ஆனால் #கொடுமணல் அகழாய்வில் கிடைத்த ஓடுகளில் நிகம என்று எழுதப்பெற்ற ஓடு ஒன்று உள்ளது. அதனால் பதிற்றுப்பத்து நியமம், கொடுமணல் (பண்டைய #கொடுமணம்) என கொள்ளலாம்.
கொடுமணல் மட்டுமின்றி மதுரை மீனாட்சிபுரம் கல்வெட்டில் 'நெகமதோர் கொடிஓர்' என்றும், 'நெகமது காவிதி' என்றும் கூறப்பெறுகின்றது
இந்த நெகமம், வெள் அறை (#வேளறை) என்ற ஊரிலிருந்த நெகமம் ஆகும்.
வேளிர் நகரத்தில் ஒரு நெகமம் இருந்துள்ளது. கொடுமணலும் வேளிர் நகரம் ஆகும். பண்டைய வாணிக நகரங்கள் #வேளிர் ஆளுகையிலிருந்தன.
பின்வரும் பாடல், கோசர்கள் காக்கும் செல்வம் நிறைந்த நியமம் என்னும் ஊரையேக் கொடுத்தாலும்,
கொள்ளாதவர் போல தலைவியின் பெற்றோர் அவளை சிறப்புமிக்க தலைவனுக்கு மணம்முடிக்க மறுக்கிறார்கள் என்கிறது.
நியமம் என்பது புதுப்புது வருவாய்க்கு இருப்பிடமாகிய செல்வம் நிறைந்த கருவூலம் எனப்படுகிறது. அதாவது வணிகம் செழித்து விளங்கும் பகுதி அல்லது வணிகச் சங்கங்களின் பெயராக அது இருக்கலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.
சங்ககால வணிகத்தில் ஏற்றுமதி - இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்!
தமிழக கிரேக்க, ரோமானியக் கடல் வணிகத்தில் நடைபெற்ற ஏற்றுமதி, இறக்குமதிகள் பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியமும், கிரேக்க மாலுமி எழுதிய 'செங்கடல் வழிகாட்டி' நூலும் பட்டியலிட்டுள்ளன.
மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.