#மாங்காடு #ஸ்ரீகாமாட்சிஅம்மன்
காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகில் மாங்காடு என்னும் ஊரில் உள்ளது காமாட்சி அம்மன் கோவில்.
இங்கு #ஆதிசங்கரர் மகா மேருவை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அன்னை பார்வதி தவம் இருந்து காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்ட இடம். காமா என்ற சொல்லுக்கு
அன்பு, ஈர்ப்பு, காந்தத்தன்மை என்று பொருள். காமாட்சி என்றால் வசீகர கண்களைக் கொண்டவள். மாங்காடு காமாட்சி அம்மன் தவசக்தியின் பெண்மை வடிவமாக போற்றப் படுகிறாள். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில் மிக பிரபலமான தலம் இது . ஆதி காமாட்சி, தவக்காமாட்சி, தபசு காமாட்சி என்ற திருப்பெயர்களும்
இங்கே அவளுக்கு உண்டு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியதால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது. ஈசனை மணப்பதற்காக தேவி ஒற்றைக் காலில் நெருப்பின் மீது நின்று தவமிருந்த இடம் இது. ஐந்து குண்டங்களில் தீ வளர்த்து நடு குண்டத்தின் நடுவில் தன் இடது காலின் கட்டை விரலால்
நின்று தன் வலது காலை இடது காலின் தொடை பகுதிக்கு மேல் வைத்து இடது கையை நாபி கமலத்திற்கு அருகிலும் வலது கையில் ஜபமாலையுடன் தன் சிரத்துக்கு மேலே வைத்து தன் கண்களை மூடி அய்யன் ஈசனை திருமணம் செய்ய கடும் தவம் புரிந்தார். இக் காட்சியை கோவிலின் உள்ளே உற்சவர் சிற்பமாக காணலாம் . தேவி இங்கு
மேற்கொண்ட கடுமையான தவத்தின் மூலம் மனம் இரங்கினார் ஈசன். இதற்குப் பின்புதான் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரராக காமாட்சியை மணந்து கொண்டார் என்பது வரலாறு. காஞ்சிபுரத்தில் காஞ்சி காமாட்சி அம்மனுக்கு எவ்வளவு மகத்துவம் இருக்கின்றதோ, அப்படித்தான் மாங்காடு காமாட்சி அம்மனும். காஞ்சி சென்ற
அன்னை, தான் தவம் செய்த பஞ்சாக்னியை அணைக்காமல் சென்றதால் மாங்காடும் அதன் சுற்றுப்பகுதிகளும் தீயினால் வறண்டன. ஆதி சங்கரர் தேசாந்திரம் செல்லும் போது அங்கு சென்றார். காமாட்சி அன்னையின் தவ அனல் குறைவதற்காக சிவசக்தி அம்சமான 43 திரிகோணங்கள் கொண்ட, சக்தி வாய்ந்த அர்த்த அர்த்தமேருவை
அங்கு பிரதிஷ்டை செய்தார். மாங்காட்டின் நிலையறிந்து அஷ்டகந்தம் எனப்படும் சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடாமாஞ்சீ, கச்சோலம் மற்றும் அபூர்வ மூலிகைகளால் ஆன அர்த்தமேரு ஸ்ரீ சக்ரத்தை அம்மை தவம் புரிந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இதன் காரணமாகவே இந்த
மேருவுக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு, ஜவ்வாது, சந்தனம் உள்ளிட்டவை மட்டுமே சாத்தப்படுகிறது. இதனால் தீயின் கொடுமை மறைந்து மக்கள் சுபிட்சம் பெற்றனர் என்பது இக்கோவிலின் வரலாறு. பின்னர் காமாட்சி அன்னையும் ஸ்ரீசக்ரமும் கொண்ட கோயிலை சோழ அரசர்கள் ஸ்ரீவித்யா முறைப்படி அமைத்தனர். சில காலம்
முன்பு வரை கூட பக்தர்கள் இங்கு வந்து எண்ணியது நிறைவேறினால் ஸ்ரீசக்ர மேருவை புனுகுவால் மெழுகுகிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள். தவசக்தியின் அடையாளமாக விளங்கும் மாங்காடு அர்த்தமேரு காமாட்சி அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அர்த்த மேருவில் தான் அன்னை காமாட்சி வாசம் செய்கிறாள்.
