#ஓதிமலை_முருகன்_கோவில் 3000 அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ளது இரும்பறை (கோவை மாவட்டம்). அங்கிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இருப்பது இந்த மலை ஒன்றே. இந்த மலையில்
வீற்றிருக்கும் ஓதிமலையாண்டவரை காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் பிரணவத்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற
முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப் பெருமான், பிரம்ம தேவரின் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்து சில காலம் செய்து வந்தார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் இது. முருகப்
பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறந்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும்
சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப் பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை
சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு #ஓதிமலை என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் #இரும்பறை என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும்
பிரவணவத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு. இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை
மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி இல்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி
விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து
ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் #நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு
முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்து விட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்
பட்டதாகவும் சொல்லப்படுகிறது இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது #பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே
விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் #விபூதிக்காடு - தான் காலப்போக்கில் 'பூதிக்காடு' என்று அழைக்கப்படுகிறது. எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்வுகள்
செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக் கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை
நாட்களிலும் வழிபாடுகள் நடை பெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது. 1800 செங்குத்தான படிகளை கொண்டதால் மலையேற சற்று சிரமமாக இருக்கும். கைப்பிடி
இல்லை. வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
1.ஈரோட்டிலிருந்து – ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும்.
2.கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும். 3. மதுரையில் இருந்து மதுரை – பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி
மலை வரவேண்டும்.
இங்கு சென்று வந்தால் சித்தர்களின் அருளும், முருகபெருமானின் பரிபூரண கடாட்சமும், அருமையான அனுபவங்களையும் நாம் பெறுவோம் என்பது உறுதி.
முகவரி:
அருள்மிகு ஓதிமலை ஆண்டவர் திருக்கோவில்,
புஞ்சைபுளியம்பட்டி வழி,
இரும்பரை-638 459,
மேட்டுப்பாளையம் தாலுகா, கோவை மாவட்டம்.
தொலைபேசி:
+91-4254-287 428, 98659 70586.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் கலியனுக்கு இது ஏழாவது இன்டர்வியூ! ஏற்கெனவே காது கேட்காத, வாய்பேச முடியாத நிலையில் இருக்கும் அவனுக்கு வேலை இல்லாதது மேலும் கூடுதல் வேதனை. இத்தனைக்கும் ஒவ்வொரு முறையும் ஸ்ரீமந் நாராயணன் நாமம் கூறிக் கொண்டே எழுத்துத் தேர்வில் தன் முழுத் திறமையையும் காட்டுவான்.
கூடவே, இன்டர்வியூவில் தன்னால் பேச முடியாது என்பதையும் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளை காதால் கேட்க முடியாது என்பதையும் எழுதிக் காட்டுவான். அவர்கள் திருப்தி அடையாமல், நிராகரித்து அனுப்பிவிடுகிறார்கள். அவனின் வெறுப்பெல்லாம் ஹரே நாராயணா நான் வேலைக்கு விண்ணப்பிக்கும் போதே என் குறைகளை
சொல்லித்தானே விண்ணப்பிக்கிறேன். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று நான் மிகவும் நம்பிக்கையோடு இருக்கும்போது இப்படிச் சொல்கிறார்களே’ என்பது தான். இந்த முறை இன்டர்வியூவில் தேர்வு செய்யப்படாவிட்டால் அந்த நாராயணனை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்ற முடிவோடு இருந்தான். கலியனுடைய முறை
#மகாபெரியவா
மூன்று நாள்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார் அவர். பெரியவாளிடம் தனிமையில் ஏதோ சொல்ல வேண்டும். பெரியவாள் மௌனம். நான்காம் நாள் மௌனத்தை விட்டுவிட்டுப் பேசத் தொடங்கினார்கள் பெரியவாள். அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவர் ஓடோடி அருகில் வந்தார்.
"அதுக்காகத்தான் மூணுநாளா
காத்திண்டிருந்தியோ?"- பெரியவா.
பக்தருக்கு ஆச்சர்யமாகப் போய்விட்டது. அது என்ன, அவ்வளவு கணக்காக மூன்றுநாள்? ரென்டு மூணு நாள் என்று சொல்லியிருக்கப் படாதோ?
