இன்று அறியப்படும் இவ்வூர் முன்பு ஒரே நகரமாக விளங்கியது.
இவ்வூரைப்பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகள் எதுவும் இல்லை.
ஏனெனில், சங்க காலத்தில் இப்பகுதியில் #கொற்கை துறைமுகமே செல்வாக்குப் பெற்றிருந்தது.
#கொற்கை துறைமுகமிருந்த இடத்தில் கடல் பின்வாங்கி நிலம் உருவான பின்னர்...
#காயல் ஒரு துறைமுகமாக
வளர்ந்தது. கொற்கைக்குத் தெற்கில் #காயல்பட்டினம் அமைந்துள்ளது.
காயலுக்கு தெற்கில் #வீரபாண்டியபட்டினம் அமைந்துள்ளது. இவ்வூர் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் பெயரால் (பொ.பி 946-966) அமைந்ததாகும்.
ஏற்கெனவே, காயல்பட்டினம் குறித்த சில ஆய்வுகள் ஆய்வாளர்களால்...
மேற்கொள்ளப்பட்டுள்ளன இக்கட்டுரையில் #காயல்பட்டினம் எவ்வாறு இசுலாமியரின் வணிகத்தலமாக விளங்கியுள்ளது என்பதை விளக்குவதாக அமைகின்றது.
முதன்முதலாக பொ.பி 633-இல் (ஹிஜ்ரி 12) அரேபிய இசுலாமியர்கள் காயலில் வந்து குடியேறியுள்ளனர். இக்காலத்தில் முதன் முதலாகக் கடற்கரையில் ஒரு மசூதி...
கட்டப்பட்டது. அது 'கடற்கரை மசூதி' என்றே பெயர் பெற்றது. பொ.பி 633-640 காலத்தில் இம்மசூதி கட்டப்பட்டிருக்கலாம்.
கேரளத்துக் கொடுங்களூரிலும் இதே காலத்தில் ஒரு மசூதி கட்டப்பட்டது. இவ்விரண்டு மசூதிகளுமே இந்தியாவின் தொன்மையான மசூதிகளாகக் கருதப்படுகின்றன.
அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் பொ.பி 842-இல் (ஹிஜ்ரி 227) எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் ஏற்பட்டது.
முகமது நபியின் வழிவந்த நான்கு காலிபாக்களின் வழித்தோன்றல்களே இங்கு வந்து குடியேறினர். பொ.பி 1500-க்குப் பின்னரே #காயல்பட்டினம் என்னும் பெயர் வழக்கிற்கு வந்தது எனலாம்
பொ.பி 842-இல் வந்தவர்களால் 'குத்பா பெரிய பள்ளி' என்னும் மசூதி கட்டப்பட்டது. கருப்புடையார் பள்ளியில் காலத்தால் முந்திய வீரபாண்டியன் காலத்துக் (பொ.பி 946-966) கல்வெட்டு காணப்படுகிறது.
இக்கல்வெட்டில் இவ்வூர் 'காயல்கரை', 'காசிர ஊர்', 'பவித்திர மாணிக்கப்பட்டினம்' என்று பல பெயர்களில்
இப்பெயரில் ஒரு வணிகக் குழுவினர் தமிழகத்திலும், கேரளத்திலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் யார் என்பது நீண்டநாட்கள் ஆய்வுக்குரியதாக இருந்தது.
பல்சந்த மாலைப் பாடல்களின் துணைகொண்டு இவர்கள் இசுலாமிய வணிகர்களாக இருக்க வேண்டும் என 'சதாசிவப் பண்டாரத்தார்' முதன் முதலில் கருத்துரைத்தார். அதுவே உறுதிப்படுத்தப்பட்டது.
'அஞ்சு வண்ணத்தார்' என்பவர், பஞ்ச கம்மாளர்களாக இருக்கலாம் என்று முன்வைக்கப்பட்ட கருத்து வலுவிழந்தது.
எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் (பொ.பி 850-ல்) வந்த இசுலாமியர்களே 'அஞ்சு வண்ணத்தார்' ஆவர்.
சங்ககால வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!
தமிழக கிரேக்க, ரோமானியக் கடல் வணிகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியமும், கிரேக்க மாலுமி எழுதிய 'செங்கடல் வழிகாட்டி' நூலும் பட்டியலிட்டுள்ளன.
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,
தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...