பது என குழப்பி நின்றேன். ஆனால், தெய்வமோ என்னைத் துறவியாக உன் கண்களுக்கு காட்டி விட்டதே என்று வியந்ததோடு, நடந்ததை எல்லாம் எடுத்துச் சொன்னார்.
வேறு வழியின்றி பண்டிதர் துறவு மேற்கொள்ள அனுமதி அளித்தார் மனைவி. ஸ்ரீநாராயண தீர்த்தரை ஸ்ரீதீர்த்தர் என்றும் கூறுவர். இல்லறத்தில் இருந்து விலகிய ஸ்ரீதீர்த்தர், பல திருத்தலங்களை தரிசித்தபடி திருப்பதி மலையை அடைந்தார். அங்கேயே சிலகாலம் தங்கி விட்டார். ஒருநாள், சிறுவன் ஒருவன்,
ஸ்ரீதீர்த்தரின் எதிரில் வந்தான். கைகளில் தின்பண்டங்களுடன் வந்த அவன், அவற்றை சாப்பிட ஆரம்பித்தான். பார்த்துக் கொண்டே இருந்த ஸ்ரீதீர்த்தரிடம், “என்னை தெரியலியா? ஒங்கூட சேந்து ஒன்னாப் படிச்ச கோபாலன் தான் நான். மறந்து விட்டாயா?” என்றான். அது மட்டுமல்ல, பள்ளிப்பருவ நிகழ்ச்சிகளில்
சிலவற்றைச் சொல்லவும் செய்தான். வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட ஸ்ரீதீர்த்தருக்கு குழப்பம் உண்டானது.
நீ சொல்றது எல்லாம் சரி! ஆனா இப்போ கோபாலனும் பெரியவனாகி இருப்பானே! நீ மட்டும் சின்ன பையனா இருக்கியே என்று கேட்டார் ஸ்ரீதீர்த்தர். “ஆமா! நான் அப்பிடியே தான் இருக்கேன்” என்று பதில்
அளித்த சிறுவன், தின்பதில் மும்முரம் காட்டினான். நிறைய தின்றால் வயிற்றுக்கு ஏதாவது ஆகி விடுமே என்ற எண்ணத்தில் ஸ்ரீதீர்த்தர், குழந்தே வயிறு வலிக்குமே என்றார். ஆனால் சிறுவனோ, “என்ன? வயத்த வலிக்கறதா உனக்கு?” என்று கேட்டான். அதே விநாடியில், ஸ்ரீதீர்த்தர் வயிற்று வலியால் துடிக்க
ஆரம்பித்தார். எதிரில் இருப்பது சிறுவனல்ல, ஸ்ரீ கிருஷ்ணனே தனக்கு அருள் புரிய வந்திருப்பதை புரிந்து கொண்டார். அவரின் வயிற்று வலியை கண்ட கிருஷ்ணன், “உன்னோட வயத்துல கையை வெக்கறேன். வலி போயிடும்” என்று சொல்ல தடுத்தார் ஸ்ரீதீர்த்தர்.
கிருஷ்ணா! வயிற்று வலி இருந்துட்டு போகட்டும். என்
தலமேல கை வை என வேண்டினார். ஸ்ரீதீர்த்தரின் தலையில் கையை வைத்த கிருஷ்ணர் அங்கிருந்து மறைந்தார். ஆனால் ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறையவில்லை. அதற்காக அவர் வருந்தவும் இல்லை. அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட ஸ்ரீதீர்த்தர் யாத்திரையை தொடர்ந்தார். ஒருநாள் இரவில் கண்டியூர் -
திருக்காட்டுப்பள்ளி சாலையில் ஸ்ரீதீர்த்தர் சென்ற நேரம், வயிற்றுவலி அதிகமானது. அருகில் இருந்த விநாயகர் கோயிலில் அமர்ந்தவர், அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டார். கனவில் தோன்றிய கிருஷ்ணர், “நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் யாரைப் பார்க்கிறாயோ, அவரின் பின்னால் செல்! வயிற்று வலி
தீரும்" என்று சொல்லி மறைந்தார். அதிகாலையில் விழித்த ஸ்ரீதீர்த்தரின் கண்ணில் ஒரு பன்றி செல்வது தெரிந்தது. ஸ்ரீதீர்த்தரும் அந்த பன்றியை பின் தொடர, அந்த ஊரிலுள்ள வெங்கடேசப் பெருமாள் கோயிலில் நுழைந்தது. ஸ்ரீதீர்த்தரும் பின் சொல்ல பன்றி (வராகம்) மறைந்தது. அப்போது “அன்பனே! உன்னை Image
அழைத்து வந்தது நானே” என்று அசரீரி ஒலித்தது. வராகமாக (பன்றியாக) வந்து அருள் புரிந்ததால் அந்த ஊர் #வரகூர் எனப்பட்டது அப்படியே ஸ்ரீதீர்த்தரின் வயிற்று வலி மறைந்தது. அப்பொழுது கிருஷ்ணரின் லீலைகளை பாடல்களாக ஸ்ரீதீர்த்தர் பாட, வெங்கடேசப் பெருமாளும் கிருஷ்ணனால நடனமாடி மகிழ்ந்தார். Image
அப்பாடல்கள்
#கிருஷ்ண_லீலா_தரங்கிணி என்று பெயர் பெற்றன. நாராயண தீர்த்தர் ஒன்றுக்கு மேற்பட்ட பல நூல்களை எழுதியிருந்தாலும் அவற்றுள் தலை சிறந்தது கண்ணனது புகழ்பாடும் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணியே ஆகும். 12 தரங்கங்கள் கொண்டு இந்நூலில் 153 பாடல்கள் உள்ளன. இதன் அமைப்பின் படி ஒவ்வொரு
தரங்கத்திலும் பல சுலோகங்களும் அவற்றையடுத்து கீதங்கள், என்ற கீர்த்தனைகளும் தொடர்ச்சிக்காக சில வசனப்பகுதிகளும் வருகின்றன. இது ஸமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல், பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தின் 1 முதல் 58 வரையிலுள்ள அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ள கிருஷ்ணன் பிறப்பில் இருந்து ருக்மிணி Image
கல்யாணம் முடிய கண்ணனது கதையை தேனென இனிக்கும் இன்னிசைப் பாடல்களாக தந்திருக்கிறார் ஶ்ரீதீர்த்தர். கிருஷ்ண லீலா தரங்கிணி ஒரு நாட்டிய நாடகம். தொன்று தொட்ட நாளிலிருந்து இசையும், நடனமும் சிறப்பாக இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நுண்கலைகள், நாடகபாணியில் காட்சிகளும் பாத்திரங்களும் வருகின்றன Image
கம்சன் வருகை, பிரம்மாவின் வருகை ஆகியவை பாடல்களிலேயே அறிவிக்கப்படுகின்றன. பாலகிருஷ்ணனின் லீலைகளை சுமந்து கொண்டு அவைகள் பாட்டலைகளாக செவிக்கினிய அனுபவங்களாக ஓடிசசென்று பிருந்தாவனத்தில் ராஸ க்ரீடையை காட்டி, கம்சவதத்தை முடித்து, ருக்மிணி கல்யாணம் வரையிலும் நம்மைக் கூட்டிச் செல்கின்றன. Image