"குடும்ப விஷயம் ரகசியமாகப் பேசணும்." -பக்தர்.
"என்னிடம் ரகசியமெல்லாம் வேண்டாம். இரைந்தே பேசு. மத்தவாளுக்குத் தெரிஞ்சதாலே
ஒண்ணும் குடிமுழுகிப் போய்விடாது." -பெரியவா.
பக்தரின் முன்னோர்கள் செழிப்புடனும், செல்வாக்குடனும் இருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால், எப்படியோ தாங்கமுடியாத கஷ்டம், பொருள் நெருக்கடி வந்துவிட்டது. தாத்தா காலத்தில், கடன் சுமையைத் தாங்க முடியாமல் போகவே விளை நிலம் ஏலத்துக்குப் போயிற்று.
#MahaPeriyava This happened at a village near Villupuram. A man from the narikurava tribe who was camping there decided to commit suicide due to family complications. He came to the railway station and stretched himself on the platform, with the intention of jumping onto the
rails when the next train came. The man slept in a place nearby thinking about this in his mind. He had a dream-like vision, wherein a sage appeared before him and said, "You need not end your life. Come and see me. I shall grant you peace." He woke up with a start. A wave of
freshness spread through his body. It occurred him to search for the sage who came in his dream. He sold the gold ring he had been wearing for a long time and started on his search using the cash he got for the ring. He went from village to village and had darshan of many sages,
#மகாபெரியவா நல்லது கெட்டது பற்றி பாடம் கற்பிக்காமல், காலவாரியாக பல ராஜாக்கள் சண்டைபோட்டதை சரித்திரம் என்ற பெயரால் கற்றுக் கொடுப்பதில் எந்த பயனுமில்லை. வாழ்க்கைக்கு பயன்படும் படியான உபதேசம் இல்லாத சரித்திரம் நமக்கு வேண்டாம். புராணங்கள் பாவ புண்ணியங்கள் தொடர்பாக மக்களுக்கு பாடம்
கற்பித்து, அவர்களை தர்மத்திடம் செலுத்தும்படியான வரலாறுகளை மட்டும் தேர்வு செய்து தருகிறது. தர்மசாலிகளாக இருந்து அந்த ஜன்மாவிலேயே உயர்வடைந்தவர்கள் அல்லது தர்மத்தை விட்டதால், அந்தப் பிறவியிலேயே கெடுதல் அடைந்தவர்களின் கதைகளே புராணங்களாக வடிக்கப்பட்டுள்ளன. நல்லவர்களாக இருந்து நல்ல
செயல்களை செய்து நன்மை அடைந்தவர்களுடைய சரித்திரங்களை நாம் படித்தால் நாமும் அப்படியே இருக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும். தற்கால வரலாற்றைப் படிப்பதால் ஆத்மலாபத்தை அடைய முடியாது. புராண படிப்பால் தான் நல்லது கெட்டதை உணர்ந்து கொள்ள முடியும்.- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்தக் குடுவையை ருசித்துக் கொண்டு இருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம்
கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக் கொண்டது. அதே போல் பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு பக்தர்கள், சிறிது ஆன்மீக புத்தகங்களை படித்து விட்டு பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர் என கூறுகிறார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தைக்
கூட அவர்கள் ஆராய்ந்து கண்டு பிடிக்கவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது
இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து
#MahaPeriyava has spoken about #Karkotakan as very sacred soul. So wanted to write about Him. Karkotakan is one of the powerful snakes or Nagas with numerous magical powers. His parents were Sage Kashyapa and Kadru. The descendants of Karkotaka Naga are today settled in Rajasthan
and are known as Katewa. Once Karkotakan cheated Sage Naradar and the angry sage cursed him that he will become immobile. The sage then said that he will be relieved of his curse by Nala. Nala was the king of Nishadha kingdom and he was married to the beautiful Damayanti. But
unfortunately Nala was possessed by Demon Kali and he took advantage of his weakness for gambling. Nala lost his kingdom to his brother in a game of dice. Nala then took refuge in the forest and once happened to find Karkotaka engulfed in a wild forest fire. The snake was unable