காமாட்சி அம்மனின் திருஉருவம் அர்த்த மேருவான ஸ்ரீசக்கரத்திற்குப் பின்புறமாய் தவக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. அன்னை காமாட்சியம்மனின் மகிமைகளை அளவிட்டுக் கூற இயலாது. ஸ்ரீ சக்கரமே இக்கோயிலின் பிரதானமான அம்பாள் ஆவார். ஆமை உருவத்தை அடித்தளமாக அமைத்து, அதன் மேல் மூன்று
படிக்கட்டு கட்டி, அதன் மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதன் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன் மேல் ஸ்ரீசக்கரம் வரையப்பட்டுள்ளது. குங்குமம் அர்ச்சனை மற்றும் 18 முழம் புடவை சாத்தப்படுகிறது. இந்த மாதிரியான பெரிய ஸ்ரீசக்கரம் எங்கும் கிடையாது என்பது சிறப்பு. பின்னால் இருக்கும் பஞ்சலோக
காமாட்சி வலது கையில் கிளியும் தலையில் பிறைச்சந்திரனோடும் காட்சி தருகிறார். அருகில் காமாட்சி விளக்கு ஒன்று எரிந்து கொண்டு இருக்கும். ஆக நான்கு அம்பாள்களை (ஸ்ரீசக்கரம், பஞ்சலோக காமாட்சி, பஞ்சாக்னியில் ஒற்றைக்கால் தவம் புரியும் காமாட்சி, காமாட்சி விளக்கு) ஒரே இடத்தில தரிசிக்கிலாம்.
இங்குள்ள அம்பாள் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் காட்சி தருகின்றார். சப்தக்கன்னிகள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகன் என பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். இந்த உலகம் செயல்படுவது ஈசனின் பார்வையினால் தான். அப்படி இருக்கும்போது அந்த எம்பெருமானின் கண்களை ஒருமுறை
விளையாட்டாக பார்வதிதேவி மூடி விட்டாள். எம்பெருமானின் இருகண்களும் மூடப்பட்ட ஒரு நொடி என்பது, நமக்கு ஒரு யுகம் ஆகும். பூலோகம் இருண்டது. சூரியன் சந்திரன் ஒளிரவில்லை. அதனால் சர்வ லோகங்களும் இருளில் மூழ்கி திண்டாடியது. தேவியின் செயலால் கோபமுற்ற ஈசன் அம்பிகையை பூலோகத்தில் பிறக்கும்படி
சபித்து விடுகிறார். தன் தவறை உணர்ந்த அன்னை மாமரங்கள் நிறைந்த இந்த மாங்காட்டு பகுதியிலேயே காமாட்சியாய் அவதரித்த அன்னை ஈசனை வேண்டி பல காலம் காத்திருந்தாள், பலன் ஏதும் இல்லாத காரணத்தாலும் ஐயனைக் காண வேண்டும் என்ற தாபத்தாலும் ஐந்துவித அக்னியை வளர்த்து அதன் நடுவில் ஒற்றைக் காலில்
கட்டைவிரலை ஊன்றி நின்று கடும் தவம் இருந்தாள். உலக மக்கள் மேன்மையுற முப்பத்தி இரண்டு அறங்களையும் பூவுலகில் வளர்க்க அன்னையே உதாரணமாகத் தவம் இருக்கிறாள். இதனால் அம்மை இத்தலத்திலே “தபசு காமாட்சி” என்று அழைக்கப்படுகின்றாள்.
மாங்காட்டில் கடுந்தவம் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி மேல் கருணை
கொண்ட ஈசன் அம்மைக்கு அருள் செய்ய வரும் போது, இதே தலத்தில் தன்னை பூசித்து வந்த அசுர குருவான சுக்கிராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். எனவே அம்மையை அசரீரியாக காஞ்சிக்கு செல்லுமாறும் தான் அங்கு வந்து மணம் புரிந்து கொள்வதாகவும் கூறினார். அதன் பின்னர் ஈசனின் அருள் வாக்குப் படி
காஞ்சி சென்று தவம் இருந்து பங்குனி உத்திர நன்னாளில் ஈசனை மணந்து கொண்டாள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் இந்தக் கோயிலில் விசேஷ நாட்கள் ஆகும்.