நாராயண தீர்த்தர் தான் எழுதிய நூலில், சுய சரிதை குறிப்புகள் எதுவும் தரவில்லை. ஆனால் தனக்கு மெய்ப் பொருளை காட்டிய தனது குரு சிவராம தீர்த்தருடைய திருவடித் தாமரைகளை வண்டுகளை போல் சேவிக்கிறவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வதின் மூலம் நன்றியோடு குருவை அடையாளம் காட்டுகிறார். வரகூரிலேயே
1745ல் சித்தி அடைந்தார் ஸ்ரீதீர்த்தர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரகூரில் உறியடி உற்ஸவம் சிறப்பாக நடக்கும். வரகூர் காவேரியின் கிளை குடமுருட்டி கரையோரம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. வெங்கடேசப் பெருமாள் தாயாரை மடியில் அமர்த்தி அழகிய கோலத்தில் காட்சி தருகிறார். பராந்தக சோழன் ImageImage
கட்டிய கோவில் இது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் உரியடி திருவிழாவிற்கு இங்கு பெருமாளை சேவைக்க கண்டிப்பாக வருகிறார்கள். நாமும் சென்று சேவித்து ஆசி பெறுவோம். #அறிவோம்_கோவில்கள்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 26
#அறிவு_ஞானம்
ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும் Image
ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா”என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.
தங்கத் தம்ளரில்இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில்
பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால்
Read 11 tweets
Jun 26
#MahaPeriyava
I was in Tiruvannamalai in my young age. Our house was near the foothill. One Maami used to teach us song and dance and would ask us to sing before #RamanaMaharshi. We would sing and dance before him, going in circles. He would never talk, only have a look with his Image
eyes. After I was married, a relative told me, "You have not seen Kumbakonam Swamy, Maha tapasvi, go and have darshan once." Periyaval at that time had the name 'Kumbakonam Swamy'. My husband and I came to Kanchipuram to have darshan, but we were told that Periyava had gone out
somewhere. We went to three or four nearby villages, but could not see him in those places. I was yearning for the darshan. Only when Periyava had come to Madras, we could have his darshan. At my first sight of him I thought, "He looks typically like Ramana Maharshi. What tejas
Read 28 tweets
Jun 25
ஸ்ரீ கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கன்னையா என்றும் அழைக்கப்படுகிறார். கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள். கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப் Image
படுவது வடமாநிலங்களில் இன்றும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற Image
#கீதகோவிந்தம் #ஸ்ரீமந்நாராயணீயம் #கிருஷ்ண_கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும். கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும். கிருஷ்ண லீலையை மனம் ஒன்ற
Read 6 tweets
Jun 25
#ஸ்ரீபெரும்புதூர்_ஆதிகேசவ_பெருமாள் #ஶ்ரீராமானுஜர்_அவதார_ஸ்தலம்
ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப் படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் சிவபெருமானின் சிவகணங்கள் அவரிடம் அவச்சாரப் பட்டன. சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார். Image
இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோசனம் Image
பெற வழி செய்தார். பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. ராமானுஜர் அவதரித்ததால் இது நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு சொர்க்க Image
Read 12 tweets
Jun 25
#மகாபெரியவா
சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம். 1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது Image
அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து
வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை
Read 20 tweets
Jun 24
#பாஜக கூட்டணி சார்பில் #ஜனாதிபதி வேட்பாளராக #திரௌபதி_முர்மு (வயது 64) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர். ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் 1958-ம் ஆண்டு, ஜூன் 20 பிறந்தார். இவர் தந்தை பெயர் பிராஞ்சி நாராயண் டுடு.
இவர் சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் படித்தார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் பிறந்தனர். கணவரும், மகன்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்து விட்டது இவர்
தனிப்பட்ட வாழ்க்கையின் சோகம். மகளை ஆசிரியப்பணியின் சொற்ப வருமானத்தில் போராடி வளர்த்தார். அரசியல் ஆர்வம் காரணமாக பா.ஜ.க.வில் சேர்ந்த இவர், ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஒடிசா மாநிலத்தின் சட்டப் பேரவையில் 2007 ஆம் ஆண்டின் சிறந்த சட்டமன்ற
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(