அவன் அவைக் கூட்டங்களில் தலைமைத் தாங்கித் திறம்பட நடத்துபவனாகவும்,
#பூசல் காலங்களில் தலைமையேற்று படைநடத்தி வெற்றி கொள்பவனாகவும் இருந்திருக்க வேண்டும்.
இத்தலைவன் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றான். பின்னாளில் நியமிக்கப்பெற்றான்.
அவ்வாறு நியமிக்கப் பெற்றவன் குடும்பமே, வழிவழியாகக் குடியின் தலைமைப் பொறுப்பில் நின்றது. அத்தலைவன் #கிழான் எனப் பெயர் பெற்றான்.
பண்டையத் தமிழகத்தில் நிலைபெற்றிருந்த 'கிழார் ஆட்சி' முறை, வடநாட்டில் உருவாகி நிலைப்பெற்றிருந்த 'காபதி ஆட்சி' முறையுடன் ஒப்பிடத்தக்கதாய் உள்ளது.
#காபதி என்பது தமிழில் #காவிதி என்று திரிந்து வழங்கியது. காபதி குடும்பின் தலைவன்
குடும்பின் தலைவன் காபதி ஆட்சி, கிழார் ஆட்சி அமைப்புடன் பல கூறுகளில் ஒத்துள்ளன என ரோமிலா தாப்பர் கூறுகிறார்.
#சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள #தமிழி கல்வெட்டொன்று...
"எருகாடு ஊரு காவிதிகோன் கொறிய பாளிய்" என்று பயின்று வருகிறது.
#மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மற்றொரு #தமிழி கல்வெட்டொன்று,
"எரு காடுர் ஈழ குடும்பிகன் போலாலயன் செய்தா ஆய்சயன் நெடுசாதன்" என்று கூறுகிறது.
மேற்கண்ட இரு கல்வெட்டுகளிலும் #காவிதி, #குடும்பிகன் போன்ற பண்டைய தமிழக அரசியல் தலைவர்கள் குறிக்கப்படுவதைக் காணலாம்.
#கிழார் என்ற பட்டம் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தமையாலும் #காவிதி, #குடும்பி போன்ற பட்டங்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் கொண்டு வந்தமையாலும்...
பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
சங்ககால வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!
தமிழக கிரேக்க, ரோமானியக் கடல் வணிகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியமும், கிரேக்க மாலுமி எழுதிய 'செங்கடல் வழிகாட்டி' நூலும் பட்டியலிட்டுள்ளன.
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.