இக்கோயிலில் 6 வார வழிபாடு பிரபலமானது. எதாவது ஒரு கிழமையில் எலுமிச்சம் பழத்துடன் வந்து அம்பாளை தரிசனம் செய்து அதே கிழமையில்
ஒரு மண்டலம் அதாவது ஆறு வாரங்கள் தொடர்ந்து வந்து பூஜை செய்தால் வேண்டியவைகள் நிறைவேறும் என்று அழுத்தமாக நம்பப்படுகிறது. வேலை இல்லாதவர்கள், குழந்தை இல்லாதவர்கள், பதவி உயர்வு, உடல் உபாதை உள்ளவர்கள், கல்யாண தோஷம் உள்ளவர்கள் குறை தீர இவ்வாறு பிராத்தனை செய்கிறார்கள். ஶ்ரீ சக்ரத்திற்கு
விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது. அன்று மட்டும் தங்க கவசத்தில் காட்சி தருவார் மற்ற நாள்களில் வெள்ளி கலசம் சாத்தப்பட்டிருக்கும். மேலும் பௌர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடைபெறுகிறது. ஒன்பது கலசங்களில் ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும் ஸ்ரீசக்ரத்திற்குப்
புஷ்பாஞ்சலி செய்கின்றனர். புரட்டாசி பௌர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்திற்கு இனிப்புகள் வழங்கி, பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றில் அர்த்தமண்டபம், தபசு மண்டபம், மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர். இந்த தரிசனத்தை கண்டால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை.
தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை சரஸ்வதி லட்சுமி மூவர் உலா வருகின்றனர். சப்த மாதர்களில் ஒருவரான பிராஹ்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள். சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர். மகாமண்டபத்தில் அணையா குத்துவிளக்கு உள்ளது. இடப்புறம் தபசு காமாட்சி சன்னதி உள்ளது.
நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது. தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். ஆடிப் பூரத்தன்று அம்மனுக்கு
வளையல் சாத்தி, வழிபாடுகள் செய்வது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதி மாதம் பௌர்ணமி நாளில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
அம்மனிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் முதல் வாரம் செல்லும் பொழுது பூஜைப் பொருட்களுடன் இரண்டு எலுமிச்சை பழம்
எடுத்து செல்ல வேண்டும். வீட்டுக்கு எடுத்து வந்த எலுமிச்சம் பழத்தையே தேவி காமாட்சியாக வைத்து ஆறு நாட்களும் பூஜித்து வரவேண்டும். ஆறு வாரம் சென்று அம்மனை வழிபட்ட பின் ஏழாவது வாரம் பசும்பாலைக் குங்குமப்பூ, கற்கண்டு சேர்த்துக் காய்ச்சி மற்ற பூஜைப் பொருட்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
இதை அம்பாளுக்கு நைவேத்யம் செய்து வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி 6 வார பிரார்த்தனை வேண்டுதலை முடித்து கொள்ள வேண்டும். அம்மனுக்கு புடவை சாத்துதல், பால் அபிஷேகம், அன்னதானம் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
மாங்காட்டு காமாட்சியை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தரிசனம் செய்வது சிறப்பு அம்சமாகும். அக்னியில் ஒற்றைக்காலில் நின்று தவமாய் தவமிருந்து வரங்களை வாரி வழங்கும் காமாட்சி அம்மனே நேரில் சென்று தரிசித்து அவள் அருளை பெறுவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Aug 5
#MahaPeriyava
This happened in the year 1975. Sri Lalgudi Jayaraman, the Indian Carnatic violinist, vocalist and composer and his wife went to Thenambakkam to have darshan of Kanchi Sri Maha Periyava. There was sadness in the air at that place that day. The reason being Periyava Image
was dissatisfied with the actions of a kainkarya person and hence decided to confine Himself in one of the rooms and was in Kashta Mounam. No water or bhiksha for Him. He did not interact with anybody. Lalgudi was disappointed that he could not have His darshan. But he was
determined to render some songs to Him before he left the place. Lalgudi started off with a song in Shyama raga, which was one of His favourite! Later he started to play on the violin 'Sabapathikku Veru Deivam Samanam Aguma' (can any God compare with Lord Sabapathi (Nataraja) of
Read 5 tweets
Aug 5
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் #அம்பலப்புழா_கிருஷ்ணன்_கோவில் #தென்னகத்து_துவாரகை முன்னொரு சமயம் அம்பலப்புழையை ஆண்டு வந்த அரசனுக்கு சதுரங்கத்தில் மிகுந்த ஆர்வம் மட்டுமல்லாமல் தன்னை யாரும் வெல்ல முடியாது என்ற கர்வமும் இருந்தது. ஒரு நாள், வயதான துறவி ஒருவர் அவனது அரசவைக்கு வந்திருந்தார். அவரை Image
வரவேற்று விருந்தளித்த அரசனிடம் இப்போது நாமிருவரும் சேர்ந்து சதுரங்கம் விளையாடலாமா என்று கேட்டார். அரசனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். அரசன் முனிவரிடம், சவாலில் நான்தான் ஜயிப்பேன், ஒரு வேளை நீர் ஜயித்தால் பரிசாக என்ன வேண்டும் என்பதை நீரே முடிவு செய்யும் என்று சொன்னான்.
