மனநல கோளாறு என்றதுமே பைத்தியமா என்று நினைப்பது தான் பொது புத்தியில் நிலைகொண்டுள்ள எண்ணம். மனநலம் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான் அதற்கு காரணம். ஜனரஞ்சகமாக மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மனநல மருத்துவர் Dr. ஷாலினி
(1/n)
அவர்களின் பங்களிப்பு யாராலும் மறுக்க முடியாத ஒன்று.
அவ்வகையில் மருத்துவர் ஷாலினி அவர்கள் எழுதிய "மனச்சிறையில் சில மர்மங்கள்" புத்தகம் நமக்கு தெரியாத அல்லது எளிதில் அடையாளம் காணப்படாத மனநல கோளாறுகள் குறித்து சுவாரசியமான கதைகளுடன் எடுத்துரைக்கிறது.
(2/n)
சிறு குழந்தைகள் முதல் 70 வயதை கடந்த முதியவர்கள் வரை சந்திக்கும் சில மனநலம் சார்ந்த பிரச்சனைகளையும், இது மனநல பிரச்சனை தானா என அறிந்து கொள்ள உதவும் சில அறிகுறிகளையும், அதற்கான அறிவியல் காரணத்தையும், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டிய அவசியத்தையும் உணர்த்தும் புத்தகம் இது.
(3/n)
காய்ச்சல் தலைவலி போலத்தான் மனநல பிரச்சனையும்,மருத்துவரை அணுகி சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் சரியாகும் ஒரு நோய் அவ்வளவுதான்,ஆனால் மனநலம் சார்ந்து மருத்துவரை அனுகுவதே தனக்கு அவமானம் எனும் எண்ணம் பலருக்கும் உள்ளது,இந்த புத்தகம் அந்த எண்ணத்தை குறைக்கும்.
(4/n)
சுவாரசியமான கதைகளுடன் மருத்துவத் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளதால் எளிய மக்களுக்கும் எளிமையாய் விளங்கிக்கொள்ள உதவுகிறது.
மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் எளிய புத்தகம், நிச்சயம் படித்துப் பாருங்கள் நிறைய புரிதல்கள் ஏற்படும்.
“நானே நால்வகை (பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என மக்களை நான்கு வகையினராகப் பிரித்தல்) வருண அமைப்பினை அவரவர்களுக்குள்ள செயல் வேறுபாடுகளுக்கு ஏற்றவாறு படைத்துள்ளேன். எனவே நானே இந்த சதுர்வருணங்களை உருவாக்கியவனாவேன்.” - (கீதை 4:13)
(1/n)
“ஒருவன் இன்னொரு வருணத்தானின் தொழிலைச் செய்வது எளிதாக இருப்பினும், ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலை மிகுந்த திறனோடு செய்ய முடியாத போதிலும் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்வதே மிகச் சிறந்தது.
(2/n)
ஒருவன் தன் வருணத்திற்குரிய தொழிலைச் செய்தால் மரணமே நேர்வதாக இருந்தாலும் தன் வருணத் தொழிலைச் செய்வதே இனியது: ஆனால் பிற வருணத்தாரின் தொழிலைச் செய்வது ஆபத்தானது.”
(கீதை 3:35)
அடுத்தவர் வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் மனிதர்களான நமக்கு, இமையம் அவர்களின் "எங் கதெ" புத்தகம், அவருடைய நாட்குறிப்பை படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது...
அடுத்தவர் வாழ்க்கை என்றும் மற்றவர்களுக்கு கதை தானே.
(1/n)
அதே வரிசையில் அவர் வாழ்வின் 10 வருடங்கள், இல்லை... இல்லை...அவர் மட்டுமல்ல, அவருடன் கமலா, கமலாவின் இரண்டு மகள்கள், மற்றும் இமையம் அவர்களின் மொத்த குடும்பம் அவரின் ஊர், முக்கியமாக கடலூர் என பலரையும் பலதையும் அவர்களின் 10 வருடங்களையும் நமக்கு காண்பிக்கும் இந்த புத்தகம்.
(2/n)
எதையும் நேரடியாக கற்பிக்கவில்லை, ஆனால் நாம் நம் வாழ்க்கை, நம்மை சுற்றி உள்ளவர்களை, உள்ளவைகளை, நம் மனதை இந்த உலகத்தைப் பற்றி எல்லாம் நம்மை சிந்திக்க தூண்டும் "எங் கதே"
கமலா ஒரு ஆழமான கிணறு, அதில் விழுந்த சிறு எறும்பு இமையம்.
சங்கப்பாடல்களின் மொத்த எண்ணிக்கை 2381.
இதில் 1862 பாடல்கள் அகப்பாடல்களாகும்.
சங்கப்புலவர்களின் எண்ணிக்கை 473.
இதில் அகப்பாடல்களைப் பாடியோர் எண்ணிக்கை 378.
(1/n)
இதிலிருந்தே நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும் சங்க இலக்கியப் பாடல்களில் முதன்மையாகத் திகழ்வது அகத்திணையாகும்
உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஒன்றுகூடி தாம் அனுபவித்த இன்பம் இப்படிப்பட்டது என்று பிறருக்குச் சொல்ல முடியாததாய் அகத்தினுள் அனுபவிக்கும் உணர்ச்சியே அகத்திணை
(2/n)
உதாரணமாக சில பாடல்களை பார்க்கலாம்,
"விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி,
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய,
‘நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள், புன்னையது நலனே –