முனிவர், “என்னைப் போன்ற முனிவர்களுக்கு அரிசிதான் தேவை. ஆனால் நான் சொல்லும் முறையில் அரிசியைத் தர வேண்டும். முதல் கட்டத்தில் 1 அரிசி, இரண்டாவது கட்டத்தில் 2 அரிசி, மூன்றாவது கட்டத்தில் 4 அரிசி, நான்காவது கட்டத்தில் 16 அரிசி என்ற ரீதியில் அரிசியைத் தர வேண்டும்” என்று சொன்னார்.
Read 26 tweets
Aug 4
#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி Image
தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்
துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்
Read 18 tweets
Aug 4
#MahaPeriyava
Nagasami Gurukkal brought two garlands that had decorated Sri Ekambaresvara and offered them to Periyaval as Siva-prasada. Periyava touched the garland to His eyes and put them back on the plate. Just then a newly married couple came and prostrated to Periyaval.
Periyava instructed that the couple be garlanded with the Siva-prasada. The young couple was ecstatic, wearing the garlands. They revelled in their divine, good fortune. Usually one garland, vibhuti and kumkum would be brought from the temples as prasada. It was unusual that two
garlands had come on that occasion. It was divine intention perhaps that the young couple be blessed with Siva-Guru-prasada. Over and above this the young couple had a delightful shock when Periyava showered these nectarine words “I do not have the power to bless you any further”
Read 5 tweets
Aug 4
#RamanaMaharishi #BhagawanRamanar
#KrishnarajaWodeyar The Mysore maharaja came to Tiruvannamalai in 1937 for the specific purpose of having darshan of Bhagavan Ramana Maharshi. He came with a lot of offerings, specially made sweets etc. The Maharaja asked that his car be parked
at a distance. When told that the car could enter the ashram premises, the Maharaja said, "No, when we go to have darshan of the Maharshi we have to walk".
The car was parked about a furlong from the ashram near the Agni Teertham. Krishnaraja and his retinue walked to the ashram
He asked for a private audience with Bhagavan, which the latter never gave to anyone. Anyone could enter and sit in the Old Hall before Bhagavan. But, since the Maharaja insisted, Bhagavan agreed and said that the former could meet him in the bathroom which was the only place he
Read 6 tweets
Aug 4
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் பகவான் ஸ்ரீமந் நாராயணன் சற்று ஓய்வாக தனது கிரீடம், சங்கு, சக்கரம் முதலியவற்றை அனந்தன் மேல் வைத்துவிட்டு, பாதரக்ஷைகளையும் தரையில் கழற்றி வைத்துவிட்டு சற்று அகன்றார். பகவானின் கிரீடம், சங்கு, சக்கரம் மூன்றும் கர்வத்துடன் பாதரக்ஷைகளை கண்டு நகைத்தன.
பார்த்தீர்களா! என்ன இருந்தாலும் மேல்மக்கள் மேல்மக்களே. எங்களை அனந்தன் மேல் வைத்தவர் உங்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் தரையில் விட்டுச் சென்றிருக்கிறார். இதிலிருந்தே நீங்கள் கீழ்மக்கள் எனத் தெரியவில்லையா? என்றும், எங்களைப் போல் நீங்கள் அரியாசனத்தில் அமர முடியாது என்று நகையாடின.
பகவான் திரும்பியதும் பாதரக்ஷைகள் அவரிடம் முறையிட்டன. அவர், “கவலை வேண்டாம். திரேதா யுகத்தில் ஸ்ரீராமனாக நான் அவதரிக்கும் போது உங்கள் துயர் தீர்ப்பேன். உங்களைக் கண்டு நகைத்தவர்களே உங்களுக்குச் சேவை செய்ய, தலைமேல் சுமக்கச் செய்வேன்” என்றார் கருணையுடன். சொன்னதை போல் இராமனாக
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(